ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் .
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே-வுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவன் தற்போது லண்டன் ஸ்பிரிட் டி20 அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில் அணியில் இருந்தவருக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இதனால் அணியின் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது ,ஷேன் வார்னே-வுக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது .
இதனால் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஷேன் வார்னே மொத்தம் 708 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார் . அதோடு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.