ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து கனடா வீராங்கனை பியான்கா விலகியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற ஜனவரி 17-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு இததொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,” கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல வாரங்கள் தனிமைப்படுத்துதல் இருப்பதால் உடல் ரீதியாகவும் மனதளவிலும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன் .இதன் காரணமாக என்னால் போதிய அளவு பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. அடுத்த சீசனுக்கு தயாராக எனக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இத்தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.