Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் …. நட்சத்திர வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ….!!!

டென்னிஸ் நட்சத்திர வீரரான ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே ரூப்லெவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது .இத்தொடரில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றன. இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் இத்தொடரில் பங்குபெறும் நட்சத்திர வீரர் , வீராங்கனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக ரஃபேல் நடால், டெனிஸ் ஷபோவலோவ், ஒன்ஸ் ஜபேயுர் மற்றும் பெலிண்டா பென்சிக் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்றவர்கள்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீரருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது .இதில்  ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே ரூப்லெவ்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் அபுதாபியில் நடந்த உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றவர் ஆவார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது ,’உங்கள் அனைவரிடமும் சில தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் தற்போது பார்சிலோனாவில் இருக்கிறேன் .ஆனால் துரதிருஷ்டவசமாக எனக்கு கொரோனா  தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது .

கொரோனா தொற்றுக்கான சிறிய அறிகுறிகள் எனக்கு உள்ளது. இதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறேன். ஏபிடி கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். இந்நிலையில்  கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு தான்ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பேன் ‘ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |