ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவா-வுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற ஜனவரி மாதம் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் முன்னணி நட்சத்திர வீரர் , வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் .இத்தொடர் தொடங்குவதற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .இதில் ரஃபேல் நடால், டெனிஸ் ஷபோவலோவ், ஒன்ஸ் ஜபேயுர், ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவை சேர்ந்த வீராங்கனை அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்,” அனைவருக்கும் வணக்கம் .துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது . நான் முழுவதுமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அடுத்து நடக்க இருக்கும் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இப்போது நான் தனிமைப் படுத்திக் கொண்டேன் .அதோடு மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன் . இப்போது உங்களையும் மற்றவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது முக்கியமாகும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.