ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வீராங்கனை கரோலின் முச்சோவா விலகியுள்ளர் .
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெற உள்ளது. இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது .இந்நிலையில் உலகத் தரவரிசையில் 32-வது இடத்தில் இருப்பவரும் செக்குடியரசு வீராங்கனையுமான கரோலின் முச்சோவா இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இவர் 2021-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி வரை சென்றுள்ளார் .இந்த நிலையில் காயம் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
Im sad to announce that my 2022 season will not start in Australia.
Im doing all I can to get back on the court as soon as Im able.💪🏽🖤 pic.twitter.com/36OPeaSdX7— Karolina Muchova (@karomuchova7) December 21, 2021