ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் விலகியுள்ளார்.
20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,முன்னாள் நம்பர் ஒன் வீரருமான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரருக்கு கடந்த 2020-ஆம் ஆண்டில் வலது கால் முட்டியில் இரண்டு முறை ஆபரேஷன் செய்யப்பட்டது .இந்த காயத்தில் இருந்து குணமடைந்த அவர் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை .அதன்பிறகு மீண்டும் கால் முட்டியில் வலி ஏற்பட்டதால் கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் காலிறுதியில் சுற்றில் தோல்வி அடைந்த நிலையில் மீதமுள்ள சீசனில் இருந்தும் விலகினார். இந்நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய பயிற்சி முறைகளை மேற்கொண்டு உள்ளார் .இருந்தாலும் அவர் மறுபடியும் எப்போது களம் திரும்புவார் என நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபனில் டென்னிசில் இருந்து ரோஜர் பெடரர் விலகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நான் பங்கேற்க வாய்ப்பே இல்லை .அதோடு ஜனவரி மாதம் தான் என்னால் நன்கு ஓட முடியும். அதோடு மார்ச் அல்லது ஏப்ரலில் மீண்டும் டென்னிஸ் பயிற்சி தொடங்க உள்ளேன். அதேசமயம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் தொடரில் என்னால் விளையாட முடிந்தால் நிச்சயம் ஆச்சரியமடைவேன். இறுதியாக சாதிக்கும் அளவுக்கு செயல்பட வேண்டும் என்பது என்னுடைய லட்சியம். அதோடு எனக்கே உரிய பாணியில் களத்தில் இருந்து விடைபெற வேண்டும் என விரும்புகிறேன் .இதனால்தான் காயத்திலிருந்து குணமடைய என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உள்ளேன் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.