Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் :தரவரிசை பட்டியலில் …. ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி முதலிடம் …..!!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் நோவக் ஜோகோவிச் மற்றும் ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளுள் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற           17-ஆம் தேதி தொடங்குகிறது.இப்போட்டியில் பங்கேற்கும் வீரர் ,வீராங்கனைகள் 32 பேருக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரான        ஜோகோவிச்-க்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜோகோவிக் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாததால் ஆஸ்திரேலிய அரசு அவருடைய விசாவை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் .இதைத் தொடர்ந்து அவர் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் .

இருப்பினும் அவரை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு இன்னும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் அவர் இத்தொடரில் பங்கேற்பது  குறித்து கேள்விக்குறியாக உள்ளது.இதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்விடேவும், 3-வது இடத்தில் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவும் பெற்றுள்ளன. இதில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-வது இடத்தில் உள்ளார். இதைத்தொடர்ந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லி பார்ட்டி முதலிடமும் , பெலாரஸை சேர்ந்த அரினா சபலென்கா 2-வது இடமும்,  கார்பின் முகுருஜாவுக்கு 3-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |