ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அபுதாபியின் பட்டத்து இளவரசரான மேதகு ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் உடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
இருநாட்டு தலைவர்களும் கடந்த 25 ஆம் தேதி அன்று தொலைபேசியில், இரு நாட்டிற்கும் இடையேயான நட்புறவிற்கு பயனளிக்கக்கூடிய தகவல்களை பேசியதாக கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இரு நாடுகளிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் விவாதித்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றால் அதிக பாதிப்படைந்த நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படும் உதவிகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றியும் பேசியுள்ளனர். சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் தொடர்பிலும் விவாதித்துள்ளனர். அதில் முக்கியமாக மத்திய கிழக்கு பகுதியின் நிலை தொடர்பிலும், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் பேசியுள்ளார்கள்.