Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனானர் பேட் கம்மின்ஸ் ….! வரலாற்று சாதனை ….!!!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸும்,  துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அப்போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருந்த ஸ்மித் ஸ்மித் தடை செய்யப்பட்டார். இதன்பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்ன், ஒருநாள் மற்றும் டி20 தொடரின் கேப்டனாக ஆரோன் பின்ஞ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் சக பெண் ஊழியருக்கு ஆபாசமாக மெசேஜ் செய்த விவகாரத்தில் சிக்கிய டிம் பெய்ன் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார் .அதோடு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி  வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் அவர் பெற்றுள்ளார். இதையடுத்து அணியின் துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |