Categories
உலக செய்திகள்

போரால் நிலைகுலைந்த உக்ரைன்…. ஏவுகணைகள் அனுப்பிய ஆஸ்திரேலியா….!!!

ரஷ்யா நடத்தும் போரில் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா ஏவுகணைகளை அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12 ஆம் நாள் ஆக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்திருப்பதோடு தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. எனவே உக்ரைன் படைகள் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றன.

இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று பல நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆஸ்திரேலியா, 50 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வெடிமருந்து, ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் போன்றவற்றை அனுப்பவிருப்பதாக கடந்த வாரத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதேபோன்று, தற்போது ஆஸ்திரேலியா அதிநவீன ஏவுகணைகளை உக்ரைன் நாட்டிற்கு அனுப்பியிருக்கிறது. ஆஸ்திரேலியாவால் அனுப்பப்பட்டுள்ள ஏவுகணைகள் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி ஆஸ்திரேலிய பிரதமரான ஸ்காட் மோரிசன் தெரிவித்திருப்பதாவது, நாங்கள் அனுப்பிய ஏவுகணைகள் உக்ரைனை சென்றடைந்து விட்டது என்று கூறியிருக்கிறார். மேலும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும்  தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |