Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் அதிக பனிப்பொழிவு…. பனிச்சறுக்கு விளையாடும் மக்கள்…!!!

ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில் குளிர்காலம் வந்தவுடன் பலமான காற்று வீசுவதுடன் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. எனவே அந்நாட்டின் டாஸ்மேனியா மற்றும் விக்டோரியா போன்ற பகுதிகளின் சாலைகள் மற்றும் வீடுகளின் மேல் பனி பொழிந்து போர்வை போர்த்தப்பட்டிருப்பது போன்று  காணப்படுகிறது.

இனிவரும் காலங்களில் பனிப்பொழிவு மேலும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்நாட்டு மக்கள் அந்த பனிச்சறுக்குகளில் உற்சாகமாக விளையாடி வருகிறார்கள்.

Categories

Tech |