ஆஸ்திரேலிய நாட்டில் பொதுத்தேர்தல் அடுத்த மாதத்தில் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 21-ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. பிரதமர் ஸ்காட் மோரிசனின் கூட்டணி கட்சி ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது அந்தோணி அல்பானீஸ் தலைமையில் புதிய ஆட்சியைப் பிடிக்குமா என்பதை தீர்மானிக்க அடுத்த மாதம் தேர்தல் நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து ஸ்காட் மோரிசன் பிரதமராக இருக்கிறார். இந்நிலையில், அந்நாட்டின் லிபரல் கட்சியின் 9 ஆண்டுகள் ஆட்சிக்கு பின் தற்போது இருக்கும் பிரதமர் ஸ்காட் மோரிசனின் தொழிற்கட்சியை காட்டிலும் பின் தங்கியுள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.