ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரஹாம் ரீட் என்பவர் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புவனேஸ்வரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய ஹாக்கி அணி கால் இறுதியில் தோற்று வெளியேறியது. இதன் காரணமாக தலைமை பயிற்சியாளராக இருந்த இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் ஹரேந்திர சிங் நீக்கம் செய்யப்பட்டார். அவர் நீக்கம் செய்யப்பட்ட பின் புதிய பயிற்சியாளர் யாரும் நியமனம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்காக புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட்டு வந்தது. இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 54 வயதுடைய கிரஹாம் ரீட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிரஹாம் ரீட் இதுவரை 130 சர்வதேச ஹாக்கி போட்டியில் விளையாடி இருக்கிறார். அவர் 1992-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.