விமானச் சேவையைப் பயன்படுத்தும் பலரும் இடைநிறுத்தம் இல்லாத பயணத்தையே விரும்புவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இதனால் சக்திவாய்ந்த சிறிய விமானங்களை கொண்டு நீண்ட தூர விமானச் சேவையை வழங்க பல்வேறு நிறுவனங்களும் முன்வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனம் அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து இடைநிறுத்தம் இல்லாமல் சிட்னி வரை தனது சேவையைத் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கான சோதனை கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தூரத்தை நிறுத்தம் இல்லாமல் கடக்கவேண்டும் என்பதால், முழு எரிவாயுடன் பயணிகளின் உடைமைகளைத் தவிர எந்தவொரு சரக்கும் இல்லாமல் இந்த விமானச்சேவை தொடங்கப்படவுள்ளது. மேலும் அடுத்த மாதம் லண்டனிலிருந்து சிட்னிக்கும் சோதனை முறையில் குவாண்டாஸ் நிறுவனம் விமானத்தை இயக்கவுள்ளது.
குவாண்டாஸ் நிறுவனத்தின் முடிவைப் பொறுத்து வரும் 2022 அல்லது 2023இல் இந்த சேவை தொடங்கப்படலாம். சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் வரை இயக்கப்படும் சிங்க்பூர் ஏர்லைன்ஸின(18.25 hr) சாதனையை குவாண்டாஸ் நிறுவனம்(19.16hr) முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.