Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலியாவால் இதை செய்ய முடியல….ஆனா இந்தியா செஞ்சு காட்டிட்டாங்க ….இன்சமாம் உல்ஹக் புகழாரம் …!!!

ஆஸ்திரேலிய அணியால்  செய்ய முடியாததை ,இந்திய அணி சாதித்துள்ளது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் பாராட்டிப் பேசியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,விராட் கோலி தலைமையில் அமைந்த இந்திய அணி  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் இந்தத் தொடரில்  இடம்பெற்றுள்ள வீரர்கள் ,வரும் ஜூன் 2 ம் தேதி இங்கிலாந்திற்கு புறப்படுகின்றனர். அதேசமயம் மற்றொரு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் தொடர் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகின்ற ஜூலை 13ம் தேதி முதல் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும். இலங்கைக்கு எதிரான தொடரில், இந்திய அணியின்  ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாமல் , இளம் வீரர்கள் இதில் பங்கேற்று விளையாட உள்ளனர். இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது.

எனவே இந்திய அணி, 2 அணிகளாக பிரிந்து  வெவ்வேறு நாடுகளில் விளையாடுவதை ,குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல்ஹக் பாராட்டிப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, அதிக வலுவான முன்னணி வீரர்கள் இருக்கும் போது அதே பலத்துடன் கூடிய மற்றொரு இந்திய அணியை உருவாக்கும் பிசிசிஐ-யின்  இந்த யோசனை சுவாரசியமாக உள்ளது. தற்போது இந்திய அணி செய்துள்ள இந்த முயற்சியை ஆஸ்திரேலிய அணி கடந்த 1990 மற்றும் 2000 ம் ஆண்டுகளில் செய்தது. ஆனால் அதில் அவர்கள் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இந்த முயற்சியில்  இந்திய அணி , கண்டிப்பாக வெற்றி பெறும் என்று தெரிகிறது .அதோடு இந்திய அணியில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு எப்போதும் 50 வீரர்கள் தயாராக உள்ளனர் என்றும் ,ஆஸ்திரேலியா செய்ய முடியாததை, இந்தியா செய்துகாட்டி சாதித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |