உயிர்தொழில்நுட்பம் கொண்ட குண்டு துளைக்காத ஆடையை இலங்கையைச் சேர்ந்த மாணவி கண்டுபிடித்துள்ளார்.
இலங்கைகையச் சேர்ந்த பிரபானி ரணவீர என்ற மாணவி கொழும்பிலுள்ள மியூசியஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இதன் பின்பு கொழும்பில் உள்ள சைதாமா பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதனையடுத்து தனது முதுகலைப் படிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகிறார்கள். மேலும் இவரின் முதுகலை ஆராய்ச்சிக்காக உயிர்த்தொழில் நுட்பம் கொண்ட குண்டு துளைக்காத ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து மாணவி கூறியதில் “உலகில் இரும்பினால் ஆன குண்டு துளைக்காத ஆடைகள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றின் அதிக எடை காரணமாக எஃகு மற்றும் அலுமினியம் போன்றவற்றை பயன்படுத்தி குண்டு துளைக்காத ஆடைகள் உலகில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக எஃகு குண்டு துளைக்காத ஆடையானது ஒரு நபருக்கு உயிராபத்தை ஏற்படுத்தாது என்றாலும் அதிக அளவில் உள்ளுறுப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
ஆனால் எஃகு, அலுமினியம் மற்றும் டைட்டானியம் போன்றவற்றால் செய்யப்பட்ட குண்டு துளைக்காத ஆடையானது 80% அதிர்ச்சியை குறைக்கிறது. இதனால் உயிராபத்தை தடுக்க மூன்று உலோக கலவையினால் செய்யப்பட்ட ஆடையை அணியலாம்” என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக மாணவியின் முதுகலை ஆராய்ச்சிக்கான செலவை சிட்னி பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.