சீன கோர்ட்டில் கதவுகளை மூடிக்கொண்டு ஆஸ்திரேலியா செய்தி நிபுணரிடம் ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது.
சீனாவில் அரசு ஊடகமான ‘சி.ஜி.டி.என்’ செய்தி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் சீன பெண்ணான செங் லீ . இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சீன காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அரசின் ரகசியங்களை சட்ட விரோதமாக வினியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அவரது கைது நடவடிக்கையில் நீதியின்அடிப்படை தர நிலைகள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதற்கிடையில் அவரின் குடும்பத்தினர் செங் லீ ஏதும் அறியாதவர் என்றும் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் பீஜிங் கோட்டில் கதவுகளை மூடி கொண்டு அவரிடம் ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக நேற்று சீனாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் கிரகாம் பிளெட்ச கோர்ட்டுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில் “இது மிகுந்த கவலைக்குரியது, திருப்தியற்றது. அவரிடம் ரகசியமான முறையில் நடத்தப்படும் விசாரணை செல்லுபடியாகுமா என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவரின் உரிமைகள் மற்றும் நலனுக்காக ஆஸ்திரேலியா தொடர்ந்து குரல் கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சீன அரசு முதலில் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக செங் லீ காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றனர். பின்பு ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக கூறியது. இதற்கிடையில் செங் லீயின் இந்த கைது நடவடிக்கையால் அவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் அவதிக்கு உள்ளா கூவதாக தகவல் வெளியாகி உள்ளது.