Categories
உலக செய்திகள்

‘எவ்வளவு அழகா இருக்கு’…. பார்ப்பவர் கண்ணை ஈர்க்கும் பொம்மைகள்…. தோட்டக்கலையில் அசத்தும் ஆஸ்திரேலியா பெண்….!!

தோட்டத்தில் பல்வேறு வகையான பொம்மைகளை வைத்து அனைவரின் கவனத்தையும் ஆஸ்திரேலியா பெண் ஒருவர் ஈர்த்துள்ளார்.

நாம் அனைவரும் வீட்டின் முன்புறம் இருக்கும் தோட்டத்தில் பல்வேறு வகையான செடிகளை நடுவது மற்றும் அலங்கரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோம். இது நமக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள அடலேட் பகுதியில் ஸ்மித்  என்ற பெண்மணி 8 ஆண்டுகளாக அவரின் வீட்டின் முன்புறம் உள்ள தோட்டத்தை அலங்கரித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அதில் அதிக ஆர்வம் கொண்ட ஸ்மித் செடிகள் மட்டுமின்றி பல வண்ணமயமான பொம்மைகளையும் வைத்து தோட்டத்தை அலங்கரித்துள்ளார்.

குறிப்பாக நாய், பூனை, குதிரை போன்ற பொம்மை விலங்குகளை தோட்டத்தில் வைத்துள்ளார். மேலும் தோட்டத்தில் கூண்டுகளில் புறா மற்றும் குருவிகள் இருப்பது போன்றும் அமைத்துள்ளார். அதிலும் தோட்டத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ள ரதம் போன்ற கூண்டானது பார்ப்போரின் கண்களை வெகுவாக ஈர்த்துள்ளது. சுமார் 300 பொம்மைகளை வைத்து தோட்டத்தை அழகுப்படுத்தியுள்ளார். மேலும் பொம்மைகளை சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளார். அந்த தோட்டத்தில் உள்ள பொம்மைகளை பார்க்கும் பொழுது அனைவரின் முகத்திலும் ஒருவித சிரிப்பும் மகிழ்ச்சியும் வருகிறது.

அதிலும் அதனை கண்டவர்கள் 5 நிமிடத்திற்கு எந்தவொரு சிந்தனையுமின்றி ரசித்துக்கொண்டிருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் மாலை நேரங்களில் இத்தோட்டத்தில் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக தோட்டமானது பொம்மைகளால் நிறைந்திருப்பது ஸ்மித்திற்கு மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் அனைவருக்கும் எல்லையற்ற சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.

Categories

Tech |