Categories
உலக செய்திகள்

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு…. போடப்படும் தடுப்பூசிகள்…. உதவிகள் வழங்கும் அரசு…!!

உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் ஊரடங்கானது ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸானது உருமாறிய பல்வேறு பெயர்களில் பரவி வருகிறது. இதனால் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் மேலும் 30 நாட்களுக்கு ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறியதில் “கடந்த ஜூன் 26ஆம் தேதி 12 பேருக்கு புதிதாக தொற்று உறுதி  செய்யப்பட்டதை அடுத்து ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் டெல்டா வகை வைரஸானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 177 ஆகும். மேலும் ஊரடங்கானது சிட்னி நகரின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னியிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து நகரின் மற்ற இடங்களில் கட்டுமான பணிகள்  நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பொருளாதார நிலை குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் பேசியுள்ளார். அதில்” கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு  74000  அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும் எனவும் வருமானத்தை இழந்து சிறு  குடும்பத்திற்கு சமூக நல உதவிகள் செய்யப்படும். மேலும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானால் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான உத்தரவுகள் இந்த ஆண்டிற்குள் வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |