உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கமானது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் மெல்போர்ன் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் அமல்ப்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கமானது வரும் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு உருமாறிய கொரோனா வைரஸானது பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உருமாறிய கொரோனா வைரஸானது எளிதில் பரவக்கூடியதாகும்.
இதனால் இப்பொழுதே ஊரடங்கை தளர்த்தினால் தொற்று பரவலானது சிட்னி நகரை போன்று கடினமாகிவிடும் என்று விக்டோரியா மாநில பிரதமர் Daniel Andrew ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விக்டோரியா மாநிலத்தில் நேற்று மட்டும் கொரோனா தொற்றால் 20 பேர் பாதிப்படைந்து உள்ளனர். அதிலும் சிட்னி நகரில் ஊரடங்கானது இந்த மாதம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த புதன்கிழமை அன்று 344 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.