ரஷ்ய நாட்டிற்கு ரூபிளில் பணம் செலுத்துவதற்கு ஆஸ்திரியா ஒப்புக்கொண்டது என்று வெளியான தகவலை அந்நாட்டின் சான்சலர் மறுத்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் ரஷ்ய நாட்டின் பங்குச் சந்தையும், அந்நாட்டின் நாணயமான ரூபிளின் மதிப்பும் கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக தங்கள் நாட்டிலிருந்து எரிவாயு வாங்கக் கூடிய நாடுகள் ரூபிளில் தான் பணம் செலுத்தவேண்டும் என்று ரஷ்யா அறிவித்திருக்கிறது.
ஐரோப்பிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆஸ்திரிய அரசு ரூபிளில் பணம் செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது என்று தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை ஆஸ்திரிய நாட்டின் சான்சலரான கார்ல் நெஹம்மர் மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.