Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvZIM : 8 ஆண்டுகளுக்கு பின் வெற்றி…. ஆஸிக்கு ஷாக் கொடுத்த ஜிம்பாப்வே…. தொடரை இழந்தாலும் மாஸ்..!!

மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி அசத்தியது.

ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது முதல் 2 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று கடைசி மூன்றாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் ரிவர்வே மைதானத்தில் நடைபெற்றது.. இதில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி.. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களா டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினர்.கேப்டன்  ஆரோன் பின்ச் 15 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற்றினார்..

இதையடுத்து வந்த வீரர்கள் யாருமே நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சொற்பரன்களில் வெளியேறினர்.. டேவிட் வார்னர் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரியான் பர்ல் வீசிய 29 ஆவது ஓவரில் பிராட் எவன்ஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 31 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்கார டேவிட் வார்னர் 14 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 96 பந்துகளில் 94 ரன்களும், மேக்ஸ்வெல் 19 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.  ஜிம்பாப்வே அணி தரப்பில் ரியான் பர்ல் 5 விக்கெட்டுகளும், பிராட் எவன்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.. ரியான் பர்ல் 3 ஓவர்கள் வீசி 10 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஜிம்பாபே அணி தொடக்க வீரர்களாக தகுத்ஸ்வநாஷே கைதானோ மற்றும் தடிவானாஷே மருமணி ஆகியோர் களம் இறங்கி ஆடினர்.. இருவரும் ஆடி வந்த நிலையில், 9ஆவது ஓவரில் ஜோஸ் ஹேசில்வுட் பந்துவீச்சில் கைதானோ 19 ரன்கள் எடுத்திருந்த ஸ்டிவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து வந்த வெஸ்லி மாதவேரே2, சீன் வில்லியம்ஸ் 0, சிக்கந்தர் ராசா 8 என சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் மருமணி அவர் பங்குக்கு 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் அணியின் ஸ்கோர் 18.3  ஓவரில் 77/5 என்று இருந்தது. இதனால் சீக்கிரம் ஆல் அவுட் ஆகிவிடுமோ என்ற நிலையில், கேப்டன் ரெஜிஸ் சகப்வா மற்றும் டோனி முனியோங்கா இருவரும் தட்டி தட்டி சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அதன்பின் முனியாங்கோ 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 31.2 ஓவரில் 115/6 என்று இருந்தது. விக்கெட் விடாமல் இருந்தால்  வெற்றியை நெருங்கியது ஜிம்பாப்வே.. பின் வந்த ரியான் பர்ல் அவர் பங்குக்கு 11 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.. ஒருபுறம் விக்கெட் போய்கொண்டிருந்தாலும் கேப்டன் ரெஜிஸ் சகப்வா நங்கூரம் போல நின்று இறுதியில் அணியை வெற்றிபெற வைத்தார்..

அவர் அதிக பந்துகளை எதிர்கொண்டாலும் கடைசி வரை நின்றார் பொறுமையாக அடி 72 பந்துகளில் 37 ரன்களுடனும், பிராட் எவன்ஸ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்..  ஜிம்பாப்வே அணி 39 ஓவரில் 7 விக்கெட் 142 ரன்கள் எடுத்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் ஜோஸ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஜிம்பாப்வே தொடரை இழந்திருந்தாலும் இந்த வெற்றி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பெரிய தருணமாக பார்க்கப்படுகிறது. ஜிம்பாப்வே வீரர்கள் 2014 க்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.  வரலாற்றில் மூன்றாவது வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.

2014 இல் ஹராரேயில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  8 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வேக்கு 3ஆவது வெற்றி கிடைத்துள்ளது. 1983ல் இரு நாடுகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |