விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். சென்ற 1971 ஆம் வருடம் பாகிஸ்தான் உடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் அடிப்படையில் ஆண்டுதோறும் டிச..16 ஆம் தேதி விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் தன் சுட்டுரை பதிவில், “1971ல் நடந்த போரில் இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்த துணிச்சல்மிக்க அனைத்து ஆயுதப்படை வீரர்களுக்கும் விஜய் திவாஸான இன்று மரியாதை செலுத்துகிறேன். நாட்டைப் பாதுகாப்பாக வைத்து இருப்பதில் முக்கியமான பங்கு வகிக்கும் ஆயுதப்படைகளுக்கு நம் நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்” என அவர் பதிவிட்டுள்ளார்.