Categories
பல்சுவை

உலக செவிலியர்கள் தினம் வாழ்த்துக்கள்: வாழும் மனித கடவுள்கள் இவர்கள் தான்….!!

உங்கள் பணியில் நீங்கள் காட்டும் அற்பணிப்பு மிகவும் அற்புதமானது மற்றும் பாராட்டத்தக்கது உலகில் உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள் உண்மையான போர் வீரர்களாக நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் முன் வரிசையில் நின்று போராடும் அனைத்து செவிலியர்களுக்கும் எங்கள் மரியாதை கலந்த செவிலியர் தின வாழ்த்துக்கள் வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் இருக்கும் நேரத்தை யாகம் செய்து பெரும்பாலான நேரங்களை நோயாளிகளுடன் செலவிட்ட அற்புதமான செவிலியர்களுக்கு செவிலியர் தின வாழ்த்துக்கள் வாழ்வின் கடினமான சூழலில் […]

Categories
தேசிய செய்திகள்

பாதிப்பு அதிகமா இருக்கு…. மே 15 வரை இதெல்லாம் கிடையாது…. மத்திய மந்திரி வெளியிட்ட பதிவு…!!

மே 15ஆம் தேதி வரை அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை  மூட அரசு உத்தரவிட்டுள்ளது இந்தியா முழுவதிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,74,664 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் வரலாற்று நினைவு […]

Categories
அரசியல்

கொரோனா பரவல் கட்டுப்படுத்தனும்…. முழு ஊரடங்கு போடுங்க…. மனு கொடுத்த மருத்துவர்கள் சங்கம்…!!

14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முழு ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக சுகாதாரத்துறை செயலருக்கு மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா […]

Categories
உலக செய்திகள்

பணியிடத்தில் பாலியல் தொல்லை…. வெளுத்து வாங்கிய பெண்…. வைரலாகும் காணொளி…!!

சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுஹூவாவின் பெய்லின் மாவட்டத்தில் அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவர் தனக்கு கீழ் பணிபுரியும் பெண்ணிற்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்ததாக தெரிகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் தனது மேலதிகாரியை தரை துடைக்கும் கட்டையால் சரமாரியாக தாக்கி கையில் கிடைக்கும் பொருட்களையும் அவர் மீது வீசியுள்ளார். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலான நிலையில் பாலியல் துன்புறுத்தல் செய்த உயரதிகாரி பணியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்தவாரம் தனக்கு […]

Categories
மாநில செய்திகள்

“அச்சுறுத்தும் கொரோனா” இனி இப்படி தான் நடக்கும்…. வெளியான அறிவிப்பு

கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என தெரியவந்துள்ளது தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஏப்ரல் 23 வரை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை முதல் முழு ஊரடங்கு…. அவசியமில்லாமல் வெளியே வராதீங்க…. மக்களுக்கு அரசு அறிவுறுத்தல்…!!

ராஜஸ்தானில் வார இறுதி நாள் முழு ஊரடங்கு இன்று மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்படவுள்ளது  நாடு முழுவதிலும் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டு மேலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றது. வாரத்தின் இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட உள்ள இந்த முழு ஊரடங்கின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

8 வருடமாக விக்கி காவலுக்கு இருந்தான்…. இப்போ பரிதாபமா போயிட்டான்…. தெரு நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர்….!!

தெரு நாய் உயிரிழந்ததற்கு பேனர் அடித்து அஞ்சலி செலுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அருகே பட்டணம் ரோடு பகுதியில் 8 வருடங்களாக தெரு நாய் ஒன்று காவலாக சுற்றி வந்துள்ளது. விக்கி என்று யார் அழைத்தாலும் அடுத்த நிமிடம் அவர்களிடம் சென்று நன்றியுடன் வாழட்டும் அந்த தெரு நாய்க்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்கள் விக்கியை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இன்று முதல் பழனியில்…. இவங்களுக்கு மட்டும் தான் அனுமதி…. வெளியான முக்கிய தகவல்….!!

பழனி முருகன் கோவிலில் இன்று முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு இதுவரை தளர்த்தப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை மீண்டும் செயல்படுத்தி உள்ளது.  இந்நிலையில் இன்று முதல் பழனி முருகன் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க படுவதாகவும் இரவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இரட்டை கொலை” அதிமுக பிரமுகர் தான் காரணம்…. குண்டர் சட்டத்தில் கைது பண்ணுங்க…. கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக….!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி விசிக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவளத்தில் தேர்தலுக்கு பின்பு இரட்டைக் கொலை நடைபெற்றது. குறிப்பாக கோவளத்தில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனை அப்பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வேட்பாளரை அவர்களது ஊருக்குள் இளைஞர்கள் அனுமதிக்கவில்லை. இந்த முன்விரோதம் காரணமாக இரண்டு நாட்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. மூடப்படுகிறதா மெரினா….? ஆணையர் கூறிய தகவல்….!!

தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மெரினாவை  மூடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.  கடந்த சில மாதங்களாக நாடு முழுவதிலும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க கட்டுப்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மெரினாவை மீண்டும் மூடுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியபோது காலையில் நடை பயிற்சி செய்வதற்கு மட்டும் மெரினாவில் மக்கள் அனுமதிக்கப்பட ஆலோசனை […]

Categories
அரசியல்

“வாக்காளர்களுக்கு டோக்கன்” பாஜக மீது புகார்…. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்…. சாலை மறியலில் காங்கிரஸ்….!!

பாஜகவினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். கோவையிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. வாக்கு சாவடியில் வைத்து டோக்கன் வழங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பாஜகவினரை காங்கிரஸ் கட்சியினர் மடக்கிப் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை…. பொம்மையால் நேர்ந்த ஆபத்து…. 11 வயது சிறுவன் உயிரிழப்பு…!!

விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் பொம்மையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேசத்தில் உள்ள கோலார் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் தனது மாமாவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளான். சம்பவத்தன்று சிறுவனின் மாமா மற்றும் அத்தை வேலைக்குச் சென்றுவிட அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் 12 வயது சிறுமி சிறுவனுடன் விளையாடுவதற்காக சென்றுள்ளார். அங்கு சுயநினைவில்லாமல் சிறுவன் படுத்திருப்பதை பார்த்து தனது பெற்றோரிடம் கூற அவர்கள் சிறுவனின் மாமாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

இவங்க தான் “REAL HERO”…. பற்றி எரிந்த மருத்துவமனை…. மருத்துவர்களின் பாராட்டுக்குரிய செயல்…!!

ரஷ்யாவின் Blagoveschensk எனும் இடத்தில் அமையப்பெற்றுள்ள இதய அறுவை சிகிச்சை மருத்துவமனையில் 8 மருத்துவர்களும் செவிலியர்களும் இணைந்து நோயாளி ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளனர். அச்சமயம் திடீரென மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டும் வெளியில் வர மறுப்பு தெரிவித்து தொடர்ந்து தங்களது […]

Categories
தற்கொலை தேசிய செய்திகள்

உயிரோட மதிப்பு அவ்ளோதானா….? “TV Off” பண்ணதுக்கு இளைஞன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

டிவியை தாய் அணைத்ததால் 19 வயது இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் நேற்று முன்தினம் தனது ஆன்லைன் வகுப்புகளை முடித்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் படுத்துக்கொண்டு டிவி பார்த்ததால் அவரது தாய் சரியாக அமரும்படி கூறிவிட்டு டிவியை அணைத்து விட்டார். இதனையடுத்து கழிவறைக்கு சென்ற இளைஞன் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் சென்று பார்த்தபோது இளைஞன் […]

Categories
பல்சுவை

Wow..!! நம்மளா இவ்வளவு அழகு…. கண்ணாடியை பார்த்து குதிரை செய்த செயல்…. ட்விட்டரில் அசத்தும் காணொளி…!!

தற்போதைய நவீன உலகில் சமூக வலைதளங்களின் மூலமாக ஏராளமான காணொளிகள் வைரலாகி மக்களை சிரிக்க வைப்பதும் சிந்திக்க வைப்பதும் நடைமுறையில் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்யும் சேட்டைகள் காணொளியாக வைரல் ஆவதோடு சில சமயங்களில் மிருகங்களின் வினோத செயல்களும் சமூக வலைதளத்தில் வெளியாகும். அவ்வகையில் தற்போது குதிரை ஒன்றின் நடவடிக்கை காணொளியாக பதிவு செய்யப்பட்டு ட்விட்டரை அசத்தி வருகிறது. முகம் பார்க்கும் கண்ணாடியை யாராக இருந்தாலும் இரண்டு நிமிடமாவது அசையாமல் நின்று நம்மை நாமே […]

Categories
தேசிய செய்திகள்

“வாட்டியெடுக்கும் வறுமை” மனைவியின் பிரசவ செலவுக்கு பணமில்லை…. இளைஞர் தேர்ந்தெடுத்த தவறான பாதை…!!

கர்ப்பிணி மனைவியின் பிரசவ செலவிற்கு பணம் இல்லாததால் இளைஞர் திருடியது மட்டுமில்லாமல் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பு பல இடங்களில் வறுமைவாட்டியெடுக்கிறது. வேலை இழப்பு, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் அன்றாட வாழ்வை நகர்த்துவது பலருக்கும் சிரமமாக இருந்தது. இதனால் திருட்டு, கொலை போன்ற வேண்டாத செயல்களில் சிலர் ஈடுபடத் தொடங்கினர். மகாராஷ்டிராவில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மும்பையை சேர்ந்த 23 வயது இளைஞர் ஷேக், சிப் தயாரிக்கும் […]

Categories
உலக செய்திகள்

“சரியா கண்காணிப்போம்” உறுதியளித்த டிக் டாக் நிறுவனம்…. தடையை நீக்கிய நீதிமன்றம்…!!

பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு போடப்பட்ட தடையை நீக்க கூறி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  லடாக் பகுதியில் நடந்த மோதலை அடுத்து சீனாவின் செயலியான டிக் டாக் பாதுகாப்பு கருதி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதனிடையே பாகிஸ்தானில் ஒழுக்கமற்ற காணொளிகள் வெளியிடுவதாக கூறி அந்த நாட்டிலும் டிக் டாக் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் டிக் டாக் செயலியில் வெளியிடப்படும் காணொளிகளை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் ஒழுங்குபடுத்துவதாகவும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு கல்யாணம் பண்ணிவைங்க” கேட்ட 2 அடி இளைஞன்…. “நான் ரெடி” குவிந்த பெண்கள் கூட்டம்…!!

திருமணம் செய்து வைக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த 3 அடி இளைஞனை மணக்க  பல பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த அஸீம் மன்சூரி  என்ற 2 அடி 3 இன்ச் உயரம் கொண்ட இளைஞர் சில வாரங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் கோரிக்கை ஒன்றை  வைத்தார். அதில் தனக்கு திருமண வயது கடந்து விட்டதாகவும் ஆனால் இதுவரை தனக்கு எந்த பெண்ணும் கிடைக்கவில்லை என்றும் தாங்கள் தான் எனக்கு திருமணம் செய்து வைக்க […]

Categories
தேசிய செய்திகள்

பாதிப்புகள் அதிகமா இருக்கு…. ஊரடங்கு அவசியம் வேண்டும்…. எய்ம்ஸ் தலைவர் அறிவுறுத்தல்….!!

கொரோனா தோற்று பரவலை தடுக்க சிறிய அளவிலான ஊரடங்கு அவசியம் என எய்ம்ஸ் தலைவர் கூறியுள்ளார் சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவடைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சமீப நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா..!! 1 கிலோ காய்கறி 1 லட்சமா….? விவசாயியின் அசத்தல் முயற்சி…. குவியும் பாராட்டுக்கள்….!!

பீகாரை சேர்ந்த விவசாயி ஒரு கிலோ 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் காய்கறியை உற்பத்தி செய்து அசத்தியுள்ளார் தற்போதைய காலகட்டத்தில் விவசாயிகளின் நிலை என்பது சற்று கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. பாடுபட்டு விளைவித்த பொருட்களை சரியான விலைக்கு விற்க முடியாமல் பல  இடங்களில் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதனால் விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் விவசாயத்தில் வெற்றி பெற்றவர்களும் இருக்கின்றனர். அவ்வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த விவசாயியான அம்ரேஷ் சிங் என்பவர் […]

Categories
அரசியல்

மம்தா பானர்ஜியின் உடைந்த கால்…. வெளியான சந்தேகத்திற்குரிய காணொளி…. கேள்வி எழுப்பும் பாஜக…!!

மம்தா பானர்ஜி தனது உடைந்த காலை எந்த ஒரு வலியும் இல்லாமல் அசைக்கும் காணொளி வெளியாகி பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தது. அவ்வகையில் மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மூன்று வாரங்களுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அச்சமயம் திடீரென வந்த மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்ட மம்தா பானர்ஜி […]

Categories
தேசிய செய்திகள்

ச்சீ இவங்கல்லாம் மனுஷங்களா…. அம்மா, அம்மான்னு கதறுறது கேட்கல…. மாங்காய் பறித்த சிறுவர்களுக்கு நடந்த கொடுமை…!!

மாங்கா பறித்த குற்றத்திற்காக சிறுவர்கள் இருவரை காட்டுமிராண்டித்தனமாக நடத்தியது காணொளியாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகாபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த 9 மற்றும் 10 வயது நிரம்பிய சிறுவர்கள் இருவர் தங்களின் நாயை தேடி மாங்காய் தோட்டம் ஒன்றிற்குள் நுழைந்துள்ளனர். அங்கு மாங்காய்கள் காய்த்திருப்பதைப் பார்த்து அதனை சிறுவர்கள் பறித்துள்ளனர். இதனை பார்த்த தோட்டத்தின் உரிமையாளர்களான பனோத் யாகூப் மற்றும் பனோத் ராமுலு ஆகிய இருவரும் சிறுவர்களை விரட்டி பிடித்து கட்டி வைத்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாயை இழந்த சிறுமி…. சித்தியால் அனுபவித்த கொடுமைகள்…. புத்திசாலித்தனத்தால் கிடைத்த விடுதலை….!!

 தாயை இழந்த சிறுமி சித்தியால் கொடுமை செய்யபட்டதால் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் தாயை இழந்த சிறுமி , எஸ் எஸ் காலணியில் வசித்து வரும் அவளது சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் சித்தி அவளை மிகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் , மனிதாபிமானம் இல்லாமலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார் . இக்கொடுமையிணை தாங்க முடியாத சிறுமி புத்திசாலித்தனமாக எஸ் எஸ் காலணியில் உள்ள குழந்தைகள் நல வாரியத்தில் புகார் அளித்தார் . அப்புகாரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடை செய்தும் ஏன் விற்கிறீர்கள்…. ரோந்து பணியில் போலீஸார்…. பெட்டிக் கடை உரிமையாளர் கைது….!!

ரோந்து பணியில் இருந்த காவலர்கள் பெட்டிக்கடையிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தற்போது 2021 கான சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது . இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன . இதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினர்கள் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் வில்லூர் பகுதியின் காவலர்கள் புளியங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது அதே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் இரு கொள்ளைச் சம்பவம்…. உரிமையாளர்கள் குமுறல்…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

மதுரையில் மர்ம நபர்கள் ஒரே நாளில் இரண்டு கடைகளில் கொள்ளையடித்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் மேலூரில் மானக்சா என்பவர் ஐஸ்கிரீம் கடையும் அதே பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வெடிக்கடையும் நிறுவி வந்துள்ளார்கள் . இந்நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவில் சென்று இரு கடைகளின் பூட்டையும் உடைத்ததையடுத்து ஐஸ்க்ரீம் கடையிலிருந்து ரூபாய் 9 ஆயிரத்தையும் வெடி கடையிலிருந்து ரூபாய் 20000 கொள்ளையடித்து சென்றனர் . இதனைத் தொடர்ந்து ஐஸ்க்ரீம் கடை உரிமையாளர் மானக்சா என்பவரும் வெடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்யாண வீட்டில இப்படியா….? சிறுவனின் தங்கச் சங்கிலியை காணவில்லை…. சிசிடிவியில் பதிவான காட்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மதுரையில் கல்யாண வீட்டில் திருடர்கள் சிறுவனிடமிருந்து 3 பவுன் தங்கச்சங்கிலியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற கல்யாண வீட்டிற்கு பெற்றோருடன் அவர்களது 9 வயது சிறுவனும் சென்றுள்ளான். இந்நிலையில் கல்யாண நிகழ்ச்சியில் முழு கவனத்தையும் செலுத்திய பெற்றோர்கள் மகனை கவனிக்காத நிலையில் , தனியாக இருந்த சிறுவனிடமிருந்து சுமார் 3 பவுன் தங்கச்சங்கிலியை திருடர்கள் பறித்துச் சென்றனர். இதையடுத்து பெற்றோர்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . இவர்கள் அளித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோப்பிற்குள் சுவாமி தரிசனம்…. 40 ஆட்டு கிடாய்கள் 800 சேவல்கள் காணிக்கை…. மதுரையில் பக்தர்களுக்கு கறி விருந்து….!!

மதுரை அருகே தோப்பிற்குள் இருக்கும் கோவிலில் பக்தர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தோப்பிற்குள் இலந்தை மரத்தடியில் முத்துப்பிள்ளை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவிற்கு பக்தர்கள் அனைவரும் காணிக்கையாக ஆட்டுக்கிடாய், சேவல்கள் கொடுப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் முத்துப்பிள்ளை அம்மன் கோவில் திருவிழாவிக்கு பக்தர்கள் காணிக்கையாக 40 ஆட்டு கிடாய்கள் 800 சேவல்கள் படைத்தனர் . இதனைத் தொடர்ந்து அம்மன் முன்பாக வைக்கப்பட்டிருந்த 1000 ம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. 78 ஆரணி பட்டுப்புடவைகள் பறிமுதல்…. காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் அதிரடி….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூபாய் 46 ஆயிரத்து 800 மதிப்பிலான 78 ஆரணி பட்டு புடவைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க ஆங்காங்கே பறக்கும் படையினரை தேர்தல் குழு நியமித்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு சந்திப்பில் பறக்கும் படையினர் தோட்டக்கலை துறை அலுவலர் கோமதி தலைமையில் வாகன சோதனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1 1/2 பவுன் நகை கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

மதுரையில் மர்ம நபர்கள் பெண்ணிடம் 1 1/2பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீன யுகத்தில் இன்றளவும் சில நபர்கள் கொலை , கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு  வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் நாகமலைக்கோட்டையில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார் . இவரது மனைவி தாரணி அருகிலுள்ள வங்கிக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு திரும்பிய தாரணி மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீசார்…. சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்…. 2 பேர் கைது….!!

மதுரையில் கஞ்சா விற்ற இரண்டு பேரை ரோந்து சென்ற காவல்துறையினர்கள் கைது செய்தனர். தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது . இதனால் பணம்பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினரும் பறக்கும் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் அண்ணாநகரில் சப் இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா , அரவிந்த் குமார், பவித்ரன் ஆகிய மூவரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பரபரப்பான தேர்தல் களம்…. எனக்குதான் அந்த தொகுதி…. போராட்டத்தில் இறங்கிய பாஜக உறுப்பினர்…!!

மதுரை மாவட்டத்தில் தேர்தல் அலுவலகம் முன்பாக பாஜக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் எம்.எல்.ஏவாக திமுக உறுப்பினர் டாக்டர் சரவணன் இருந்தார். ஆனால் தற்போது நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் சரவணனுக்கு திமுக கட்சி சார்பில் சீட்டு ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் நேற்று காலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து சரவணன் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியது . இந்நிலையில் பாஜக உறுப்பினரான சீனிவாசன் என்பவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திரௌபதி அம்மன் கோவிலில் விழா…. பிரம்மாண்டமாக நடந்த கொடியேற்றம்…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரை மாவட்டத்தில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூரையடுத்த திருவாதவூரில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம் . மேலும் இக்கோவிலின் திருவிழா என்றாலே அந்த ஊர் மக்களுக்கு மிகவும் விசேஷமான ஒன்றாக இருக்கிறது . ஏனெனில் இக்கோவிலில் நடைபெறும் பூக்குழி திருவிழா அனைத்து மக்களையும் கவரும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது . […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மிஞ்சிய வைக்கோலில் சத்து நிறைந்த காளான் வளர்ப்பு…. விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம்…. மதுரை மாணவர்கள் விளக்கம்….!!

மதுரையில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்ற கல்லூரி அமைந்துள்ளது. இதில் பயிலும் இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் விவசாய மேம்பாட்டிற்க்காக மேலூரையடுத்த கிடாரிப்பட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்த ஆலோசனைகளை கூறியுள்ளார்கள். இதில் மாணவர்கள் புரதம் மற்றும் நார்ச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ள சிப்பி காளான் வளர்ப்பு முறை விளக்கத்தை அளித்தனர். அதாவது நெல் பயிரிடும் விவசாயிகள் அறுவடைக்குப் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய லாரி…. தூக்கி வீசப்பட்ட காவலாளி…. நேர்ந்த சோகம்….!!

காஞ்சிபுரத்தில் லாரி மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அங்கம்பாக்கத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வந்தார். இவர் பக்கத்து ஊரான ஓரகடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார் . இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் அங்கம்பாக்கத்திலிருந்து ஓரகடத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது நாகராஜன் அவளூர் வாலாஜாபாத் மேம்பாலத்திற்கு அருகே நெருங்கும்போது திடீரென்று லாரி ஒன்று இவரது இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜன் பலத்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. ஒரு லட்சம் மதிப்பிலான 3 டன் அரிசி பறிமுதல்…. காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் அதிரடி….!!

காஞ்சிபுரத்தில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 3 டன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் விதி முறைகளும் நடத்தைகளும் அமலில் உள்ளது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட கீழம்பி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது அவ்வழியாக காஞ்சிபுரத்திலிருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசையா வளர்த்தேன்…. இப்படி ஆயிருச்சு…. மன விரக்தியில் விவசாயி எடுத்த முடிவு….!!

 பசுமாடு இறந்த துக்கம் தாங்காமல் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நாராயணன் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்ததோடு மட்டுமல்லாமல் இட்டேரி பகுதியில் தொழுவம் அமைத்து மாடுகளை பராமரித்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தினமும் மாட்டிற்கு தீவனம் வைப்பது , தண்ணீர் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். இவ்வாறு நாராயணன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென அவர் ஆசையாக வளர்த்து வந்த பசுமாடு ஒன்று இறந்தது. இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கேட்ட சான்றிதழை கொடுங்க…. தேர்தலைப் புறக்கணிக்கப் போகிறோம்…. சாலை மறியலில் இறங்கிய சங்க உறுப்பினர்கள்….!!

உசிலம்பட்டியில் 68 சமுதாய மக்களுக்கு டி என் டி சான்றிதழ் வழங்கக்கோரி இரு சங்கத்தினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலை முன்பாக வடமாநில தமிழர்கள் கூட்டமைப்பும் சீர்மரபினர் சங்கமும் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர்களும் காவல்துறையினரிடம் கூறியதாவது, இந்திய நாட்டிலுள்ள அனைத்து சீர்மரபினர் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்…. வழியில் நேர்ந்த சோகம்…. எவ்வளவு முயற்சி செய்தும் முடியல…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்….!!

கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த  மர்ம நபர்கள் தங்க நகையை பறித்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம் செல்லூரில் அர்ச்சுனன் என்பவர் அவரது மனைவி முத்துச்சரத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அர்ஜூனனின் மனைவி சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை கவனித்த  மர்ம நபர்கள் இரண்டு பேர் முத்துச்சரத்தை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனை கவனிக்காத முத்துச்சரம் கோவிலுக்கு எல்ஐசி அலுவலகம் வழியாக சென்றிருக்கிறார். அப்போது மோட்டார் சைக்கிளில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த கார்…. நிமிடத்தில் உயிர்தப்பிய அலுவலர்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டத்தில் ஓடும் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில் குபேரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலூரின் யூனியன் ஆபீஸில் பணிபுரிந்து வரும் நிலையில், குபேரன் அலுவலகத்தின் காரில் சென்றுள்ளார் . அப்போது காரிலிருந்து திடீரென புகை எழும்பியுள்ளது. இதனால் காரிலிருந்த நபர்கள் உடனடியாக வெளியேறியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. ஆட்சியர் அலுவலகத்தில் கல்வீச்சு…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மர்ம நபர்கள் கல் வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் போட்டியாளர்கள் அனைவரும் ஆங்காங்கே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இதனால் பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வகையில் துணை ராணுவத்தினரும் காவல்துறையினரும் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தும்கூட சில மர்ம நபர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தல்…. 3 பேர் அதிரடி கைது….!!

மதுரை மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக மணல் அள்ளிய மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தமிழகத்தில் பல பகுதிகளில் சில நபர்களால் மணல் கொள்ளை இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறது. இதனால் காவல்துறையினர் மணல் கொள்ளையை தடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் ஆலம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் அனுமதியின்றி மூன்று நபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை அறிந்த மதுரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மகா சிவராத்திரி” தென்தமிழ்நாடு சேவாபாரதி சார்பாக 1008 சிவ பூஜை…. திரண்டு வந்த மக்கள் கூட்டம்…!!

திசையன்விளை சுயம்புலிங்க சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் சுவாமியை பூஜித்து பிராத்தனை செய்வார்கள் . இந்நிலையில் சிவபெருமானுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரியை முன்னிட்டு இக்கோவிலில்,” தென் தமிழ்நாடு சேவாபாரதி ” சார்பாக சிவலிங்கத்திற்கு 1008 சிவபூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் சிவ சுலோகங்கள் கூறியபடி சுவாமியை தரிசனம் செய்தார்கள் . இதனைத் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கும்பாபிஷேக விழா…. புதிய மண்டபத்தை திறந்த போலீஸ் சூப்பிரண்ட்…. வழிபாட்டுக்கு திரண்ட மக்கள் கூட்டம்….!!

நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில் அமைந்துள்ளது . இந்தக் கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவில் கமிட்டி குழு சார்பில் முன்மண்டபம் மற்றும் சுற்றுப் பிரகார மண்டபம் ஆகியவை கட்டப்பட்டது. இந்த கோவிலின் புதிய மண்டபங்களை திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மணிவண்ணன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மேலும் மூலவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என் வயல் வழியாக போகக்கூடாது…. அறுவடை இயந்திரத்தால் பிரச்சனை…. விவசாயிக்கு அரிவாள் வெட்டு….!!

அறுவடை இயந்திரம் கொண்டு வருவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பழைய பேட்டையில் சிவசுப்பு என்பவர் வாழ்ந்து வருகிறார் . இவரது சொந்த வயல் கொம்பந்தபந்தனூரில் உள்ளது. அதில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்திவருகிறார். அதேபோன்று முத்துக்குமார் என்பவருடைய வயல் சிவ சுப்புவின் வயலுக்கு அருகே உள்ளது . இதனிடையே இது நெல் சாகுபடி காலம் என்பதால் சிவசுப்பு தனது வயலில் நெல் பயிரிட்டு அறுவடை செய்ய எந்திரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடை செய்தும் ஏன் விற்கிறீர்கள்…. ரோந்து பணியில் போலீஸார்…. இருவர் கைது….!!

தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரில் பெட்டி கடை ஒன்றை நடத்தி அதில் மளிகை வியாபாரம் செய்து வருகிறார் . இந்நிலையில் டீ கல்லுப்பட்டி காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது , பொன்ராஜ் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட 141 புகையிலை பொருட்கள் இருப்பதை கவனித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் புகையிலை பொருள்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெருங்கும் சட்டசபைத் தேர்தல்…. மக்களுக்கு பயம் வேண்டாம்…. துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு….!!

மதுரை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். தமிழகத்தில் 2021 கான சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் 100% வாக்குப்பதிவு பெறுவதற்காக அரசாங்கம் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல தேர்தல் விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களின் வருகையினால் மக்களுக்கிடையே எழும்பும் அச்சத்தினை போக்குவதற்காகவும் சட்ட ஒழுங்கை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர் கொள்ளை வழக்கு…. ரோந்துப்பணியில் சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

 காவல் துறையினர் மேற்கொண்ட ரோந்து பணியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நவீன காலத்தில் பல பகுதிகளில் சில நபர்களால் கொலை கொள்ளை முயற்சிகள் படம் பாணியில் நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுபோன்ற செயல்களை தடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் திருட்டு…. சிசிடிவி கேமராவும் போச்சு…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்….!!

 அரசு பள்ளியில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் சுமார் 2 மணி அளவில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது இச்சம்பவத்தன்று கோபி என்பவர் இரவு நேர காவலில் ஈடுபட்டார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் இவர் ரோந்து சென்ற போது மர்ம நபர்களால் தலைமைஆசிரியர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து உள்ளே சென்ற கோபி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. பறிமுதல் செய்யப்படும் லட்சக்கணக்கான பணம்…. பறக்கும் படையினர் அதிரடி…!!

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மதுரையில் பறக்கும் படையினர் 1,40,000 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் 2021 க்கான சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் குழுவினர் ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்துள்ளனர். இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்வார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரிலுள்ள சுங்கசாவடியில் பறக்கும் படையினர், தாசில்தார் செந்தாமரை தலைமையில் சோதனையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை உயர்வு…. அச்சத்தில் மக்கள் ….!!

நெல்லையில் இன்று ஒரே நாளில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சீனாவில் பகுதியில் தோன்றிய கொரோனா தொற்று அனைத்து நாடுகளிலும் பரவி பெரும்சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இந்த தொற்றினை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதில் ஒரு பகுதியாக மக்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்தத் தொற்று பரவாமல் இருக்க பல நெறிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார்கள். அரசாங்கத்தின் […]

Categories

Tech |