அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் பரவலாக வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா கடந்த ஜனவரி மாதத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபரின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தவித தடுப்பூசி போடப்பட்டது எவ்வளவு டோஸ் எடுத்துக் கொண்டுள்ளனர் என்ற தகவலை அவர் வெளியில் கூற மறுத்துவிட்டார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே ட்ரம்ப் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார் […]
Author: inza dev
IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME
2021 ஆம் ஆண்டிற்கான கோல்டன் க்ளோப் சிறப்பு நடிகருக்கான விருதினை புற்றுநோயால் உயிரிழந்த சாட்விக் போஸ்மேன் வென்றுள்ளார். சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் 2021 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப்ஸ் என்ற விருதை வென்றுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜார்ஜ்சி உல்பி இயக்கத்தில் வெளிவந்த மா ரெயினியிஸ் பாட்டம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது பட்டியலில் தி கிரவுன் […]
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் அப்பெண்ணை பரிசோதித்ததில் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து போனதாக கூறியுள்ளனர். பின்னர் அந்த குழந்தையை வெளியில் எடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நோய் தொற்று அக்குழந்தைக்கும் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. கொரோனா தொற்றால்தான் குழந்தை இறந்திருக்க கூடும் என்று தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இஸ்ரேலில் ஏற்கனவே […]
பேஸ்புக்கில் காதலித்த பெண்ணுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்தார். முகம் தெரியாத இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இருவரும் நட்பில் இருந்துள்ளனர். சிறிது காலத்திற்குப் பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து கண்ணன் ஜெய்ஹிந்த் புரத்திற்கு அடிக்கடி வந்து அந்த பெண்ணை சந்தித்து […]
ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அடுத்து வெள்ளிக்கிணறு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் தனது வீட்டின் அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். குமரேசனுக்கு திருமணம் ஆகிய நிலையில் இன்னும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமி கடைக்கு அடிக்கடி வந்ததால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. சில காலங்களாக […]
ராகுல் காந்தியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து இணையவாசிகள் அவர்களிடம் டிப்ஸ் கேட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளா,மேற்கு வங்கம் ,அசாம் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவித்துள்ளது . இந்நிலையில் அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள்.காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தியும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து கேரளாவில் பரப்புரை நடத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த மீனவர்களுடன் கடலில் நீச்சல் […]
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததால் இந்தியா பிச்சுகள் மோசமானது என முன்னாள் வீரர்கள் குறை கூறி வருகின்றனர் . இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் சென்னை மற்றும் அகமதாபாத் பிட்சுகள் மோசமானதாக இருந்ததாகவும். அதுவே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்ததால் இந்திய அணி வெற்றி பெற்றதாகவும் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர்கள் […]
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டின் டேல் ஸ்டெய்னை கேலி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த வெள்ளிகிழமை அன்று டேல் ஸ்டெயின் விளையாடியுள்ளார். அப்போது அவர் பந்துவீசி 2 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். கிரிக்கெட் விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் போது நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சைமன் டவுல் ஸ்டாய்னின் முடி அமைப்பை பற்றி மனம் புண்படும்படி கேலி செய்துள்ளார். இந்தப் […]
ஐபிஎல் போட்டிகளை எந்தெந்த மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற முடிவினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியின் 14 வது சீசனிற்கான ஏலம் நடந்து முடிந்தது. ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இதுவரை ஒவ்வொரு அணியும் தனது சொந்த மைதானத்தில் ஏழு போட்டியிலும் வெளி மைதானத்தில் 7 போட்டிகளிலும் விளையாடுவார்கள். ஆனால் தற்போது பிசிசிஐ 6 மைதானத்தில் மட்டுமே போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.அவை சென்னை, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகும். மேலும் மும்பையில் […]
நாய்களிடையே புதிதாக பர்வோ வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வினை விராட் கோலியும் ஹர்பஜன் சிங்கும் பாராட்டியுள்ளனர். இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஹர்பஜன் சிங் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் 400 விக்கெட்டுகள் பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனை புரிந்துள்ளார். இவர் 77 […]
அகதிகள் முகாமிலிருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதுமட்டுமன்றி ஐஏஎஸ் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகள் கூட்டங்களின் ஆதிக்கமும் இங்கு அதிகரித்துள்ளது. உள்நாட்டுப் போர் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை சிரியாவில் உள்ள வடக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.இந்நிலையில் சிரியாவில் உள்ள அல் ஹவுஸ் என்ற முகாமில் உள்ள ஒரு குடிலில் […]
வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த 10 பேரை காரில் வந்த மர்ம நபர் சுட்டு கொலை செய்தது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் மேற்குப் பகுதியில் ஜலிஸ்கா மாகாணம் உள்ளது. நாட்டிலேயே அதிக அளவு வன்முறை நடைபெறும் இடமாக ஜலிஸ்கா மாகாணம் திகழ்கிறது. சமீபத்தில் நடத்திய ரகசிய புதைகுழி சோதனையில் ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன வேறு எந்த மாகாணத்திலும் இந்த அளவு உடல்கள் இதுவரை கண்டெடுக்கபடவில்லை. போதை பொருள் கடத்தல் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்கின்றதாலே இது […]
மியான்மரில் ராணுவ ஆட்சியை புறக்கணித்து ஜனநாயக ஆட்சி வேண்டும் என்று நடத்தப்படும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பரபரப்பு நிலவி வருகிறது. மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ஆளும் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக ஜனநாயக ஆட்சியை கவிழ்க்க ராணுவ ஆட்சி முற்பட்டது. மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் […]
தீவில் உள்ள கடற்கரையில் கிடைத்த அதிபயங்கரமான உலோகப் பந்தால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த மனோன் கிளார்க் என்பவர் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ஹார்பர் என்ற தீவில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பெரிய உலோக பந்தினை பார்த்த இவர் அங்கு இருந்தவர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து விண்வெளி நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு இது செயற்கைக்கோளோகவோ அல்லது விண்வெளியிலிருந்து வந்த பொருளாகவும் இருக்கலாம் […]
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனாவிற்கான 2 லட்சம் தடுப்பு மருந்து கவுதமாலா நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பு மருந்து நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் மொத்தமாக 1,42,42,547 தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கோவிஷில்டு ஆகிய தடுப்பு மருந்துகள் […]
நைஜிரியாவில் பயங்கரவாதிகள் 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர். நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்நிலையில் ஜான்கேபே மாகாணத்திலுள்ள அரசு பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் பள்ளிக்குள் அதிக நேரம் இருப்பதற்காக வெளியில் உள்ள பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து உள்ளிருந்த தீவிரவாதிகள் 317 மாணவிகளை […]
சாலையோரம் நின்று கொண்டிருந்த வாலிபரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே கோபாலசமுத்திரத்திலுள்ள முனியசாமி தெருவில் நம்பியார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவரது மகன் கார்த்திக் கூலி வேலை பார்த்து வந்துள்ளார் .சம்பவத்தன்று கார்த்திக் கோபாலசமுத்திரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் கார்த்தியை சரமாரியாக வெட்டியுள்ளனர் . அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கார்த்திக் சாலையில் ஓடியுள்ளார். ஆனாலும் மர்மநபர்கள் துரத்தி சென்று கார்த்திக்கை […]
சீனாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க கோரி குடியரசு கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சினாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நிறுத்தக்கோரி குடியரசு கட்சி தலைவர்கள் குரல் கொடுத்துவருகின்றனர். சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற மனித […]
லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் மதனத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்று வாலிபர் ஒருவர் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கோவில் சுவற்றின் மீது வேகமாக மோதியது. அதில் கோவில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் […]
ஓடும் ரயிலில் குறுக்கே பாய்ந்து தாய்-மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்விலாச்சூர் என்ற கிராமத்தில் ஜெயந்தி என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவர் ராஜேஷ் குமார். இவர் மத்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நந்திதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயந்தி மற்றும் அவரது மகள் நந்திதா இருவரும் விரிஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர் போலீசார் இருவரின் […]
கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை இன்ஜினுடன் குட்டி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. கெயின்ஸ்வில்லே விமான நிலையத்திலிருந்து புளோரிடா மாகாணம் டேடோனா கடற்கரை பகுதி நோக்கி புறப்பட்டு சென்ற விமானத்தில் விமானி உட்பட 3 பேர் பயணித்துள்ளனர். விமானம் கிளம்பிய சில நிமிடத்திலேயே விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த […]
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் நாள் பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகலை ஆராய்ந்து வெளியிட்ட வரும் சிறந்த இயர்பியல் மேதையுமான சர் சி வி ராமன். தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ராமன் விளைவு ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது. தேச தலைவர்கள் மற்றும் தியாகிகளை கொண்டாடுவது […]
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வங்காள தேசத்தில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8400 ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 12,348 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 407 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,45,831 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் கொரனாவினால் இன்று உயிரிழந்தனர். […]
தடுப்பு மருந்து போட்டு கொண்டவர்களில் 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த தடுப்பூசி அமெரிக்காவின் சைபர் மற்றும் மாடர்னா நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் ஆகும். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகவலை சுவிஸ்மெடிக் என்று அழைக்கப்படும் அந்நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழுவானது தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட 364 பேருக்கு சில […]
மக்களின் பொழுதுபோக்கை மேம்படுத்துவதற்காக அல்குரம் கடற்பகுதி உருவாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அபுதாபியில் அல்குரம் என்னும் கடற்கரை பகுதி பல பொழுதுபோக்கு சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் மக்களின் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள், பொழுதுபோக்கு நிலையங்கள், கடற்கரை பகுதிகள் என பல இடங்களிருந்தும். தற்போது ஷேக் ஜாயித் சாலை பகுதிக்கு அருகே புதிதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அல்குரம் கடற்கரைப்பகுதி மேம்படுத்தப்பட்டு வந்தது. மாங்குரோவ் கடற்பகுதியை ஒட்டி இப்பகுதி உள்ளது. […]
இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது இந்தியாவுடன் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதன்படி பிப்ரவரி 24 நள்ளிரவில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குனர்களான டி ஜி எம் ஓ ஹாட்லைன் மூலம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தியதில். எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் அமலில் இருக்கும் அனைத்து […]
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் மெக்கென்சி பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சம் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியான மெக்கன்சி பகுதியில் நிலநடுக்கம் தென்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. அங்கு குடியிருந்த மக்கள் வீடுகள் கிடுகிடுவென குலுங்க தொடங்கியவுடன் வீட்டிலிந்து வெளியேறியுள்ளனர். பின் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்தத்தில் எற்பட்டுள்ள […]
சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் கைதிகள் தப்பிச் சென்றதுடன் கொலை, கொள்ளை கும்பல் தலைவரான அர்னல் ஜோசப் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்று ஹைதி ஆகும், போர்ட்- அவ்- ப்ரின்சின் என்பது ஹைதியின் தலைநகராகும். அங்கு க்ரோஸ்-டிஸ்-பவ்க்யுட்ஸ் என்ற சிவில் சிறைச்சாலை உள்ளது. அதில் கொலை கொள்ளை உள்ளிட்ட வழக்குகளின் குற்றவாளிகள் அங்கு அடைத்து வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் அச்சிறைசாலையில் கடந்த வியாழக்கிழமை அன்று கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் […]
கொரோனா கட்டுப்பாட்டை மீறியதால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அகதா மகேஷ். இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த நைகல் ஸ்கியூ என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகதா முகேஷை பார்ப்பதற்காக நைகல் சிங்கப்பூர் வந்துள்ளார். அப்போது பரவி வந்த கொரோனாவினால் கடும் கட்டுப்பாட்டதால் மைக்கேல் அங்குள்ள ஓட்டலில் தங்கி […]
பனிப்பிரதேசத்தில் வாழும் துருவக் கரடிகள் பற்றிய தொகுப்பு. துருவக் கரடிகள் எங்கும் பனி மூடியுள்ள துருவ பிரதேசத்தில் வசிக்கும் ஒரு சில பிராணிகளின் குறிப்பிடத்தக்கது துருவக்கரடி என்று அழைக்கப்படும் வெள்ளைநிற பனி கரடிகள் ஆகும். இக்கரடி தனிமயமான நீரில் 300 மயில் வரை உடல் அலுப்பின்றி நீந்தி செல்லும் திறன் படைத்தது. பனிமூடிய பாறைகளின் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. குளிர் மிகவும் அதிகமாகும் போதும் இக்கரடிகள் உறங்க தொடங்கிவிடும்.அப்போது நான்கு மாதங்கள் வரை […]
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றின் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது . தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. […]
அமெரிக்க அதிபர் சவுதி மன்னருடன் இரு நாடுகளுக்ககு இடையேயான உறவு குறித்து தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார் . அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோபைடன் ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவி ஏற்றார். மேலும் பதவியேற்றதிலிருந்து உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரையும் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களுடன் உரையாடல் நடத்தி வருகிறார். இதுவரையில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் உரையாடல் நடத்தி வந்ததுள்ளார். இந்நிலையில் […]
ராணுவ வீரர்களை தாக்கியதால் அமெரிக்கா ஈரானின் ராணுவ தளத்தை முற்றிலுமாக அழித்து பதிலடி கொடுத்துள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படைத்தளங்கள் மீது சமீப காலத்தில் ராக்கெட் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதை காரணமாக கொண்டு எதிராளியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கோடு நேற்று சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் படை தளங்களின் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலினால் அப்பகுதி முற்றிலுமாக அழிக்கப்பட்டது. […]
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு பல நாடுகளிடம் இருந்து தடுப்பூசி வாங்கியுள்ள பிரேசில் தற்போது இந்தியாவிலும் தடுப்பு மருந்து வாங்க கையொப்பமிட்டுள்ளது உயிரைக் கொல்லும் கொடிய நோயான கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ஆதிக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. அதனால் தடுப்பூசி தயாரிக்கப்படும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு இரண்டாம் நிலையில் உள்ள பிரேசில் நாடு, பல நாடுகளில் இருந்து தடுப்பூசி வாங்கும் பணியில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பாரத் […]
நாய்கள் இடையே பரவி வரும் புதிய வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது உத்ரபிரதேச மாநிலம் கான்பூரில் புதிய வகை பர்வோ வைரஸ் ஒன்று பரவி வருகிறது, அது பெரும்பாலும் நாய்கள் இடையே பரவி வருகிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி இன்னும் அதிலிருந்து மீளாத நிலையில் இந்தியாவில் புதிதாக பறவை காய்ச்சல் பல மாநிலங்களில் பரவி வந்திருந்தத நிலையில் தற்போது தான் அந்த காய்ச்சல் பரவ விடாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே கான்பூரில் பரவிவரும் உயிர்கொல்லி பர்வோ […]
நக்சல் படையின் கன்னி வெடி தாக்குதலில் உயிரிழந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது . மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே பொய்க்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி. இவர் சத்தீஸ்கரில் உள்ள இந்தோ திபெத் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 24 ஆம் தேதி நக்சல் தடுப்பு படையினரால் ஏற்பட்ட கலவரத்தில் கண்ணி வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பொய்க்கரைபட்டிக்கு கொண்டு […]
கால்வாயை சுத்தம் செய்ய வந்த தொழிலாளர் இருவர் உயிரிழந்தது பரபரப்பை எற்படுத்துயுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திற்கு பின் ராணுவ முகாம் உள்ளது.அங்குள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணி இன்று காலை தொடங்கியது. அன்னை சத்யா தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ்,சந்தோஷ்,ராஜா,மணிவண்ணன்,பன்னீர்செல்வம் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 5 நபரும் மயங்கி விழுந்தனர். இதை அடுத்து கோட்டை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 5 நபரையும் மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு […]
காவல் துணை ஆய்வாளரின் மகன் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐசிஎப்,நியூ ஆவடி ரோடு பகுதியில் சில நாட்களாக அங்குள்ள கடைகளில் கத்தியை காட்டி மிரட்டி பல நபர்கள் பணம் பறித்து வந்தனர். இந்தப் புகார் காவல் துறைக்கு வந்து கொண்டே இருந்தது, இதையடுத்து பிப்ரவரி 24 இரவு சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றி திரிநவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐசிஎப் […]
பட்டப்பகலில் தாய் மகள் இருவரையும் ரவுடிகள் சரமாரியாக வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் கார் ஓட்டுனர். இவரின் மனைவி ஜெயந்தி மகள் மோனிகா. இன்று காலை தாய் மற்றும் மகள் வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். ஜெயந்தி மற்றும் மோனிகா இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்த போது […]
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற சென்னை எக்ஸ்பிரஸில் ஏராளமான வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருள் கடத்துவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் சென்னை எக்ஸ்பிரஸில் வெடிபொருள் கடத்துவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கூடுக்கப்பட்டது . இதனை தொடர்நது சென்னையில் இருந்து புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் கோழிக்கோடு சென்றடைந்தத ரயிலை,ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரயிலில் இருக்கைக்கு அடியில் 117 ஜெலட்டின் […]
இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபெத் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் அரசி எலிசபெத் மற்றும் அவரின் கணவர் பிலிப் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர் .இவரின் மூத்த மகனும்,வாரிசுமான இளவரசர் சார்லஸ் மற்றும் அவரின் மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவது பற்றி இங்கிலாந்து அரசி கூறுவது என்னவென்றால்”நான் […]
முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு அருகில் வெடிபொருளுடன் நின்ற காரினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுண்ட் ரோட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் அன்டிலா ஹவுஸ் உள்ளது.இது பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடம் ஆகும். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகே சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கு வகையில் நின்று கொண்டிருந்ததாக காவல் துறையினருக்கு தகவல் சென்றுள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர்,வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழு,பயங்கரவாத […]
மின்சாரம் தாக்கி விவசாயி மற்றும் பசுமாடு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் கிருஷ்ணகவுண்னூடரை சேர்ந்தவர் ராகவன்.இவர் ஒரு விவசாயி இவரது வீட்டின் கட்டுத்தறியில் கட்டியிருந்த பசு மாட்டின் மீது மின்கம்பத்தில் கட்டியிருந்த கேபிள் ஒயரின் ஒருபகுதி அறுந்து விழுந்தது.அதன் மற்றொரு பகுதி மின் கம்பியில் பட்டதால் பசுவின் மீது அறுந்து விழுந்த கேபிள் ஒயரில் மின்சாரம் பாய்ந்துள்ளது,இதனைப் பார்த்த ராகவன் பசுவினை காப்பாற்ற சென்றுள்ளார்.அப்போது அவரின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது இதையடுத்து […]
பணிமனையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஆவடி திருமுல்லைவாயில்,திருவள்ளுவர் நகர் 4வது தெருவை சார்ந்தவர் தங்கமணி, இவர் ஆவடி பணிமனையில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி போக்குவரத்து கழக கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, மாலை 4 மணி அளவில் பனிமலையில் உள்ள மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதை பார்த்த சக ஊழியர்களும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் […]
தந்தை இறந்த துக்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரைட் இவரின் மகள் சசியா மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி சசியா தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதன் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சசியாவின் தந்தை பிரைட் சில […]
29 வயது பெண் இரண்டாம் திருமணத்தின் போது காதலனால் கொலை செய்யப்பட்டு கழிவுநீர் தொட்டியில் மரணம்…. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீலம்,வயது 29. இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீலம் விவாகரத்து செய்தார். இதன் பின்னர் ரவி என்பவருடன் நீலமுக்கு நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் […]
அமெரிக்காவின் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் 4 ஆண்டுகளில் ஈட்டிய வருவாயும் செய்த நன்கொடை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் 4 வருடங்கள் பதவி வகித்துள்ளார் அப்போது அவர் சுமார் 1.6 பில்லியன் டாலரை வருமானமாக சம்பாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 2016 மற்றும் 2020 இடையேயான காலக்கட்டத்தில் ட்ரம்ப் குழுமம் மற்றும் பிற வழிகளில் இருந்து இந்த வருமானத்தை ஈட்டி உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அவர்களே வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். மேலும் இவர் தனது […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து போக்சோவில் கைதான குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் ஆம்புலன்ஸ் டிரைவராக சேலத்தில் பணியாற்றி வருகிறார் கடந்த ஆண்டு ஜூன் மாதம்,17 வயது சிறுமியை கற்பழித்ததாக அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அசோக்குமார் 8 மாதங்களாக தொடர்ந்து ஜாமீன் கேட்டு […]
எத்தியோப்பியாவில் 800 பேரை கொடூரமாக கொன்று குவித்து புனித பேழையை கொடூர கும்பல் திருடிச் சென்றுள்ளது. எத்தியோப்பியாவின் புனிதமான நகரம் என்று அழைக்கப்படும் ஆக்சன் என்ற பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தில் தான் புனித பேழை பல காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனை கொள்ளையிட வந்த கும்பல் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டது. அதன் இறுதியில் 800 பேர் இறந்துள்ளனர். இச்சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது ஆனால் இச்சம்பவம் பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. ஏனென்றால் […]