பிரசித்தி பெற்ற கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகன்- வள்ளி திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் மற்றும் வள்ளி தனித்தனியான பல்லக்கில் புறப்பட்டு மலையில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு சென்றார். இதனையடுத்து முருகன்-வள்ளி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதைதொடர்ந்து மலைப் பகுதியில் அமைந்திருந்த விநாயகருக்கும், முருகன்-வள்ளிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. […]
Author: Siva Kumari
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கு 10.94 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் டி.என்.பிஎஸ்.சி குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வுக்கான விண்ணப்பபதிவு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் 23-ஆம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்வுக்கு 10. 94 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த குரூப் 2 தேர்வு மார்ச் 21-ஆம் தேதி நடைபெறும். இந்நிலையில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர் பணிக்கு இரண்டாம் கட்ட சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பிஎஸ்.சி […]
மாநகராட்சி நிராகத்தின் கீழ் போடப்படும் சாலைகள் குறைந்தது 3 வருடங்களுக்காவது உறுதியாக இருக்க வேண்டுமென மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 5,270.33கி.மீ நீளத்திற்கு 34,630 உட்புற சாலைகளும், 387 கி.மீ நீளத்திற்கு பேருந்து சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் பெய்த கனமழையால் 1,000-ம் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்து. இந்த சாலைகளை சீரமைப்பதற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தலின் காரணமாக தற்காலிகமாக சாலை […]
பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் மீது விசாரணை கமிட்டி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு கணபதிபுரம், சூரப்பள்ளம், கன்னக்குறிச்சி, ராஜாமங்கலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருவார்கள். இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் மீது பாலியல் புகார் எழுந்தது. இதுகுறித்து கர்ப்பிணி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார இயக்குனருக்கு புகார் மனு அனுப்பினார். அந்த மனுவின் அடிப்படையில் விசாரணை கமிட்டி […]
கொலை குற்றாவளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே குஞ்சன்விளை பகுதியில் தங்ககிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவரை விஷ்ணு, முகேஷ், சுதன் என்ற நண்டு சுதன் ஆகிய மூவரும் சேர்ந்து கொலை செய்தனர். இவர்களை சுசீந்திரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேர் மீதும் வடசேரி மற்றும் கோட்டார் காவல்நிலையத்திலும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. எனவே கலவல்துறையினர் விஷ்ணு, முகேஷ், சுதன் […]
சிறுவாணி அணைக்கு நிதி ஒதுக்கப்படாதது குறித்து அமைச்சரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் மீதான விவாதத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சிறுவாணி அணையை தூர்வார நிதி ஒதுக்கப்படாதது ஏன் எனக் கேட்டார். இந்த அணைக்கு நிதி ஒதுக்கப்படாதது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது எனவும் கூறினார். அதாவது கோவை மக்களின் மக்களின் தாகத்தை தீர்க்கும் அணையாக […]
தொழில்நுட்ப பிரிவுகளில் குறுகிய காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு மின் தொழில்நுட்பவியலாளர், இருசக்கர வாகனங்களை பழுது பார்த்தல், தொழில்நுட்ப வல்லுனர் ஆகிய பிரிவுகளில் குறுகிய காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு 15 முதல் 45 வயது உடையவர்கள் […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் துபாய்க்கு பயணம் மேற்கொள்கிறார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை சென்னையில் இருந்து துபாய் மற்றும் அபுதாபிக்கு செல்கிறார். இவர் துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக செல்கிறார். இந்த சகண்காட்சி 5 வருடங்களுக்கு ஒருமுறை 6 மாதம் வரை நடைபெறும். இந்த கண்காட்சி உலகின் மிகப் பழமையான சர்வதேச நிகழ்வாகும். இங்கு நடத்தப்படும் எக்ஸ்போ கண்காட்சி ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடைபெறும் […]
மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பள்ளிவிலை அருகே ஜார்ஜ் காம்பவுண்ட் பகுதியில் சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவி இருந்துள்ளார்./ இவருக்கு கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டதால், தன்னுடைய மகள் மல்லிகா வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் செல்லத்திற்கு கண்பார்வை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்து வீட்டிற்கு திரும்பிய செல்லம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]
ஓடும் பேருந்தில் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே வெட்டுமணி பகுதியில் புதிய அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் வழிபாடு முடிந்ததும், ஏராளமானோர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் கூட்டமாக ஏறியுள்ளனர். இதனால் பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டு மர்மநபர்கள் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் மற்றும் 1 குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துள்ளனர். மொத்தம் 12 பவுன் தங்க […]
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபின் ஸ்டான்லி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபின் ஸ்டான்லி ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரபின் ஸ்டாலின் வீட்டில்யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை […]
நில அளவை சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நில அலுவலர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் துணை ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர்களின் ஊதியத்தில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டும் எனவும், திட்ட பணிகளை மாவட்ட அளவில் தனி உதவி இயக்குனர் தலைமையில் ஏற்படுத்த வேண்டும். நில அளவை மனுக்களை காரணம் காட்டி ஏற்படும் மாவட்ட மாறுதல்களையும், ஒழுங்கு நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் […]
பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில் எனது மகள் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். எனது மகளுக்கும் பார்த்திபன் என்பவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்த்திபன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். இதனால் எங்களுக்குள் நல்ல உறவு ஏற்பட்டது. இந்நிலையில் நான் வீட்டில் […]
அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் எந்தெந்த நாட்களில் திறக்கப்படாது என்பது குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லா மாநிலங்களும் புதிய நிதியாண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு ஆரம்பமாகிறது. இந்த நிதியாண்டில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்க உள்ளது. இதில் மதுக்கடைகள் எந்தெந்த நாட்களில் திறக்கப்படாது என்பது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல்-10 ராம நவமி [ஜம்மு] ஏப்ரல்-14 மகாவீரர் ஜெயந்தி மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி ஏப்ரல்-15 புனித வெள்ளி மே-1 மகராஷ்டிரா தினம் [மகாராஷ்டிரா] மே-3 […]
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த […]
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கேள்வி மற்றும் விவாதங்கள் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் கேள்வி மற்றும் விவாதங்கள் நடைபெற்றது. இந்த கேள்வி நேரத்தின் போது தி.மு.க பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருவதாகவும், இவர்களின் வாழ்வில் அரசு விளக்கேற்றுமா என கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டகுடி […]
வரி கட்டாத பள்ளிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதன்காரணமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கடும் நெருக்கடியை சந்தித்தது. இதன் விளைவாக பல மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்தனர். இதன்காரணமாக தனியார் பள்ளிகள் ஆசிரியர்கள் சம்பளம், பள்ளி பராமரிப்பு, குறைக்கப்பட்ட கட்டணம் ஆகியவற்றால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்நிலையில் சில தனியார் பணிகள் […]
இளைஞர்களுக்காக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வருகிற 26-ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல் ஆரம்பமாகிறது. இந்த முகாமில் 8-ம் வகுப்பு, பட்டதாரிகள், ஐ.டி.ஐ, இன்ஜினியரிங், டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டதாரிகளும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொள்வதற்கு சிறப்பு […]
பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகே புனித ஜான் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மரங்களில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் திடீரென மாணவர்களைத் தாக்கியது. இதில் 55 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவெண்ணைநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]
மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டம் வருகிற 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் கால்நடைகள் பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, வேளாண் பொறியியல், தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கீழத்தாளனுர் கிராமத்தில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணமாகி சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வினோத்குமார் வரதட்சணை கேட்டு சங்கீதாவை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து […]
ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூ 2 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது மின்சார உபரி பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அதாவது ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரியாமலேயே பணம் பட்டுவாடா செய்யப் பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. எனவே மாவட்ட ஆட்சியர் ஊராட்சி […]
புதிதாக பள்ளி கட்டிடம் கட்டித்தர கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே வடபூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இங்கு 45-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்ள 3 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால், கிராம சேவை மையத்திற்கு பள்ளி தற்காலிகமாக மாற்றப்பட்டது. இங்கு […]
கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் 250 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்த விழாவில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் கர்ப்பிணி பெண்களுக்கு 1,000 ரூபாய் மதிப்பிலான மதிப்பிலான சீர்வரிசை பொருள்களை வழங்கினார். […]
காவல் நிலையத்தில் புகார் அளித்த விவசாயிக்கு கொலை மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகே சோழப்பட்டு கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் கடந்த 2013-ஆம் ஆண்டு கோவிந்தராஜ் என்பவருக்கு தன்னுடைய விவசாய நிலத்தை விற்பனை செய்துள்ளார். இதில் ரூபாய் 1 லட்சம் பாக்கி பணம் சரவணனுக்கு, கோவிந்தராஜ் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த பாக்கி பணத்தை சரவணன் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் […]
மின்சார வாகனங்களின் விலை கூடிய விரைவில் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற சாலை போக்குவரத்து அமைச்சக மானியம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு மந்திரி நிதின் கட்காரி பதிலளித்தார். இவர் கழிவு நீரை சுத்தப்படுத்தி தூய்மையான ஹைட்ரஜன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறைந்த விலையில் கிடைக்கும் மாற்று எரிபொருள் ஆகும். இந்த ஹைட்ரஜன் எரிபொருள் நடைமுறைக்கு வந்துவிட்டால் இன்னும் 2 வருடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும். இந்த தொழில்நுட்பத்தை எம்.பிகள் […]
அரசு பள்ளியில் ஆசிரியர் பள்ளிக்கு வராமல் ஊதியம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே தாளக்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மொத்தம் 15 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பழனிச்சாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் […]
மாணவர்கள் பேருந்துகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வதை தடுப்பதற்காக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பேருந்தில் பயணம் செய்வதாக பல்வேறு புகார்கள் மாவட்ட பள்ளிக்கல்வித்துறைக்கு வந்துள்ளது. இதை தடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் சென்னையில் ஒரு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பாதுகாப்பற்ற வழித்தடங்கள் கண்டறியப்பட்டது. இதில் திருப்பூர்- கோவை வழித்தடம், உடுமலை-தளி, உடுமலை- பொள்ளாச்சி, வஞ்சிபாளையம்- […]
திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இணையதளத்தில் வெளியாவதை தடுப்பதற்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்ததால் பொது தேர்வுக்கு தயார்ப்படுத்தும் விதமாக திருப்புதல் தேர்வு நடைபெற்றது. ஆனால் இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியானது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வினாத்தாள்கள் வெளியானது என்பதை கண்டுபிடித்தது. இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை […]
நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு சம்பள சீட்டு வழங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நியாயவிலை கடையில் அரிசி, பருப்பு, மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருள்கள் குறிப்பிட்ட எடையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்பிறகு பாமாயில், சோப்பு போன்றவைகள் தேவைக்கேற்ப கட்டுப்பாடற்ற பிரிவில் வழங்கப்படுகிறது. இந்தப் பொருள்களை பொதுமக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். ஆனால் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் சிலர் இந்த பொருட்களை […]
மீன் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு அருகே நுள்ளிவிலை பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சகாயராஜ் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் சகாயராஜ் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வாழ்க்கையில் வெறுப்புற்று இருந்துள்ளார். எனவே வீட்டில் யாரும் […]
பிரசித்தி பெற்ற கோவில் உண்டியலில் ரூபாய் 36 ஆயிரம் பணம் இருந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த கோவிலின் முன்பாக அன்னதான உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் பணம் மாதந்தோறும் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்படும். அதேப்போன்று இந்த மாதம் உண்டியல் தொகை எண்ணப்பட்டது. இதில் மொத்தம் 36 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. இந்த […]
வனத்துறையினரால் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமநல்லூர் கம்பி பாலம் அருகே கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. இங்கு மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதை அங்கு குளிக்க சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் கல்யாண சுந்தரத்திடம் கூறியுள்ளனர். உடனே கல்யாணசுந்தரம் பூதப்பாண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி வனக்காப்பாளர் ஆல்வின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் கரையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தார். அதன்பிறகு […]
வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் கொல்லங்கோடு நகராட்சிக்கு சொந்தமான காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கு கடை நடத்தி வரும் 2 நபர்கள் கடந்த 6 மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் நகராட்சி நிர்வாகம் வாடகை பணம் செலுத்துமாறு பலமுறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இதை கடை உரிமையாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதன் காரணமாக நகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் சந்தைக்கு […]
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக இந்திய பள்ளி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை தாங்கினார். இவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த போராட்டத்தில் வள்ளி வேல், வேலவன், சுரேஷ் […]
பெண்ணிடம் 10 1/2 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாங்கன்றுவிலை பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மேரி ஸ்டெல்லா ஆவார். இவர் பாலூர் காக்கச்சிவிளை பகுதியில் இருக்கும் ஒரு மளிகை கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு ஒருவர் வந்துள்ளார். அவர் முட்டை வேண்டுமென மேரி ஸ்டெல்லாவிடம் கேட்டுள்ளார். உடனே மேரி ஸ்டெல்லா முட்டையை எடுத்து பொட்டலம் போட்டுள்ளார். […]
புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பத்ரி நாராயணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவரை கோவை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்திற்கு சென்னையில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஹரிஹரன் பிரசாத் என்பவரை போலீஸ் சூப்பிரண்டாக நியமித்துள்ளனர். இதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
செஷல்ஸ் தீவில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். கன்னியாகுமரி, கேரளா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 58 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் 22-ம் தேதி கொச்சியில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென படகுகள் திசைமாறி செஷல்ஸ் தீவு எல்லைக்குள் சென்றது. இதைப் பார்த்த செஷல்ஸ் தீவு கடற்படையினர் 58 மீனவர்களையும் கைது செய்தனர். இந்த மீனவர்களை விடுவிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் […]
வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குருந்தன்கோடு பகுதியில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு டெல்பின் மேரி என்ற மனைவி இருக்கிறார் இந்நிலையில் டெல்பின் மேரி குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் திரும்பி வரும்போது வீட்டின் முன்பக்ககதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டெல்பின் மேரி மீறி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். […]
பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பெருமாள் நகர் இலங்கை அகதிகள் முகாமில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி விமலா ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விமலா ராணி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இவருடைய அலறல் சத்தத்தை […]
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிவாயு மற்றும் எரிபொருள்களின் விலை வாசியால் வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே சுங்க கட்டணத்தின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் எரிவாயு மற்றும் எரி பொருட்களின் விலை அதிகரிப்பது விற்பனைச் சந்தையில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையையும் அதிகரிக்கச் செய்யும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும். இந்நிலையில் எரிவாயுவின் விலை 965 ரூபாயாகவும், எரிபொருளின் […]
சிறுபான்மையினர் மக்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பின் மூலமாக சிறுபான்மையினர் மக்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி வழங்கப் படுவதாக கூறியுள்ளார். இந்த கடனுதவி சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வை உயர்த்துவதற்காக வழங்கப்படுகிறது. இது பொது காலகடன் திட்டத்தின் கீழ் ரூபாய் 15 லட்சம் பணம் 6 முதல் […]
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் மாதம்தோறும் வழங்கும் என வாக்குறுதி அளித்திருந்தது. இதன் காரணமாக தி.மு.க கட்சிக்கு பெண்கள் அதிக அளவில் வாக்களித்தனர். இந்தத் திட்டம் கைவிடப்படும் என்று மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். அப்போது தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்போது பெண்களுக்கான மாதம் 1000 ரூபாய் திட்டம் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது. இதனையடுத்து பெண்கள் ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவருக்கு பதிலாக குடும்பத்தலைவி என மாற்றி தர வேண்டுமென […]
அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த செல்லூர் ராஜு போக்குவரத்து துறை அமைச்சரிடம் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவசம் என குறிப்பிடப்பட்டிருப்பது பெண்களிடையே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது எனக் கேட்டார். இதற்கு […]
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இவர் முருகன் கோவில் எதிரே வடை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 19-ஆம் தேதி ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் வடை சுட குறைந்த விலையில் எண்ணைய் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய பச்சையம்மாள் இருசக்கர வாகனத்தை […]
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் சாராகிராமம் ஜே.ஜே நகர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாதிரி பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜராஜன் என்பவர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் அரவிந்தன் பாதிரி நகருக்கு சென்றுள்ளார். அங்கு டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போயிருந்தது. இதை சரி செய்வதற்காக அரவிந்தன் மின்சாரத்தை அணைத்து விட்டு டிரான்ஸ்பார்மரில் […]
மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் ஒரு என்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவருடன் சௌந்தர்ராஜன் மற்றும் சிவகுமார் என்ற 2 பேரும் விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் சதீஷ் விடுமுறைக்காக ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் கல்லூரிக்கு வந்துள்ளார். இதனையடுத்து சதீஷ் வயிறு வலி காரணமாக […]
கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே கணியனூர் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணிஸ்ரீ என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வாணிஸ்ரீ இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார். இதனையடுத்து வாணிஸ்ரீக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் வாணிஸ்ரீ உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆற்காடு காவல்துறைக்கு […]
வாலிபர் இறந்த அதிர்ச்சியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மூர் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த 17-ஆம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லோகேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லோகேஷின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ராணிப்பேட்டை காவல்துறைக்கு தகவல் […]