Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடும்ப தகராறு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே பெரியகுக்குண்டி கிராமத்தில் விவசாயியான சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சேட்டு வீட்டின் அருகே இருக்கும் விவசாய நிலத்தில்  விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சேட்டுவை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீவிர ரோந்து பணி…. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்…. போலீஸ் அதிரடி….!!

கஞ்சா விற்பனை செய்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த திக்கிபாபு என்பது தெரியவந்தது. அதன்பிறகு திக்கிபாபுவிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். இதேப்போன்று […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. தமிழகத்தில் 5 மாவட்டங்களில்…. சுகாதாரத்துறை வெளியிட்ட சூப்பர் தகவல்……..!!!!

கொரோனா குறித்த ஆய்வறிக்கையில் 5 மாவட்டங்களில் தொற்று முழுமையாக இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா‌ குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 52 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 22 மாவட்டங்களில் 10-க்கும் குறைவான நபர்களே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பெரம்பலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர் மற்றும் அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. இதைத்தொடர்ந்து மீதமுள்ள 6 மாவட்டங்களில் ஒரே ஒரு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாப்பிடுவதற்காக சென்ற மாணவி…. திடீரென கடித்த பூச்சி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

விஷப்பூச்சி கடித்து மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மகளத்தூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அந்த கிராமத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி பள்ளியிலிருந்து மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஒரு விஷப்பூச்சி மாணவியை கடித்துள்ளது. இதனால் மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கருக்கலைப்பால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. தட்டித்தூக்கிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

குண்டர் சட்டத்தின் கீழ் 2 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தில் முத்துமாரி என்பவர் மெடிக்கல் வைத்து  நடத்தி வருகிறார். இந்த கடையில் கவிதா என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தமெடிக்களில் செல்வி என்பவர் கருக்கலைப்பு செய்வதற்கான மாத்திரை வாங்கியுள்ளார். இந்த மாத்திரையை செல்வி சாப்பிட்டதால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரிஷிவந்தியம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தேர்தல் முன்விரோதம்…. திடீரென மோதிக்கொண்ட கும்பல்…. போலீஸ் அதிரடி…!!

முன்விரோதம் காரணமாக  மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தில் கொடையாளப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, ராயதுரை உள்ளிட்ட ஏராளமானோர் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சின்னதுரைக்கும், ராயதுரைக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒருவருக்கு ஒருவர் ஆபாச […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சாலைப்பணிகளை தொடங்க வேண்டும்” பொதுமக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் மீது புழுதி பறக்கிறது. இதனால் கண்களில் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் புதுப்பெண் மரணம்…. கணவருக்கு வலைவீச்சு…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகே எஸ்.வி பாளையம் கிராமத்தில் பிரியா (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய தாயும் தந்தையும் இறந்து விட்டனர். இதன்காரணமாக பிரியா பாட்டி ஆதிலட்சுமி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இதே ஊரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் பிரியாவும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிவகுமார் பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல் நலம் சரியில்லாத முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி அருகே ஈசானிமங்கலம் பகுதியில் லட்சுமணன் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கயிறு கம்பெனியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து லட்சுமணன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பூதப்பாண்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

வாகன சோதனையின் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கடத்தல் பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறுத்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 110 கிலோ இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை விசாரித்தனர். அந்த விசாரணையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடைக்கு செல்கிறேன்” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடையை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே ராயப்பன் என்பவர் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் கடைக்கு வந்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராயப்பன் கடையின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது 6 ஆயிரம் மதிப்புள்ள ஜூஸ், சிகரெட் பொருட்கள், மற்றும்  4000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல்…. மேயர் கூறிய சூப்பர் நியூஸ்….!!!!

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் கூடிய விரைவில்  தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியின் மேயராக கடந்த 4-ஆம் தேதி பிரியா ராஜன் பதவியேற்றார். அவர் பதவியேற்றதிலிருந்து மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். இவர் சென்னை திரு.வி.க நகர் மாணவ-மாணவிகளுக்கு 170 கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து குடற்புழுநீக்க மாத்திரைகள், மகளிர் தின கொண்டாட்டம், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனைக் கூட்டம் என பல்வேறு பணிகளை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தார்சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு…. போலி ஆவணங்கள் மூலம் 13 லட்சம் மோசடி….!!!!

சாலையை முழுமையாக போடாமல் போலி ஆவணம் தயார் செய்து 13 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துளசாபுரம் ஊராட்சியில் கண்டிவாக்கம் கிராம காலனியில் இருந்து மயானம் வரை 3 கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இந்த சாலையை சீரமைக்க  கடந்த ஆண்டு 13 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான டெண்டர் நடைபெற்றது. இந்த சாலை பணிக்கான டெண்டரை எடுத்தவர் தார்சாலை அமைக்காமல் போலி ஆவணங்கள் தயார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே இன்னும் 3 மாதங்களுக்கு…. அமைச்சர் எச்சரிக்கை….!!!!

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்கள் அனைவரும் கொரோனா முடிவடைந்து விட்டதாக எண்ணி கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருக்கக்கூடாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். இவர் கொரோனாவில் இருந்து யாரும் முழுமையாக விடுபட்டு விட்டோம் என்று நினைக்கக்கூடாது எனவும், கொரோனா 4-ஆவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஆண்டவன் உத்தரவு பெட்டி…. மக்களின் நம்பிக்கை நிறைவேறுமா?….!!!!

பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் இருக்கும் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பஞ்சு சம்பந்தமான பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்ரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி அமைந்துள்ளது. இந்தப் பெட்டியில் பக்தர்களின் கனவில் தோன்றும் பொருள்கள் வைக்கப்படும். அதாவது முருகப் பெருமான் பக்தர்களின் கனவில் தோன்றி ஒரு பொருளை கூறுவார். அந்த பொருளை கோவில் பூசாரியிடம் தெரிவித்து பூக்கட்டி பார்க்கப்படும். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. `தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!-=

டி.ஆர்.பி தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த போட்டி தேர்வுகளும் நடைபெறாமல் இருந்தது. இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்ததால் தமிழ்நாடு தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட 32 வகையான தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி மார்ச் 23-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து டி.ஆர்.பி தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கு மார்ச் 14-ஆம் தேதி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காலதாமதமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்…. வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்…. குமரியில் பரபரப்பு….!!

வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்த் சதீஷ் தலைமை தாங்கினார். இவர்கள் கடந்த வருடம் சட்டசபை தேர்தல் செலவினங்களை நடப்பு ஆண்டுக்குள் வழங்க வேண்டும் எனவும், காலதாமதமின்றி அனைத்து அலுவலர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும், அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுறு எழுத்தர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள்…. வாலிபர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

இரயில்வே  தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்னையிலிருந்து குருவாயூருக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தண்டவாளத்தில் கடந்த 19-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் பாறாங்கற்களை வைத்துள்ளனர். அவ்வழியே ரயில் சென்றபோது பாறாங்கற்கள்  மீது பலமாக மோதியது. ஆனால் நல்ல வேளையாக ரயில் தடம் புரளாமல் பாதுகாப்பாக சென்றது. இதுகுறித்து ரயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு கதிர்வேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடத்தி வந்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஹிஜாப் தடை” முஸ்லீம் மாணவிகள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

முஸ்லீம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் திடீரென நேற்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கர்நாடகத்தில் ஹிஜாப்பிற்கு  விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் ஹிஜாப் தடையை எதிர்த்து கையில் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தினார்கள்.

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. “மாணவர்களுக்கு” செம ஹேப்பி நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் உடற்கல்வி பாடத்திற்கு பள்ளிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து பள்ளிகளில் இறைவணக்கம் மற்றும் உடற்கல்வி பாடத்திற்கும் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து பள்ளிகளில் இறை வணக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் உடற்கல்வி பாடத்திற்கும் மட்டும் அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. விண்ணப்பிப்பதில் ஏற்பட்ட சிக்கல்…. பட்டதாரிகள் அதிர்ச்சி….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 10 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான தகுதி தேர்வுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.ஆர்.பி அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. இதன்காரணமாக அரசு பள்ளியில் வேலையை எதிர்பார்த்து காத்திருந்த  பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இனி மாணவர்கள் யாரும் இப்படி பள்ளிக்கு வரக்கூடாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

18 வயது பூர்த்தி அடையாத மாணவர்கள் மோட்டார் சைக்கிளில்  பயணம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி பள்ளிகளுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் அனுமதிக்கக்கூடாது. மேலும் 18 வயது பூர்த்தியடையாத மாணவர்களை பெற்றோர்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது. இதனையடுத்து மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் அவர்களை பள்ளிக்குள் வர அனுமதிக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“போடு செம மாஸ்”…. சாலை விபத்துகளை தடுக்க…. முதல்வர் ஸ்டாலின் அறிவித்த சிறப்பு திட்டம்….!!!!

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைப்பதற்காக சட்டமன்ற பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும்-48 என்ற உயிர் காக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி சீரான சாலைகள் திட்டம், விபத்தில் சிக்கியவர்களுக்கு 48 மணி நேரம் இலவச சிகிச்சை, சாலை பாதுகாப்பு ஆணையம், அவசர மருத்துவம், இன்னுயிர் காப்போம் உதவி செய் என்ற 5 அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இனி ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்?…. குட் நியூஸ் சொல்லுமா தமிழக அரசு?….!!!!

ஆண்களுக்கு பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி  வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்த பிறகு தி.மு.க அரசு பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறது. அதில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து தேசிய கட்சியினர் கலந்து கொண்டு மனு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு…!!

தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் கிராமத்தில் குமார்-லட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் லட்சுமி ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேன்  மூலமாக தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி வேலை முடிந்து திரும்பி வரும் வழியில் திடீரென நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த நபர்களுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை  மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உடல் நலம் சரியில்லாத பெண்…. தீக்குளிக்க முயன்றதால் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் அருகே மோட்டூர் பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சில நாட்களாக உடல்நலக் கோளாறு இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த ஜெயலட்சுமி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஜெயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. கோர விபத்தில் தந்தை-மகன் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்விஷாரம் பகுதியில் மசூர் அகமத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் முயிஸ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மசூர் அகமத் தனது மகன் முயிசுடன் மேல்விஷாரம் பகுதிக்கு சென்றுள்ளார். அவர்கள் திரும்பி வரும் வழியில் பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பகுதி நேர ரேஷன் கடைகள்…. ரிப்பன் வெட்டிய அமைச்சர்…. சிறப்பாக நடைபெற்ற திறப்பு விழா…!!

பகுதி நேர நியாயவிலைக் கடைகளை அமைச்சர் திறந்து வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமல்லூர், மலை மேடு, திருவள்ளுவர் நகர் போன்ற பகுதிகளில் 3 பகுதிநேர நியாய விலைக் கடைகள் திறக்கப் பட்டுள்ளது. இந்த நியாயவிலைக் கடைகளை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். இதற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த திறப்பு விழாவின் போது அமைச்சர் ஆர்.காந்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் மக்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு பகுதிநேர […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“16 லட்சம்” மானிய விலையில் எந்திரங்கள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

விவசாயிகளுக்கு எந்திரங்கள் வழங்கும்  விழாவை அமைச்சர் தொடங்கிவைத்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் வன்னிவேடு கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு  மானிய விலையில் எந்திரங்கள் வழங்கப்பட்டது. இது கால்நடை வளர்க்கும்  97 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு புல் வெட்டும் மற்றும் புல்  அறுக்கும் எந்திரங்கள் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 16 லட்சத்து 56 ஆயிரத்து 436 ரூபாய் ஆகும். இதை விவசாயிகளுக்கு அமைச்சர் காந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மகனுக்கு பாரமாக இருக்கிறேன்” மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் அருகே வடகால் பகுதியில் கஸ்தூரி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி மகனுக்கு பாரமாக இருப்பதாக எண்ணி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக கிணற்றில் விழுந்து கஸ்தூரி தற்கொலை செய்துள்ளார்‌. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிப்காட் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாநில செய்திகள்

பயோமைனிங் முறையில் குப்பை பிரித்தெடுக்கும் பணி…. தலைமை செயலாளர் அதிரடி…….!!!!

குப்பைகளை பிரித்து எடுக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பயோமைனிங் முறையில் குப்பைகளை பிரித்து எடுக்கும் பணி பெருங்குடி குப்பை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அதாவது இங்கு கொட்டப்படும் குப்பைகளில் இருந்து பயோமைனிங் முறையில் கல், மணல், இரும்பு, கண்ணாடி, ரப்பர், மரக்கட்டைகள், நெகிழி போன்றவைகள் பிரித்து எடுக்கப்படும். அதன்பிறகு மறுசுழற்சி செய்யப்படும். இந்த பணிகளை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். இவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை […]

Categories
மாநில செய்திகள்

பசுமை சாம்பியன் விருது…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க..!!!!

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனத்துறை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் போன்றவற்றில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி  பசுமை சாம்பியன் விருதுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. இதற்கான உரிய ஆவணங்களுடன் சென்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

புதிய ஓய்வூதிய திட்டம்…. “3,000 கோடி நஷ்டம்”….. பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படுமா?….!!!!

பழைய பென்சன் திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்  சுமார் 60% அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதன் மூலமாக ரூபாய் 50,000 கோடி வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களில் 24,000 பேர் ஓய்வு பெற்றும், இறந்து விட்டனர். ஆனால்  இந்த ஊழியர்களின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 340 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக  புகையிலை பொருட்கள் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே கண்ணுபொத்தை ரயில்வே பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் ஒருவர் கொண்டுவந்த மூட்டைகளை கீழே தள்ளி விட்டு தப்பித்து சென்றார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 340 கிலோ இருந்தது. இதை பறிமுதல் செய்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முதியவருக்கு கொலை மிரட்டல்…. வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே மயிலாடி பகுதியில் டேவிட் (60) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் அஜித் (25) என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் அஜித்துக்கும், டேவிட்டுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டேவிட் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி  அஜித் மற்றும் டேவிட்டை காவல்துறையினர் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குப்பை கிடங்கில் தொடர்ந்து எரியும் தீ…. தீயணைப்பு வீரர்களின் கடுமையான போராட்டம்…. மேயர் ஆய்வு…!!

குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில்  மீண்டும் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில்  மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பை கிடங்கில் கடந்த 18-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 2 நாட்களாக கடுமையாக போராடினார்கள். அதன்பிறகு நேற்று முன்தினம் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் நேற்று அதிகாலை மீண்டும் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிராயன்குழி பகுதியில் இன்ஸ்பெக்டர் தாஸ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரியை காவல்துறையினர் மறித்து சோதனை செய்தனர். அதில் செம்மண் இருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அருளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அடிக்கப்பட்ட அலாரம்” அதிர்ச்சியடைந்த காவலாளி…. போலீஸ் வலைவீச்சு…!!

செல்போன் டவர் பேட்டரிகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் ஒன்று உள்ளது. இங்கு ராஜ் என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த செல்போன் டவர் கதவை யாராவது திறந்தால் உடனே ராஜ் கைப்பேசிக்கு  அலாரம் அடிக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்போன் டவரின் அறையை மர்ம நபர்கள் சிலர் திறந்துள்ளனர். அப்போது ராஜ் கைபேசிக்கு அலாரம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ் செல்போன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என்னுடைய பணத்தை கொடு” கொடூரமான முறையில் தாயை கொன்ற மகன்…. பெரும் பரபரப்பு…!!

கொடூரமான முறையில் தாயை கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செப்பபள்ளிவிலை பகுதியில் தேவராஜ்-சரோஜினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரோஜினி மாற்றுத்திறனாளி ஆவார். இவர்களுக்கு விஜயன் என்ற மகன் இருக்கிறார். இவர் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர்.இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன்காரணமாக  விஜயனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  விஜயன் மனைவியை பிரிந்து தாய் தந்தையுடன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி அருகே ஆசாரங்குப்பம் கிராமத்தில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மண்ணாங்கட்டி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் மண்ணாங்கட்டிக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மண்ணாங்கட்டியை அவரது மருமகன் பகவத்சலம் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இவர்கள் திரும்பி வரும் வழியில் திடீரென மண்ணாங்கட்டி இருசக்கர வாகனத்தில் இருந்து  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருவிழாவிற்கு வந்த மாணவர்கள்…. திடீரென ஏற்பட்ட மோதல்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!

கோவில் திருவிழாவின்போது மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடப்பாளையம் கிராமத்தில் எட்டியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் முருகன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இதேப்போன்று திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும் நண்பர்களுடன் கோவிலுக்கு வந்துள்ளார். இந்த கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் பார்த்திபனும், ஆகாஷும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி புதுப்பாளையம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் சிவா டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஒரு மின் கம்பியின் மீது வைக்கோல் உரசி திடீரென தீப்பிடித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பரவியது. இதில் டிராக்டர் முழுவதுமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடிப்படை வசதிகளுடன் கூடிய 100 வீடுகள்…. மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…. பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியர் வீடுகள் தரமானதாக கட்டப்படுகிறதா  என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானுர் அருகே பெரியார்  சமத்துவபுரத்தில் வீடுகள் கட்டப்படுகிறது. இங்கு குடிநீர் குழாய், மழைநீர் சேகரிப்பு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய 100 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது முழுமையாக முடியும் நிலையில் உள்ளது. இந்த வீடுகளை அடுத்தமாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளார். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் மோகன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் திருச்சி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் 80 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தசரதன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென வெடித்த டயர்…. நிலைத்தடுமாறி கவிழ்ந்த வேன்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்னையில் உள்ள மணலி பகுதியில் இருந்து 20 பேர் வேனில்  வந்துள்ளனர். இந்த வேனை அருண்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த வேன் மேலரெடிகுப்பம் அருகே வந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதில் நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் வந்த 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஓகே” சொன்ன கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் காவல்துறையினர் மட்டப்பாறை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மட்டபாறை கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தங்கதுரையை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது காவல்துறையில் 5 சாராய வழக்குகள் நிலுவையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஏரியில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே புத்திராம்பட்டு பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வடபொன்பரப்பி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புத்திராம்பட்டு கிராமத்தைச் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நிலைத்தடுமாறி டிராக்டர் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரா என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் வீரா டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு சவேரியார்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். இவர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே சென்றபோது திடீரென டிராக்டர் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபொன்பரப்பி காவல்துறைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஹிஜாப் தடை”…. முஸ்லீம் அமைப்பினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

முஸ்லீம் அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் முஸ்லீம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்திற்கு முத்தவல்லி அப்துல் சமது தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தில் முத்தவல்லிகள் சர்க்தார், சம்சுதீன், தாஜுதீன், சாதிக், முபராக், சார்புதின், மத்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஹிஜாப் என்பது எங்கள் உரிமை அதை கொடுப்பது அரசின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய  நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் தியாகராஜபுரம் பகுதிக்கு சென்றபோது சிலர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முருகன் மற்றும் மொட்டையம்மாள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 55 லிட்டர் சாராயம் […]

Categories

Tech |