மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி செல்போன் மூலமாக படித்து வந்துள்ளார். இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு கலையரசன் ஒருநாள் மாணவியிடம் உன்னை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு மாணவியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கலையரசன் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு மாணவியை வருமாறு […]
Author: Siva Kumari
இரவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம், செல்வகுமாரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் செல்வம் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சாத்துகூடல் மேல்பாதி கிராமத்தில் 3 வீடுகள் உள்ளன. இந்நிலையில் செல்வகுமரன் ஒரு வீட்டிலும் சுந்தரம் மற்றொரு வீட்டிலும் இரவில் தூங்கியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் […]
போலியான தங்க கட்டிகளை கொடுத்து பணம் பறித்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒருகோடி கிராமத்தில் கணேஷ்- கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கவிதா நம்நாட்டு பகுதியில் துணிகடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது கடைக்கு ஜோதிடம் பார்ப்பதற்காக 2 நபர்கள் வந்துள்ளனர். அந்த 2 நபர்களும் மீண்டும் கடந்த மாதம் 4-ம் தேதி கவிதாவின் கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் கவிதாவிடம் எங்களிடம் 5 […]
பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 1-ம் தேதி மாசி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த 2-ஆம் தேதி மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதைதொடர்ந்து நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், […]
ஒரே நாளில் இரு வெவ்வேறு வீடுகளில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விராட்டிக்குப்பம் பகுதியில் ரகுநாத் [வயது 34] என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் நகை தொழில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரகுநாத் தான் குடியிருந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டிற்கு வாடகைக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் புதிதாக குடிபெயர்ந்த வீட்டிற்கு பால் காய்ச்சிவிட்டு அந்த வீட்டில் இரவு குடும்பத்தோடு தங்கியுள்ளனர். ஆனால் பழைய வீட்டில் இருந்த பொருள்கள் […]
தொழிலாளியை குத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தியபோது வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரு தரப்பினருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் அய்யாசாமி தரப்பினர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வரதராஜ் தரப்பினர் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் இந்த இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அய்யாசாமி தரப்பை சேர்ந்த 45 வயதான பழனி […]
பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவிலின் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 27-ம் தேதி இக்கோவிலின் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுப்பதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் […]
இணையதளம் மூலமாக 7 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் பெருவிளையில் ஆல்பர்ட் செல்வ ஸ்டாலின் [வயது 22] என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆல்பர்ட் செல்வ ஸ்டாலின் செல்போன் கடை வைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து இவர் ஒரு பிரபல செல்போன் கம்பெனியில் இணையதள முகவரியில் இது தொடர்பாக விண்ணப்பித்துள்ளார். அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மேலாளர் […]
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிறார். இவர் நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெறும் சாலை பணிகளை பார்வையிடுவதற்காகவும்,வெள்ள சேத சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் நாளை கன்னியாகுமரிக்கு வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அவர் தங்கியிருக்கும் அரசினர் விருந்தினர் மாளிகைகள் பாதுகாப்பு பணிகள் ஒழுங்கான முறையில் […]
2 பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்த நபர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோயில் பகுதியில் விளானூர் கிராமத்தில் கணவனை இழந்த பஞ்சவர்ணம் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிவக்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் பஞ்சவர்ணம் சிவகுமாருக்கு 1 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை பஞ்சவர்ணம் திருப்பித் தருமாறு சிவகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் சிவகுமார் […]
மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் உள்ள அகரப்பட்டி கிராமத்தில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயதுடைய முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் மேய்ச்சலுக்காக சென்ற மாடு இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் முருகேசனும் அவரது உறவினர் ஒருவரும் சேர்ந்து அந்த மாட்டை […]
புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமியின் 401-வது பட்டாபிஷக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரிமளம் பகுதியிலுள்ள சிவபுரத்தில் மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த பிருந்தாவனத்தில் புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமி சன்னிதானம் அமைந்துள்ளது. இங்கு சுவாமிக்கு 401-வது பட்டாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு […]
சிறப்பாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் இருக்கும் சிலட்டூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் மொத்தம் 12 காளைகள் கலந்து கொண்டது. இந்தகாளைகளை மாடுபிடி வீரர்கள் சிறப்பான முறையில் அடக்கினர். அதன்பிறகு போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மாடுபிடி வீரர்களிடம் சிக்காத காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மஞ்சுவிரட்டு விழாவை பார்த்து […]
ஒரே நாளில் நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் இருக்கும் பனங்குளம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது சைக்கிளில் கீரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வேன் முதியவரின் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் இருக்கும் பட்டூர் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 24 வயதுடைய குறளரசன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளார். இவர் இந்த சிறுமியை கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னைக்கு கடத்தி சென்றுள்ளார். அதன்பிறகு சிறுமியின் பெற்றோர் குறளரசனிடமிருந்து தனது மகளை […]
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான பல இடங்கள், நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஆகியவை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என தகவல் வந்தது. இந்த இடங்களை மீட்கும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது. எனவே தாளக்குடி பகுதியில் இருக்கும் திருக்கோயிலுக்கு சொந்தமான அந்த இடத்தை திருக்கோவிலின் இணை ஆணையர் குமாரவேல் தலைமையில் ஒரு குழு சென்று […]
பா.ஜ.க வின் 2 வேட்பாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க வின் சார்பாக அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கட்சியின் அறிவிப்பை மீறி பா.ஜ.க கட்சியின் 2 வேட்பாளர்கள் அவர்களை எதிர்த்து மறைமுகத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் காரணமாக குமரி […]
டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருங்கோடு பகுதியில் இருக்கும் பாலபள்ளத்தில் அருண் சஞ்சு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடைக்காவு பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த டெம்போ அருண் சஞ்சுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அருண் சஞ்சீவ் படுகாயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]
புனித அற்புத மாதா நடுநிலைப்பள்ளியில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் புனித அற்புத மாதா நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 950 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மருத்துவர் செந்தில் தலைமை தங்கியுள்ளார். இந்த முகாமில் மருத்துவர்கள் விஜயராஜா, ஆனந்தி, செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உதவியாளராக சங்கீதா, யமுனா, கௌசல்யா ஆகியோர் இருந்தனர். இவர்கள் […]
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த அடையாள அட்டை பெற வரும் மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் வட்டாட்சியர் புவியரசன், மாற்றுத் திறனாளிகள் […]
உண்ணாவிரத போராட்டத்தில் போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மண்டல பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இவர்கள் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்கள், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.அன்பு மணவாளன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் இளங்கோவன், மாவட்ட […]
வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் இருக்கும் செருப்பாலூரில் நாராயண பிள்ளை என்ற முதியவர் வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்கள் முதியவரை மிரட்டி அவரிடமிருந்த 550 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து முதியவர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் வலை வீசித் தேடி வந்தனர். அந்த […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் தலைமை ஆசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் இருக்கும் சீரடிபட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பிரகதாம்பாள் என்ற மனைவியும் அருளி, பாலபாரதி என்ற இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சக்திவேல் பக்கத்து ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சக்திவேல் வீடு […]
உக்ரைன் நாட்டில் இருந்து தமிழக மாணவி தாயகம் திரும்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் இருக்கும் துவரடிமனையில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ப்ரீத்தி என்ற மகள் இருக்கிறார். இவர் உக்ரைன் நாட்டில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். […]
கோவில் திருவிழாவில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் இருக்கும் அரங்கூர் கிராமத்தில் பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்காக வாகையூரை சேர்ந்த கல்யாணி என்பவரும், அரங்கூர் கிராமத்தில் வசிக்கும் அன்னக்கொடி என்பவரும் வந்துள்ளனர். இந்த குடமுழுக்கு விழாவின் போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அன்னக்கொடி, கல்யாணி ஆகியோரிடம் […]
சிறப்பாக நடைபெற்ற வலியபடுக்கை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மாசிதிருவிழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், சாமி வீதி உலா, சமய மாநாடு, சிறப்பு ஆராதனைகள் போன்றவைகள் அம்மனுக்கு நடைபெற்றது, இதைத்தொடர்ந்து நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் போன்றவைகள் நடைபெற்றது. அதன்பிறகு அம்மன் வெள்ளி பல்லக்கில் […]
தி.மு.க வேட்பாளர் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையுடன் பதவியேற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பேரூராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளில் சுயேச்சை-2 ,அதிமுக-7, பாஜக-11, திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலராக பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் […]
தி.மு.க கட்சி 18 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மயிலம் பகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இது தவிர மீதமுள்ள 50 பேரூராட்சிகளிலும் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 18 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அகத்தீஸ்வரம் பகுதியில் தலைவராக திமுகவைச் சேர்ந்த அன்பரசி என்பவரும், துணைத் தலைவராக அ.தி.மு.க வைச் சேர்ந்த சரோஜா […]
போதுமான அளவு கவுன்சிலர்கள் வராததால் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலம் பகுதியில் 15-வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுயேட்சை-3, அ.தி.மு.க-4, திமுக- 2, பா.ஜ.க-5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெறவிருந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பாஜக என 3 கட்சிகளும் போட்டியிட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஆதரவாக கவுன்சிலர்களை திரட்டியுள்ளனர். அப்போது சுயேச்சை கவுன்சிலர் சிவசங்கர் […]
பாரதிய ஜனதா கட்சி 8 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளான வெள்ளிமலை-15, வில்லுக்குறி-15, தென்தாமரைகுளம்-15, புதுக்கடை-15, மண்டைக்காடு-15, கணபதிபுரம்-15 இடைக்கோடு-18, இரணியல்-15 இடங்களில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலராக பதவியேற்ற நிலையில், தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த 8 பேரூராட்சிகளிலும் நடைபெற்ற தலைவர் போட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் வெற்றி […]
தி.மு.க பெண் கவுன்சிலர் நகராட்சியின் முதல் தலைவர் என்ற பெருமையுடன் பதவியேற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு பகுதியில் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தப் பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் தே.மு.தி.க-1, அ.தி.மு.க-1, பா.ஜ.க-5, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-10, தி.மு.க-10 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலில் தலைவர் போட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]
கொரோனா பரவல் குறைந்ததால் நாகராஜா கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் புகழ்பெற்ற நாகராஜா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல கடந்த 2 வருடங்களாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மீண்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு சாமி செய்வதற்காக சென்றுள்ளனர். இந்த கோவிலில் இருக்கும் நாகர் சிலைகளுக்கு பால் மற்றும் மஞ்சள் ஊற்றி வழிபட்டனர். மேலும் இந்த […]
வங்கியிலிருந்து காணாமல் போன பணத்தை காவல்துறையினர் மீட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் இருக்கும் ஊரல் கிராமத்தில் அய்யனாரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அதிலிருந்து கடந்த 2021-ம் ஆண்டு 49,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]
நகராட்சி தலைவர் போட்டியில் முதன் முதலில் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் கடந்த பிப் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் விழுப்புரம் நகராட்சியில் 45 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சுயேட்சை-3, மனிதநேய மக்கள் கட்சி-1, விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, பா.ம க மற்றும் காங்கிரஸ்-2, அ.தி.மு.க-7, தி.மு.க-25 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்பு விழா நடந்து முடிந்த நிலையில் நகராட்சி தலைவர் […]
இந்திய குடியரசு கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் இருவேல்பட்டு குமார் தலைமையில் இந்திய குடியரசுக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இந்திரா நகர் காலனி, வழுதரெட்டி காலனி, விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் ஏழை, எளிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் […]
கோவில் கலசங்களை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இந்த 3 கலசங்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. இது குறித்து விருத்தாசலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
மனைவிக்கு சீட் கிடைக்காததால் கணவன் தற்கொலை முற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி பகுதியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் மேயர் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில் தி.மு.க வை சேர்ந்த 2 பெண் கவுன்சிலர்கள் போட்டியிட்டனர். ஆனால் கட்சி நிர்வாகம் தி.மு.க கவுன்சிலர் சுந்தரியை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தது. இருப்பினும் சுந்தரிக்கு எதிராக கீதா என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது கொடி கம்பத்தை வைத்துள்ளனர். இவர்களது கொடிக்கம்பம் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வருவாய் கோட்டாட்சியர் […]
நட்சத்திர விடுதியில் திடீரென காவலர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 45 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க வை சேர்ந்த சுந்தரி என்பவர் மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு தி.மு.க வைச் சேர்ந்த ஐயப்பன் எம்.எல்.ஏ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் தனக்கு ஆதரவான கவுன்சிலர்களை ஒரு […]
பல்வேறு பிரச்சனைகளை கடந்து கடலூர் மாவட்டத்தின் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 45-வார்டுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் சுயேட்சை-3, அதிமுக-6, காங்கிரஸ், பாஜக மற்றும் பாமக-1, தமிழக வாழ்வுரிமை கட்சி-3, விடுதலை சிறுத்தைகள் கட்சி-3, திமுக-27 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தி.மு.க […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் நகர்மன்ற துணை தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தி.மு.க வும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி கட்சிகள் ஆகும். ஆனால் தி.மு.க வைச் சேர்ந்த வேட்பாளர் ஜெயபிரபா என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து […]
கவுன்சிலராக பதவி ஏற்ற 28 நபர்கள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்ததில் கடலூர் மாநகராட்சியில் 45 இடங்களில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். இன்று மேயர் மற்றும் துணை மேயருக்கான போட்டி நடைபெற்றது. இந்நிலையில் தி.மு.க சார்பில் மேயர் பதவிக்கு சுந்தரி என்பவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் தாமரைச்செல்வன் என்பவர் துணைமேயர் பதவிக்கும் போட்டியிட்டுள்ளனர். […]
போக்குவரத்து விதிகளுக்கு உட்படாமல் செயல்பட்ட காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் அரசு விதிகளை மீறி செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போக்குவரத்து அதிகாரிகள் விழுப்புரம் நகர பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே மக்களைத் தேடி மருத்துவம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில் ஒரு கார் வந்துள்ளது. அந்த காரை அதிகாரிகள் மறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அது அரசின் பயன்பாட்டிற்காக […]
பொதுமக்களுக்கு ஓட்டு போடுவதற்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கபட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓட்டு போடுவதற்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் கிசாக்ஸ் என்ற எந்திரம் மூலம் ஓட்டு போடுவதற்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மோகன் […]
பாலியல் வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கேகே சாலை அருகிலுள்ள லே-அவுட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு தண்ணீர் கேன் போடுவதற்கு வந்த வாலிபர் 41 வயதான பெண் தனியாக இருந்ததை பார்த்துள்ளார். எனவே அந்தப் பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயானக்கொல்லை திருவிழா சிறப்பாக நடைபெற்று உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு மயானக்கொல்லை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், தேன், திரவியம் போன்ற பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு பக்தர்கள் மீது அம்மன் வேடமணிந்தவர்கள் நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். […]
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனையடுத்து தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து வடக்கு கடலோர பகுதிகளில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூரில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் […]
வாகன சோதனையின் போது காவல் துறையினரால் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுரபாக்கம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் ஒரு குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது 15 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதில் மொத்தம் 480 மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். […]
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அந்தப் பகுதியில் இருந்த ஸ்டேட் பேங்க் எதிரில் நின்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து திண்டிவனம் […]
2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி அருகில் ஆடூர் அகரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது அதில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதை பறிமுதல் செய்த காவல்துறையினர் காரில் வந்த நபர்களை விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காட்டுமன்னார் கோவிலைச் […]