அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஓய்வு பெற்ற நல அமைப்பின் தலைவர் பழமலை தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பென்சன் திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும், குடும்ப பாதுகாப்பு நிதியாக 50000 ரூபாய் தர […]
Author: Siva Kumari
தி.மு.க கட்சியின் உறுப்பினரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் தண்டையார்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தி.மு.க பிரமுகரை தாக்கியுள்ளனர். அதாவது வாக்குச்சாவடிக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக கூறி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் நரேஷ் என்பவரை தாக்கியுள்ளனர். இவர் தி.மு.க கட்சியை சேர்ந்தவர் ஆவார். இதில் காயமடைந்த நரேஷை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவரை அடித்து […]
தேர்தலில் பெற்ற வெற்றி சான்றிதழை கணவனின் சமாதியில் வைத்து அவரது மனைவி கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை மாவட்டத்தில் நகராட்சி பகுதியின் 188-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க பெண் வேட்பாளர் சமீனா செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இவர் 2,945 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய கணவர் செல்வம் தி.மு.க வின் வட்டச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இவரை கடந்த 1-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து இவருடைய […]
உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பெண் வெற்றி பெற்றுள்ளார். சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியின் 61-வது வார்டில் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக முதன் முதலில் ஒரு பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட பாத்திமா வெற்றி பெற்றுள்ளார். அக்கட்சியின் முதல் பெண் வேட்பாளர் பாத்திமா ஆவார். மேலும் பாத்திமா தங்கள் தொகுதியில் இளைஞர்கள் அதிக அளவில் இருப்பதாக […]
மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவைப்படும் பொருள்கள் மற்றும் பாடம் கற்பிக்க பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இல்லம் தேடி கல்வி என்ற அமைப்பின் மூலமாக கிராமங்களில் வசிக்கும் மாணவ மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து இல்லம் தேடி கல்வி அமைப்பினர் கண்காட்சி ஒன்றினை நடத்தியுள்ளனர். இந்த கண்காட்சியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் பாடங்களை […]
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமையை தி.மு.க. வை சேர்ந்த பெண் வேட்பாளர் பெற்றுள்ளார். சென்னை மாநகராட்சியில் கடந்த 21-ம் தேதி 200 வார்டுகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளில் தி.மு.க.வினர் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் கொளத்தூர் பகுதியில் 67-வது வார்டில் தி.மு.க சார்பில் தாவூத்பீ என்ற பெண் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க கட்சியின் வேட்பாளரை விட 11,340 ஓட்டுகள் […]
வனப்பகுதிக்குள் பொதுமக்கள் விறகு எடுக்க செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் காட்டுயானைகள் மற்றும் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது கோடைக்காலம் நெருங்கி வருவதால் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக தேயிலை தோட்ட பகுதிக்குள் வருகின்றன. இந்நிலையில் காட்டுயானைகள் ஒன்று சேர்ந்து வால்பாறை வழியாக கேரள வனப்பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர்காக கேரள வனப்பகுதிக்கு செல்ல நேரிடும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் விறகு […]
அதிகாரிகளால் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி அருகில் கணியூர் பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அந்த சுங்கச்சாவடியின் அருகில் நின்று கொண்டிருந்தபோது தனியார் சொகுசு பேருந்தில் வேனில் வந்த சிலர் மூட்டைகளை ஏற்றியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு செல்வ நாகரத்தினம் தலைமையில் ஒரு குழு விரைந்து சென்றுள்ளது. இந்நிலையில் காவல்துறையினரை கண்டவுடன் வேனில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பித்து […]
வலிமை திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கில் அஜித் ரசிகர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியில் திரையரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த திரையரங்கில் நேற்று நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். ஆனால் நிறைய பேருக்கு டிக்கெட் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் வலிமை படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென படம் பாதியில் நின்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் […]
கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றும் விழா நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாதத்தை முன்னிட்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த பிப் 15-ம் தேதி திருவிழா தொடங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு முன்பாக பிப் 22-ம் தேதி மஞ்சள் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த மஞ்சள் கம்பத்திற்கு பக்தர்கள் தங்கள் […]
பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்துக்கு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி அருகில் முத்தோரை பாலாடாவில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் அருங்காட்சியகமும் உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து இந்த அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த அருங்காட்சியகத்தை கடந்த டிசம்பர் மாதத்தில் திறந்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்வதற்கான […]
ரயில் தண்டவாளத்தில் கிடக்கும் குப்பைகளை தூய்மைபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியிலிருந்து கல்லார் பகுதிக்கு செல்வதற்காக மலை இரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது வனப்பகுதி என்பதால் அங்கே காட்டு விலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் மக்கள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் குப்பைகள், உணவு பார்சல்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற ஏராளமான குப்பைகளை தண்டவாளத்தில் வீசுகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் நடமாடும் வனவிலங்குகள் அந்த குப்பைகளை […]
பணமோசடி செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் திருவள்ளுவர் நகரில் சண்முகசுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற கணவரும் தேவி என்ற தங்கையும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்தப் பகுதியில் இருக்கும் மக்களிடம் சீட்டு பணம் வசூலித்துள்ளனர். அதாவது தீபாவளிக்காக சீட்டு பணம் வசூலிப்பதாகவும் தீபாவளி பண்டிகையின்போது உங்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் இவர்களிடம் […]
அமோனியா வாயு கசிந்ததன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை காசிமேடு பகுதியில் மீனவர்களுக்கு பயன்படும் ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை சீனிவாசன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் படகுகளில் மீனவர்கள் மீன்களைப் பதப்படுத்தி வைக்கும் ஐஸ்கட்டிகள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் திடீரென ஐஸ்கட்டி தொழிற்சாலையில் உள்ள வாயு குழாயில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த குழாயிலிருந்து அமோனியா வாயு அதிக அளவில் கசிந்துள்ளது. […]
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக 14 விதமான வளர்ச்சி திட்ட பணிகளை அரசு செயல்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு சாலை வசதி அமைத்து தருமாறு பல வருடங்களாக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அவர்களது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 14 அம்ச பணிகளை ரூபாய் 4 கோடி செலவில் அரசு செய்துள்ளது. இதன்படி 8 இடங்களில் […]
மருத்துவரின் வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் சக்திவேல்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் சக்திவேலின் பெற்றோர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் உறங்கிக் கொண்டிருந்த போது இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து அவர்களை கயிறால் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 150 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு காரில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கரும்புக்கான ஊக்கத் தொகை 6 கோடி ரூபாயை வாங்கித்தருமாறு புகார் மனு அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முண்டியம்பாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கரும்பு ஆலை ஒன்று உள்ளது. இந்த கரும்பு ஆலையில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த கரும்புகளை விற்பனை செய்துள்ளனர். கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் அரசாங்கம் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை ஒன்றினை அறிவித்துள்ளது. ஆனால் கரும்பு ஆலை அரசாங்கம் அறிவித்த ஊக்கத் தொகையை விவசாயிகளுக்கு தராமல் இன்றுவரை காலம் […]
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் பகுதியில் ரசபுத்திரப்பாளையம் என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரகாஷ் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரகாஷிடம் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு முன்பாக மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அடிப்படை வசதிகூட இல்லாத மாற்று திறனாளிகள் கட்டிடத்தை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை முறையாக அறிவிப்பு பலகைகள் மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும், […]
போதை பொருள் தடுப்பு பற்றி மாணவர்களுக்கு சிறப்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காகுபத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வைத்து போதை பொருள் விழிப்புணர்வு பற்றிய சிறப்பு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் நீதிபதி பூர்ணிமா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா, மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதி சந்திரன், போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டு போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றி சிறப்புரை ஆற்றியுள்ளனர். மேலும் மாஜிஸ்திரேட்டு அருண்குமார், […]
ஒரே நாளில் அடுத்தடுத்த 5 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நெருப்பில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பேருந்து நிலையத்தின் அருகில் காந்தி பூங்கா சாலையில் ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இதில் சரவணன் என்பவர் நகை அடகு வைக்கும் கடையும், ரியாஸ் என்பவர் வாட்ச்கடையும், அண்ணாமலை என்பவர் பிளாஸ்டிக் வியாபாரம் செய்யும் கடையும், பாலமுருகன் என்பவர் செல்போன் கடையும், ருக்மணி என்பவர் […]
காலாவதியான குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். உணவு பாதுகாப்பு சட்டங்களை பின்பற்றி உணவு தயாரிப்பு நிலையங்கள் செயல்படுகிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வி.எம் சத்திரத்தில் உள்ள குளிர்பானம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சங்கரலிங்கம் […]
கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஅள்ளி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயில்கின்றனர். இந்த பகுதியை சுற்றியுள்ள தடதாரை, அத்திகுண்டா, ஏரிக்கரை, பந்திகுறி, மாதேபள்ளி, முஸ்லிபூர், எடகம்பள்ளி போன்ற கிராமங்களிலிருந்து பேருந்து மூலமாக மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் […]
மாமரங்களை பூச்சிகள் தாக்குவதால் சாகுபடி குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீலம், செந்தூரா, பீத்தர், பெங்களூரா, பங்கனபள்ளி, மல்கோவா, அல்போன்சா போன்ற பலவிதமான மாம்பழங்கள் 40 ஆயிரம் பரப்பளவிற்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமரங்களில் டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை பூக்கள் பூக்கும். இந்த வருடம் அதிக மழை பெய்துள்ளதால் வழக்கத்தைவிட அதிகமான அளவு பூக்கள் பூத்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். ஆனால் தத்துப்பூச்சிகள் மாமரங்களை […]
தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என உணவு பாதுகாப்புதுறை அதிகாரி ஆணையிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சௌமியா தலைமையில் ஒரு குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் குளிர்பானம் விற்கும் கடைகள், சாலையோர உணவகங்கள், தேநீர் கடைகள், குடிநீர் விற்பனை செய்யும் கடைகள் போன்றவற்றை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து தரமற்ற உணவு பொருட்களை தயாரிக்கக்கூடாது எனவும், குளிர்பானங்களில் காலாவதி தேதிகளை சரியான முறையில் குறிப்பிட வேண்டும் எனவும், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை […]
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு வழி சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வழியாகத்தான் கும்பகோணம், குடவாசல், தஞ்சாவூர், கொரடாச்சேரி, திருச்சி, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் மற்றும் பலவிதமான வாகனங்கள் செல்கின்றன. அந்த பகுதியில் சாலை குறுகிய அளவில் இருப்பதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் […]
புதிதாக தொடங்கப்பட்டுள்ள சரக்கு ரயில் போக்குவரத்து சேவையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு காரைக்குடி பகுதிக்கு ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தடத்தில் பயணிகள் ரயில் மட்டும் இதுவரை இயங்கிக்கொண்டிருந்தது. இதனால் மாவட்ட ரயில் அமைப்பாளர்கள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு சங்கத்தினை சேர்ந்த அமைப்புகள் சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. […]
லாரி நிறுவன உரிமையாளர்கள் வாடகை பணத்தை அதிகரித்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் லாரி நிறுவன உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வாடகை கட்டணத்தை தங்களுக்கு உயர்த்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம், அக்ரோ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
நியாய விலைக்கடைகளில் 3 நாட்களாக பொருட்கள் வழங்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 735 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய், அரிசி போன்ற பல்வேறு பொருட்கள் மலிவு விலையில் இங்கு வழங்கப்படுகிறது. போலியான குடும்ப அட்டைகளை கண்டறிவதற்காக அரசாங்கம் ஆதார் அட்டையுடன், குடும்ப அட்டையை இணைத்துள்ளது. இந்நிலையில் இணையதளத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறின் காரணமாக 3 நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் […]
கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியில் பேரநாயக்கன்பட்டியில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதுடைய அன்பு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளான். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டியில் இருக்கும் கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பேருந்தில் தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பும் போது அன்பு […]
சாலை வசதி அமைத்து தருமாறு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தொண்டாந்தோப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும் 100 ‘ க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆர்சுத்திப்பட்டு பகுதியிலிருக்கும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் வேலைக்கு செல்வதற்காகவும், தேவைப்பட்ட பொருள்களை வாங்க வேண்டுமென்றாலும் ஆர்சுத்திப்பட்டு பகுதிக்குத்தான் செல்ல […]
சாலையில் நடமாடிக் கொண்டிருந்த மாடு முட்டி 3 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சாலைகளில் மாடுகள் நடமாடிக் கொண்டிருக்கிறது. இந்த மாடுகளை பிடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் சாலைகளில் நடமாடிக் கொண்டிருந்த மாடுகளை பிடித்து பராமரிப்பு நிலையங்களில் அடைத்துள்ளனர். இந்நிலையில் பாரதி நகர் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த மாடு திடீரென அங்கு நின்ற நபர்களை துரத்தியுள்ளது. இதில் 3 […]
மத்திய மந்திரியின் மகனை கைது செய்ய வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில் போராட்டம் ஒன்று நடத்தியுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த […]
மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவு தருவதாக கூறி ஆசிரியர் மீது பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்த காவல்துறையினர் ஆசிரியர் ராஜ்குமாரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் 12. ஆம வகுப்பு மாணவிகள் சிலர் […]
மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி அருகில் சர்மா நகர் பி.வி காலனியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி யாஷ்வினி என்ற மனைவியும் ஒரு கைக்குழந்தையும் உள்ளது. தற்போது வெங்கடேஷ் செங்குளம் பகுதியில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் கால்பந்து விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினருக்கு ஒரு தகவல் […]
வாடகை பணம் செலுத்த தவறியதால் கோவிலுக்கு சொந்தமான கிளப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் பகுதியில் கபாலீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகளுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. இதனையடுத்து கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிளப் ஒன்று மனைமரப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்புக்கு நியமிக்கப்பட்ட வாடகை பணத்தை அவர்கள் தராததால் கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதன்பிறகு கிளப் நிர்வாகிகள் […]
தி.மு.க கட்சியின் உறுப்பினர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் ஏ பிளாக் பகுதியில் மதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் தனது மோட்டார் சைக்கிளில் எஸ்.எம். நகருக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை சில மர்ம நபர்கள் மறித்து அவரை கத்தியால் குத்தி பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடிக்கு அருகில் வெள்ளானூர் பாரதி நகரில் மாலதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார். இதனால் வீட்டில் மாலதி மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் மாலதி காலை நேரத்தில் வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மாலை நேரத்தில் […]
கோனியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த 14″ஆம் தேதி திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோனியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் போன்ற பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணி அளவில் கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. மேலும் அம்மனை தங்கத்தால் அலங்கரித்து கோவிலை சுற்றி வந்துள்ளனர். அதன்பிறகு அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் […]
திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க வினர் கைப்பற்றியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் 15 பிரிவுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் 55 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். தேர்தல் முடிவடைந்த பிறகு திருவெண்ணைநல்லூரில் இருக்கும் காந்தி நினைவு பள்ளியில் வைத்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. இதில் தி.மு.க கட்சியினர் பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெற்று திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை முதன்முறையாக கைப்பற்றியுள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியாக மாற்றப்பட்டு 54 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதன் முறையாக தி.மு.க இந்தப் […]
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது . தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடந்து முடிவடைந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் உள்ளது. இதனையடுத்து 210 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் தி.மு.க கட்சி 130 வார்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. 33-வார்டுகளையும், பா.ம.க 6-வார்டுகளையும், காங்கிரஸ் 5-வார்டுகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 1-வார்டையும். தே.மு.தி.க 1-வார்டிலும், அ.ம.மு.க 1-வார்டிலும் வெற்றி […]
அ.தி.மு.க வேட்பாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதியின் 23-வது பிரிவு மற்றும் 26-வது பிரிவுகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் 23 வது வார்டில் போட்டியிட்ட கோதண்டராமன் 4 வாக்குகள் வித்தியாசத்திலும் 26 வது வார்டில் போட்டியிட்ட ஜெயப்பிரியா சக்திவேல் 37 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் […]
போலியான பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் ஒன்று உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து துபாய் செல்வதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் நின்று உள்ளனர். குடியுரிமை அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் ஆவணங்களை சோதனை செய்துள்ளனர். அப்போது திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் ஆவணத்தை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் மற்ற ஆவணங்கள் […]
காணாமல் போன போலீஸ்காரர் சடலமாக கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்ரவாண்டி அருகில் ஏழாம் கிராமம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மயிலம் பகுதியிலிருக்கும் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தேர்தல் பணிக்காக கடந்த 18 ஆம் தேதி விக்ரவாண்டி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் வேல்முருகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி தமிழரசி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் […]
இரயில்வே கதவு 1 மணிநேரம் திறக்கப்படாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் ரயில்வே நிலையத்தில் சரக்கு ரயில் 1 வது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றுள்ளது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் அந்த ரயில் அங்கிருந்து கிளம்பியுள்ளது. அதன் பிறகு சரக்கு ரயிலின் இயந்திர திசை மாற்றப்பட்டு சரக்கு ரயில் அங்கிருந்து […]
புகழ்பெற்ற பிள்ளையார் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் அருகே சிறப்பு வாய்ந்த பயம் தீர்த்த பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையாருக்கு பால், தேன், திரவியம், மஞ்சள், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனையடுத்து லெட்சுமாங்குடி கலிதீர்த்த […]
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்குள் கைபேசி கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் வானியம்பாடியில் இருக்கும் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஒட்டு எண்ணும் மையங்களில் போடப்பட்டிருக்கும் பாதுகாப்புகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாகா மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி […]
சென்னையில் உள்ள இரண்டு தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் கடந்த 19 ஆம் தேதி 179 வது பகுதிக்கான வாக்குப்பதிவு மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் வைத்து நடைபெற்றுள்ளது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி வீசியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு […]
வாலிபர் கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் டாக்டர் குடியிருப்பில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆனைமலையில் தேங்காய் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் சகோதரிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அகல்யா என்பவருக்கும் குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி பரமேஸ்வரி தனது சகோதரரான பரமேஸ்வரனிடம் கூறியுள்ளார். எனவே பரமேஸ்வரன் நியாயம் கேட்பதற்காக அகல்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பரமேஸ்வரனுக்கும் […]
ஆந்தையை காப்பாற்றிய மாணவியை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பாராட்டியுள்ளனர். கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் கோட்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு உப்புத்தண்ணீர் கிணறு உள்ளது. இதனருகில் சிறுவர், சிறுமிகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆந்தை ஒன்று அந்த கிணற்றை சுற்றி திரிந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆந்தையை சில காகங்கள் ஒன்று சேர்ந்து விரட்டி தாக்கியுள்ளது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிரியதர்ஷினி என்ற மாணவி இதை பார்த்துள்ளார். உடனே அந்த காகங்களை அங்கிருந்து […]