சேலத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பத்மாவதி நிறுவன ஊழியர்கள் பணத்தை வாங்கி கொண்டு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் தலைமை மருத்துவமனையில் டீன் அலுவலகம் அமைந்துள்ள வார்டுகளில் செவிலியர்கள் சரியாக பணியில் ஈடுபடவில்லை. இதையடுத்து அங்கு புதிதாக துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணியில் பத்மாவதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊழியர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் […]
Author: MM SELVAM
டெல்லி கார்கி கல்லூரியின் நிகழ்ச்சியின் போது நுழைந்த சில சமூக விரோதிகள் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கார்கி கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சிக்கிடையே கல்லூரியின் இரும்பு கேட்டை தாண்டி வந்த சில சமூக விரோதிகள் அங்கிருந்த மாணவிகளின் உடலைத் தவறான முறையில் தொட்டும், கட்டிப்பிடித்தும் அநாகரீகமாக மிருகம் போல் அவர்கள் நடந்து கொண்டதாக மாணவிகள் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். கடந்த 6-ஆம் தேதி இரவில் நடைபெற்ற […]
ஜார்கண்ட்டில் மர்மநபர்கள் காந்தி சிலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹஸாரிபாக் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலையை சமூக விரோதிகள் சிலர் அடித்து நொறுக்கி சுக்கல் சுக்கலாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போய் உடனே காவல்துறையிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர […]
அண்டை மாநிலங்களை போன்று மதுபானம் குறைந்தவிலைக்கு தமிழ்நாட்டில் விற்கப்படவில்லை என மதுபிரியர்கள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் தினசரி கூலி வேலைக்குச் செல்பவர்கள் அதிகம் உள்ளனர். மேலும், இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட அரசு மதுபானக்கடைகள் செயல்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு மதுபானக்கடைகளில் எவ்வித முன்னறிவிப்புமின்றி மதுபானங்களின் விலை திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கப்படாத விலையேற்றத்தால் தாங்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர் மது பிரியர்கள். இதுகுறித்து மது பிரியர்கள் கூறுகையில், “கேரளா, கர்நாடகா, ஆந்திரா […]
தொடரை இழந்த கோலி அண்ட் கோ!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணி இந்தத் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி டெய்லரின் பொறுப்பான […]
தெலுங்கில் உருவாகிவரும் ‘சீத்திமார்’ படத்தில் நடிகை தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்கிறார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தில் கடைசியாக தமன்னா நடித்திருந்தார். ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இந்த நிலையில், தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் ‘சீத்திமார்’ படத்தில் நடிகை தமன்னா நடிக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக ஜுவாலா ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் சம்பத் நந்தி இயக்கும் இப்படத்தில், […]
தில்லி தொடரில் நடித்த பிறகு இந்திய அரசியல் பற்றி தனது அறிவு விரிவடைந்திருப்பதாக பாலிவுட் நடிகை அமிரா தஸ்தூர் கூறியுள்ளார். அமேசான் ப்ரைமில் ஒளிப்பரப்பாகவிருக்கும் ‘தில்லி’ என்ற வெப் சீரிஸில் இணைந்துள்ளார் நடிகை அமிரா தஸ்தூர். அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கி வரும் இந்த தொடரில், சயீப் அலிகான் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்திய நாட்டின் அரசியல் மையமாக திகழும் லுடியன்ஸ் டெல்லி பகுதியின் அதிகார பின்னணிகளைக் கொண்டு அரசியல் திரில்லர் பாணியில் ‘தில்லி’ வெப் சீரிஸ் […]
சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமான வரித்துறையினர் பிகில் பட வருவாய் தொடர்பாக நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 23 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை நேற்று முன்தினம் இரவு 8 […]
விஜய் படம் என்பதால் நெய்வேலியில் மாஸ்டருக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தவில்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். பிகில் படம் வருவாய் தொடர்பாக கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்ற வருமான வரித்துறையினர் விஜயை சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர். அதேபோல் விஜயின் மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றனர். அப்போது விஜய் பிகில் சம்பளமாக 30 கோடி […]
கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இதுவரை சீனாவில் 722 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே, வூகான் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை 722 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். மேலும் 34,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹூபே மாகாணத்தில் மட்டும் 3,399 பேருக்கு […]
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், இஸ்லாமிய மத குருமார்கள் போராட்டங்களை தூண்டி விடுவதாக கூறிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்தும் பெரியகுளம் போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. சிஏஏவிற்கு எதிராக நாடு முழவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் நேற்று இந்திய தேசியக்கொடியுடன் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் கண்டன போராட்டம் நடத்தினர். பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில், […]
நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த ஞானராஜ் ஜோஸ்மின் மேரி தம்பதியர் கோவிலுக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அருப்புக்கோட்டை அருகே வந்துபோது, காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் கார் நிலைதடுமாறி நான்குவழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மறுபக்க சாலையில் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி […]
சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டு, வரும் 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிகழ்வதால் பரப்புரை களம் சூடுபிடித்திருந்தது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பலர் என்னைத் தொடர்பு கொண்டு […]
வீட்டிலிலுள்ள ஆண்களை அழைத்துச் சென்று பெண்கள் தேர்தலில் வாக்களிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக மெட்ரோ சேவைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டது. இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெளியே சென்று வாக்களியுங்கள். பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வீட்டின் பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வது போல் நாட்டின் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். டெல்லியின் பொறுப்பை உங்களின் தோள்களில் ஏற்றி கொள்ளுங்கள். வீட்டில் உள்ள ஆண்களை அழைத்து சென்று […]
இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறையோடு புதிய ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடுதல், வேலைவாய்ப்புள்ள வெளிநாடுகளுக்கு தகுதியுள்ளவர்களை அனுப்புதல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல் ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செய்துவருகிறது. இந்நிலையில், அந்நிறுவனம் தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலமாக இங்கிலாந்து நாட்டு சுகாதாரத் துறைக்கு தமிழக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒரு கருத்துருவை […]
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தனது குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய போது தந்தையாக ஒரு உணர்வு மிக்க கருத்து ஒன்றை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தனது குழந்தைகளான மகன் யாஷ், மகள் ரூஹி ஆகியோரின் மூன்றாவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். குழந்தைகளுக்கு மூன்று வயதாகிவிட்டதால் இது குறித்து தனது சமூகவலைதளத்தில் உணர்வு மிக்க கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அபிமான இரட்டையர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நான் இந்த சமூகத்தில் அபிமானமிக்க […]
ராகுல் காந்தியை சந்தித்த ராஜபக்ச!
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ராஜபக்ச காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியையும் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் அனந்த் சர்மா உடனிருந்தார். அண்ணல் காந்தியடிகளின் நினைவிடமான ராஜ்காட்டிற்கு சென்று ராஜபக்ச மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து […]
5,8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்திருப்பதை வரவேற்பதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, தமிழ்நாடு […]
சுப்பையா என்பவர் தனது சொந்த செலவில் ‘அறம்’ என்ற பெட்டியை அவ்வூரிலுள்ள பள்ளியின் முன்பு அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான சுப்பையா. இவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மிகவும் ஏழ்மையில் வளர்ந்த இவர் தனது சொந்த ஊருக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நாள்தோறும் எண்ணியுள்ளார். இந்நிலையில், இடையாத்தூர் கிராமத்திலிருந்து ஒரு பேப்பர் வாங்க வேண்டுமென்றால் கூட, நான்கு கிலோ மீட்டருக்குச் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் போலவே, அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு, விபூதிப் பிரசாதம் வழங்கிட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமான திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோயிலாகவும் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இக்கோயிலில், ரூ.250 கட்டணத்தில் சிறப்பு விரைவு தரிசனம், ரூ.100 கட்டணத்தில் […]
போலி பத்திரிக்கையாளர்களை கண்டுபிடிக்க தமிழ்நாடு அரசு முழு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது என செய்தி, மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பிரசித்திப் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆண்டுதோறும் ஆயிரத்து 600 மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்கும் வகையில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் […]
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பெயரில் கோவில்பட்டி நகரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கோவில்பட்டி தெற்கு பஜார், மார்கெட் ரோடு, கிருஷ்ணன் கோவில் ரோடு, பூ மார்கெட், மெயின் ரோடு ஆகியப் பகுதிகளில் இருக்கும் வணிக நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளர்கள் குழு செய்த இந்த ஆய்வில் […]
ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்துக் கொலை செய்துவிட்டு, தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத ஆசாமிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர். சென்னை ஆவடி அருகே உள்ள கண்ணம்பாளையம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா. கனவனை இழந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மல்லிகாவைக் காண்பதற்காக அவரது உறவினரான மீனாட்சி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே சென்ற மீனாட்சி, சமையலறையில் மல்லிகா சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது […]
கிராமியப் பாடகியான பரவை முனியம்மா அபி சரவணன் நடித்த ‘மாயநதி’ திரைப்படத்தை கண்டு களித்தார். கிராமியப் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா உடல் நிலை சரியில்லாமல், கேட்பாரற்று இருந்தபோது, அவருக்கு உதவிக்கரம் நீட்டி மருத்துவமனையில் சேர்த்து அருகிலிருந்து பார்த்துக்கொண்டவர், நடிகர் அபி சரவணன். கடந்த வாரம் நடிகர் அபி சரவணன் நடிப்பில் ‘மாயநதி’ என்னும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை பரவை முனியம்மா அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து மதுரையில் கண்டுகளித்தார். பிறகு திரைப்படத்தை பார்த்துவிட்டு, அபி […]
யோகிபாபு, சுனைனா நடிப்பில் உருவாகி வரும் ‘ட்ரிப்’ படத்தின் டீஸர் நேற்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்ரிப்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை சுனைனா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இந்தியாவில் முதல் முறையாக அமெரிக்காவின் பிட்புல் ரக நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படத்தை சாய் ஃபிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன், பிரவீன் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். செப்டம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு […]
அண்ணன் – தம்பிக்கு இடையேயான பாச பிணைப்பை எடுத்துக் கூறும் கதையம்சத்தில் அமைந்திருக்கும் ‘பாகி 3’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. ‘வேட்டை’ படத்தின் ரீமேக்காக டைகர் ஷெராஃப் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் ‘பாகி 3’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டடது. தமிழில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘வேட்டை’ படத்தின் ரீமேக்தான் […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி இன்று காலை நடக்கவுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில் இன்று காலை இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் தொடங்கவுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான தவான் – […]
பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு காரசாரமான பதில்களைக் கூறினார். பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது அரசியல் தொடர்பான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அப்போது ரஜினி பாஜகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு, ரஜினிகாந்த் பாஜகவில் இணைவதற்கு அவர் தான் தயாராக இருக்க வேண்டும் என்றார். மேலும் ரஜினி […]
2020 தேசிய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டினால் தேன்மாநிலங்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இந்த செய்தியில் காணலாம். நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமீபத்திய பட்ஜெட் உரையில், 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை கணிசமாக ஏற்க மத்திய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். பரிந்துரைகளின் சுருக்கத்தின் முதல் குறிப்புகள் 2019 டிசம்பர் முதல் வாரத்தில் வெளிவந்தன. 2011 மக்கள் தொகை […]
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிவரை நடைபெறவிருக்கிறது. 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லிக்கு ஒரே கட்டமாக நாளை (பிப். 8) வாக்குப்பதிவு நடக்கிறது. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜகவை பொறுத்தமட்டில் கடந்த 2013 மற்றும் 2015 ஆகிய இரு தேர்தல்களிலும் ஆம் ஆத்மியிடம் தோல்வியை தழுவியுள்ளது. 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 67 தொகுதிகள் […]
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடத்தை வீதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் மீறியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோ, சமூக நல்லிணக்கத்தை குலைப்பதாக இருக்கிறதெனக் […]
என்.எல்.சி நிறுவனத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் #தாமரை_மயிர்ல_கூடமலராது என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் பிகில் படத்தை தயாரித்த AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் வருமானவரித்- துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேசமயம் நடிகர் விஜயையும் விட்டுவைக்காத வருமானவரித்துறையினர், நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்றனர். அங்கு அவரிடம் சிறிது […]
குரூப் 1 முறைகேட்டை மறைக்க ஆலாய் பறக்கும் தமிழக அரசு, ஆளும் கட்சி சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களை காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் இது தொடர்பாக ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். அதில், அதிமுக ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழுமுதல் உதாரணமான குரூப் 1 முறைகேட்டை மறைக்க ஆலாய் பறக்கும் தமிழக அரசு, ஆளும் கட்சி சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களை காப்பாற்ற […]
டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசு மருத்துவர் கூட்டமைப்பின் தலைவரான மருத்துவர் லட்சுமி நரசிம்மன் சேலத்தில் இன்று மாரடைப்பால் காலமானார். இவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லுரியில் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]
விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் என் எல் சி இரண்டாவது சுரங்கத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அதேபோல நெய்வேலி படப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்து வரப்பட்ட நடிகர் விஜயிடம் அவரின் மனைவி சங்கீதாவிடம் வாங்குமூலம் பெற்றனர். தமிழ் திரையுலகை உலுக்கிய இந்த சோதனையில் அன்புசெழியன் […]
திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011 முதல் 2016 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார்.அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெயரைச் சொல்லியும் , அவரது நண்பர்களும் , உதவியாளர்களும் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 16 பேரிடம், சுமார் 95 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி விட்டு பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்தாக சொல்லப்படுகின்றது. இது […]
திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இடவசதி குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டிலிருந்து 300 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் , 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் நெய்வேலி மாஸ்டர் […]
அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை கொன்றவழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஆபேல் ஓச்சோவா (Abel Ochoa) என்ற நபர் ஒருவர் கொகைன் போதை மருந்துக்கு அடிமையானதால் தனது மனைவி மற்றும் 2 மகள்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்று விட்டான். மேலும் மாமனார், மைத்துனி ஆகியோரையும் கொலை செய்தான். இதையடுத்து அவன் மனைவியின் காரில் தப்பிச் சென்று கொண்டிருந்தான். அப்போது வழிமறித்த […]
அல்கொய்தா அமைப்பின் துணை தலைவன் குவாஸிம் அல் ராய்மி கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவாஸிம் அல் ராய்மி (Qasim al-Raymi0) தலைமையின் கீழ் இருக்கும் அல்கொய்தாவின் அராபிய வளைகுடா பிரிவு பயங்கரவாதிகள் யேமனில் உள்ள அப்பாவி மக்களுக்கு எதிராக தீவிர வன்முறையில் ஈடுபட்டதாகவும், அமெரிக்கா மற்றும் அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்களை தூண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலில் துணை தலைவன் ராய்மி கொல்லப்பட்டிருப்பது, […]
காலணி விவகாரத்தில் சிறுவன் மற்றும் குடும்பத்தினரிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சென்றார். அப்போது விநாயகர் கோவிலில் வழிபடுவதற்காக அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான். இந்த சம்பவம் நடக்கும் […]
“முறைகேடுகளை மூடி மறைத்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற எடப்பாடி அரசு முயற்சி செய்வதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அதிரடியாக ஆயுதப்படை காவலர் சித்தாண்டி உட்பட 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி அடுத்தடுத்து கைது நடவடிக்கையால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது 2016- ஆம் ஆண்டு நடந்த VAO தேர்வு […]
நீலகிரியில் செருப்பை கழற்ற சொன்ன சிறுவனிடம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சென்றார். அப்போது விநாயகர் கோவிலில் வழிபடுவதற்காக அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான். இந்த […]
தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கம் 30த்திற்கு சரிந்தது , இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 04 ரூபாயும், சவரனுக்கு 32 ரூபாய்யும் உயர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 32 […]
ஆஸ்திரேலியாவில் பெண் செய்தியாளர் ஒருவர் தனது தோளில் மலைப்பாம்பை வைத்து கொண்டு செய்தி அளித்து கொண்டிருந்தபோது சீரியதால் அவர் பயந்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் சாரா கேட் ( Sarah Cawte) என்ற பெண் ஒருவர் நைன் நெட்வொர்க் சேனலில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பாம்புகளின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து சிறப்பு செய்தியை வழங்குவதற்காக வாகா வாகா (Wagga Wagga) என்ற பகுதியில் உள்ள ஒரு பாம்பு பண்ணைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் தனது […]
கடலோர மாவட்டங்களில் ‘ஆபரேஷன் சாகர்கவாச் என்னும்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் வேடத்தில் இருந்த ஏழு் காவல் துறையினர் கைது செய்யப்பட்டனர். இந்தியா முழுவதும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கடலோர மாநிலங்களில் ‘ஆபரேஷன் சாகர்கவாச்’ என்னும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் உள்ள 18 சோதனை சாவடிகளிலும், துறைமுக கடல் பகுதிகளிலும் கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினர் நேற்று (பிப். 06) படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். […]
தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இருவரை கேரள மாநில காவலர்கள் கைது செய்தனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளியில் தனது குழந்தையை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு சேர்த்தார். இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த முகமது இன்சாஃப் என்பவருடன் முகநூலில் நண்பராக இருந்துவந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை சந்திக்கச் சென்ற அந்தப் பெண், மலப்புரத்திலுள்ள விடுதி ஒன்றில் தங்கினார். அப்போது, […]
திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பொலிரோ கார் திடீரென சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணராயபுரம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது காரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே ஓட்டுநர், காரில் பயணித்த 3 பேர் சாலையில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உயிர் தப்பினர். மேலும் அருகில் இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயில் தண்ணீர் ஊற்றியும், […]
ஓசூர் அடுத்து யூ.புரம் கிராமத்தில் கஞ்சா விற்றுவந்த இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் மாணவர்களைக் குறிவைத்து தடைசெய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் விற்பனை செய்துவந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், உதவி காவல் ஆய்வாளர் செல்வராகவனிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், கெலமங்கலம் காவல் துறையினர் யூ.புரம் கிராம பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக சிறு சிறு பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சாவை நிரப்பி […]
அருவங்காடு அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை, காரில் வந்த கும்பல் தாக்கியதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பேருந்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து பழநி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தினை பாபு என்பவர் இயக்கிவந்தார். பேருந்து அருவங்காடு அருகே வந்தபோது, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சிலர் திடீரென பேருந்தின் குறுக்கே காரை நிறுத்திவிட்டு, தன் தலைவர் வருகையில் ஏன் வழி விடவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், வாக்குவாதம் முற்றி, அரசுப் […]
கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயத் தோட்டத்திற்குள் மர்மமான முறையில் இறந்துகிடந்த 14 மயில்களை வனத்துறையினர் மீட்டனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை கிராமம் பாரதிநகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் சோளம் போன்ற பல வகையான விவசாயப் பயிர்களை பயிர்செய்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வரும் மயில்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பால்காரர் ராமசாமி – குப்புலட்சுமி தம்பதியினருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில், ஏழு ஆண் […]