Categories
மாநில செய்திகள்

‘அரசியலில் ரஜினி ஒரு கேம் சேஞ்சராக இருப்பார்’ – சீனிவாசன்

கொடைக்கானலில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு அரசியலில் ரஜினிகாந்த் ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் எனத் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் சீனிவாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஜினிகாந்த் பேசியிருப்பது தேசபக்தி உள்ளவர்கள், தேசிய சிந்தனை உள்ளவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழ்நாடு அரசியலில் ரஜினிகாந்த் ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அப்துல் காலிக்’கின் ‘மாநாடு’ ஆரம்பமாகும் தேதி அறிவிப்பு!..!

சிம்பு நடிப்பில் உருவாக உள்ள ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மூத்த இயக்குநர்களும் நடிகர்களுமான பாரதி ராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவின் இரட்டை தலைமைக்கு எதிரான வழக்கு – ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக விதிகளைத் திருத்தி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியதற்கு எதிராக முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த மனுவின் மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் ஒரு காலத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கே.சி. பழனிச்சாமி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தபோது ஓ. பன்னீர்செல்வம் அணியில் செயல்பட்ட பழனிச்சாமி, சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

வாரணாசி செல்லும் இலங்கை அதிபர்..!!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தனது 4 நாள் அரசு பயணத்தின்போது வாரணாசிக்கு செல்லவுள்ளார். இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்முறையாக அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு அரசு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நான்கு நாள் அரசு முறை பயணம் இன்று தொடங்கவுள்ளது. இந்த பயணத்தின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை ராஜபக்ச சந்திக்கவுள்ளார். இரு நாட்டு உறவுகளை இந்த பயணம் மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு முன்னாள் முதலமைச்சர்கள் மீது பி.எஸ்.ஏ. வழக்கு..!!

காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிவந்த சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு- காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் தவறவிட்ட ரூ 6,00,000… உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையான ஓட்டுநர்..!!

ஆட்டோவில் தவறவிட்ட 6 லட்சம் ரூபாய் பணத்தை 3 நாட்களில் ஆட்டோ ஓட்டுநர் காவல்துறையினர் உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மாயாண்டிபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி அமாவாசை. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பையில் 74 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான வைப்புத்தொகை சான்றுகளை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் தனது கிராமத்திலிருந்து ஆண்டிபட்டி வந்தார். ஆட்டோவிலிருந்து இறங்கும்போது தான் கொண்டுவந்த பையை ஆட்டோவிலேயே […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்கிறதா கியா மோட்டர்ஸ் நிறுவனம்?

கியா (KIA) மோட்டர்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள தனது தொழிற்சாலையை தமிழ்நாட்டிற்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான செய்திகளுக்கு ஆந்திர அரசும், கியா மோட்டர்ஸ் நிறுவனமும் மறுப்பு தெரிவித்துள்ளன. கியா மோட்டர்ஸ் தொழிற்சாலை ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா (KIA) மோட்டர்ஸ் நிறுவனம், ஆந்திர மாநிலம் அனந்தபூரில் சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கார் உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவியது. 536 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, 18 ஆயிரம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பந்தை 90 மைல் வேகத்தில் எறியாதீங்க… ஆர்ச்சருக்கு அறிவுரை கூறிய வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை..!!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், காயத்திலிருந்து தப்பிப்பதற்கு வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹைலே மேத்யூஸ் அறிவுரை கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும் பங்கேற்ற ஆர்ச்சர், அதன் பின் பயிற்சியின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். எனினும் டெஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நாளை முதல் மதுபானங்கள் விலை உயரும் – தமிழக அரசு

நாளை முதல் மது விற்பனை அதிகரிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அரசின் வருவாய் மதுபானத்தை பொறுத்து இருக்கிறது. மதுபானங்களில் வரும் வருமானத்தை வைத்துதான் தமிழக அரசாங்கமும் அதன் நடவடிக்கையை செயல்படுத்தி வருகின்றது. அந்த அளவுக்கு மது விற்பனை அரசுக்கு வருமானத்தை ஈட்டி தருகின்றது. அதே வேளையில் மதுவை அரசு ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகின்றது. சிறு வயது உள்ள மாணவர்கள் , சிறுவர்கள் மதுவால் சீரழிகின்றனர் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

“நடிகர் விஜய் வழக்கு தொடரலாம்”… பாஜக மூத்த தலைவர்..!!

நடிகர் விஜய் வீட்டில் சோதனை நிறைவு பெற்ற நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , பிகில் பட விநியோகஸ்தர்கள் , நடிகர் விஜய் என வீடு அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புஷ்ஃபயர் கிரிக்கெட்: எனக்கு அப்பறம் லாராதான் இறங்குவார்… ரிக்கி பாண்டிங்..!

புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டிக்காக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடன் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் திரட்டுவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சார்பாக புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) நடைபெறுகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும், முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் வார்னே தலைமையிலான அணியும் மோதுகின்றன. மேலும், இந்தப் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்!

முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜமைக்காவைச் சேர்ந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். ஐபிஎல் தொடரில் தனது மிரட்டலான பந்துவீச்சின்மூலம் பல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதன்பலனாக கடந்த ஆண்டு ஐயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். ஆர்ச்சரின் வருகையில் […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய பிரச்னைகளிலிருந்து பிரதமர் மக்களை திசை திருப்புகிறார் – ராகுல் குற்றச்சாட்டு..!!

முக்கிய பிரச்னைகளிலிருந்து பிரதமர் மோடி மக்களை திசை திருப்புகிறார் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். மக்களவையில் இன்று நடப்பு கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கும் உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை ட்யூப் லைட் என பிரதமர் கூறிய கருத்து மக்களவையில் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இன்றைய முக்கிய பிரச்னை வேலைவாய்பின்மை, […]

Categories
மாநில செய்திகள்

கட்டதுரைக்கு இதே வேலையா போச்சு… விஜய்யை வம்பிழுக்கும் ஹெச். ராஜா

நடிகர் விஜய்யின் ரசிகர்களை விமர்சனம் செய்யும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனிடையே வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்யின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இரு சித்தாந்தங்களுக்கு இடையே தேர்தல்: அமித் ஷா பரப்புரை.!

டெல்லியில் நடைபெறுவது இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பரப்புரை கூட்டத்தில் கூறியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு கிழக்கு டெல்லியில் உள்ள கொண்ட்லி பகுதியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, “குடியுரிமை சட்டத் திருத்தம், அயோத்தியில் ராமர் கோயில், சட்டப்பிரிவு 370 நீக்கம் ஆகிய விவகாரத்தில் தங்களின் வாக்கு வங்கி எங்கே பாதிக்கப்படுமோ […]

Categories
மாநில செய்திகள்

“இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய்”… அச்சுறுத்தல்களுக்கு அஞ்சக் கூடாது- கே.எஸ் அழகிரி ஆதரவு..!!

அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற விஜய் அஞ்சக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.  ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்..!!

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் இருந்து வந்தார். இந்த நிலையில் இளைஞர் நலத் துறைச் செயலாளராக இருந்த தீரஜ்குமார், புதிய பள்ளிக் கல்வித் துறைச் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாற்றம் செய்யப்பட்ட பிரதீப் யாதவ் கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் சுகாதாரத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது – 8 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தேனி மாவட்டம் போடி வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்றவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா, 26 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சாவை கேரளாவிற்கு குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு வழியாக கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த தமிழக காவல்துறையினர் எல்லைப்பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை கைது..!!

மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர். சென்னை டி.பி. சத்திரம் குஜ்ஜி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது கணவர் பழனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 5 வருடங்களாக மகள்களுடன் தனியாக வசித்துவருகிறார். இந்நிலையில், ஜனவரி 29ஆம் தேதி மனைவியின் வீட்டுக்கு வந்த பழனி, தன்னுடைய இரண்டாவது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

குருப் 2ஏ தேர்வு முறைகேடு எதிரொலி: பத்திரப்பதிவுத் துறையைச் சேர்ந்த 6 ஊழியர்கள் இடைநீக்கம்..!!

பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றிவந்த செய்த ஆறு ஊழியர்களை குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுப்பட்டதாகக் காவல் துறையினர் கைது செய்ததையடுத்து ஆறு பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2ஏ தேர்வு முறைகேடு குறித்து தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் செயலாளர், சிபிசிஐடி காவல் துறையிடம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி புகார் அளித்தார். இந்தப் புகாரில் முறைகேட்டில் ஈடுபட்டு 42 பேர் அரசுப் பணிகளில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேசிய கொடிகளை தீவைத்து எரித்த அரசு ஊழியர்..!!

பாப்பம்பட்டி ஊராட்சியில் பழைய ஆவணங்களுடன் தேசிய கொடிகளையும் சேர்த்து எரித்த ஊராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் அருகே போதிய கட்டட வசதியின்றி பாப்பம்பட்டி ஊராட்சி அலுவலகம் சமுதாய நலக் கூடத்தில் தற்காலிகமாக இயங்கிவருகிறது. ஊராட்சியில் உள்ள ஆவணங்களை அருகில் உள்ள சத்துணவு அறையில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அந்த அறையை சுத்தம் செய்யச்சென்ற ஊராட்சி ஊழியர் மதுபோதையில் அங்கிருந்த ஆவணங்களை எடுத்து அறையின் அருகிலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“ஒரு படத்துக்கு எவ்வளவு வாங்குறீங்க”…. விஜயிடம் கிடுக்குபிடி விசாரணை..!!

நடிகர் விஜயிடம் வருமானவரித் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் நன்றி…!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நன்றி தெரிவித்து பதிலுரைத்தார். நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) கடந்த ஒன்றாம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல்செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, கடந்த மாதம் 31ஆம் தேதி இரு அவையினர் முன்னிலையிலும் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். குடியரசுத் தலைவர் தனது உரையில், “சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளில் ஒரே மாதிரியான வளர்ச்சி சாத்தியமாக உள்ளது. இனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : ரூ 30,00,00,000 வாங்கினேன்… ஒப்பு கொண்ட விஜய்..!!

பிகில் படத்தின் சம்பளமாக நடிகர் விஜய் 30 கோடி பெற்றதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று காலை முதல் வருமானத்துறையினர்  AGS நிறுவனத்தின் வீடு , அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சுமார் 200 அதிகாரிகள் பங்கேற்ற இந்த சோதனை நடிகர் விஜய்யையும் விட்டு வைக்கவிலை. பிகில் படத்தில் நடித்ததற்காக ரூ 50 கோடி வாங்கினார் என்ற தகவலை தொடர்ந்து  நடிகர் விஜயை விசாரிக்க, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ராகுல் காந்தி டியூப்லைட்”… பிரதமர் மோடி கிண்டல்.!!

மக்களவையில் விவாதத்தின் போது குறுக்கிட்ட ராகுலை டியூப்லைட் என மறைமுகமாக விமர்சித்தார் பிரதமர் மோடி. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து இன்று உரையாற்றினார். அப்போது அவர்  நிதிப் பற்றாக்குறையை நாங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும், நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும், இதற்காக நாங்கள் பல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்றார்.   மேலும் பிரதமர் மோடி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் […]

Categories
உலக செய்திகள்

103 வயதில் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் மறைவு.!

75 படங்கள், 92 நடிப்புக்கான அங்கீகாரம் என சூப்பர்ஸ்டார் என்ற பெயர் வருவதற்கு முன் சிறந்த நட்சத்திரமாக ஜொலித்தவர் கிர்க் டக்ளஸ், தனது இறுதி மூச்சை விடுத்து இவ்வுலகை விட்டு பிரிந்தார்.  ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் கிர்க் டக்ளஸ் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 103. சூப்பர்ஸ்டார் என்ற பெயர் வழக்கில் வருவதற்கு முன்பே நட்சத்திர நடிகராக ஜொலித்த கிர்க் டக்ளஸ் உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். இவரது மறைவை நடிகரும், கிர்க் டக்ளஸின் மகனுமான மைக்கேல் டக்ளஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : பிகில் பைனான்சியரின் நண்பர் வீட்டில் 15 கோடி பறிமுதல்..!!

பிகில் திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் வீட்டிலிருந்து ரூ 15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. GS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

ஆன் ஃபீல்டில் மட்டுமல்ல ஆஃப் ஃபீல்டிலும் கோலி தான் டாப்..!!

இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்புடைய பிரபலங்கள் பட்டியலில் ஷாருக் கான், தீபிகா படுகோன் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆன் ஃபீல்டில் மட்டுமல்ல ஆஃப் ஃபீல்டிலும் டாப்பில் தான் உள்ளார். குலோபல் அட்வைசரி நிறுவனம் சார்பாக இந்தியாவிலுள்ள பிரபலங்களிலேயே அதிகமாக பொருளீட்டல் மற்றும் அதிகமான சந்தை மதிப்புடைய பிரபலம் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் கேப்டன் […]

Categories
மாநில செய்திகள்

“என்னுடைய பேரன்”… உள்நோக்கம் இல்லை… அமைச்சர் சீனிவாசன் விளக்கம்..!!

நீலகிரியில் சிறுவனை காலணியை கழற்ற சொன்ன விவகாரம் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார். முகாமை துவக்கி வைப்பதற்கு முன்பதாக விநாயகர் கோவிலில் வழிபடுவதற்காக அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று  கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான். இந்த […]

Categories
உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

பிரிட்டிஷ் ஆசியன் ட்ரஸ்ட் தூதர் – இளவரசர் சார்லஸுடன் கைக்கோக்கும் கேட்டி பெர்ரி

இளவரசர் சார்லஸின் தொண்டு நிறுவனமான பிரிட்டிஷ் ஆசிய தொண்டு நிறுவனத்தின், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தத் திட்டத்தின் தூதராக கேட்டி பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ரோர் (Roar), ஃபயர் வொர்க் (Fire work), ஐ கிஸ்ட் ஏ கேர்ள் (I kissed a girl) உள்ளிட்ட பிரபல பாப் பாடல்கள் மூலம் உலகமெங்குமுள்ள பாப் இசை உலக ரசிகர்களைத் தன்னுடைய தனித்துவக் குரலால் வசீகரித்து வருபவர் கேட்டி பெர்ரி. இவரைச் சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தன் தொண்டு நிறுவனங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா”… சர்ச்சையை ஏற்படுத்திய அமைச்சர்..!!

நீலகிரியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காலில் இருந்த செருப்பை கழற்றுமாறு சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார். அப்போது அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று  கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது..!!

உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி மறுப்பு, மசூதிகளில் பெண்களுக்கெதிரான பாகுபாடு, தாவோதி போக்ரா சமூகத்தில் காணப்படும் பெண் உறுப்புச் சிதைப்பு மூடநம்பிக்கை, பார்சி அல்லாத ஆண்களைத் திருமணம் செய்யும் பார்சி பெண்களுக்குச் சொத்து உள்ளிட்ட உரிமைகள் மறுப்பு உள்ளிட்ட வழக்குகள் மீதான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை தற்போது மீண்டும் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேல்முறையீட்டு மனுக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

‘இனி உன்னை யாரும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்’ – மனைவியின் கூந்தலை வெட்டிய கணவர்

மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்து அவரின் கூந்தலை கணவரே வெட்டிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் வசித்துவருபர் ஆரிஃப். இவர் தனது மனைவி ரோஷினி மற்றும் பெற்றோருடன் ஒன்றாக வசித்துவருகின்றார். நான்கு ஆண்டுகளாகத் திருமண பந்தத்தில் இருக்கும் இருவரிடையே அண்மையில் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. ரோஷினி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேகித்து வரும் ஆரிஃப் தொடர்ச்சியாக அவரது நடவடிக்கைகளைக் கவனித்து வந்துள்ளார். சந்தேகம் முற்றவே தனது மனைவியின் […]

Categories
மாநில செய்திகள்

விரக்தியின் காரணமாகவே ஆளுநரிடம் திமுக மனு – அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்..!

ஆளுநரிடம் திமுக மனு கொடுத்ததற்கு விரக்தி காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு தனது பேத்தியின் காதணி விழாவிற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதை ஏற்று பொதுத்தேர்வு இல்லை என்று அறிவித்துள்ளோம். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தாது” என்றார். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ், நெப்போலியன்..!!

ரிக்கி பர்செல் இயக்கியுள்ள ‘ட்ராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிகர்கள் நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எஜமான், போக்கிரி, சீமராஜா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் நெப்போலியன் ஹாலிவுட்டில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவில் வசித்துவரும் அவர், ஹாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தற்போது முதன் முறையாக ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘அதிமுககாரங்களான எங்களையே இப்டி பண்றாங்கன்னா…’ – கதறி அழுததில் மயக்கமடைந்த பெண்கள்..!

தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த மக்களைக் காவல் துறையினரைக் கொண்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய அலுவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகரம் மெய்யனூர் இட்டேரி பகுதியின் மயானத்தின் அருகேயுள்ள அரசு நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். சுமார் மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த இடத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான கட்டடம் கட்டுவதாகக் கூறி, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்துவந்த பகுதியிலிருந்து வெளியேற்றி, அருகேயுள்ள இடத்தில் வசித்துக்கொள்ளும்படி […]

Categories
மாநில செய்திகள்

‘புத்தகம் இல்லாமல் ஆசிரியர்கள் பாடம் நடத்த தயாரா?’ – நாராயணசாமி கேள்வி

புத்தகம் இல்லாமல் பாடம் நடத்த ஆசிரியர்கள் தயாரா என இந்திய தொழில் கூட்டமைப்பு விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வியெழுப்பியுள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் 125ஆவது ஆண்டு விழாவையொட்டி புதுச்சேரியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், ‘நவீனகால கற்பித்தலில் பரிமாணம், சவால்கள், வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். அப்போது, கல்வித்துறைச் செயலர் அன்பரசு தலைமையேற்று பேசுகையில், “புதுச்சேரி அரசுப் பள்ளிகளின் தரம் ஆண்டுதோறும் உயர்ந்துவருகிறது. கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நான்கு படங்களில் கமிட்டானேன்… ஆனால் அனைத்தும் கைவிடப்பட்டன’ – நடிகர் கலையரசன்..!!

‘மெட்ராஸ்’ படத்துக்குப் பின் தான் 4 படங்களில் ஒப்பந்தமானதாகவும் ஆனால் அவை அனைத்தும் கைவிடப்பட்டதாகவும் நடிகர் கலையரசன் கூறியுள்ளார். திருக்குமரன் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சிவி வி குமார் தயாரிக்கும் படம் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’. அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கலையரசன் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ஆனந்தி, ஹரிகிருஷ்ணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைராஸால் ஜப்பானில் ஒலிம்பிக் ரத்தாகுமா?

சீனாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைராஸால் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி ரத்தாகுமா அல்லது தொடருமா என்பது குறித்து சர்வதேச டோக்கியோ ஒலிம்பிக்கின் முதன்மை அலுவலர் தோஷிரோ முடோ கூறியுள்ளார். சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 24,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோரை முழுமையான பரிசோதனை செய்த பிறகே, அனுமதித்து வருகின்றனர். கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனாவில் […]

Categories
தேசிய செய்திகள்

நெகிழியை 100 % ஒழிக்கும் நோக்கில் களத்தில் ஒரு இளைஞர் !

நாடே நெகிழி பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள சூழலில் நெகிழியை 100 % விழுக்காட்டளவில் முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் ஒரு இளைஞர் களமிறங்கி சாதித்துக் காட்டியுள்ளார். மக்கள் மத்தியில் கண்ணுக்கு தெரிந்தும் குறைக்க முடியாத அளவுக்கு இழையோடி இருக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தனி ஒரு மனிதனாக அவ்விளைஞர் எதிர்கொண்ட அனைத்து இடர்களுக்கும் சேர்த்தே இறுதி வெற்றியை அடைந்துள்ளார். நெகிழியால் தயாரிக்கப்படாத (பிளாஸ்டிக் அல்லாத) யுபிஐ அடிப்படையிலான கிரெடிட் கார்டுகள், அவரது கடின உழைப்பின் விளைவாய் […]

Categories
மாநில செய்திகள்

கோவை லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் குடமுழுக்கு – ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

உக்கடம் ஒப்பணக்கார வீதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த லட்சுமி நரசிம்மர் கோவிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக நேற்று நடைபெற்றது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவை லட்சுமி நரசிம்மர் திருகோவிலில் குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் இரவு முதல் யாக வழிபாடுகள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை பொதுமக்கள் முன்னிலையில் திருக்கோவில் கலசத்திற்கு சிறப்பு வழிபாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க சர்வதேசத் தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா !

சர்வதேசத் தரத்தில் தலைவாசலில் அமையவுள்ள கால்நடை பூங்கா தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்குமென கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலத்தை அடுத்துள்ள தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தை வருகிற 9ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவுள்ளார். இந்த விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை கால்நடை துறை […]

Categories
மாநில செய்திகள்

ரத்தானது பொதுத் தேர்வு – குதூகலத்தில் மாணவர்கள்..!

5,8ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படவிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழ்நாடு கல்வித்துறை கடந்த செப்டம்பர் மாதம் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாம் பருவத் தேர்வுகள் முடிந்த நிலையில், இந்த அறிவிப்பானது மாணவர்களிடையே பயத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நேற்று 5,8ஆம் வகுப்புகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பொருளாதார வீழ்ச்சிக்கு சிதம்பரம் சொல்லும் 3 காரணங்கள்..!!

பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, வங்கித்துறையை முடக்கிவைத்துள்ள காரணங்களாலேயே நாட்டின் பொருளாதாரம் இத்தகைய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அன்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை, நாட்டின் பொருளாதாரம் குறித்து டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் உரையாற்றினார். இந்த உரையில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு 3 முக்கிய காரணங்களை முன் வைத்தார். அபத்தமான முடிவான பணமதிப்பு நீக்கம், தவறான வழியில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

57 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேசிய போட்டிகள்!

57 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தேசிய விளையாட்டு போட்டிகள் மேற்கு வங்கத்தில் வரும் 2022இல் நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே, இந்தியா 1920லிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியது. இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை மேம்படுத்தும் வகையில் 1924இல் முதல் தேசிய விளையாட்டு போட்டி லாகூரில் நடைபெற்றது. அதன்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தொடரானது இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டுவந்தது. 1924 முதல் 1928வரை நான்கு முறை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மாலத்தீவில் பானிப்பூரி விற்கும் தோனி!

மாலத்தீவில் தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஆர்.பி.சிங்கிற்கு பானிப்பூரி பரிமாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த தோனி, இந்திய அணிக்காக களமிறங்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவருகிறார். இதனால், இந்திய அணி விளையாடும் போட்டிகளில் மிஸ் யூ தோனி என்ற பேனருடன் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் ரவுடியைக் கொன்று காவலர் குடியிருப்பு அருகே வீசிச் சென்ற நபர்கள்!

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜெயபாலை கொலை செய்து கோரிமேடு காவலர் குடியிருப்பு அருகே மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். கோரிமேடு பகுதியில் உள்ள தீயணைப்புத்துறை அதிகாரிகள் குடியிருப்பு அருகேயுள்ள காலி இடத்தில், குப்பை அகற்றும் தொழிலாளி ஒருவர், இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவலளித்தார். உடனே அங்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் மேட்டுப்பாளையம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பதும், அவர் […]

Categories
மாநில செய்திகள்

‘நிதி அதிகாரத்தில் தனக்கே பெரும் பொறுப்பு’ – ஆளுநர் கிரண்பேடி

அரசின் நிதி அதிகாரத்தில் தனக்கும் பெரும் பொறுப்பு உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி நிகழ்வுகள் மற்றும் மக்கள் குறைகேட்பு குறித்த செய்திகள் ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புத்தகம் வெளியிட்டு வருகிறார். அதன்படி கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்புகளை உள்ளடக்கிய புத்தகத்தை, ஆளுநர் நேற்று  வெளியிட்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில், புத்தகத்தினை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பெற்றுக் கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராம்சரண் – ஜூனியர் என்.டி.ஆரின் ‘RRR’ வெளியாகும் தேதி – படக்குழுவின் புதிய அப்டேட்

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘RRR’படம் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பாகுபலி 2’ படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கிவரும் படம் ‘RRR’. அல்லூரி சீத்தாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் விடுதலை போராட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிவரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அஜய் தேவ்கான், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து”… வரவேற்பு தெரிவித்த தனுஷ்..!!

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் தனுஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.  இந்த விவகாரத்தில் அரசின் முடிவுக்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த முடிவை அரசு திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]

Categories

Tech |