Categories
மாநில செய்திகள்

BREAKING : 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி

5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என கடந்த ஆண்டு 2019 செப்டெம்பர் 13-ஆம் தேதி பள்ளி கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் ஒரு வித அச்சத்தில் இருந்து வந்தனர். இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஹெட்மயர், லூவிஸ்!

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஹெய்மயர், லூவிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. தற்போது அந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் யாரும் எதிர்பாராத வகையில் இளம் வீரர்களான லூவிஸ், ஹெட்மயர் இருவரும் நீக்கப்பட்டு, அனுபவ வீரர் டேரன் பிராவோ, போவ்மன் போவல் ஆகியோர் தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: இன்று வெளியாகிறது ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கை!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி, இன்று வெளியிடவுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 70 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டுள்ள தேசிய தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கடும் முனைப்பில் உள்ளன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு ஏற்கனவே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி இன்று தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தல் : வெற்றி பெற்றது யார்?… கருத்துகணிப்பு வெளியீடு..!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 54 முதல் 60 இடங்களைகைப்பற்றக்கூடும் என்று கருத்து கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லி சட்டசபைக்கு வருகின்ற 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் யார் மகுடம் சூடப்போகிறார்கள் என்பது 11 ஆம் தேதி தெரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் பதவியேற்பு..!!

அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்து பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக உள்ள ஹர்ஷவர்தன் சிறிங்கலா (Harsh Vardhan Shringla) வெளியுறவு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்துவின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தரண்ஜித் சிங் சந்து வாஷிங்டனில் உள்ள தனது அலுவலகத்தில், இன்று பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து நாளை மறுநாள், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தரண்ஜித் சிங் சந்தித்து, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

10,00,000 ரூபாய் வரை கையாடல்… நகராட்சி பெண் கணக்காளர் பணியிடை நீக்கம்..!!

மன்னார்குடி நகராட்சி பெண் கணக்காளர் வங்கி காசோலையில் போலி கையெழுத்து போட்டு, 10 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் 2 ஆண்டுகளாக கணக்காளராக சரஸ்வதி என்ற பெண் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் 29-ஆம் தேதி 2, 50, 000 ரூபாய் மதிப்பிலான நகராட்சி காசோலையை பணமாக மாற்றி கொண்டு வருமாறு உதவியாளரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.அவரும் அந்தக் காசோலையை கொண்டு சென்று […]

Categories
உலக செய்திகள்

டெக்சாஸ் பல்கலைகழக விடுதியில் துப்பாக்கி சூடு…. 2 பெண்கள் பலி…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. நாளுக்கு நாள் இந்த கலாச்சாரம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. அந்த வகையில், டெக்ஸாஸ் மாகாணத்தின் காலேஜ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள ஏ அண்ட் எம் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல்கலைக் கழக விடுதிகளில் ஏராளமான மாணவர்கள் தங்கியுள்ள நிலையில், திடீரென பயங்கரமாக துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கென்யாவில் 14 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு… தொடரும் துயர சம்பவம்..!!

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்தனர். கென்யாவின் மேற்கு பகுதியில் இருக்கும் ககமிகா நகரில் தொடக்கப் பள்ளி ஓன்று உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியே வந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பலர் ஒருவர் மீது மற்றவர் விழுந்ததில் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு 14 குழந்தைகள்  […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

ஏழு விருதுகளை அள்ளிய ‘1917’ திரைப்படம் – குவியும் பாராட்டுகள்..!!

‘1917’ திரைப்படம் பாஃப்டாவில் ஏழு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. 73ஆவது பிரிட்டிஷ் திரைப்பட அகாடமி (பாஃப்டா) விருது வழங்கும் விழா லண்டனில் உள்ள, ராயல் ஆல்பர்ட் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரை மையமாக வைத்து வெளியான ‘1917’ திரைப்படம் ஏழு பிரிவுகளின் கீழ், பாஃப்டாவில் விருதுகளை வென்றுள்ளது. இந்த ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அப்துல் காலிக்’கின் ‘மாநாடு’… கதாபாத்திரத்தின் பெயரை வெளியிட்ட வெங்கட் பிரபு..!!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள ‘மாநாடு’ படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயரை வெங்கட் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப் பின் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருந்த சிம்பு, விரைவில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், கல்யாணி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் ஜோடி சேரும் அழகுப்பதுமை ‘ராஷ்மிகா மந்தனா’?

சூர்யாவின் அடுத்தப் படத்தில், நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தை, சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கோடை விடுமுறைக்குப் படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சூர்யா, ஹரி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதல்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

திகில் கிளப்பும் பூட் பட ட்ரெய்லர்!

விக்கி கவுஷல் ஹீரோவாக நடித்துள்ள பூட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பிரதாப் சிங் பானு இயக்கத்தில் விக்கி கவுஷல், பூமி பெட்னேகர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் பூட். இப்படத்தை தர்மா புரொடக்‌ஷன் சார்பில் கரண் ஜோகர், அபூர்வா மேத்தா , சஷாங்க் கைதன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. தகவல் சேகரிப்பாளராக நடிக்கும் விக்கி, மர்மம் நிறைந்த கப்பலுக்குள் ஒரே ஒரு விளக்கை மட்டும் எடுத்துக்கொண்டு செல்கிறார். அப்போது ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு முடியும் முன்பே விமல் படத்தின் முதல் பாடல் வெளியாகிறது!

விமல் நடித்து வரும் சோழ நாட்டான் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் விமல் வரலாற்று கதைக்களத்தில் நடித்துவரும் படம் சோழ நாட்டான். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதையில் விமல் நடிக்கும் முதல் படம் ‘சோழ நாட்டான்’ ஆகும். இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சத்தியமங்கலம், மலைப்பகுதிக்கு செல்லவுள்ளனர். இதையடுத்து தஞ்சாவூர், ஹைதராபாத், வைசாக் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டிலை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்..!!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்தப் படத்தின் டைட்டிலை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜார்னரில் உருவாகி வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு நேற்று மாலை 5 மணிக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்தியிலும் கலக்க உள்ள ‘கைதி டில்லி’ – விரைவில் அறிவிப்பு..!!

கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த கைதி திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. தீபாவளி ரேஸில் ‘பிகில்’ படத்துடன் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியப் படம் ‘கைதி’. கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது, பாட்டு கிடையாது. ஆனால், இவற்றை போக்கும் விதமாக அதிரடி ஆக்‌ஷன், சென்டிமென்ட் என தனது அற்புதமான நடிப்பால், ஸ்கோர் செய்து ‘டில்லி’ கார்த்தி கைதட்டல் வாங்கினார். ‘மாநகரம்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹர்பஜன் சிங்குடன் ‘பிரண்ட்ஷிப்’ ஆக ஜோடி சேரும் லாஸ்லியா!

ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லாஸ்லியா நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகக் களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாகவும் வலம் வரத் தொடங்கிவிட்டார். முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

திடீரென்று மாற்றப்பட்ட அஜய் தேவ்கனின் ‘மைதான்’ பட ரிலீஸ் தேதி!

‘மைதான்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘தனாஜி’ படத்தைத் தொடர்ந்து அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மைதான்’. அமித் ரவீந்திரநாத் இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புரோஜக்ட்ஸ், ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகிவரும் இப்படத்தில் சயத் அப்துல் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காக்டெய்ல்’ முருகனை அவமானப்படுத்தும் படம் இல்லை’ – மறுப்பு தெரிவித்த இயக்குநர்..!!

நாங்கள் வழிபடும் கடவுளை, நாங்களே எப்படி தவறாக சித்தரிப்போம்’ என காக்டெய்ல் பட இயக்குநர் விஜய முருகன் தெரிவித்துள்ளார். ‘காக்டெய்ல்’ பட கதைப்படி முருகன் சிலை, ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விஜயமுருகன் தெரிவித்துள்ளார். பி.ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பில் அறிமுக இயக்குநர் விஜயமுருகன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் ‘காக்டெய்ல்’. யோகிபாபுவுடன் ரமேஷ், மிதுன் மற்றும் ‘விஜய் டிவி கலக்கப்போவது யாரு’ புகழ் பாலா, குரேஷி, […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிக்கிறது – சிவ சேனா குற்றச்சாட்டு

எல்ஐசி, ஐடிபிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சி செய்துவருவதன் மூலம் மத்திய அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பது தெரியவருகிறது என சிவசேனா குற்றஞ்சாட்டியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது எல்ஐசி நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஐடிபிஐயில் மத்திய அரசின் மீதமுள்ள பங்குகளும் விற்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். இது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

Categories
தேசிய செய்திகள்

வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இந்திய அரசு படுதோல்வி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இளைஞர்களுக்கு வேவைவாய்ப்பை உருவாக்கித் தருவதில் மத்திய அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில், வேலைவாய்ப்புகள் குறித்த பெரிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்கள் சார்பாக நான் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சக் கூடாது. இளைஞர்களுக்கு நீங்கள் பதிலளித்தே ஆக வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

‘பொருளாதாரம் மந்த நிலையில் இல்லை’ – இணை நிதியமைச்சர் நம்பிக்கை..!!

பொருளாதாரம் மந்த நிலையை அடையவில்லை என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்திய இணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் நம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார். சர்வதேச அமைப்புகளின் கூற்றுப்படி இந்திய பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய இணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூர், “உலகின் வளர்ச்சியடையும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2020-21 ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.8ஆக இருக்கும் எனவும் 2021-22 ஆண்டில் சீனாவை முந்தி 6.5 விழுக்காடு வளர்ச்சியை சாத்தியப்படுத்தும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை… சிறுவர்கள் உட்பட மூவர் கைது..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 வயது சிறுமியை  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணவன் மனைவி இருவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 10 வயது மகன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

வேட்டையாடவும் தெரியும்… ஒதுங்கி போகவும் தெரியும்… பெண் சிங்கம் செய்த செயல்… வைரலாகும் வீடியோ..!!

கிர் சரணாலயத்தின் வெளிப்புற பகுதியில் பெண் சிங்கம் மற்றும் அதன் குட்டிகள்  பைக்கிற்கு வழிவிட்டு நிற்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் பர்மல் நத்வானி ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், குஜராத் மாநிலம் கிர் சரணாலயத்தின் வெளிப்புறத்தில் ஒரு சிறிய பாதையில் செல்லும் தாய் சிங்கத்தை பின் தொடர்ந்து 2 சிங்க குட்டிகள் செல்கின்றன. அப்போது திடீரென அவ்வழியில் இருசக்கர வாகனம் ஓன்று வருகிறது. அதில் இருவர் இருந்தனர். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டல் காரனுடன் மனைவி பலமுறை…. எச்சரித்த கணவன்… பாபநாசம் பட ஸ்டைலில் போட்டு தள்ளிய சம்பவம்..!!

 நாக்பூரில் பாபநாசம் பட பாணியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஓராண்டுக்கு பின் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் கப்சி பகுதியில் லல்லு ஜோகேந்திரசிங் தாக்கூர் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். அதே பகுதியில் பங்கஜ் திலிப் கிரம்கர் என்பவரும் வசித்து வந்தார். இந்தநிலையில் தாகூருக்கும், கிரம்கர் மனைவிக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி பங்கஜ் மனைவி ஹோட்டலுக்கு சென்று வந்ததால் இந்த உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக […]

Categories
தேசிய செய்திகள்

குடியிருப்பில் புகுந்த 3 மலை பாம்புகள்… அதிரடியாக மீட்ட மீட்புக்குழுவினர்..!!

மும்பையில் அடுத்தடுத்து 3 மலைப் பாம்புகளை பிடித்த மீட்புக்குழுவினர், அவற்றை பைகளில் அடைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர். மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை பாந்த்ரா நகர் அடுத்துள்ள காலா நகர் பகுதியில், மலைப்பாம்பு ஓன்று புகுந்து விட்டதாக 12.30 மணியளவில் அழைப்பு வந்தது. இதையடுத்து உடனே அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், சாமர்த்தியமாக சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அடுத்த ஒரு மணி நேரம் கழித்து மற்றொரு இடத்திலிருந்து அழைப்பு வர, அங்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவை விரட்டும் ரங்கூன் மல்லி?… படையெடுத்த சீன மக்கள்… எச்சரித்த பீப்பிள்ஸ்..!!

சீனாவில் ரங்கூன் மல்லி கொரோனாவை கட்டுப்படுத்தும் என அந்நாட்டு மக்கள் வேகமாக படையெடுத்து அந்த மருந்தை வாங்க படையெடுத்தனர். கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இவள் ஒரு சூனியக்காரி… முத்திரை குத்தப்பட்ட மூதாட்டி கின்னஸில் இடம்பெற்று சாதனை…!!

ஒடிசா மாநிலத்தில் சூனியக்காரி என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட மூதாட்டி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது வியப்படைய வைத்துள்ளது. பொதுவாக  கின்னஸ் சாதனையில் இடம்பிடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. கின்னஸில் இடம் பிடிக்க பலருக்கு ஆசை இருக்கும். ஆனால் அதற்கு  நம்மிடம் ஏதாவது திறமை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஒரு சிலர் தங்களது திறமையை பயன்படுத்தி கின்னஸில் இடம் பிடித்துள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் ஒருவர் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒடிசா மாநிலம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு : 15 பேருக்கு என்ன தீர்ப்பு ?

அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்று திறனாளியான 12 வயது சிறுமி தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி இந்த சம்பவம் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து, தமிழகத்தையே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..!!

அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்று திறனாளியான 12 வயது சிறுமி தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி இந்த சம்பவம் சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு பயப்படாமல்… சீன பெண்ணை திருமணம் செய்த இந்தியர்..!!

சீனாவில் கொரானா வைரஸ் பரவி வரும் அதே வேளையில் அந்நாட்டை சேர்ந்த தனது காதலியை திட்டமிட்டபடி மத்திய பிரதேச இளைஞர் கரம் பிடித்து பாராட்டை பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் மாண்ட்சரை சேர்ந்தவர் சத்யார்த் மிஸ்ரா. இவரும் சீனாவை சேர்ந்த ஷிகாகோவும் கனடாவில் ஒன்றாகப் படிக்கும்போது காதல் வயப்பட்டுள்ளனர். பின் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சீனாவில் பூதாகரமாக கொரானா வைரஸ் பரவத் தொடங்கி பல நாடுகளுக்கு பரவி […]

Categories
உலக செய்திகள்

புனித எண்ணெய்… யார் தொடுகிறீர்களோ அவங்களுக்கு நோய் வராது… ஏமாந்து போன 20 பேர் பரிதாப மரணம்..!!

தான்சானியாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தான்சானியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் கிளிமாஞ்சாரோ பிராந்தியம் உள்ளது. இந்த பிராந்தியத்தில் தான் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம், வாம்போசா என்ற நபர் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தியபின், கையில் இருக்கும்  குடுவையில் புனித எண்ணெய் இருப்பதாக கூறிவிட்டு, அதனை தரையில் ஊற்றினார். பின்னர் அந்த எண்ணெய்யை யாரெல்லாம் தொடுகிறார்களோ அவர்களுக்கு இருக்கும் நோய்கள் அனைத்தும் குணமாகும் என்று கூறியுள்ளார். அவர் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை மிரட்டி விட்டு… கிழக்கு ஆப்பிரிக்காவில் முகாம்…. வெட்டுக்கிளிகளால் வேதனையடையும் மக்கள்..!!

70 ஆண்டுகளில் இல்லாத வகையில், வெட்டுக்கிளிகள் கூட்டம் பாகிஸ்தானைத் தொடர்ந்து  கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் படையெடுத்து சென்று வேளாண் பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகளையெல்லாம்  சிறிய ரக விமானங்கள் மூலம், பூச்சிமருந்து தெளித்து விரட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை பார்க்கும் போது நமக்கு கண்டிப்பாக நியாபகம் வருவது சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “காப்பான்” படம் தான். அந்த படத்தில் வில்லன் தரப்பில் இருந்து, வெட்டுக்கிளிகளை வளர்த்து ஏவி, வேளாண் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் பொதுமக்களை கத்தியால் தாக்கிய நபர் சுட்டுக்கொலை..!!

இங்கிலாந்தின் லண்டன் ஸ்ட்ரீதம் (Streatham) பகுதியின் வீதியில் செல்லும் பொதுமக்களை சரமாரியாகக் கத்தியால் தாக்கிய நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்ட்ரீதம் பகுதியில் மதியம் 2 மணிளவில் ஒருவர் கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்காட்லாந்து காவல் துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வில்லியம்சனுடன் நேரம் செலவிட்டதை வாழ்வில் மறக்கமுடியாது…!

நியூசிலாந்து அணியை வழிநடத்துவதற்கு வில்லியம்சனே சரியான நபர் என்றும், அவருடன் செலவழித்த நேரங்களை வாழ்வில் எப்போதும் மறக்கமுடியாது எனவும் இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. ஐந்தாவது டி20 போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் போட்டியில் களமிறங்காமல் ஓய்வில் இருந்தனர். இதனால் நியூசிலாந்து பேட்டிங்கின்போது விராட் – வில்லியம்சன் இருவரும் […]

Categories
மாநில செய்திகள்

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – யாரும் பயப்பட வேண்டாம்… பள்ளி கல்வி ஆணையர்..!!

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயப்படத் தேவையில்லை என்று பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் ஒரு வித அச்சத்தில் இருக்கின்றனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பொதுத்தேர்வால் இடை நிற்றல் அதிகரிக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். அதே […]

Categories
மாநில செய்திகள்

‘5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இடைநிற்றலை அதிகரிக்கும்’ – ஆதவன் தீட்சண்யா எச்சரிக்கை.!!

தமிழ்நாட்டில் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை கொண்டுவந்தால், பள்ளியில் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதவண் தீட்சண்யா எச்சரித்துள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குன்னுாரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி..!!

குன்னுாரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 250 நாய்கள் கலந்துகொண்டன. நீலகிரி மாவட்டம் குன்னுாரிலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கெனல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு முன்னதாக காவல் நிலையம், ராணுவம், ரயில்வே காவல் நிலையம் ஆகியவற்றில் குற்றங்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும் ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. மேலும் உள்நாட்டு வகையான ராஜபாளையம், கோம்பை, காரவன்ஹவுண்ட், ராம்பூர்ஹவுண்ட், வெளிநாட்டு வகையான டாபர்மேன், பீகிள், இங்கிலீஷ் பாய்ன்ட்டர், கோல்டன் ரீட்ரைவர், பீகிள்ஸ், பிரேசிலியன், மஸ்தீப் உள்பட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா படைத்த சாதனைகள்!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேஎல் ராகுல் 45 ரன்கள் விளாசியதையடுத்து, இருதரப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு  எதிராக நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டனாகச் செயல்பட்டார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 45 ரன்களை […]

Categories
உலக செய்திகள்

தாயானார் கிரிம்ஸ் – மகிழ்ச்சியில் எலான் மசுக்..!!

பிரபல தொழிலதிபரான எலான் மசுக்கின் காதலி கிரிம்ஸ் தான் கர்ப்பம் தரித்திருப்பதாக தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான எலான் மசுக்கின் காதலி கிரிம்ஸ்( 31 ). கனடா பாடகியான இவர், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தான் கர்ப்பம் தரித்ததை போல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்த பதிவுகள் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வெளியிட்ட இன்ஸ்ட்கிராம் பதிவில் தான் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடுங்க”… ‘கொரோனா வராது… காரைக்குடி உணவகத்தின் ஸ்பெஷல்..!!

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இங்கு சமைக்கப்படும் ‘சின்ன வெங்காய ஊத்தப்பம்’ சாப்பிடுங்கள் என்று தனியார் உணவகம் ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#D43 அப்டேட்: ‘கர்ணன்’ தனுஷ்…’மாஃபியா’ கார்த்திக் நரேன்…’அசுரன்’ ஜிவி பிரகாஷ்

இயக்குநர் கார்த்திக் நரேன் தனுஷை வைத்து #D43 படத்தை இயக்கவிருப்பதாக அதிகராப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சுருளி’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என பிஸியாக இருக்கிறார். இதனையடுத்து தனுஷின் 43ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிகமாக ‘#D43’ என தலைப்பு வைத்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘பிரம்மாஸ்திரா’ வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

இயக்குநர் அயன் முகர்ஜியின் கனவுப்படமான ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலீயா பட், மௌனி ராய், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘பிரம்மாஸ்த்ரா’. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்குகிறார். நடிகை யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், அபூர்வா மேத்தா, நமித் […]

Categories
மாநில செய்திகள்

அயனாவரம் பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 15 பேருக்கு இன்று தண்டனை அறிவிப்பு..!!

அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்று திறனாளியான 12 வயது சிறுமி தொடர்ந்து பல நாட்கள் மற்றும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி இந்த […]

Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு

பிரண்ட்ஷிப் – ஹீரோவாக களமிறங்கும் ஹர்பஜன் சிங்..!!

பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பிரபல இந்திய கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார். முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் – சாம் […]

Categories
மாநில செய்திகள்

நானும் பாக்ஸர்தான்… கோச்சை வெளுத்து வாங்கிய அமைச்சர்..!!

குத்துச்சண்டை போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பாக்சிங் செய்து அசத்தியுள்ளார். தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், குத்துச்சண்டை வீரருடன் பாக்சிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். பாக்ஸர் கோச்சுடன் சிறிது நேரம் சண்டையிட்டு அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்தார். மேலும் ‘கையை அப்டி வெக்கக் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கலக்கலான டிரெஸ்ஸில் கார்த்திக் ஆரியனுடன் வலம்வந்த கரீனா கபூர்

வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா ஏற்பாடு செய்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கரீனா கபூர், கார்த்திக் ஆரியனுடன் கலந்துகொண்டார். பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் தன்னுடைய உடல்தோற்றத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். இவர் பிரசவத்திற்குப் பிறகு எடை அதிகரித்திருந்தார். இவரின் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. https://www.instagram.com/p/B8DtQR1HOj3/?utm_source=ig_web_button_share_sheet இந்நிலையில் வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா ஏற்பாட்டில் பேஷன் ஷோ நிகழ்ச்சியொன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரீனா கபூர், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் வெட்டிக் கொலை; ஓசூரில் பரபரப்பு..!!

ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர்என்பவரை அடையாளம் தெரியாக நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர் என்பவரை காமராஜ் நகர் விளையாட்டு மைதானத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், வெட்டி சாய்த்தனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சூளகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 2014ஆம் ஆண்டு ஓசூரில் பிரபல ரவுடி ஜான் பாஷா ரயில் நிலையத்தில் நடைபயிற்சி சென்றபோது […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெண் நடன இயக்குநர் மீது அவதூறு வழக்கு – கணேஷ் ஆச்சார்யா..!!

நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா மீது பெண் நடன இயக்குநர் அவதூறு வழக்கு பதிந்துள்ளதாக கணேஷ் ஆச்சார்யாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடன ஆசிரியராக வலம்வருபவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் மீது இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குநர்கள் சங்கத்தில் 33 வயது உள்ள ஒரு பெண் நடன ஆசிரியைப் புகார் ஒன்று கொடுத்துள்ளார். கணேஷ் ஆச்சார்யா தன்னை ஆபாச விடியோ பார்க்கச் சொல்வதாகவும், தனது சம்பளத்தில் பாதியை தரகுத் தொகையாகக் கொடுக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

‘கொரோனாவா… எங்களுக்கா…!’ – மானேசரி முகாமில் மாணவர்கள் கும்மாளம்… வைரலாகும் வீடியோ..!!

கொரோனா வைரஸின் எதிரொலியாக சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள், தங்களுக்கென்று இந்திய ராணுவத்தின் சார்பில் ஒதுக்கப்பட்ட தனி முகாமில் ஆடி, பாடி மகிழ்ந்த காணொலி தற்போது வைரலாகிவருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் என்னும் தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில், கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் இந்தியர்களை வெளியேற்ற சீனா அரசிடம் இந்திய வெளியுறவுத் துறை அனுமதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே ஓவரில் 6, 6, 4, 1, 4nb, 6, 6…. சாதனைப் படைத்த சிவம் தூபே… கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!!

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின்போது, இளம் வீரர் சிவம் தூபே வீசிய 10ஆவது ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையைப் படைத்தார். நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து, 163 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி ஒன்பது ஓவர்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் 10ஆவது ஓவரை வீசுவதற்காக […]

Categories

Tech |