Categories
சினிமா தமிழ் சினிமா

‘சாதியைச் சொல்லி படம் எடுப்பவர்களை செருப்பால் அடிப்பேன்’ – இயக்குநர் தருண் கோபி..!

சாதியைச் சொல்லி படம் எடுப்பவர்களை செருப்பால் அடிப்பேன் என இயக்குநர் தருண் கோபி கூறியுள்ளார். இயக்குநர் மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ‘புறநகர்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் அபி சரவணன், ஸ்டண்ட் கலைஞர் ஜாகுவார் தங்கம், படத்தின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களை சேதப்படுத்திய வனத்துறையினர், தரையில் விழுந்து கதறிய மக்கள்!

சேலம் அருகே வனத்துறையையொட்டி உள்ள பகுதியில் வசித்து வந்த மக்களை வனத்துறையினர் கட்டாயமாக வெளியேற்றி, அவர்களது வீடுகள், விவசாய நிலங்களை சேதப்படுத்தியது தொடர்பாக மாவட்ட சார்பு நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையின்போது பாதிக்கப்பட்ட மக்கள் தரையில் விழுந்து கதறி அழுததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரால்நத்தம் ஊராட்சியில், ஜல்லுத்துமலை அடிவாரப் பகுதியில் வனத்துறையையொட்டி உள்ள பகுதியான சூரியூர் என்ற இடத்தில் மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த மக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஒரு கை ஓசை’ படத்திலேயே சாதியை எதிர்த்தேன் – இயக்குநர் கே. பாக்யராஜ்..!!

சிறுவயதில் தான் கண்ட சாதி தீண்டாமையை பார்த்து ‘ஒரு கை ஓசை ‘படத்தில் சாதியை எதிர்த்துள்ளதாக இயக்குநர் கே. பாக்யராஜ் கூறியுள்ளார். மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ‘புறநகர்’. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன் , இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் அபி சரவணன், சண்டைக் கலைஞர் ஜாகுவார் தங்கம், படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நன்றியை எதிர்பார்த்து சினிமா தொழில் செய்ய முடியாது – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..!!

நான் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகும் பல கதாநாயகர்கள் என்னிடம் படத்தைத் தர முன்வரவில்லை, நன்றியை எதிர்பார்த்து சினிமா தொழில் செய்ய முடியாது என்று இயக்குநர் ஆர்.வி உதயகுமார் கூறியுள்ளார். மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ‘புறநகர்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே. பாக்யராஜ் , தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர்கள் மன்சூர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள்..!!

அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி தொடர்ந்து பல நாட்கள் மற்றும் பலமுறை சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்த வழக்கில் குடியிருப்பின் லிப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ்  கைது […]

Categories
பல்சுவை

BREAKING : தங்கம் விலை கிடு கிடு உயர்வு… வாடிக்கையாளர்கள் கவலை..!!

இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர் தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தொடர்ச்சியாக தங்கத்தின் விலை ஏற்றம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியர்களை மீட்க 2-ஆவது ஏர் இந்திய விமானம் பிற்பகல் 12: 50 மணிக்கு சீனா செல்கிறது..!!

கொரோனா பரவியுள்ள சீனாவுக்கு இந்தியர்களை மீட்க இரண்டாவது ஏர் இந்திய விமானம் பிற்பகல் 12: 50 மணிக்கு செல்கிறது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அஜித்தை நாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சிரமத்தில் இருக்கிறார்’

அஜித்தை நாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் தற்போது சிரமத்தில் இருப்பதாக, தயாரிப்பாளர் கே. ராஜன் கூறியுள்ளார். மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ‘புறநகர்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே. பாக்யராஜ் , தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர்கள் மன்சூர் அலிகான், அபி சரவணன், சண்டை கலைஞர் ஜாகுவார் தங்கம், படத்தின் கதாநாயகன் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஸ்விங்கத்துக்கு தடை விதிக்கும் திட்டமில்லை’ – ஹர்ஷவர்தன்.!

ஸ்விங்கத்துக்கு தடைவிதிப்பது குறித்த திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய சுகாதரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். கேரள மக்களவை உறுப்பினர் முகம்மது பஷீர், ஸ்விங்கத்துக்கு (chewing gum) தடைவிதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அதுமாதிரியான திட்டம் ஏதும் இல்லை என்று கூறியிருக்கிறார். வணிக வளாகங்கள் தொடங்கி கிராமப்புறங்களிலுள்ள பெட்டிக்கடைகள் வரை தடையின்றி கிடைக்கும் ஸ்விங்கத்தை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி வாங்கி சுவைக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

கோடைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது – அமைச்சர் தங்கமணி உறுதி!

தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முதற்கூட்டம் நேற்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மின்சாரத் துறைஅமைச்சர் தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுடன் நாமக்கல் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடினர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

‘வி.ஏ.ஓ. என்றால் வெட்டி ஆபிஸர்’ – கொந்தளித்த விவசாயி!

விஏஓ என்றால் வெட்டி ஆபிசர் என்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசியதை கேட்ட அலுவலர்கள் ஆத்திரமடைந்து விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளின் குறை தீர்ப்புக் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகள் அளிக்கும் புகார் மற்றும் குறைகளைக் கேட்டு உரிய நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

இமய மலைப்குதியில் முதல் பயோடீசல் ராணுவ விமானம்!

இரு இன்ஜின்களும் பயோடீசலில் இயங்கும் முதல் ஏ.என். 32 ராணுவ விமானம் காஷ்மீரின் லே விமான தளத்திலிருந்து புறப்பட்டது. இந்திய விமானப் படை சமீப காலங்களில் பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறது. இந்திய விமானப் படையின் மற்றொரு சாதனையாக இன்று பயோடீசலில் இயங்கும் ஏ.என். 32 ரக ராணுவ விமானம், உலகில் மிக உயரத்தில் இருக்கும் விமான தளமான காஷ்மீரின் குஷோக் பாகுலா ரிம்போச்சி விமான தளத்திலிருந்து புறப்பட்டது. கடல்மட்டத்திலிருந்து லே பகுதி சுமார் 10,682 அடி உயரத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாண்டிங், வார்னே, அக்ரம்… இப்போது பிரையன் லாரா.., கலக்கவிருக்கும் புஷ்ஃபயர் கிரிக்கெட்!

ஆஸ்திரேலியக் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியளிப்பதற்காக நடக்கவிருக்கும் புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டியில் பிரையன் லாரா களமிறங்கவுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் சார்பாக புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதில் பாண்டிங் தலைமையிலான அணியும், வார்னே தலைமையிலான அணியும் ஆடவுள்ளன. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர், மைக் ஹஸ்ஸி, பிராட் ஹேடின், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஆடம் கில்கிறிஸ்ர், யுவராஜ் சிங், ஷேன் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வளர்ச்சி சார்ந்த பட்ஜெட், பொருளாதார ஆய்வறிக்கை சமிக்ஞை!

பொருளாதார ஆய்வுகளின் முன்னறிவிப்பு சமிக்ஞைகளை பார்க்கும்போது, 2020ஆம் ஆண்டு பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பொது பட்ஜெட் இது. முன்னதாக நேற்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கலானது. அந்த ஆய்வறிக்கையில், திருக்குறள் மற்றும் அர்த்தசாஸ்திரத்தின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. பொருள் சேர்த்தல் குறித்து திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவர் குரல் 754இல் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – வேறு வழியின்றி தயாராகும் மக்கள்..!!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு எதிர்ப்புகள் வலுத்தாலும், மத்திய அரசு இதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதால், வேறு வழியின்றி அதற்கான ஆவணங்களைப் பெற மக்கள் அரசு அலுவலகங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். முதன் முதலாக தேசிய அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 1872ஆம் ஆண்டும், பின்னர் ஒரே நேரத்தில் நாடு முழுமையாக ஒருங்கிணைந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்கும் […]

Categories
மாநில செய்திகள்

சுந்தரக்கோட்டையில் விழா: சசிகலா பராக்… பராக்…!

பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மூன்றாவது முறையாக பரோலில் வெளிவர உள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமாக டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டு சிறை தண்டனையை நிறைவுசெய்துள்ள அவருக்கு இன்னும் ஓராண்டு தண்டனை காலம் மீதம் உள்ளது. இதையடுத்து அவர் மூன்றாவது முறையாக பரோலில் வெளிவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் கொரோனா இல்லை – ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தகவல்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும், சீனாவில் இருந்து வருகை தந்த பெண்ணொருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பில் உள்ளார் என்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வரான ஜெயந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், ” பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமலா பால்…சிருஷ்டி டாங்கே…. இவர்கள் வரிசையில் ஆடையில்லாமல் நடித்தாரா ‘பப்ஜி’ ஐஸ்வர்யா தத்தா..!!

நடிகை ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் பப்ஜி படத்தின் ஒரு காட்சியில் ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு மக்களுக்கு மிகவும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தற்போது ‘தாதா 87’ பட இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு படக்குழு ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி)’ என்று பெயரிட்டுள்ளது. இப்படத்தில் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர். நடிகர் மொட்டை ராஜேந்திரன் குற்றப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்த லேடி சூப்பர் ஸ்டார் – ‘தலைவர் 168’ லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் தற்போது நயன்தாரா இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘தர்பார்’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்துள்ளார். ‘தலைவர் 168’ என்ற பெயரில் உருவாகிவரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்தின் விஸ்வாசம் திரைப்பட வெற்றிக்குப் பின் சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படமும் கிராமத்துக் குடும்ப பின்னணியில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அண்ணன் – […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குருவிகளைப் பாதுகாக்க ‘டகால்டி’ பார்க்கவந்த ரசிகர்களுக்கு இலவசக் கூண்டு – சந்தானம் ரசிகர்கள் அசத்தல்..!!

பறவைகளை அனைவரும் நேசிக்க வேண்டும் என்பதற்காகவும் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சிட்டுக்குருவி கூண்டுகளை இலவசமாக வழங்கியிருக்கும் நடிகர் சந்தானம் புதுச்சேரி ரசிகர் மன்றத்தினர், இதுவரை 10 ஆயிரம் கூண்டுகளை வழங்கியிருப்பதாகவும், மேலும் பறவைகளைப் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றனர். அழிந்துவரும் சிட்டுக்குருவி இனங்களைப் பாதுகாக்க நடிகர் சந்தானம் புதுச்சேரி ரசிகர் மன்றத்தினர் டகால்டி திரைப்படம் காணவந்த பொதுமக்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு இலவசமாக வழங்கினர். அவர்களின் இந்த வித்தியாசமான முயற்சியைக் கண்டு பொதுமக்கள் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஜாமியா துப்பாக்கிச் சூடு: குற்றவாளிக்கு 14 நாள்கள் காவல்!

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை, 14 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த கோபால் என்ற இளைஞர் ஒருவர் சுதந்திரம் தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக, அதிமுகவுடன் அமமுக போட்டிபோட முடியாது – திவாகரன்..!!

திமுக, அதிமுகவுடன் புதிதாக தொடங்கிய அமமுக போட்டிபோட முடியாது என்று திவாகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் இப்போதிருந்தே தேர்தலுக்கு தயாராகி வருகிறது.  அதேபோல டிடிவி தினகரனின் அமமுகவும் ஆட்சியை பிடிக்க மும்முரமாக தயாராகி வருகிறது. இந்தநிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். என்னுடைய கணக்கு என்றும் தப்பாது. வேரூன்றிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்..!!

தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்த போது 2011 முதல் 16 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 38 பேரிடம்  2 கோடியே 80 லட்சம் முறைகேடு செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வில் 39 புதிய தேர்வர்கள் பட்டியல் வெளியீடு..!!

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டு தரவரிசை பட்டியலில் இடம்பெற்று ரத்து செய்யப்பட்ட 39 தேர்வர்களுக்கு மாற்றாக, புதிய 39 பெயர் பட்டியலில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இளநிலை உதவியாளர், நில அளவையாளர், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை நடத்தியது. இதற்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 2019 நவம்பர் 12ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர்களுடன் தகாத உறவு… பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மீது சனம் ஷெட்டி போலீஸ் புகார்!

பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, நடிகை சனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தர்ஷன். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர், அந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் தான் டைட்டில் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் குறைவான வாக்குகள் பெற்றதால் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இவரும் நடிகை சனம் ஷெட்டியும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு…. மேலும் 4 பேர் கைது..!!  

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதிக்க்கப்பட்டு TNPSC அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் 14 பேரை கைது செய்துள்ள  நிலையில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. டிஎன்பிஎஸ்சி தட்டச்சராக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்குதண்டனை கிடையாது..!!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடித்தது செம லக்… தடம் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த அம்ரிதா ஐயர்!

தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை அம்ரிதா ஐயர் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் தடம். அருண் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் கோலிவுட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தமிழைத் தொடர்ந்து தடம் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகிவருகிறது. ‘ரெட்’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ராம் பொத்தினேனி நடிக்கிறார். கிஷோர் திருமலா இப்படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் ஏற்கனவே இப்படத்தில் நிவேதா தாமஸ், மாளவிகா சர்மா, […]

Categories
உலக செய்திகள்

‘என்னால் காத்திருக்க முடியாது’ – பில்கேட்ஸ் மகள்..!!

பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸின் மூத்த மகள் ஜெனிஃபர் கேட்ஸ், எகிப்து நாட்டின் குதிரைப் பந்தய வீரர் நயல் நாசருடன் திருமண நிச்சயம் செய்துகொண்டார். உலகறிந்த தொழிலதிபர் பில்கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதியின் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸுக்கு, அவரது சக குதிரைப் பந்தய வீரரும், எகிப்து நாட்டைச் சேர்ந்தவருமான காதலன் நயல் நாசருடன் (28) நிச்சயதார்த்தம் நடைபெற்றது.தனது நிச்சயதார்த்த வைர மோதிரத்தை அணிந்துகொண்டு, காதல் ஜோடிகள் இருவரும் மகிழ்ச்சியாக உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
தேசிய செய்திகள்

‘என்ட்ட கேக்காம குணாலுக்குத் தடை விதிச்சிருக்கக் கூடாது’ – இண்டிகோ கேப்டன்..!!

அர்னாபிடம் கேள்வி கேட்ட விவகாரத்தில் தன்னிடம் விளக்கம் கேட்காமல் குணாலுக்குத் தடை விதித்தது தனக்கு வருத்தமளிப்பதாக இண்டிகோ விமான கேப்டன் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். சமூக வலைதளம் முழுவதும் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் கம்ராதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார். இண்டிகோ விமானத்தில், மூத்தப் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியுடன் அவர் நடத்திய உரையாடல்தான் அதற்குக் காரணம். மும்பையிலிருந்து லக்னோவுக்குச் செல்லும் விமானத்தில் அர்னாப்பும் குணாலும் பயணம் செய்துள்ளனர். அப்போது அர்னாபிடம் சில கேள்விகளை முன்வைத்த குணால், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனா முன்னெச்சரிக்கையில் திருப்தி இல்லை – வில்லன் நடிகர் காட்டம்..!!

கேரளாவில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு சரியில்லை என்று பிரபல வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி குற்றஞ்சாட்டியுள்ளார். உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

டாப்சியின் ‘தப்பட்’ பட ட்ரெய்லர் வெளியீடு!

நடிகை டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள ‘தப்பட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகை டாப்சி சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் முல்க் திரைப்படத்தைத் தொடர்ந்து அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் ‘தப்பட்’. பூஷன்குமார், கிரிஷன் குமார், அனுபவ் சின்ஹா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் நேற்று இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானத்திற்கு டிஜிட்டல் கட்அவுட் வைத்த ரசிகர்கள்!

சந்தானத்தின் ‘டகால்டி’ பட ரிலீஸையொட்டி அவரது ரசிகர்கள் டிஜிட்டல் கட்அவுட் வைத்து அசத்தியுள்ளனர். காமெடியனாக இருந்து தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள சந்தானத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘தில்லுக்கு துட்டு 2’, ‘ஏ1’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வசூல் வேட்டையாடியது. இதற்கிடையே விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘டகால்டி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. முழுநீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகின்றன. இந்த நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி ஓவரில் சிக்சர் அடித்து வெற்றியைத் தேடிதந்த ஹர்மன்ப்ரீத்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடர் அடுத்த மாதம் தொடங்கயிருப்பதால், அதற்கு தயாராகும் விதமாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 மகளிர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓப்பனிங் இறங்கிய சஞ்சு… மிடில் ஆர்டரில் நியாயம் சேர்த்த மனீஷ்: நியூசி.க்கு 165 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 165 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் வெலிங்டனில் நான்காவது டி20 போட்டியில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே 3-0 என்று தொடரைக் கைப்பற்றியதால், இந்திய அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதேபோல் நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக வில்லியம்சன் விலகியதையடுத்து டேரில் மிட்சல் இடம்பெற்றார். இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : கொரோனா: ”சீனாவுக்கு மேலும் ஒரு விமானம்” இந்தியர்களை மீட்க நடவடிக்கை …!!

கொரானா வைரஸ் சீனாவை தாக்கியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை 1 விமானம் சென்ற நிலையில் இரண்டாவது விமானமும் செல்ல இருக்கின்றது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம்: தொடர் கண்காணிப்பில் 78 பேர்

சீனாவிலிருந்து தமிழ்நாடு வந்த 78 பேரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சீனாவிலிருந்து வந்த 78 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுசுகாதரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது, “கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி: தலைமை நீதிபதி வேதனை..!!

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது தீவினையானது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்.) பாதுகாப்பை சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் அமல்படுத்தக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தியாகிகள் நாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு தலைமை நீதிபதி சாஹி கடும் கண்டனம் தெரிவித்தார். இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஹரிபரந்தாமன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றது வேதனையளிப்பதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

‘மேல் சாதிக்கு அடங்கி நடப்பது’ – சவுக்கடி கொடுத்த கமல்ஹாசன்..!!

மேல் சாதிக்கு அடங்கி நடப்பதும், மேல் அதிகாரிக்கு அடங்கி நடப்பதும் வழிவழி வந்த பயத்தால் என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், இந்த குணாதிசயங்களில், எது ஒன்று சற்றே குறைந்தாலும், க்ஷேத்திரப்ரவேசத்திற்கு அருகதையற்றவனாகி விடுவான் ஒரு இந்தியன் என்று தெரிவித்துள்ளார். பிரபல இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுதியுள்ள Sebastian & sons என்கின்ற புத்தக வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள கலாக்ஷேத்ராவில் நடைபெற இருந்தது. இந்த விழாவுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அனுமதியை […]

Categories
மாநில செய்திகள்

ஒரே பாணியில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட மாமன், மச்சான்: புதுவையில் பதற்றம்..!!

அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி முன்னாள் கவுன்சிலரின் மைத்துனரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முன்னாள் கவுன்சிலர் வீரப்பனின் மைத்துனர் சாம்பசிவம் (35). தனது இல்ல திருமண நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டுக்குப் அழைப்பிதழ் கொடுக்க கிருமாம்பாக்கம் அரசுப் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி, பின் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகள் விற்பனை – மூவர் கைது..!!

கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த மூவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் ஆய்வாளர் ராஜசேகர், உதவி ஆய்வாளர் காதர் ஆகியோர் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கலையரங்கம் பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் லாட்டரி […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல ஐ.டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திடீர் ராஜினாமா..!!

பிரபல ஐ.டி.நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளில் இருந்து ஆபித் அலி திடீர் ராஜினாமா செய்துள்ளார். பிரபல ஐ.டி நிறுவனமான விப்ரோவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்தவர் ஆபித் அலி நீமுச்வாலா (Abidali Z. Neemuchwala). இந்நிலையில் இவர் திடீரென பதவி விலகியுள்ளார். இவர் தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகள் காரணமாக பதவி விலகுவதாக முடிவெடுத்துள்ளார் என்றும், புதிய நபர் பொறுப்பேற்கும் வரை ஆபித் அலி பதவிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

4-ஆவது டி20 போட்டி: ஹிட்மேன் கிடையாது… வெல்லுமா நியூசி… இந்திய அணி பேட்டிங்..!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி 20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஹாமில்ட்டனில் நடந்த 3-ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாறு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி : சீன எல்லையை மூடிய ரஷ்யா..!

கொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் நாட்டு சீன எல்லையை ரஷ்யா தற்காலிகமாக மூடியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. தற்போது இந்த வைரஸ் தாக்குதல் இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 175_ஆக இருந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மிரட்டி வரும் கொரோனா… “லட்சக்கணக்கான முகமூடிகள்”… துருக்கியிலிருந்து சீனாவுக்கு அனுப்பி வைப்பு..!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு துருக்கியில் உள்ள சில நிறுவனங்கள் லட்சக்கணக்கான முகமூடிகளை தயாரித்து அனுப்பி வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. தற்போது இந்த வைரஸ் தாக்குதல் 16 நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 175_ஆக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலர் தினத்தைக் குறி வைக்கும் 6 படங்கள்!

காதலர் தினத்தன்று 6 புதிய படங்கள் திரைக்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். காதலர் தினம் என்பதால் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள படங்களே அதிகம் வெளியாகின்றன. இந்த ஆண்டு அப்படி வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை கீழே காண்போம். ஓ மை கடவுளே அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓ மை கடவுளே’. முழுக்க முழுக்க காதல், திருமணம், கலாட்டா, காமெடி […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

விஷுவல் எஃபெக்ட்ஸ்காக 3 விருதுகளை அள்ளிய ‘தி லயன் கிங்’..!!

அனிமேஷன் திரைப்படமான “தி லயன் கிங்” விஷுவல் எஃபெக்ட்ஸ் சமூக விருது நிகழ்ச்சியில் 3 விருதுகளை அள்ளியது. அனிமேஷன் திரைப்படமாக வெளியாகி தத்ரூபமான காட்சிகளால் விலங்குகள் வாழும் காட்டுக்குள் நம்மை அழைத்துச் சென்ற “தி லயன் கிங்” திரைப்படம் விஷுவல் எஃபெக்ட்ஸுக்காக மூன்று விருதுகளை வென்றுள்ளது. 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கலக்கியது. இதையடுத்து, கேளிக்கை துறையில் பணியாற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விஷுவல் எஃபெக்ட்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஜாமியா பல்கலை துப்பாக்கிச் சூடு : ப.சிதம்பரம் கண்டனம்..!!

டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள  ஜாமியா பல்கலைக்கழத்தில் CAA சட்டத்திற்கு  எதிரான போராட்டத்தில் மாணவர்கள் நேற்று ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த போராட்டத்திற்கு இடையே அங்கே வந்த மர்மநபர் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் , மாணவர்களை நோக்கியும் சுட்டுள்ளார். இதில் ஒரு மாணவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அவர் யார் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு: சென்னையில் புதிய ஆய்வகம்..!!

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் புதிய ஆய்வகம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சரவை செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, வெளியுறவுத்துறை, […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி போலீஸ் புதிய தகவல்..!!

குரூப்-4 தேர்வில் பிரத்யேக பேனாவினை பயன்படுத்தி தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், தற்போதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த முறைகேட்டிற்கு மூளையாக விளங்கியவராகக் கருதப்படும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயகுமார் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி, மதுரவாயல் வட்டாச்சியர் ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவினர், நீதிமன்ற […]

Categories

Tech |