குழந்தைகள் தவறான பாதையில் செல்வதற்கு இணையதளமும் ஒரு காரணம். அதை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சுய கட்டுப்பாடு தேவை என்று இயக்குநரும் நடிகருமான சேரன் கூறியிருக்கிறார். ‘ராஜாவுக்கு செக்’ படத்தை பெற்றோர்கள் தங்களது குழந்தைளோடு சேர்ந்து பார்க்க வேண்டும் என்று இயக்குநரும், நடிகருமான நடிகர் சேரன் கூறியுள்ளார். இதுகுறித்து சேரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்றைய சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் மற்றும் அனைத்து பெற்றோர்களும் பயந்து கொண்டிருக்கும் விஷயம் குறித்த படமாக ‘ராஜாவுக்கு செக்’ அமைந்துள்ளது. நம் […]
Author: MM SELVAM
ரசிகர்களுக்கு விரைவில் ஒரு ஆச்சர்ய செய்தி காத்திருக்கிறது என்று அபிஷேக் பச்சனின் ட்விட்டால், நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கர்ப்பமாகியிருப்பாதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது. ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன், ‘விரைவில் உங்களுக்கு ஒரு ஆச்சர்யமாக செய்தி காத்திருக்கிறது’ என்று ட்விட் செய்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் என்னாவாக இருக்கும் என தீவிரமாக ஆராயத் தொடங்கினர். இறுதியில் […]
சைக்கோ திரைப்படத்தில் மிஷ்கின் எனக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்தார் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சைக்கோ படம் நேற்று வெளியானதையடுத்து அப்படத்தில் நடித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பிரசாத் லேப்பில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சைக்கோ படத்தின் முதல் காட்சிக்கு மக்களிடம் நல்லவரவேற்பு கிடைத்துள்ளது. எனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஓப்பனிங் கிடைத்தது. இதுக்கு காரணம் இயக்குநர் மிஷ்கின்தான். ரசிகர்களுடன் சேர்ந்து நான் படம் பார்த்தேன். நான் நினைக்காத […]
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தின் தீம் சாங்கான ‘மாறா’ வெளியாகியுள்ளது. ‘இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், […]
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து 2020ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உபவடிநில முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியுள்ள பாலாறு படுகை பாசனதாரர்கள் வேண்டுகோளினை ஏற்று திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 27ஆம் தேதியிலிருந்து நான்கு சுற்றுகளில் மொத்தம் 7,600 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது. […]
கிரிக்கெட் வீரர் விராத் கோலி போல் ஆக்ரோஷ தன்மைக்காக பல்வேறு விமர்சனங்களை தான் சந்தித்திருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கும் தனக்கும் இடையே பொதுவான தன்மை பற்றி குறிப்பிட்டுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். இதுபற்றி பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், “எனக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவரும் நானும் வெவ்வேறு பின்புலத்தில் உள்ளோம். தனது தனித்துவத்தால் அவர் பெயர் […]
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்பினரும் போராடிவருகின்றனர். இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டதால் இந்திய குடிமக்களுக்கு பாதிப்பில்லை என்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு தரப்பு வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில், எல்லை பாதுகாப்புப் படையினர் […]
தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள ரோட் ஆம் சீ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் தெற்கு பகுதியில் ரோட் ஆம் ஸீ நகரம் இருக்கின்றது. இந்த நகரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் திடீரென நுழைந்தான். பின்னர் அந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மக்களை நோக்கி திடீரென சரமாரியாக சுடத்தொடங்கினார். சுடத்தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். ஆனாலும் இந்த […]
நீலகிரியில் வீட்டில் தனியாக இருந்த +2 மாணவியை பலாத்காரம் செய்த அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் தான் முர்ஷிது. இவருக்கு 22 வயதாகிறது. இவர் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பந்தலூரில் வசித்து வருகின்ற தன்னுடைய பெரியப்பா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவனது பெரியப்பாவுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். அப்படி அடிக்கடி பெரியப்பா வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், ஒருநாள் […]
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி காரணமாக நாளை மறுநாள் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கொண்டாடவிருந்த குடியரசுதின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கட்டுவிரியன் பாம்புகளில் விஷத்தன்மை மிகவும் குறைவாக இருப்பதால் அவற்றை […]
குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்க டெல்லி வந்தடைந்த பிரேசில் அதிபரை தூதரக அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்தியா முழுவதும் குடியரசு தினவிழா வரும் 26-ஆம் தேதி வெகு விமர்சியாக கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு சிறப்பாக செய்து வருகின்றது. ஆண்டு தோறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டி சிறப்பிப்பது வழக்கம். அதன்படி இந்தமுறை பிரேசில் அதிபர் அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், […]
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் உறுப்பினர்கள் சிலர் வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என்று புகாரளித்ததன் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் தேர்தலை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் […]
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 7 ரன்களில் […]
ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், தனது மகன் அனிலுடன் பெங்களூருவிலிருந்து ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சொந்த ஊரான சேலத்திற்கு வந்துள்ளார். பின்பு, பெங்களூரூ திரும்பிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]
நீதிமன்றங்களும் நீதிபதிகளும் சட்டத்தின்படியே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருணை மனு நிலுவையில் இருந்த காரணத்தால் தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தூக்கு தண்டனைகள் காலதாமதமாக நிறைவேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, காதலருடன் சேர்ந்து தனது குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை […]
தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதில் சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிடிவி தினகரன் உட்பட பலரும் […]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் உறுப்பினர்கள் சிலர் வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என்று புகாரளித்ததன் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் தேர்தலை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் பதிவான வாக்குகளை எண்ண கூடாது […]
தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது. சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது சேதமடைந்த பெரியார் சிலையை சீரமைக்கும் […]
தனது வீட்டின் முற்றத்தில் மண் தோண்டியதை தட்டிக்கேட்டதால் கோயில் நில உரிமையாளர் ஒருவர் ஜேசிபி இயந்திரத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் சில நாள்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை, வனத் துறையினர் பாலம் கட்டுவதற்காக ஒரு மைதானத்தில் மணல் கொட்டி வைத்துள்ளனர். பின்பு சில நாள்கள் கழித்து ஒரு கும்பல் அங்கு வந்துள்ளனர். ஆரம்பத்தில் மண் எடுக்க வந்தவர்கள் என்று அங்குள்ளவர்கள் நினைத்துள்ளனர். பின்பு அந்தக் கும்பல் அனுமதி பெறாமல் அம்பலதிங்காலாவில் சங்கீத் வீட்டின் முற்றத்திலிருந்து மண்ணைத் தோண்டியுள்ளனர் […]
பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், காலணி மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார். பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் […]
71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 71ஆவது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவருகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு அங்கமாக, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துணை ஆணையர் விக்ரம் போர்வால் கூறுகையில், “மத்திய தொழில் […]
செங்கல்பட்டில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட பெரியார் சிலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொது விழாவில், பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து […]
ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ளதைத் தொடர்ந்து, அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை துண்டாடுவதாக சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனநாயக நாடுகளில் மனித உரிமைகள் எப்படி காக்கப்படுகிறது என்பது குறித்த பட்டியலை ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 10 இடங்கள் கீழே சென்று 51ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜனநாயக முறை குறைந்ததற்கு மனித உரிமைகள் பறிக்கப்படுவதே காரணம் என்று ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ கருத்து தெரிவித்தது. தேர்தல் நடத்தும் முறை, பன்முகத்தன்மை, […]
செங்கல்பட்டு அருகே பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி உடைக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதில் மதிமுக, விசிக, தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முக ஸ்டாலின், […]
2018ல் இணையதள சேவை அதிகமுறை துண்டிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்ததை கனிமொழி கிண்டல் செய்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அதிக முறை இணையதள சேவை முடப்பட்ட 8 நாடுகளை உலக குறியீட்டு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதில் இந்தியா 134 முறை இணையதள சேவை முடப்பட்டு முதலிடத்தில் உள்ளது. இதனை டேக் செய்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், வெல்டன் டிஜிட்டல் இந்தியா என்று கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். […]
சேலத்தில் ஆன்மிக பேரணி சென்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது, சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து […]
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை போலீசார் திருவனந்தபுரத்தில் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர். […]
டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் மற்றும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, அவர்கள் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த வருடம் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தான் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம் மற்றும் […]
சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். சிரிய நாட்டில் இத்லிப் மாகாணம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அவர்களிடம் இருந்து எப்படியாவது மாகாணத்தை மீட்க வேண்டும் என ரஷிய படையின் உதவியுடன் சிரிய ராணுவம் தொடர்ந்து கடுமையாக போராடி வருகிறது. இந்த போராட்டத்திற்கு இடையே அந்த மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இத்லிப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள இரண்டு ராணுவ […]
பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து எடுத்துக்கூற, பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி சரியாக கோபி பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் ரோட்டில் முத்து மகால் […]
பொய்யான வாக்குறுதி அளிக்கும் போட்டி நடத்தினால் அரவிந்த் கெஜ்ரிவால்தான் முதல் பரிசு பெறுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்க முனைப்பு காட்டி வருகின்றது. அதேசமயம் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என காங்கிரஸ், […]
கள்ளத் தொடர்பை கணவர் கைவிட மறுத்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் தந்திமேடு பகுதியில் வசித்து வருபவர் ராணி.. 47 வயதான இவருக்கு பன்னீர்செல்வம் என்ற கணவன் இருந்தார். இவரது கணவன் கடந்தசில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து மகன் வினோத்குமார் ( வயது 30) மற்றும் மகள் வின்சியா ஆகியோருடன் ராணி வசித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூம்பாறையைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் […]
ராஜஸ்தானில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணி செய்து வரும் வினோத் ஜெயின், தன்னுடைய மகனுக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் சூட்டியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் தான் வினோத் ஜெயின். இவர் அங்குள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் வேலைபார்த்து வருகின்றார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இவர் தனது குழந்தைக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அதிதீவிர […]
காதலிக்காக மதம் மாறி ஒன்பது மாதங்கள் பயிற்சி எடுத்து முடித்த பின்னரும், காதலியின் குடும்பத்தினர் காதலை ஏற்க மறுத்ததால் மனித உரிமை ஆணையத்தில் காதலன் புகார் அளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் விகராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பாபிலி பாஸ்கர். இவரும் அப்பகுதியில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவரும் காதலித்துவந்துள்ளனர். இருவரும் தங்கள் பட்டப்படிப்பு முடித்தவுடன் தங்கள் காதலை வீட்டில் தெரிவித்துள்ளனர். ஆனால், மதத்தைக் காரணம்காட்டி பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கு அனுமதியளிக்கவில்லை. காதலுக்காக மதம் மாறிய பாஸ்கர், தனது […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைப் போன்று காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாநிலத் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒவ்வொருவரும் தங்களின் எதிர்ப்பை காட்ட உரிமை உள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக […]
ஜேம்ஸ் பாண்ட் பட படப்பிடிப்பின்போது உதவி இயக்குநருக்கு ஏற்பட்ட காயம் தொடர்பாக இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தது. ஜேமஸ் பாண்ட் படத்தின் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநருக்கு ஏற்பட்ட காயத்துக்கு உரிய இழப்பீடு தர படத்தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. 2015இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜேமஸ் பாண்ட் சீரிஸ் படம் ‘ஸ்பெக்ட்ரே’. இந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் டெர்ரி மேடன். ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஸ்பெக்டரே படத்துக்கான அதிரடி சண்டைக் காட்சி […]
நகைச்சுவை நடிகர் சுனில் வர்மா நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கில் வெளியான மரியாடா ராமண்ணா, ராங்காடு உள்ளிட்ட படங்களில் கதாநாயகன் அவதாரம் எடுத்தவர் நகைச்சுவை நடிகர் சுனில் வர்மா. பின் சில படங்களின் தோல்வி காரணமாக மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கே திரும்பினார். சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘அலா வைகுந்தபுரமுலோ’ படத்தில் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதேபோல் ரவி தேஜா நடிப்பில் நாளை திரைக்கு வர உள்ள ’டிஸ்கோ ராஜா’ […]
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய 7.65 எம்.எம். பிஸ்டல், ஐந்து தோட்டாக்கள் ஆகியவற்றை தனிப்படையினர் கேரளாவில் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர். அதில், […]
தயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் நடித்துள்ள சைக்கோ படத்தை பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் என அப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார். டபுள் […]
அரசு இதுவரை மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களின்படி 83 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில், டிஎல்ஃஎப் நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துடன் டிட்கோ இணைந்து செயல்படுத்தும் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திட்ட மாதிரியையும் அவர் திறந்து வைத்தார். தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்திருக்கும் தரமணி பகுதியில், 5,000 கோடி ரூபாய் மதிப்பில், 68 லட்சம் சதுர அடி பரப்பளவில், பல […]
அதிமுகவில் கடைக்கோடித் தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வரலாம், ஆனால் திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பெண்களுக்காக தனிப்படை அமைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனவும் 27 தலைமுறைகளாக படைப் பொறுப்பில் அவரது […]
ஆடவர் கிரிக்கெட்டர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை மகளிர் கிரிக்கெட்டர்களுக்கும் கொடுக்கவேண்டும் என கேட்பதற்கு இது சரியான நேரம் இல்லை என இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ஆடவர், மகளிர் கிரிக்கெட்டர்களுக்கான பிசிசிஐ ஒப்பந்த விவரங்கள் சில நாள்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. அதில் ஆடவர் கிரிக்கெட்டர்களுக்கு அதிகபட்ச ஊதியம் ரூ. 7 கோடியாகவும், மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு அதிகபட்ச ஊதியம் ரூ. 50 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஊதிய ஏற்றத்தாழ்வு குறித்து ஸ்மிருதி மந்தனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதுபற்றி அவர் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்தில் புதிய மசூதி ஒன்றைக் கட்ட இந்து – இஸ்லாமிய மதத்தினர் ஒன்றிணைந்தனர். இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக, கர்நாடக மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ராம்புரா கிராமத்தில் உள்ள ஒரு பழைய மசூதி இடிந்து விழுந்தது. இதனை அறிந்த இந்து சுவாமிஜி மசூதி இடிந்த இடத்தைப் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து மகாநந்த சுவாமி என அழைக்கப்பட்ட அவர், அந்த இடத்தில் பூமி பூஜை செய்து புதிய கட்டுமானத்தை […]
பல்வேறு சூழ்நிலைகளில் தங்கள் நாட்டுக்கு சீனா உதவி செய்திருப்பதால், இஸ்லாமியர்களுக்கு எதிரான அந்நாட்டின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் அமைதி காத்துவருகிறது. ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி அளித்தார். அப்போது, உய்குர் இஸ்லாமியர்களின் நிலை சீனாவில் மோசமாக இருந்தபோதும், அதுகுறித்து கேள்வி எழுப்பாமல் காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதற்கு காரணம் என்ன? என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு பதிலளித்த இம்ரான் கான், “இந்தியாவில் நடைபெறுவதற்கும் சீனாவில் நடைபெறுவதற்கும் வேறுபாடு உண்டு. சீனா தங்களுடைய நெருங்கிய […]
அமேசான் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான ஜெஃப் பெசோஸின் செல்போனை சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் ஹேக் செய்ததாக அமெரிக்காவின் பிரபல செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், அமேசான் உரிமையாளர் ஜெஃப் பெசோஸின் செல்போனை 2018ஆம் ஆண்டு ஹேக் செய்ததாக அமெரிக்காவின் பிரபல செய்திதாள் தெரிவித்தது. ஹேக் செய்யப்பட்ட செல்போனிலிருந்து என்னென்ன தகவல்கள் திருடப்பட்டது என்று அறியமுடியாவிட்டாலும் ஒருசில தகவல்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் தனது […]
பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின்போது ரன் அவுட் ஆகாமல் இருக்க, பேட்ஸ்மேன் பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் குதித்து காயமடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஷ் கிரிக்கெட் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 47ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை எதிர்த்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மெல்போர்ன் அணிக்கு […]
நடிகை ரிச்சா சத்தா ‘NATIONAL HUG DAY’ நாளன்று, சாலையில் சென்றவர்களைக் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டார். ஆண்டு தோறும் ஜனவரி 23ஆம் தேதி, ‘HUG DAY’ கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் குழந்தைகள், பெரியவர்கள், நண்பர்கள் என்று அனைவரும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்வார்கள். இது இந்தியாவில் பெரிதாகக் கொண்டாடப்படுவது இல்லை என்றாலும், வெளிநாடுகளில் பலரும் இதனைக் கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ‘NATIONAL HUG DAY’ வழக்கமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை […]
அடுத்த தலைமுறையினரான மாணவர்களின் நலன் பற்றி கவலைப்படாமல் வெட்டியாக ரஜினி பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் தருவது மனவேதனை தருவதாக மனநல மருத்துவர் ருத்ரன் பதிவிட்டுள்ளார். ஐந்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, பெரியார் குறித்து ரஜினியின் பேச்சு ஆகியவை குறித்து மனநல மருத்துவர் ருத்ரன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது, விவாதத்தை கிளப்பியுள்ளது. மிக சிறுவயதிலேயே மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தவறான அணுகுமுறை எனப் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துவருகின்றனர். அதேபோல், […]
பிளாஸ்டிக் நாப்கின்களுக்கு மாற்றாக புளிச்ச கீரை கொண்டு நாப்கின்களைத் தயாரித்துவரும் இளம் தொழில்முனைவோர் நிவேதா, கௌதம் அசத்திவருகின்றனர். அது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு… ‘மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்தல் வேண்டும்’ என்ற அற்புதமான அர்த்தம் கொண்ட கவிமணியின் இக்கூற்றை அனைவரும் அறிந்திருப்போம். பெண்களைப் போற்றி கொண்டாடுதலே நம்முடைய கலாசாரத்தின் அடிநாதம் ஆகும். பெண்ணை இன்று சிங்கப் பெண்ணாக ஒப்பிடுகையில் உணர்ச்சிப்பூர்வமாக பெருமதிப்புடன் கொண்டாடி வருகிறோம். ஆனால் மாதவிடாய் நேரங்களில் பெண்களையும், அவர்கள் படும் துயரங்களையும் நாம் […]