அரையிறுதியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், குரூப்-1 பிரிவிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் […]
Author: MM SELVAM
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் ஈடுபடும்போது கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்து குரூப் 2 வில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை (நவ.,9ஆம் தேதி) […]
கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பில் கைதான 6 பேருக்கும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை […]
சூர்யகுமார் யாதவ் அடிக்கவில்லை என்றால் இந்திய அணி 150 ரன்களை கூட தாண்டி இருக்காது என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்து குரூப் 2 வில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை […]
ஐசிசி மாதாந்திர கிரிக்கெட் வீரர் விருது இந்த முறை விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐசிசி மாதம் தோறும் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி அவர்களை கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது இந்த முறை இந்திய நட்சத்திர கிரிக்கெட் விராட் கோலிக்கு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.. தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா மற்றும் இந்திய வீரர் விராட் கோலி ஆகிய […]
இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதுவதை அனைவரும் விரும்புவார்கள் என சேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.. 2022 டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிறகு, 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி போல மீண்டும் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 2 பரம எதிரிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் தொடக்க சூப்பர் 12 […]
யாரும் இப்போது எங்களை எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள் என்று பாகிஸ்தான் அரையிறுதி இடத்தைப் பிடித்த பிறகு ஆலோசகர் மேத்யூ ஹைடன் மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்தார். டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு தோல்விகளை பெற்ற பிறகு அரையிறுதிக்குள் நுழைவது எல்லாம் சாத்தியம் இல்லை என்று நான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அதன்பின் தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்று தற்போது அரையிறுதிக்குள் நுழைந்து பலமிக்க அணியாக இருக்கிறது. […]
அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் நிலையில், தொடரில் நாங்கள் சற்று பின்தங்கிவிட்டோம் என்று நினைக்கிறேன் என்று மொயின் அலி கூறியுள்ளார்.. இலங்கைக்கு எதிரான கடைசி சூப்பர் 12 போட்டியில்வெற்றிபெற்றதன் மூலம், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை போட்டியில் இருந்து வெளியேற்றி, இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது. ஜோஸ் பட்லரின் இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இலங்கையை வீழ்த்தியது. இலங்கை கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். எது எப்படியோ இங்கிலாந்து தற்போது […]
நீங்கள் மிக விரைவாக மிஸ்டர் 360 டிகிரி என்பதை தாண்டி உச்சம் தொட போகிறீர்கள் என்று சூர்யகுமாரை புகழ்ந்து பாராட்டியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது பரபரப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நடந்து முடிந்த சூப்பர் 12 சுற்றில் இருந்து குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த உலக கோப்பையில் […]
இங்கிலாந்து பேட்டர் டேவிட் மலான் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது பரபரப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நடந்து முடிந்த சூப்பர் 12 சுற்றில் இருந்து குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் நாளை நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. […]
வரும் 11ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தொடர்பான திட்டத்தை வரும் 11ஆம் தேதி கரூர் அரவக்குறிச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி […]
கோப்பையை வெல்ல பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கேப்டன் பாபர் அசாமுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றோடு சூப்பர் 12 போட்டிகள் அனைத்தும் முடிவடைந்தது. நேற்று காலை நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியதால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது […]
2022 -23 ஆம் ஆண்டு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வர்களுக்கான கால அட்டவணையை சென்னையில் இன்று வெளியிட்டார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 தொடங்கி, 20.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 தொடங்கி, 05.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12ம் […]
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, 2024 தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதில் எந்த தவறும் இல்லை. பெரிய கட்சி என்கிற அடிப்படையில் கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கலாம். அதிமுக தான் பெரிய கட்சி. அதிமுக கிட்டத்தட்ட தமிழகத்தின் உடைய மிகப்பெரிய கட்சி, பலம் வாய்ந்த கட்சி, தொடர்ந்து ஆட்சியில் பல காலங்களில் இருந்த ஒரு கட்சி. […]
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி போராட்டத்தில் பின்னடைவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட ஒருமித்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் 10% ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு […]
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான தனுஷ்க குண திலகாவை இடைநீக்கம் செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற தனுஷ்க குணதிலகாவை சிட்னி போலீசார் கைது செய்தனர். இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் திரு. குணதிலகா கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தேசிய வீரர் தனுஷ்க குணதிலகாவை […]
முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் ஆட்சியில் அரசு கொறடாவாகவும் இருந்த துரை. கோவிந்தராஜன் காலமானார். கந்தர்வகோட்டை, திருவோணம், திருவையாறு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர் துரை கோவிந்தராஜன் (85). ஒரத்தநாடு அருகே வடக்கூரை சேர்ந்த துரை.கோவிந்தராஜன் உடல்நல குறைவால் தஞ்சையில் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முக ஸ்டாலின் தனது […]
10,11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. 2022-23ஆம் கல்வி ஆண்டிற்க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மதியம் 2:30 மணிக்கு வெளியிடுகிறார்.
போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி, மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், […]
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அனைவரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறதுஎன்றும், 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கு எதிரானதாக அமையவில்லை என்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை பார்க்கும் போது ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போல் இருக்கிறது என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகழ்ந்து பேசியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த […]
இந்திய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அடித்த சிக்ஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. குரூப் […]
இந்திய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 டி20 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் ஆனார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் […]
இந்தியாவிடம் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் மருமகளை (ஷேகர் ஷின்வாரி) ஜிம்பாப்வே இழந்துள்ளது. அதேநேரத்தில் ஜிம்பாப்வே பையனை நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. இதில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று […]
ரோஹித் சர்மாவை சந்திக்க மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. குரூப் 1 பிரிவில் […]
2007 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணிகள் சாம்பியன் ஆனது கிடையாது என்ற வரலாறு தொடர்கிறது. #டி20 உலக கோப்பை தொடர் தென்னாபிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்று முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக இந்த டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரை நடத்தியது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி […]
தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். தான்சானியா தலைநகர் தார்-எஸ்- சலாமில் இருந்து புகோபா நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது பிரிஷிஷியன் விமானம். 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்துக்கு 100 மீட்டர் முன்னதாக பிரிஷிஷியன் விமானம் ஏரிக்குள் விழுந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 49 பேர் பயணித்த நிலையில் 26 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து […]
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் […]
வங்கதேச அணி பேட்டிங் செய்யும் போது கேப்டன் ஷகிப் அல் ஹசன் அவுட் ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய சூப்பர் 12 போட்டிகள் இன்றோடு முடிவடைந்து விட்டது. கடைசியாக 3 போட்டிகள் நடந்தது. இதில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து அரையிறுதிக்கு செல்லாமல் பரிதாபமாக வெளியேறியது.. பின்னர் […]
தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான நிலையத்துக்கு 100 மீட்டர் முன்னதாக பிரிஷிஷியன் விமானம் ஏரிக்குள் விழுந்தது. தான்சானியா தலைநகர் தார்-எஸ்- சலாமில் இருந்து புகோபா நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது பிரிஷிஷியன் விமானம். விமானத்தில் பயணித்தவர்களில் 26 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து மீட்பு பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். https://twitter.com/KaustuvaRGupta/status/1589188610838138880
ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு சென்று விட்டது. இந்நிலையில் சூப்பர் 12 ன் கடைசி ஆட்டத்தில் இந்தியா […]
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது. இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற […]
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது. இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் […]
வங்கதேச அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது. இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்ததால் தென் ஆப்பிரிக்க […]
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு […]
சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்கதேச அணி. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது. இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் […]
தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்துள்ளதால் இந்திய அரையிறுதிக்கு நுழைந்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் காலை 5:30 மணிக்கு குரூப் 2 பிரிவிலிருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து எப்படியும் வென்றுவிடலாம் என்று […]
இன்று நடைபெறும் கடைசி சூப்பர் 12 போட்டியில் அரை இறுதிக்கு செல்ல 4 அணிகள் மல்லு கட்டுகின்றன.. ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்றோடு முடிவுக்கு வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் இடம்பெற்றன. […]
மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க துணைக்குழுவை ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு தருவது பற்றி துணைக் குழு பரிந்துரை வழங்கும். துணைக் குழுவின் உறுப்பினர்களாக 3 துறைகளின் துணை செயலாளர்கள் உட்பட 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, மாற்றுத்திறனாளிகள் துறை, மனிதவள மேம்பாட்டு துறை, சட்டத்துறைகளின் துணை செயலாளர் உட்பட 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நவம்பர் 5, 2022 அன்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இன்றோடு 34 வயதாகிறது, இந்திய பேட்டிங் ஐகான் விராட் கோலி இன்று நவம்பர் 5ம் தேதி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 477 சர்வதேச போட்டிகள் மற்றும் 24,350 ரன்களுடன், இந்திய ரன் மெஷின் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் […]
இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அரையிறுதிக்கு சென்றுள்ளது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும். […]
இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்று உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு […]
டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கண்ணாடிக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், மது பாட்டில்களை சுத்தம் செய்யும் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும் டாஸ்மாக் […]
சூப்பர் 12 கடைசி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இலங்கை டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதி வருகிறது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்று உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி […]
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 408 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், நன்னடத்தை காரணமாக பிணையில் வந்த பின் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டதாக 7 பேர் […]
மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ, இரட்டை அர்த்த பாடல்களோ இடம் பெறக் கூடாது. கரகாட்டத்தில் நாகரீகமான உடைகளை அணிய […]
கதை திருட்டு விவகாரத்தில் இயக்குனர் அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தற்போது அட்லி இயக்கத்தில் ஷாரூக் கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அட்லி எடுத்து எடுத்து வரும் ஜவான் திரைப்படத்தின் கதையானது பேரரசு திரைப்படத்தின் கதை எனக் கூறி அவர் மீது ‘செவன்த் சேனல் மாணிக்கம்’ என்பவர் புகார் அளித்திருந்தார். அதாவது, பேரரசு திரைப்படத்தின் கதையை தற்போது அப்படியே ஜவான் என்ற பெயரில் […]
மாணவி சத்யபிரியா கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற மாணவியை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளிவிட்டார். இதில் சத்யபிரியாவின் உடல் சிதறி இரண்டு துண்டாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சதீஸ் என்ற நபரை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதனைத் […]
டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோசுவா லிட்டில், ஹாட்ரிக் சாதனை படைத்த பிரத்யேக பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 6ஆவது வீரராக இணைந்துள்ளார். 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது இதில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூப்பர் 12 போட்டியில் நேற்று நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச முடிவு செய்ய, அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 […]