Categories
தேசிய செய்திகள்

‘பிரதமர் அலுவலகத்திற்கு அஞ்சாமல் முடிவெடுத்த ராஜ்நாத்’ – காங்கிரஸ் வாழ்த்து!

டீசல் நீர் மூழ்கிக் கப்பல்களைத் தயார் செய்வதற்காக அதானி – எச்.எஸ்.எல். குழுமங்கள் இணைந்து சமர்ப்பித்த ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்த நிலையில், அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. ‘திட்டம் 75I’ (Project 75I) என்பது ஆறு டீசல் நீர் மூழ்கிக் கப்பல்களை 45,000 கோடி ரூபாய் மதிப்பில் தயார் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இதனை அதானி – எச்.எஸ்.எல். குழுமங்கள் இணைந்து தயாரிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், சில […]

Categories
மாநில செய்திகள்

‘எந்த அழிவு திட்டத்துக்கும் இங்கு அனுமதி கிடையாது’ – முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்!!

எந்த நிலையிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  நேதாஜி பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மேலும், முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்திற்கு என்று ஒரு […]

Categories
மாநில செய்திகள்

சிஏஏ சட்டத்தை ஆதரித்து பேனா வழங்கியதால் பெரும் பரபரப்பு!

செல்போன் கடையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பேனாவில் எழுதி வாடிக்கையாளருக்கு பரிசாக அளித்ததால் இருபிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை ரிச்சி தெருவில் அற்புதா மொபைல்ஸ் செல்போன் கடை நடத்தி வருபவர், தினேஷ். இவர் தனது கடையில் செல்போன் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக எழுதிய பேனாவை பரிசாக அளித்து வந்துள்ளார். இந்நிலையில், தினேஷ் கடைக்கு எதிரே செல்போன் கடை நடத்தி வரும் வியாபாரிகள் சிலர் பரிசாக இது போன்ற பொருளை அளித்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பெரியார் ஒரு சாதிக்கு தான் எதிரானவர்’ – கஸ்தூரி ட்வீட்

பெரியார் ஒரு சாதிக்கு மட்டும் தான் எதிரானவர் என்று நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொது விழாவில், பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள இளைஞர்களிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது!

கேரள மாநில இளைஞர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கம்பத்தைச் சேர்ந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், தனது நண்பர்களான தினேஷ், பிரவீன், நந்து உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று கேரளாவிலிருந்து கம்பத்திற்கு வந்துள்ளார். மதுபானம் வாங்குவதற்காக கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடைக்கு, நால்வரும் சென்றுள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் ஆனதால் மதுபானக்கடை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

விமான நிலையங்களில் 10 ஆயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் சோதனை..!!

இந்திய விமான நிலையங்களில் சுமார் பத்தாயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக செயலர் ப்ரீத்தி சூடான் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலர் ப்ரீத்தி சூடான் கூறும்போது, “இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் 43 விமானங்களில் வந்த ஒன்பதாயிரத்து 156 பயணிகளுக்கு இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணி…. 30-ஆம் தேதி வயநாடு செல்கிறார் ராகுல்..!!

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணியில் கலந்து கொள்வதற்கு  காங். கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 30ஆம் தேதி வயநாடு செல்கிறார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்  உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழகத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக திமுக, கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட கட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம்?…. வைரலாகும் மோடியின் மனைவி!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி போராட்டத்தில்  கலந்து கொண்டதாக புகைப்படம்  வெளியாகி வைரலாகியுள்ளது. பாஜகவின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற போட்டோஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வைரல் போட்டோவில் பெண்களுடன் அமர்ந்து மொத்தமாக அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தள்ளுவண்டியோடு சேர்த்து 3 சவரன் நகை அபேஸ்… திருடியவரை கண்டுபிடித்து கொடுத்த தம்பதி… கைது செய்யாத காவல் துறை.!

தள்ளுவண்டியில் வைத்திருந்த 3 சவரன் நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற நபரை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தம்பதி ஒன்று புகாரளித்துள்ளது. சாந்தோம் ஜோனகான் தெரு ஓரத்தில், சிற்றுண்டிக் கடை நடத்திவருபவர் ஜெயராமன் (55). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு வீடு இல்லாததால் தள்ளுவண்டியில் பொருட்கள் அனைத்தையும் வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி வழக்கம் போல் அகில இந்திய வானொலி மையம் அருகே பொருட்கள் அனைத்தையும் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு, இருவரும் […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு எடுபடாது – டி. ராஜா.!

பெரியார் குறித்து சர்ச்சையாக பேசுவது உலக அரங்கில் எடுபடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினேன். அப்போது ஒரு முக்கியமான பிரச்னை குறித்து விவாதித்தோம். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து, […]

Categories
மாநில செய்திகள்

பயணியின் உயிரைக் காத்த ரயில்வே காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், வண்டியிலிருந்து ஒரு பயணி தவறி கீழே விழும் நேரத்தில், அங்கிருந்த காவலர் ஒருவர் பயணியை லாவகமாக உள்ளே தள்ளி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் குறித்த காணொலி இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது. தொடர்வண்டியிலிருந்து கீழே விழும் பயணியை காவலர் ஒருவர் காப்பாற்றும் காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6:45 மணிக்கு எட்டாவது நடைமேடையிலிருந்து, தாதர் விரைவு தொடர்வண்டி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாகப் பயணி ஒருவர் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

52 வயதில் 5ஆவது திருமணம் செய்துகொண்ட பமீலா ஆண்டர்சன்..!!

35 வருட டேட்டிங் உறவிலிருந்து திருமணம் என்ற அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளனர் ஹாலிவுட் பிரபலங்களான பமீலா ஆண்டர்சன் – ஜோன் பீட்டர்ஸ்.  ஹாலிவுட் நடிகையும், மாடலுமான பமீலா ஆண்டர்சன் – தயாரிப்பாளர் ஜோன் பீட்டர்ஸ் ஆகியோர் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். 35 ஆண்டு காலம் டேட்டிங்கில் ஈடுபட்டுவந்த பமீலா ஆண்டர்சன் – ஜோன் பீட்டர்ஸ் ஜோடி கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள மாலிபு நகரில் ஜனவரி 20ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் தங்களது காதல் வாழ்க்கையிலிருந்து திருமண உறவுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தாராள பிரபு படத்தில் இணைந்த இரட்டை இசையமைப்பாளர்கள்..!!

தாராள பிரபு படத்தின் இசையமைப்பாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் படம் தாராள பிரபு. ஹிந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் ரீமேக்க்காக இப்படம் உருவாகியுள்ளது. விந்து தானம் மற்றும் குழந்தையின்மை அகியவற்றை அடிப்படையாக வைத்து உருவாகிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தை தமிழில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி வருகிறார். இந்த நிலையில் இப்படத்திற்காக மொத்தம் 8 இசைமைப்பாளர்கள் தேர்வு […]

Categories
இந்திய சினிமா சினிமா

வரலாற்று உண்மையை சொன்ன சைஃபுக்கு மகாபாரத வகுப்பெடுத்த கங்கனா

ஆங்கிலேயர்களின் வருகைக்குமுன் இந்தியா என்றொரு கருத்தியலே இல்லை என்ற நடிகர் சைஃப் அலி கானின் கருத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களின் வருகைக்குமுன் இந்தியா என்றொரு கருத்தியலே இல்லை என்று நடிகர் சைஃப் அலி கான் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் அவரைக் கடுமையாக சாடி கேள்வி எழுப்பிய வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சைஃப் அலி கான் போன்றவர்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு, குறுகிய கண்ணோட்டத்துடன் இதுபோன்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கிச்சா சுதீப்புக்கு தாதா சாஹேப் பால்கே விருது..!!

இந்திய திரைத்துறையில் வழங்கப்படும் முக்கிய விருதான தாதா சாஹேப் பால்கே இன்டர்நேஷனல் விருதை நடிகர் கிச்சா சுதீப் பெற இருக்கிறார். தமிழில் ‘நான் ஈ’, ‘புலி’, ‘முடிஞ்சா இவன புடி’ , ‘ரத்த சரித்தரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் சுதீப். சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் நடிப்பில் வெளியான ‘தபாங் 3’ படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இந்தியத் திரைத்துறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#பெரியாரவது_மயிராவது…. ”இரண்டாம் நாள் யுத்தம்” ரஜினி VS பெரியார் ….!!

பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று ரஜினி கூறியதற்கு ஆதரவாக மீண்டும் #பெரியாரவது_மயிராவது என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அந்தந்த பள்ளிகளிலேயே 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு..!!

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும்  8ஆம்  வகுப்புக்கும்  நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேனாவை சரியாக பிடித்து எழுத தெரியாத வயதில் பொது தேர்வா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தேர்வு எழுதும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
உலக செய்திகள்

4 நாடுகள்… 280 பேர் பாதிப்பு… ”மரண பயம் காட்டும் கரோனா”… அலறும் உலக நாடுகள்..!!

கரோனா வைரசால் 4 நாடுகளில் மொத்தம் 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் மரண பீதியில் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான  கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய்  மற்ற நாடுகளுக்கு  பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ”கரோனா” … ”பீதியில் உலக நாடுகள்” …. உயிர்பலியை தடுக்க போராட்டம் ..!!

சீனாவில் பரவி வந்த சார்ஸ் வைரஸ் நோய் தற்போது அமெரிக்காவிலும் பரவி  வெளியாகியுள்ளது.. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான  கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய்  மற்ற நாடுகளுக்கு  பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#ரஜினியாவது_மயிராவது… சூப்பர்ஸ்டாருக்கே இப்படியா… கதிகலங்கிய ரசிகர்கள்..!!

பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று நடிகர் ரஜினி தெரிவித்ததை தொடர்ந்து தற்போது #ரஜினியாவது_மயிராவது என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட்டாகி வருகின்றது. அண்மையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை அமலாபாலின் தந்தை காலமானார்..!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் இன்று கேரளாவில் காலமானார். பிரபு சாலமன் இயக்கிய  ‘மைனா’ திரைப்படத்தின் மூலம்  மிகவும் பிரபலமானவர் தான் நடிகை அமலாபால். இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது என்று உறுதியாக சொல்ல முடியும்.  இப்படத்தை தொடந்து, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த அமலாபால் , விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் ‘ஆடை’ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடும் வயிற்று வலி… மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை!

வேதாரண்யம் அருகே வயிற்று வலியால் கடும் அவதிப்பட்டு வந்த  மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு அருகேயுள்ள தென்நடார் கிராமத்தில் வசித்து வரும்   மாணிக்கம் என்பவருக்கு அம்மாகண்ணு (வயது 60) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்படும். இதனால் அவதிப்பட்டு வந்த அம்மாகண்ணு மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்  வி‌ஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ திரும்பப் பெறப்படமாட்டாது – அமித்ஷா திட்டவட்டம்.!

போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக இன்று பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் பாஜகவின் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியினர்  ஆட்சியில் இருந்தவரை ராமர் கோவிலை கட்டுவதற்கு தங்களால் முடிந்தவரை பல்வேறு வழிமுறைகள் மூலமாக காலத்தை கடத்திவந்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள் அயோத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஏலத்துக்கு வரும் நீரவ் மோடியின் சொத்துகள்..!!

வங்கி மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் சொத்துகளை ஏலத்தில் விற்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதனைத் திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். பின்னர், அமலாக்கத் துறையினர் கொடுத்த புகாரின்பேரில் அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர […]

Categories
மாநில செய்திகள்

வேலம்மாள் குழுமத்தில் அதிரடி சோதனை..!!

வேலம்மாள் கல்விக் குழுமத்திற்குச் சொந்தமான 50 இடங்களில் வருமான வரித் துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, மதுரையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள், பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, நர்சிங் மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் வேலம்மாள் அறக்கட்டளையின் கீழ் இயங்கிவருகின்றன. வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தலைவராக எம்.வி. முத்துராமலிங்கம் இருந்துவருகிறார். இந்தக் கல்வி குழுமங்களில் மாணவர் சேர்க்கையின்போது அதிக நன்கொடை வாங்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவ்வாறு […]

Categories
இந்திய சினிமா சினிமா

அமிதாப் பச்சனின் ‘ஜுந்த்’ – டீசர் வெளியீடு..!!

அமிதாப் பச்சன் நடிப்பில் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கும் ‘ஜுந்த்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் பிரபல இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கும் படம் ‘ஜுந்த்’. ஸ்லம் சாக்கர் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்திவந்த விஜய் பார்சே என்பவரது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில் விஜய் பார்சே கதாபாத்திரத்தில் சீனியர் பச்சன் நடிக்கிறார். ஆகாஷ் தோஸர், ரிங்கு ராஜ்குரு உள்ளிடோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கால்பந்து விளையாட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுப்பு

சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் 8 வயது சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவர் படிக்கும் பள்ளி உள்பட பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததையடுத்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிறுமியைத் தேடி வந்த காவல்துறையினர், சிறுமியை சடலமாக அக்கிராமத்தின் அருகிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. கொடூரனை அடித்து உதைத்த பொதுமக்கள்..!!

பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண். காவல் துறைக்குச் செல்லும் முன்னரே பொதுமக்கள் குற்றவாளியை சரமாரியாகத் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்துவந்த நபரை பெண் காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து சுனிதா தாகா என்னும் காவல் அலுவலர் கூறுகையில், ஹரியானா மாநிலத்தில் பம்மி சௌக் பகுதியில் வசிக்கும் பவன் என்னும் நபர் அப்பகுதியில் பள்ளிக்குச் செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

‘விலங்குகள்போல குழந்தைகள் பெற்றுக்கொள்வது நாட்டுக்கு தீங்கு’!

விலங்குகளைப்போல் குழந்தைகளைப் பெற்றெடுப்பது நாட்டுக்கு தீங்கானது என்று உத்தரபிரதேச மாநிலத்தின் ஷியா வக்பு வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி கூறியுள்ளார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நாட்டின் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் புதிய திட்டம் குறித்து யோசனை கூறியதையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தின் ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி இதுகுறித்தான தனது கருத்தினை பகிர்ந்தார். அதாவது விலங்குகளைப்போல் மக்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது நாட்டிற்கு தீங்கானது என்று வாசிம் ரிஸ்வி கூறினார். சிலர் […]

Categories
தேசிய செய்திகள்

நெகிழி ஒழிப்பில் ஆந்திர மாணவர்கள் சாதனை!

நெகிழிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் எடுத்து ஆந்திர மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த நவீன காலகட்டத்தில் மாசுவின் மறுவுருவமாக நெகிழி பார்க்கப்படுகிறது. ஆனால், அதனைச் சரியாகக் கையாண்டால், அது அதிசயமாக மாற வாய்ப்புள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா கே.பி.என். கல்லூரியில் பயிலும் மூன்று முதுகலை மாணவர்கள் நெகிழிக் கழிவுகளை கச்சா எண்ணெய்யாக மாற்றிவருகின்றனர். அவர்களின் முயற்சி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. பி.வி.சி. நெகிழிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வெளிப்படும் நீராவிகளிலிருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றனர். 2 […]

Categories
மாநில செய்திகள்

#மன்னிப்பு_கேட்க_முடியாது…. உலகளவில் மாஸ் காட்டும் சூப்பர்ஸ்டார் ரஜினி.!!

ரஜினிகாந்த் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியநிலையில் தற்போது #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற ஹேஸ்டேக் உலகஅளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.  துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் ரஜினிக்கு எதிராக காவல் […]

Categories
மாநில செய்திகள்

பத்தாம் வகுப்பு பயிலும் 4 மாணவிகள் மாயம்.!

பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற பத்தாம் வகுப்பு பயிலும் நான்கு மாணவிகள் மாயமான சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் மாணவிகளில் நான்கு பத்தாம் வகுப்பு மாணவிகள் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்குச் சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் பள்ளி முடிந்து இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களது பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“விஷயம் தெரியாமல் பேசி மாட்டிக் கொள்கிறார் ரஜினி”… உதயநிதி ஸ்டாலின்!

நடிகர் ரஜினிகாந்த் விஷயம் தெரியாமல் பேசி மாட்டிக் கொள்கிறார் என்று நக்கல் செய்யும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.       துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நண்பர் ரஜினி அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்… சிந்தித்து பேசவேண்டும்… ஸ்டாலின் அட்வைஸ்.!

பெரியாரை பற்றி பேசும்போது யோசித்து சிந்தித்து பேசவேண்டும் என்று  நண்பர் ரஜினிக்கு  முக ஸ்டாலின் வேண்டுகோள்  விடுத்துள்ளார். துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் ரஜினிக்கு எதிராக காவல் நிலையங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

பேரறிவாளன் விடுதலை வழக்கு: அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேரறிவாளன் விடுதலை தாமதமாவது தொடர்பாக இன்னும் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார். பேரறிவாளன் தந்தையின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு, ஒரு மாதம் பரோல் வழங்கிய நீதிமன்றம் பின்னர் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்தது. பரோல் முடிந்து ஜனவரி 12ஆம் தேதி அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பினார். இதனிடையே, தன் தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சாய்பாபா பிறப்பிடம் பாத்ரி என அறிவிக்கப்படாது – உத்தவ் உறுதி

சாய்பாபாவின் பிறப்பிடமாக பாத்ரி கிராமம் அறிவிக்கப்படாது என உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளதாக சிவ சேனா மூத்தத் தலைவர் கம்லாகார் கோதே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஜனவரி 9ஆம் தேதி அமைச்சரவை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், சாய்பாபாவின் பிறப்பிடமாக பாத்ரி கிராமத்தை அறிவித்து அதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சாய்பாபாவின் பிறப்பிடம் ஷிரடிதான் எனக் கூறி அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, காலவரையற்ற பந்த்தையும் அறிவித்தனர். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில், சிவ […]

Categories
தேசிய செய்திகள்

திப்பு சுல்தான் வரலாறு குறித்த சரச்சை – அமைச்சர் விளக்கம்..!!

 பள்ளிப் புத்தகங்களில் உள்ள திப்பு சுல்தான் குறித்த வரலாற்றில் எந்த மாற்றமும் செய்யப்படாது என கர்நாடக அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக திடமாகப் போராடியவர் திப்பு சுல்தான். இவரின் பிறந்தநாளை அரசு விழாவாக காங்கிரஸ் அரசு கொண்டாடியது. ஆனால், பாஜகவோ திப்பு சுல்தான் இந்துக்களைக் கொடுமைப்படுத்தியவர் என்றும் அவர் ஒரு தீவிரவாதி எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தது. இது பெரும் சர்ச்சையாக மாறியது. மேலும் பள்ளிப் புத்தகங்களில் உள்ள திப்பு சுல்தான் வரலாற்றை நீக்குவோம் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அந்தஸ்து பெற்ற நாள்… வாழ்த்து தெரிவித்த மோடி!

மாநில அந்தஸ்து பெற்ற நாளை கொண்டாடும் மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1972ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் மாநில அந்தஸ்தைப் பெற்று தனி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து அம்மாநிலங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ளார். அதில் மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். அதன்படி விளையாட்டு, இசையில் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

திரிபுரா எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!

ஏடிஎம் ஹேக் செய்த வழக்கின் விசாரணைக் கைதி சுசந்த கோஷின் மரணம் குறித்து சரியான விளக்கம் அளிக்காததால் திரிபுராவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை திரிபுரா சட்டப்பேரவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஏடிஎம் இயந்திரத்தை ஹேக் செய்த வழக்கின் விசாரணைக் கைதி சுசந்த கோஷின் மரணம் குறித்து முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், அச்சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள் கட்சி குறித்து பாத்து பேசுங்க – ஓவைசி காட்டம்.!

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.வுக்கு அக்பருதீன் ஒவைசி பதிலடி தந்துள்ளார். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான தலசானி ஸ்ரீநிவாஸ் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்தார். ஹைதராபாத்தில் மட்டும்தான் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி இயங்கிவருகிறது என அவர் தெரிவித்திருந்தார். இதற்கு அசாதுதீன் ஓவைசியின் சகோதரர் அக்பருதீன் ஓவைசி பதிலடி தந்துள்ளார். இதுகுறித்து அவர், உங்கள் நாவை அடக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே எழுதலாம்- அமைச்சர் செங்கோட்டையன்..!!

தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் எழுதலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும்  8ஆம்  வகுப்புக்கும்  நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேனாவை சரியாக பிடித்து எழுத தெரியாத வயதில் பொது தேர்வா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தேர்வு எழுதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 100 ஆணவக் கொலைகள் – செ.கு.தமிழரசன்.!

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 100 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக தனியார் புள்ளி நிறுவன விவரங்கள் தெரிவித்துள்ளது என்று இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறியுள்ளார். இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் வாலாஜாவில்  பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒருபக்கம் ஆதரவு போராட்டங்கள் ஆதரவு பேரணி கோலங்களும், மற்றொருபக்கம் எதிர்ப்புப் போராட்டங்களும் எதிர்ப்புகளும் பேரணி கோலங்கள் போடுகிற அளவுக்கு இந்த பிரச்சனை மக்கள் பிரச்சனையாக தேசிய […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் விலை சற்று உயர்வு… கவலையில் வாடிக்கையாளர்கள்..!!

இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்   தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தற்போது சென்னையில் 22 கேரட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் தவறாக கூறவில்லை… இது மறக்க வேண்டிய சம்பவம்… நிரூபித்து காட்டிய ரஜினி..!!

1971ல் நடந்த பேரணி குறித்து இல்லாத ஒன்றை பேசவில்லை என்றும், பத்திரிகைகளில் வந்ததை தான் நான் பேசினேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் இந்துக் கடவுள்கள் ராமர், சீதை ஆகியோரின் படங்களை அவமரியாதை செய்யும் விதமாக செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றார். இது பெரியாரிய ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஜினி முற்றிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சரவணன் அண்ணாச்சி நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்..!!

லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தயாரித்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகிள்ளது. தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சரவணன் அருளின் படம் குறித்தான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் பாடல்களை கவிஞர் பா. விஜய் எழுதுவதாக படக்குழு அறிவித்தது. பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்தப் படத்தில் இணைந்தது குறித்து பா. விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பகிர்ந்தார். அதில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷனில் பணிபுரிய தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர்: மீண்டும் லீக்கான விஜய்யின் புகைப்படம் – அதிர்ச்சியில் படக்குழு!

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் புகைப்படம் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘பிகில்’ பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். ‘கைதி’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, சஞ்சீவ் என்று இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி மற்றும் ஷிமோகா போன்ற பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது […]

Categories
மாநில செய்திகள்

‘ஹைட்ரோ கார்பனுக்கு தமிழ்நாட்டில் அனுமதி தரமாட்டோம்’ – அமைச்சர் ஜெயக்குமார்..!!

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘ மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை. எதிர்காலத்தில் கொடுக்கவும் கொடுக்காது. மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டுவர முடியாது. கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறுவது, தூங்குவது போல் நடிப்பது போன்று […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : பவன் குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி… தூக்கு தண்டனை உறுதி..!!

நிர்பயா வழக்கில் பவன்குமார் குப்தாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இவர் மனுதாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாள்: ஏழைகளுக்கு உதவிட ஓபிஎஸ்-ஈபிஎஸ் வேண்டுகோள்!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது என அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான அதிமுகவின் அம்மா பேரவை ஆலோசனைக்கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதிமுக அம்மா பேரவை மாநிலச் செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரேம்ஜி படத்தில் பாடகி வைக்கம் விஜயலட்சுமி..!!

பிரேம்ஜி இசையமைக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் குரல் தமிழில் இறுதியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’ திரைப்படத்தில் ஒலித்தது. ‘லம்போதரா’ என்ற கன்னடப் படத்திலும் ‘கேடி’ என்ற பாடலை அவர் பாடியிருந்தார். இந்த நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி இசையமைக்கும் புதிய படத்தில் பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். பிரேம்ஜி தற்போது வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படத்திலும், […]

Categories

Tech |