முரசொலி பற்றி ரஜினி தவறாக கூறவில்லை என்றும் நமது அம்மாவை படியுங்கள் பொது அறிவு வளரும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை தமிழ்நாடு மக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். […]
Author: MM SELVAM
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103-ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினர். பின்னர், அமைச்சர் […]
ஜல்லிக்கட்டு போட்டியில் ஸ்ரீதர் என்பவர் தனது காளையுடன் நின்றுகொண்டிருந்தபோது மற்றொரு காளை அவரது வயிற்றில் முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 700 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று இரவிலிருந்தே அலங்காநல்லூர் கிராமத்திற்கு வருகைதந்தனர். வீரர்கள் காளைகளை அடக்குவதை பொதுமக்கள் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர். இளைஞர் உயிரிழந்த சோகம் இந்நிலையில், சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த […]
ஹோபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு சானியா மிர்சா – நடியா கிச்னோக் ஜோடி முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஹோபர்ட் நகரில் மகளிருக்கான ஹோபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – நடியா கிச்னோக் ஜோடி பங்கேற்றது. அரையிறுதிப் போட்டியில் ஸ்லோவேனியாவின் தமாரா ஸிடான்செக் – செக்குடியரசு மேரி மேரி போஸ்கோவா ஜோடியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் செட் ஆட்டம் ஆட்டத்தில் இரு ஜோடிகளும் […]
உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள குல்தீப் செங்காரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் அபராதத் தொகையை 2 மாதத்தில் கட்டவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தண்டனை பெற்ற குல்தீப் செங்காரின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வசித்த சிறுமியை, அப்போதைய பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த […]
திருச்சியில் துப்பாக்கியால் சுட்டு, துப்பாக்கி சுடும் வீரர் உயிரிழந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையம் அருகே சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் சசிகுமார் (30). இவர் துப்பாக்கி சுடும் வீரராவார். சசிகுமார் சொந்தமாக ரைபிள் கிளப் வைத்து நடத்தி, பலருக்கும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து […]
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டி எம்ஜிஆர் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செய்தார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் […]
அரசின் திட்டங்கள் குறித்து முப்படைத் தலைமைத் தளபதி கருத்து கூறியிருப்பது மக்களாட்சியை கேள்விக்குறியாக்குகிறது என ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பு இணைந்து நடத்தும் ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர், பயங்கரவாதத்தை நோக்கிச் செல்லும் இளைஞர்களை மீட்கும் வகையில் விழுப்புணர்வு மையங்கள் தொடங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை விமர்சித்து […]
தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை (NPR) கேரளாவில் மேற்கொள்ளக் கூடாது என அம்மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு கேரள அரசு சார்பில் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை (NPR) கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள கேரள அரசு, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, கேரள அரசு தலைமைச் செயலர் கே.ஆர். ஜோதிலால் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், “2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது […]
காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய இடங்களில் 10 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. காணும் பொங்கலை ஒட்டி, சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மெரினா கடற்கரையில் 5 ஆயிரம் காவல் துறையினரும், இதர மக்கள் கூடும் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க தடை விதித்தும், படகு சவாரி […]
ரஷ்யாவின் புதிய பிரதமராக அந்நாட்டின் முக்கிய வரி அதிகாரியான மைக்கல் மிஷூஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்யா பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக மைக்கல் மிஷூஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பமாக, கடந்த புதன்கிழமை (ஜனவரி 15) பிரதமர், அமைச்சர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் கூண்டோடு ராஜினமா செய்தது. இந்த ராஜினாமா முடிவு அந்நாட்டு அதிபர் புதினின் உத்தரவின் பேரில்தான் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு புதினின் அதிபர் பதவிக்காலம் […]
தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் பிரபல இளம் நடிகையான ராஷ்மிகா மந்தனா வருமானத்திற்குப் புறம்பாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னடத் திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘டியர் காம்ரேட்’, மகேஷ் பாபுவுடன் ‘சரிலேரு நீக்கேவரு’, அல்லு அர்ஜுனுடன் ‘அல்லு வைகுந்தபுரமுலு’ படத்திலும் நடித்திருந்த இவர் […]
மேஷ ராசி அன்பர்களே….!!!! இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கை கொஞ்சம் குறையலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். பிள்ளைகளை இதமாக வழிநடத்துங்கள். சுற்றுச்சூழலினால் தூக்கம் கொஞ்சம் பாதிக்கும், டென்ஷன் வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை ஏற்படும். தொழில் பிரச்சினை ,குடும்ப பிரச்சினை, கல்வியில் தடை போன்றவை விலகி செல்லும். எதிலுமே உங்களுக்கு நன்மை ஏற்படும். தந்தையின் உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் முன்னேற்றம் காணப்படும் .பெண்களுக்கு எதிலும் தேவையற்ற […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அன்றாட பணிகளில் தடைகளும் தாமதங்களும் வந்து செல்லும். ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். பிரியமான சிலரிடம் யோசித்து பேசும் சூழ்நிலை ஏற்படலாம். இன்று தொழில் வியாபாரத்தில் பணம் தேவை ஏற்படும். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டியிருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும், கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். வாகனம் வாங்கும் […]
நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாணா’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள படம் ‘டாணா’. இதில் பாண்டியராஜன், யோகி பாபு, நந்திதா, ஹரிஷ் பெரேடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘டாணா’ என்பதற்கு போலீஸ் என்று பொருள். போலீஸ்காரர்களை டாணாக்காரார்கள் என அழைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்னும் சில பகுதிகளில் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், பாரம்பரிய போலீஸ் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், அடுத்த இரு போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதனை கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் பெரும் தோல்வி என ரசிகர்கள் கூறிவருகின்றனர். உலகின் தலைசிறந்த பந்துவீச்சுக் கூட்டணியை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிதறடித்தது இந்திய அணியின் மனஉறுதியைப் […]
2019ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கடைசியாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து விராட் கோலி பேசுகையில், ” உலகக்கோப்பைத் தொடரின் கடைசி 30 நிமிடங்களைத் தவிர்த்து பார்த்தால் 2019இல் இந்திய அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது” என்றார். அவர் கூறியதுபோல் இந்திய அணிக்கு கடந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், […]
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. நிர்பயா வழக்கில் உச்ச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனையை குற்றவாளிகளுக்கு உறுதி செய்தது. இதையடுத்து குற்றவாளிகள் நான்கு பேரும், குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர். இந்த மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார். இதையடுத்து குற்றவாளிகள் வினய் குமார் சர்மாவும், முகேஷ் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனுத்தாக்கல் செய்தனர். அதனையும் நீதிமன்றம் […]
மேஷம் ராசி அன்பர்களே…!! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை போல எதிரிகள் தவிடுபொடியாகும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று செயல்களில் சீர் திருத்தம் இருக்கும். தொழில் வியாபாரம் பெருகுவதற்கு கூடுதலாகவே பணிபுரிவீர்கள் பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். உறவினரின் ஆதரவால் நம்பிக்கை மேல்ஓங்கும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். இன்று சக […]
பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த போலி சிபிஐ அதிகாரி டிக்கெட் பரிசோதனையின் -போது பிடிபட்டார். சோழிங்கநல்லூரிலுள்ள உணவகத்தில் பணிபுரிந்துவருபவர் சந்திரபாபு (35). இவர் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் குடிபோதையில் நின்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஒருவர், தான் சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு சோதனை செய்து, சந்திரபாபு பாக்கெட்டிலிருந்த போதைப் பாக்கு, 7,500 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துள்ளார். பின்னர், போதைப் பொருள் வைத்துள்ளது குறித்து விசாரிக்க […]
85 வயது பாட்டி வேடத்தில் நடிக்கவில்லை. ஆனாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் தோன்றவுள்ளாராம் நடிகை காஜல் அகர்வால். ‘இந்தியன் 2’ படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களைத் தெரிவித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். மும்பையில் நடைபெற்ற சர்வதேச புகழ் சுப்பிரமணியன் கோபால்சாமி, ஞானதீக பொன்னுசாமி ஆகியோரின் ஓவியக் கண்காட்சிக்கு வருகைதந்தார் நடிகை காஜல் அகர்வால். அப்போது பத்திரிகையாளர்களிடம் உரையாடினார். அப்போது ‘இந்தியன் 2’ படத்தில் 85 வயது மூதாட்டியாக நடிப்பதாக உலாவரும் தகவல்களுக்கு அவர் […]
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிச்சை எடுப்பதற்காக குழந்தையை கடத்திய தீபக் மண்டல் என்பவரை ரயில்வே காவல் துறையினர் 24 மணி நேரத்தில் கைது செய்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜீனா என்பவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜன 12ஆம் தேதி தனது இரண்டு வயது பெண் குழந்தை ரஷிதாவுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்து பார்த்தபோது குழந்தை ரஷிதாவை காணவில்லை. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக […]
முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கிறார். முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், சிறந்து வேகப்பந்துவீச்சாளருமான ஜுலன் கோஸ்வாமி 2008-2011 காலகட்டத்தில் பெண்கள் கிரிக்கெட் அணியை சிறந்த முறையில் வழிநடத்தியுள்ளார். விளையாட்டுத் துறையில் சாதனை படைத்ததற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளான அர்ஜுனா, பத்மஸ்ரீ விருது உள்பட பல விருதுகளையும் ஜுலன் பெற்றுள்ளார். இந்த நிலையில், ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை […]
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை குறைந்த விலையில் விற்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலுள்ள மார்க் தனியார் துறைமுகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தலைமையிலான புதுச்சேரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு இன்று ஆய்வு மேற்கொண்டது. துறைமுகத்தின் மாசு கட்டுப்பாடு, உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்களை இந்தக் குழு ஆய்வு செய்தது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மதிப்பீட்டுக் குழுத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பழகன், “புதுச்சேரி […]
பொங்கல் அன்று நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு நெரிசல் இன்றி நிற்பதற்கு போதுமான ஏற்பாடுகளை மாநகர காவல் துறை செய்துள்ளது. மதுரை மாவட்டத்தின் அடையாளமாகத் திகழும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் காளைகள் பங்கு பெறுவதற்கு ஏதுவாக தேவையான ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் துறை செய்துள்ளது. அதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “காளைகள் நெரிசல் இன்றி செல்வதற்கும் காளைகள் கூடுவதற்கும் அவனியாபுரம் காவல் நிலையத்திலிருந்து முத்துப்பட்டி திருப்பரங்குன்றம் […]
மதுரை செல்லும்முன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்தார். இன்று (ஜனவரி 14) பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேற்று அதிமுக தொண்டர்கள், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தபின் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் […]
பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு கண்டிப்பாக செயல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் நிதீஷ்குமார் பிகார் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். பிகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்துவது குறித்து எந்தக் கேள்வியும் இல்லை என்று கூறிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் என்றார். இது குறித்து பிகார் சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார், “பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த எந்தக் கேள்வியும் இல்லை. அது அஸ்ஸாம் மாநிலத்திற்கு […]
குரங்கிடம் கடி வாங்கி கடுமையாக காயம்பட்டாலும், தைரியமாக மீண்டும் படப்பிடிப்பில் நடித்த சுவாரஸ்யக் கதை பற்றி கூறியுள்ளார், நடிகை சல்மா ஹயேக். குரங்கிடம் கடிவாங்கி காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார், ஹாலிவுட் நடிகை சல்மா ஹயேக். அமெரிக்காவில் பிரபல பத்திரிகையான வோக், 53 வயதாகும் சல்மா ஹயேக்கின் மிகவும் சிறப்பான ஃபேஷன் தருணங்களைக் குறிப்பிடும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் 1996ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தனது 13 வித்தியாசமான தோற்றங்கள் குறித்து […]
இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மீது மோசடிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனைக் கட்டுரையாளர் டாக்டர். எஸ். ஆனந்த் விவரிக்கிறார். வணிகங்கள் தனது அன்றாட செயல்பாட்டில் பல அபாயங்கள், சிக்கல்கள், சவால்களை எதிர்கொள்கின்றன. இதில் பலவும் அவற்றின் லாபம், இழப்பு அல்லது அவற்றின் இருப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எதிர்பார்ப்பு வழக்கமாக ஆரம்பத்தில் எந்தவொரு வணிகமும் அபாயங்களுடன் மட்டுமின்றி அவற்றின் சாத்தியமான லாபங்கள், இழப்புகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்துகள் பொதுவாக அவற்றின் பல செயல்பாட்டு […]
மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள் ஆக இருக்கும். வளர்ச்சி கூடும், வாய்ப்புகள் வந்து சேரும், வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும், கல்யாணக் கனவுகள் நனவாகும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று விழிப்புடன் இருப்பது எப்போதுமே நல்லது. சுப செலவுகள் கொஞ்சம் இருக்கும், கையிருப்பு கரையும், தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். நண்பர்களுடன் சுமுகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் […]
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், கிரெனேடாவில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி/எல் முறைப்படி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் […]
தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இனப்பெருக்கம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மாநிலத்திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ” 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உடல் நலம், மன நலம், பழகும் தன்மை, தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம், ஆசிரியர் மாணவிகள் உறவு […]
எனது டெஸ்ட் பேட்டிங் மாற்றத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடியின் அறிவுரையே காரணம் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பிசிசிஐ சார்பாக விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான முன்னாள் , இந்நாள் வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் மன்சூர் அலி கான் பட்டோடியின் ஏழாவது நினைவு தினத்தையொட்டி சேவாக் உரையாற்றினார். அதில், ” பட்டோடி நினைவு […]
குருக்ஷேத்திரத்தில் உள்ள இளைஞர்கள் குழு பைகளை கொண்டு ஆமை பொம்மையை உருவாக்கி பிளாஸ்டிக்குகளை தவிர்க்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் உள்ள இளைஞர்கள் குழு ஒன்று 87 ஆயிரத்தி 297 பிளாஸ்டிக் பைகளை கொண்டு ஆமை பொம்மையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை தவிர்க்குமாறு அக்குழு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட அந்த ஆமையின் உயரம் 6.6 அடியாகும். நீளம் 23 ஆடியாகும். குருக்ஷேத்திராவை சேர்ந்த மாணவி ரிது, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் […]
ஏ.டி.எம். கண்ணாடியை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் நள்ளிரவு ஒரு மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள எஸ் வங்கியின் ஏ.டி.எம். வாயில் கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துள்ளார். அதனைப் பார்த்த ஏ.டி.எம். இரவுப்பணி காவலாளி அவரைப் பிடித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலை நடைமேடையில் வசிப்பவர் என்றும் அவரது பெயர் […]
சென்னையில் மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 152 குறைந்து ரூ 30,408 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமிற்கு ரூ 19 குறைந்து ரூ 3,801க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து 50.40_க்கு விற்பனை செய்யபடுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு திரும்ப வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாக இலங்கை முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரனை ஓய்வு பெற்ற நீதிபதிகள் எ.கே. ராஜன், சண்முகம், அக்பர் அலி, அரிபரந்தாமன் ஆகியோர் சந்தித்து பேசினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், “எங்களைப் பொருத்தவரை இலங்கையில் இருக்கும் 10 லட்சம் மக்கள் போரின் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் […]
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை […]
மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று எதிர்பார்த்த காரியம் வெற்றியை கொடுக்கும். சந்தோஷத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி ரொம்ப சிறப்பாக நடக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். மனைவியின் அன்பினால் மகிழ்வீர்கள்.இன்று தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் கொஞ்சம் ஏற்படக்கூடும். நண்பர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனமாக இருங்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். தொழில் வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உருவாகும். தொழில் வியாபாரத்தில் […]
ஈராக் விமானப்படை தளம் மீது அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது. […]
மத்திய அரசின் நலத்திட்டங்கள் இடைத்தரகர்களை ஒழிப்பதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அத்திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். கொல்கத்தா துறைமுக அறைக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, “ஆயுஷ்மான் பாரத், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி போன்ற திட்டங்களை மேற்கு வங்க மாநில அரசு அனுமதிப்பதில்லை. அவ்வாறு அனுமதித்தால் […]
“பிடிக்காத நபரிடம் ஒதுங்கி அமைதியாக இருப்பேன்” என்று முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி ஒரு பள்ளி மாணவியின் கேள்விக்கு கூலாக பதிலளித்த வீடியோ காட்சி வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி கடந்த சில ஆண்டுகளாக பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்து வந்தார். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்த்தும் குரல் கொடுக்காமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் நேரு வீதியில் உள்ள பஜார் பகுதியில் தனது நண்பரின் தனியார் வாட்ச் கடையில் தனது நேரத்தை கழித்துவரும் ரங்கசாமியிடம் […]
இந்திய அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனியைப் போல் ஆட்டங்களை வெற்றிகரமாக முடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன் முதல் போட்டி வரும் 14ஆம் தேதி மும்பை வான்கடேவில் தொடங்கவுள்ளது. இதற்காக அந்த அணியின் துணை கேப்டன் அலெக்ஸ் கேரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஒருநாள் போட்டிகளை வெற்றிகரமாக முடிப்பதற்கு எம்.எஸ்.தோனியைப் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும். […]
ஜேஎன்யுவில் இயல்பு நிலை திரும்பவில்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 5ஆம் தேதி மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் தாக்கப்பட்டனர். இதற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் முதல் நாடு முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தாக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக அக்கட்சியின் மகளிரணி […]
பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் செய்தி மையம் பதிப்பகம் நடத்தி வந்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் […]
கனடா நாட்டுப் பெண்ணுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸ்பின். சிறுகதை எழுத்தாளரான இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்நிலையில் இவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த வைபவ் என்பவரும் ஃபேஸ்புக் மூலமாக பழகி, காதலித்து வந்தனர். இதனிடையே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தங்களுடைய பெற்றோர்களின் சம்மதத்தையும் பெற்றனர். இதனையடுத்து இவர்களின் […]
பத்திரிகையாளர் அன்பழகனை கைது செய்ததற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவரும், மக்கள் செய்தி மய்யம் ஆசிரியருமான அன்பழகன் சென்னையில் நடைபெற்றுவரும் புத்தக திருவிழாவில் அரங்கு 101இல் அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தகுந்த ஆதாரங்களுடன் கூடிய ஆவண புத்தகம் ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது காவல்துறை பொய் வழக்கு […]
உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆனபோது, ”நான் ஏன் டைவ் அடிக்கவில்லை” என தன்னை கேட்டுக்கொண்டதாக தோனி தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. அதன் கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி ரன் அவுட்டாகியது ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த ரன் அவுட் இந்தியாவின் உலகக்கோப்பைக் கனவையும் சுக்குநூறாக்கியது. அதையடுத்து தோனியும் […]
குடிக்க வெந்நீர் கேட்டதற்கு ராணுவ வீரர் கொதிக்கும் நீரை கொண்டுவந்ததால் ஆத்திரமடைந்த டிஐஜி, கொதிக்கும் நீரை வீரரின் முகத்தில் உற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் ராஜ்கீர் மாவட்டத்தில் குடிக்க வெந்நீர் கேட்ட சிஆர்பிஎஃப் டிஐஜி டி.கே. திரிபாதிக்கு, கொதிக்கும் நீரை அங்கு ராணுவ உணவகத்தில் இருந்த வீரர் வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிஐஜி, அந்தக் கொதிநீரை ஊழியர் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில் முகம் மற்றும் உடம்பில் பயங்கர தீக்காயங்களுக்கு ஆளான அந்த ஊழியர், அருகிலிருந்த […]
குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சேத்துபட்டு ஹாரிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுமித் குமார் கல்ரா(49). இவர் உடற்பயிற்சி கூடத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இதனிடையே, இவர் குழந்தைகளின் ஆபாச படத்தின் இணையதள இணைப்பை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துவந்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர் சுமித் குமாரை தேடிவந்தனர். இந்நிலையில், டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த […]