‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தனது அடுத்த படமான ‘ஜோஸ்வா இமை போல் காக்க’ படத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார், இயக்குநர் கௌதம் மேனன். மூன்று வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவரயிருக்கிறது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம். பல தாமதங்களுக்குப் பின் இத்திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தின் வெளியீட்டுப் பணிகள் நிறைவடைந்ததும், அடுத்தப் படமான ‘ஜோஸ்வா இமை போல் காக்க’ […]
Author: MM SELVAM
சிறு வயதில் மெலிதான தோற்றத்துக்காக கேலிக்கு ஆளாகி, மனம் நொந்ததாக நடிகை இலியானா சர்வதேச அமைப்பு ஒன்றில் தெரிவித்தார். தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை இலியானா. அதற்குப் பின் தமிழில் நடிக்காமல் தெலுங்கில் நடித்து வந்தார். பின் 2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘நண்பன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை ஒல்லி பெல்லி இடுப்பால் கவர்ந்திழுத்தார். இதையடுத்து வேறு எந்தத் தமிழ் திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை. இந்தியில் மட்டுமே ஆர்வமாய் நடித்து வந்தார். இந்தியிலும் தொடர்ந்து […]
சமூக வலைதளங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராம் மீது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து கோயில்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள், அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மேலும் இந்து அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், பல்வேறு […]
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை போட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தரையிலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் நான்கு நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். […]
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என குஜராத் முன்னாள் டிஜிபி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில், பங்கேற்றுள்ள பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் பேசுகையில், திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரிக்கை எதுவும் தமிழ்நாடு அரசிடமிருந்தோ அல்லது மற்ற அமைப்புகளிடம் இருந்து வரப்பெற்றதா எனவும், அவ்வாறு வந்திருந்தது எனில் அதுகுறித்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்து பேசிய மனித வள மேம்பாட்டுத் துறை […]
உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”தமிழ்நாட்டிலுள்ள 15 மாநகராட்சிகளுக்கான மேயர்கள், 276 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் ஆகியவைகளுக்கான தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது இப்பதவிகளுக்கு […]
மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்துள்ளார். சென்னை, அண்ணா நகரில் மலைவாழ் மக்களுக்கான புதிய திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மலைவாழ் மக்கள் மலைகளில் கிடைக்கும் வளங்களை விற்பனை செய்து பயனடையும் வகையில், ‘வந்தன் விகாஸ் கேந்திரம்’ […]
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சேலம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 4ஜி சேவையை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு உரிய தேதியில் மாதச் சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சேலம் […]
கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.இதில் அலெக்ஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியதால், விசைப்படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இதையறிந்த மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி இந்திய […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய பணி நிறைவேறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். இதனால் சிறு வேலைகளை நினைவுபடுத்தி நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். அடுத்தவர் பார்வையில் அதிக பணம் செலவழிக்க வேண்டாம். இன்று பணவரவு ஓரளவு இருக்கும். மனதில் தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் நீங்கள் சமாளிக்க கூடிய திறமை உங்களிடம் வெளிப்படும். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது மட்டும் அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்த கூடும். பொது இடங்களில் மட்டும் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபார நடைமுறை சுமாராகத்தான் இருக்கும். பணவரவு சராசரி அளவில் இருக்கும். சுற்றுப்புற தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் தாமதமாகலாம். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது மட்டும் அவசியம். தொழில் வியாபாரத்தில் இருந்த […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். வாழ்வில் எதிர்கொண்ட சிரமங்களை பற்றிய சிந்தனை குறையும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவதுபடி நடந்துகொள்வது நன்மையை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணம் வரும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்கள். இன்று மாணவர்களுக்கு புதிய […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று செயல்கள் வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். நண்பர் தேவையான உதவியை மனமுவந்து வழங்குவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகவே இருக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் இருப்பவர்களுடன் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனையை சொல்லக்கூடும். அவப்பெயர் வராத வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதமும் ஏற்படும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதி பெற உதவும். இன்று பயணங்களின் போதும் வாகனத்தில் செல்லும்போதும் எச்சரிக்கையாகவே இருங்கள். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உருவாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு வழியேசென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். அரசியல் துறையினர் மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களை சிலர் புகழ்ந்து பேசக்கூடும். புகழ்ந்து பேசுபவரிடம் கொஞ்சம் விலகியே இருங்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய […]
கன்னிராசி அன்பர்களே..!! இன்று பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். இன்று நட்பு வட்டம் விரிவடையும். வாழ்வில் இருந்த குறுக்கீடுகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரங்களில் அனுகூலத் தீர்வு வந்து சேரும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று எதிலும் பயம் கொஞ்சம் இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் போன்றவை ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரண கோளாறு போன்ற ஏதாவது […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள். உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. சின்ன சின்ன செலவுகளை […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சிரமங்களை தாமதமின்றி சரிசெய்யவும். நல்லவர்களின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும். அதிக உழைப்பினால் பணவரவு சீராகும். வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் சங்கடமான சூழ்நிலை உருவாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டுமென்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலனை கொடுக்கும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் மங்கலம் நிறைந்திருக்கும். தொல்லை கொடுத்தவர் இடம் மாறுவார். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். அதிக பண வரவில் சேமிப்பு கூடும். அரசாங்கம் தொடர்பான உதவிகளும் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறி செல்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். கலைத் துறையைச் சார்ந்த தொழிலுக்கு புதிய […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! உங்கள் குடும்பத் தேவைகள் இன்று அதிகரிக்கும். மற்றவரை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் தர வேண்டாம். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராக இருக்கும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் இருக்கட்டும். இன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைபிடிப்பது பிரச்சினை வராமல் தடுக்கும். பணவரவு சீராக இருக்கும். இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண்கள் எடுப்பதற்கு உதவும். எதையும் சமாளிக்கும் திறமை […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று மனம் அமைதியாகவே காணப்படும். சாந்த குணத்துடனே பேசுவீர்கள். செயல்களில் வெற்றியும் இருக்கும். தொழில் வியாபாரம் அபரிதமான அளவில் வளர்ச்சி உருவாகும். தாராள அளவில் பணவரவு இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்கள் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. சக […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று மனம் அமைதியாகவே காணப்படும். சாந்த குணத்துடனே பேசுவீர்கள். செயல்களில் வெற்றியும் இருக்கும். தொழில் வியாபாரம் அபரிதமான அளவில் வளர்ச்சி உருவாகும். தாராள அளவில் பணவரவு இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்கள் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. சக […]
சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடியில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி, சிபிஐ தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கின் விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் சாரதா சிட்பண்ட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். 17 லட்சம் பேரிடமிருந்து சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை […]
திமுகதான் அதிமுகவுக்கு நிரந்தர எதிரி எனவும், ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் உதிரி எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சார்பில் அலுவல் ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “விளம்பரத்திற்காக ஆடிட்டர் குருமூர்த்தி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குறித்து இழிவாகப் பேசியுள்ளார். அவருக்கும் அதிமுகவிக்கும் எந்த தொடர்பும் இல்லை. குறிப்பாக, அதிமுக குறித்த தனிப்பட்ட நபர்களின் கருத்துகளை நாங்கள் மதிப்பதும் […]
இயக்குநர் பா. இரஞ்சித் இந்தியில் இயக்கயிருக்கும் புதிய வரலாற்று படத்தின் அப்டேட்டை படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது. பல நாட்களுக்கு முன் இயக்குநர் பா. இரஞ்சித் தான் இயக்கப்போவதாக அறிவித்திருந்த, சுதந்திரப் போராட்ட வீரர் பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளி வந்துள்ளது. இப்படம் இந்தியில் வெளிவருவது மட்டுமல்லாது, பல மொழிகளிலும் வர இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. இப்படத்தினை ஷரீன் மன்த்ரி கேடியா தயாரிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முதல் தொடங்கி நடக்கும் […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட, திருநங்கை என்ற சொல்லை அனைத்து அரசு ஆவணங்களிலும் நீக்கிவிட்டு, மூன்றாம் பாலினத்தவர் என்று அரச மாற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு அவல நிலையான வாழ்க்கையை திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர். சினிமாவிலும் நிஜத்திலும் கேலிக்குரிய பொருளாகவே அவர்கள் பாவிக்கப்பட்டனர். அவர்களை அங்கீகரித்து காட்சிகள் வைக்கும் படங்களும் சொற்பமே.இந்த சூழலில், சொல்லவே நா கூசும் இழி சொற்களைக் கொண்டு அவர்களை அழைக்கும் பெயர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை […]
ஒட்டன்சத்திரத்தில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழும் குழந்தையைக் கால தாமதமின்றி 30 நொடிகளில் மீட்க புதிய கருவியைக் கண்டுபிடித்து, விவசாயி அசத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீரங்கன் புதூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் விவசாயத்தை பிரதானத் தொழிலாக செய்து வருகிறார். தமிழ்நாட்டையே உலுக்கிய மணப்பாறை சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி, உயிரிழந்த சம்பவத்தையடுத்து, குழந்தையைக் காப்பற்றும் விதமாக 30 நொடிகளில் குழந்தையின் கையைப் பிடித்து தூக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். குறிப்பாக, மின்மோட்டார் மூலம் இயங்கும் […]
11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியையைக் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்ற மகளும், தாம்ஆண்ட்ரூஸ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஐஸ்வர்யா, மாடியில் […]
வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற மாபெரும் கந்தூரி விழாவில், மதப் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பெரிய பள்ளி வாசலில் வருடந்தோறும் ரபியுல் அவ்வல் மாதத்தில், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில், வேடசந்தூர் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கூட்டாக நன்கொடை வழங்கி 2,300 கிலோ கிராம் அரிசியில் சமையல் செய்து, அனைத்து மத மக்களுக்கும் காலை முதலே பிரியாணி […]
புதுக்கோட்டையில் பேத்தியின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட சென்ற தம்பதியினரின் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புதூரைச் சேர்ந்தவர்கள் அடைக்கலம் (65), ராஜாமணி (50) தம்பதியினர். இருவரும் பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்காக புதூரில் இருந்து குறுக்கப்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது புல்வயல் – காந்துப்பட்டி பிரிவுரோடு அருகே சென்றபோது, அடைக்கலத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவரால், […]
இலங்கையில் இருந்து கடத்தி வந்த அரிய வகை ஆமைகள், விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள், தாங்கள் எடுத்து வந்த உடைமைகளில் ஆமைகளை மறைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆமைகளைக் […]
அமெரிக்க கடற்படை செயலர் ரிச்சர்ட் ஸ்பென்சரை அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்துள்ளார். அமெரிக்க கடற்படையில் ( NAVY SEAL) பணிபுரிந்து வரும் அலுவலர் எட்வர்ட் கேலர். இவர், 2017ஆம் ஆண்டு ஈராக்கில் பணியமர்த்தப்பட்டார். அப்போது, ஒரு பிணத்தின் அருகே நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எட்வர்ட் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு வரும் டிசம்பர் 2ஆம் தேதி விசாரணை நடைபெறவிருந்தது. இந்நிலையில், எர்வர்ட் […]
கென்யாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, கென்யாவின் மேற்கு பொக்கோட் மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக […]
இத்தாலியின் லிகுரியா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்தது. இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் சவோனா கடற்கரை நகர் அடுத்த லிகுரியா பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்ட பயங்கர அதிர்வால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஒரு கார் சிக்கியிருக்கலாம் என லிகுரியா தலைவர் ஜியோவானி டோடி தெரிவித்தார். ஆனால், இந்தத் தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.அந்தப் பாலத்தை பராமரித்து வந்த […]
அமெரிக்கா தொடுத்த அணு ஆயுத தாக்குதலிலிருந்து உயிர்ப் பிழைத்த நாகசாகிவாசிகளை சந்தித்துப் பேசிய போப் பிரான்சிஸ், அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது ஒரு குற்றம் எனத் தெரிவித்துள்ளார். போப் பிரான்சிஸ் நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அணு ஆயுதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நாகசாகி நகரங்களிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கிய பிரான்சிஸ், ஆயிரக்கணக்கான மக்களோடு அணு ஆயுதத்திற்கு எதிராகப் பேரணி சென்றார். பின்னர் கூட்டத்தில் பேசிய பிரான்சிஸ், ” அணு ஆயுதத் தாக்குதலால் நொடிப்பொழுதியில் அனைத்தும் படுகுழிக்குள் தள்ளப்பட்டன. […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டு : 329_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 330_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 36 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 885 – வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர். 1034 – இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான். 1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான். 1343 – திரேனியக் கடலில் நிலநடுக்கம் […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பெரிய மனிதர்கள் சகவாசத்தால் நல்லது நடக்கும். அரசின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசல் கதவை வந்து தட்டும். புகழ் ஓங்கி நிற்கும். விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். உழைப்பு கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும். மனம் ஆனால் சோர்வாக இருக்கும். கூடுமானவரை நீங்கள் இன்று சரியான நேரத்திற்கு மட்டும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்றைய நாள் உங்களுக்கு கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்கும். சோதனைகளையும் சாதனைகளாக இன்று மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரம் விருத்தியாக கடினமாக உழைப்பீர்கள். இன்று மாணவர்கள் படிப்பில் மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும். இன்று வசிக்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். தேவையான வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். தேவையான நிதியுதவி கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். அந்த பயணம் அலைச்சலை […]
மகரம் ராசி நண்பர்களே..!! இன்று நுட்பமான வேலையை சிறப்பாக செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. கூடுமானவரை பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பயணத்தின் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். அனைவரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். ஆன்மீக செலவுகள் அதிகமாகும். காரியத்தில் இருந்த தடை தாமதம் விலகிச்செல்லும். ஆனாலும் எந்த காரியத்தையும் செய்து முடிக்க கூடுதலாகத்தான் நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும். அந்நிய மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் […]
தனுசு ராசி அன்பர்களே..!! பிள்ளைகள் மேல் பாசம் இன்று அதிகரிக்கும். காரியம் யாவினும் கை கொடுப்பாள் மனைவி. மனைவி மூலம் உங்களுக்கு தனலாபம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று நல்ல நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். மனம் உற்சாகமாக காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி படிப்பது அவசியம். காரியத்தில் இருந்த தடை தாமதம் விலகிச்செல்லும். வீண் அலைச்சல் மட்டும் கொஞ்சம் இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று அரசு வழியில் பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். பதவி உயர்வு கிடைப்பதன்மூலமாக அந்தஸ்து உயரும். மாணவக் கண்மணிகள் கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள். கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கையும் ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களையும் தீட்டுவீர்கள். […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு தாராளமாக கிடைக்கும். அனைத்து பாக்கியங்களும் இன்று உங்களுக்கு கிடைக்கும். தெய்வீக நம்பிக்கையால் வாழ்வில் சில திருப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும். இன்று காரியத்தில் இருந்த தடை தாமதம் விலகிச் செல்லும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் சரியாகும். பொருளாதார சிக்கல்களும் தீரும். அது மட்டுமில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தெளிவான சிந்தனை இருக்கும். எந்த ஒரு […]
கன்னிராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் பெண்களால் பணவிரயம் ஏற்படும். சரியான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். இடைவிடாத பணி காரணமாக வேலைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். எடக்கு மடக்காக பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். கூடுமானவரை பொறுமையை மட்டும் கையாளுங்கள். இன்று வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கிடைக்க கூடும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வந்து சேரும். வருமானம் நல்லபடியாகவே இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்குவீர்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு உற்சாகமான நாளாக […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! பிறருக்கு உதவிகள் புரிவதில் பெருமகிழ்ச்சி அடைவீர்கள். இன்று எதிர்பார்த்த தனவரவு எதிர்பார்த்தபடி கைக்கு வந்து சேரும். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று எதிலும் எச்சரிக்கை இருக்கட்டும். காரியத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். எதிலும் சாதகமான பலன் இன்று கிடைக்கும். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி இடையே அன்பு இருக்கும். அக்கம் பக்கத்தினரிடம் பழகும் போது மட்டும் கொஞ்சம் கனிவாகப் பழகுங்கள். பணவரவு தாராளமாகவே இருக்கும், அதனால் சேமிக்கக்கூடிய […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று நட்பு மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். உறவுகளுக்கு இடையே இருந்த மனக்கசப்பு விலகிச்செல்லும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள் அது போதும். இன்று வழக்கு விவகாரங்களில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மன குழப்பம் விலகி தெளிவாக சூழ்நிலை ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு இன்று கூடுதலாக பொறுப்புக்கள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும் கவனமாக படியுங்கள் அது போதும். குடும்பத்தில் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பணவரவு, வாக்கு மேன்மை, குடும்பத்தில் சுகம், சந்ததி விருத்தி, பதவி உயர்வு, மனத்திருப்தி என அனைத்து ராஜயோகத்தையும் இன்று பெறுவீர்கள். வாகனம் மற்றும் போஜன சுகங்கள் கூடிவரும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது நன்மை கொடுக்கும். மூத்த சகோதரர் உடல் நலத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். விருந்து கேளிக்கை […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று தன லாபம் பெருகி மன மகிழ்ச்சி நிலவும். உடல் தெம்பாகி உற்சாகம் பிறக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். தன்னம்பிக்கை கூடுவதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். இன்று சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு மரியாதை கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப் பிடிப்பார்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் குறைவதால் உடல் நலம் சீராக இருக்காது. அன்னையின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாளாகவும் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. இன்று தடைபட்ட காரியங்கள் ஓரளவு தடை நீங்கிச் செல்லும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் காலதாமதமாகத்தான் வந்து சேரும். ஆன்மீகத்தில் எண்ணம் அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். இன்று தனவரவு […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் குறைவதால் உடல் நலம் சீராக இருக்காது. அன்னையின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாளாகவும் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. இன்று தடைபட்ட காரியங்கள் ஓரளவு தடை நீங்கிச் செல்லும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் காலதாமதமாகத்தான் வந்து சேரும். ஆன்மீகத்தில் எண்ணம் அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். இன்று தனவரவு […]