உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், முன்னாள் […]
Author: MM SELVAM
தனது குழந்தையின் கண்கள் மிகவும் பயங்கரமாக இருப்பதாக குழந்தையின் தாய் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது. மக்கள் கடின முயற்சியில் செய்யும் வேலைகள், தொழில்நுட்பத்தின் மூலம் சுலபமாக முடிந்துவிடுகிறது. அதேபோல், குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் முதல் கடமை ஆகும். அதையும் எளிமைப்படுத்தும் வகையில், பல வீடுகளில் குழந்தை இருக்கும் அறையில் சிசிடிவி கேமரா பொருத்தி 24 மணி நேரமும் அதனை பெற்றோர் கண்காணிக்கின்றனர். இந்நிலையில், PassionPop என்ற சமூக […]
’உங்கள் நான்’ நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், கமலும் ரஜினியும் இணைந்தால் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் நல்லது நடக்கும் என்று கூறினார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்பவர் நடிகர் கமல் ஹாசன். இவரின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, ‘உங்கள் நான்’ என்ற விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் கமல் குறித்து […]
சில வருடங்களுக்கு முன்பு நான் வெளியில் செல்லும் போது என் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டுதான் செல்வேன். ஆனால் இப்பொழுது நான் அப்படியல்ல எனது முகத்தை நான் எதற்காக மறைக்க வேண்டும் என் முகத்தை இந்த நிலைக்கு செய்த சமூகம் தான் வெட்கப்பட வேண்டும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மணமகள் அலங்காரம் செய்து நடிகை சந்தோஷி அசத்தியுள்ளார். தமிழ் திரை படங்களில் குணச்சித்திர வேடத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து […]
‘மாஃபியா’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை அத்திரைப்படத்தின் கதாநாயகனான அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஹ்மான் நடிப்பில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அதைத் தொடர்ந்து இவர் இயக்கிய ‘நரகாசூரன்’ திரைப்படம் வெளியாகவில்லை. இதனிடையே தனது மூன்றாவது ப்ராஜெக்டாக கார்த்திக் நரேன் இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘மாஃபியா: சாப்டர் 1’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அருண் விஜய், பிரியா […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகன மாற்றம் சிந்தனை மேலோங்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். பொறுப்புகளும் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அதே போல விளையாட்டிலும் ஆர்வம் அதிகரிக்கும். விளையாட்டு துறையில் நல்ல வாய்ப்புகளும் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் […]
துலாம் ராசி அன்பர்களே..!! நினைத்த காரியம் நிறைவேறும் நாளாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகளை சந்திக்க நேரிடும். தொழிலில் இருந்த மறைமுக போட்டிகள் விலகிச்செல்லும். எதிர்பாராத தொகை கைக்கு வந்து சேரும். இன்று குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக காரியங்களை செய்வீர்கள். தடைபட்ட காரியங்கள் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். முட்டுக்கட்டைகள் விலகிச் செல்லும். […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். வரவு திருப்திகரமாக இருக்கும். மாற்று இனத்தவர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிவார்கள். பயணங்கள் எதிர்பார்த்த பலனை கொடுக்கும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவரின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும். மேலதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும். தைரியமாக எந்த காரியத்தையுமே நீங்கள் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். நிச்சயித்த காரியத்தில் மாறுதல்கள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் தோன்றலாம். ஆதாயம் இல்லாத அலைச்சலால் மனச்சோர்வு உண்டாகும். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவரிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நல்லது. கூடுமானவரை கோபப்படாமல் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று பற்றாக்குறை அகலும் நாளாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பார். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும். வியாபாரம் விரோதம் விலகிச்செல்லும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்களில் வெற்றியும் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். இருந்தாலும் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை மட்டும் படியுங்கள் அது வெற்றிக்கு உதவும். உடல் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விஐபிக்களின் சந்திப்பு இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூடிய வாய்ப்புகளும் இன்று கிடைக்கும். இன்று குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பும் மரியாதையும் கூடும். அடுத்தவர் யாரும் குறைகூற கூடாது என்பதற்காக உறுதியாக இருப்பீர்கள். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாளாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடுமாற்றம் விலகிச்செல்லும். இன்று கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களுடைய பொருளாதார நிலையும் இன்று உயரும். வீண் செலவும் குறையும். பணம் ஓரளவு வந்து சேரும். உங்களுடைய வசீகரமான […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செலுத்துவீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இன்றைக்கு கொஞ்சம் வீண் அலைச்சல், வேலைப்பளு ஆகியவை இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். மாணவர்கள் இன்று அடுத்தவர் பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு கல்வியில் கவனத்தை செலுத்துவது நல்லது. அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செலுத்துவீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இன்றைக்கு கொஞ்சம் வீண் அலைச்சல், வேலைப்பளு ஆகியவை இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். மாணவர்கள் இன்று அடுத்தவர் பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு கல்வியில் கவனத்தை செலுத்துவது நல்லது. அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். […]
பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை அசோக்நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கு சகஜமாக கஞ்சா கிடைப்பதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தபடி இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, எம்ஜிஆர் நகர், அசோக்நகர் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவது […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது. நீண்ட காலமாக தமிழ்நாட்டில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாத்திற்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளதாக அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், சென்னை காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து […]
விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருகம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சங்கர். தச்சுவேலை செய்துவரும் இவர், தனது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இதற்கிடையே, சங்கர் இரண்டு மாதங்கள் தச்சுவேலை காரணமாக வெளியூர் சென்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த செயின் இல்லாத காரணத்தினால் எங்கே என்று […]
கன்னடம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை நபா நட்டேஷ். இவர் சமீபத்தில் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதில் மாடர்ன் டிரஸ் , சேலை என இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் தோன்றி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் : இந்த லுக் ஓகேவா…! கேசுவலா இருப்போம் எப்பவும் ரசிகர்களை மயக்கும் விழிக்காரி இப்படித்தான் எப்போவும் என்ன அப்படி பாக்குறீங்க… தங்கத் தாரகை அழகிப்பெண்ணே
என்னைத் தேடி நீங்கள் வரவேண்டாம், உங்களை தேடி நான் வருகிறேன் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு பலகை வைத்து புகார் மனு வாங்கும் செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம் கடந்த 7ஆம் தேதியன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வாரநாட்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து வருகிறார். இந்நிலையில், அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வரும் முதியவர்கள், […]
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டொமினிக் தீம் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்-வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். லண்டனில் நடைபெற்று வரும் ஆடவருக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரர் டொமினிக் தீன், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்-வை எதிர்கொண்டார். பரபரப்பான நடந்த இந்த ஆட்டத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீம் முதல் செட் கணக்கை 7-6 […]
அம்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்து நான்கு வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் அடுத்த புதூர் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்றாவது பிள்ளையான கேத்ரினுக்கு(4) கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் பாதித்ததால் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கேத்ரீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த […]
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள ரஞ்சன் கோகாய் திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி பதவி ஏற்றார். தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக இருக்கும்போது, அவர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என ரஞ்சன் கோகாய் உட்பட நான்கு மூத்த நீதிபதிகள் செய்தியாளர் சந்திப்பினை நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால், இவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றதிலிருந்து, தீபக் மிஸ்ரா […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்களில் கவன சிதறல்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று எதிர்பாராத இடமாற்றம், சிலருக்கு உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே திடீர் மன வருத்தம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நல்லோரின் நட்பு உங்களுக்கு எளிதாக கிடைக்கும். புதிய திட்டம் குறித்து பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும், ஆன்மீக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முக்கிய […]
தனுசு ராசி அன்பர்களே..!! உங்களின் சிரமம் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். கஷ்டமான சூழ்நிலை மெல்ல மெல்ல சரியாகும். யாரிடமும் உங்களுடைய ரகசியத்தை பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். இன்று சுமாரான அளவிலேயே பண வரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். இன்று மனதில் எதை பற்றியாவது சிந்தனை வந்து கொண்டே இருக்கும். இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள் அது […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! சிலர் பொறாமையினால் பரிகாசம் செய்யக்கூடும். அவரிடம் தயவுசெய்து விலகி இருங்கள். உங்களை குறை சொல்லிக் கொண்டு இருந்தவர்கள் இன்று விலகிச் செல்வார்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேற காலதாமதம் தான் ஏற்படும். அளவான பணவரவு இன்று கிடைக்கும். தயவு செய்து யாருக்கும் வாக்குறுதிகளை மட்டும் தர வேண்டாம். உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று இஷ்ட தெய்வ அனுக்கிரகத்தை பெறுவீர்கள். செயல்கள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். வளர்ச்சி பாதையை நோக்கி அனைத்துமே செல்லும். பணபரிவர்த்தனையில் மட்டும் கவனம் இருக்கட்டும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். தாராள பணவரவு இன்று வந்து சேரும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாகவே இருக்கும். தந்தை மூலம் செலவு கொஞ்சம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகளின் செயல்பாடுகள் […]
கன்னிராசி அன்பர்களே..!! இன்று எந்த செயலையும் நீங்கள் சவாலாக செய்வீர்கள். கடந்தகாலத்தில் திகைப்பு தந்த பணி எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் போது அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னர் செய்யுங்கள். பொறுமையாக செய்யுங்கள். முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். வீண் அலைச்சலை குறைப்பதற்கு கொஞ்சம் நீங்கள் யோசனை […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்களுக்கு இடையூறு செய்பவரை அறிந்துகொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு அளவில் போட்டிகள் இருக்கும். சராசரி அளவில் இன்று பணவரவும் கிடைக்கும். அரசு அனுகூலம் பெறுவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது மித வேகமாக செல்லுங்கள். சரக்குகளை வாடிக்கையாளருக்கு அனுப்பும் போது கவனமாக அனுப்புங்கள். உத்தியோகத்தில் சரியாக முடிவெடுக்க முடியாமல் கொஞ்சம் குழப்பம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று உடல் சோர்வாகக் காணப்படும். சக ஊழியர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். குடும்பத்தினருடன் இணக்கமான […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணிகளில் சிரமம் கொஞ்சம் உருவாகலாம். கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் இருக்கட்டும். ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணி பற்றிய சிந்தனை அதிகமாகவே இருக்கும். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் பேச்சில் அன்பும் பண்பும் மிகுந்திருக்கும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். தேவையற்ற மனக் கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். பயணம் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் பிரச்சனை தலை தூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கு […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! உங்கள் செயல்களில் தைரியம் இன்று கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உற்பத்தி விற்பனை செழிப்பாக இருக்கும். பண கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். இன்று மாணவர்கள் தடைகளை தாண்டி முன்னேறி செல்லக்கூடும். விளையாட்டு துறையில் முன்னேற்றமான சூழல் இருக்கும். இன்று இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்துமே சிறப்பாக முடியும். அது மட்டுமில்லாமல் அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனம் என்பது எப்பொழுதுமே இருக்கட்டும். கலைத் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்களில் கவன சிதறல்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று எதிர்பாராத இடமாற்றம், சிலருக்கு உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே திடீர் மன வருத்தம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் […]
டெல்லியில் காற்று மாசு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கவுதம் கம்பீர் ஜாலியாக கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றதால் இணையவாசிகள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபகாலமாக டெல்லியில் காற்று மாசு தொடர்பான பிரச்சனை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. காரணம் இதுவரை இல்லாத அளவுக்கு டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் டெல்லியில் காற்று மாசு குறித்து விவாதிப்பதற்காக நகர அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இக்குழுவின் உறுப்பினறும், டெல்லி கிழக்கு […]
நடிகை அமலா நீண்ட நெடிய இடைவெளிக்குப் பின் திரைத்துரையில் அடி எடுத்து வைக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பின் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க நடிகை அமலா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். கடந்த 1980-ஆம் ஆண்டு டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மைதிலி என்னை காதலி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் […]
போபால் விஷவாயுக் கசிவுக்கு எதிராக போராடிய சமூக செயற்பாட்டாளர் அப்துல் ஜாபர் காலமானார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 1984-ஆம் ஆண்டு விஷவாயுக் கசிவு துயரம் நடந்தது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த துயரத்துக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க செய்தவர்தான் இந்த அப்துல் ஜாபர். போபால் விஷவாயுக்கசிவு துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வித சமரசமுமின்றி வாதாடினார்.கடைசிவரை யாரிடமும் சமரசம் செய்துக் […]
தான் உயிருடன் இருப்பதால் தன்னால் பேச முடிகிறது என்று காஷ்மீர் எழுத்தாளர் சுனந்தா வஷிஷ்ட் (Sunanda Vashisht) உருக்கமாக தனது பேச்சை தொடங்கினார். மனித உரிமைகள் தொடர்பாக காங்கிரஸின் விசாரணை அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் நடந்தது. அப்போது காஷ்மீர் பகுதியில் 1990ஆம் ஆண்டுகளில் இந்துக்கள் அனுபவித்த கொடுமையை சுனந்தா வஷிஷ்ட் (Sunanda Vashisht) பகிர்ந்தார். அவர் பேசியதாவது, நான் காஷ்மீரைச் சேர்ந்த சிறுபான்மை இந்து சமூகத்தை சேர்ந்தவள். சுதந்திர இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இன அழிப்புக்கு […]
‘சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் எனக்குப் பிடித்த ஆக்ஷன் ஜானரில் இந்தப் படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளேன்’ என்று ஆக்ஷன் படம் பற்றி சிலாகித்துக்கொண்டார் தமன்னா. அவெஞ்சர்ஸ் பிளாக் விடோ கேரக்டர் பாணியில் என்டரி கொடுத்து ஆக்ஷன் படம் பார்க்க அழைப்பு விடுத்துள்ளார் தமன்னா. சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்படவுள்ள 5 வீரர்களின் பெயர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் முக்கியமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே). முதல் சீசனில் இருந்து கடைசியாக நடைபெற்ற தொடர்வரை அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணி அரையிறுதி, பிளே-ஆஃப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது மூன்று முறை சாம்பியன் மகுடத்தைச் சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்து முறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளது. இதனால் […]
தமிழ்த் திரையுலகின் சிறந்த காதல் காவியமாக திகழ்ந்த தேவதாஸ் படத்தின் கதாநாயகனாகவும், சிவாஜி கணேசனின் லேண்ட்மார்க் திரைப்படமான நவராத்திரி தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தவர் அக்கினேனி நாகேஷ்வர ராவ். அவரது பெயரில் ஏஎன்ஆர் தேசிய விருதுகள் திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் ஜாம்பவான் நடிகராகத் திகழ்ந்த அக்கினேனி நாகேஷ்வர ராவ் பெயரில் வழங்கப்படும் தேசிய விருதுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பழம்பெரும் நடிகை ரேகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் […]
யுனெஸ்கோவில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார் இந்தியாவின் அனன்யா அகர்வால். பாகிஸ்தானின் திமிர் பேச்சுக்கு அவர் அளித்த பதிலில், “பாகிஸ்தானின் மரபணுவிலே பயங்கரவாதம்” உள்ளது என்று கூறினார். பாரிஸில் நடந்த யுனெஸ்கோ பொதுக்கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பி இந்தியா மீது குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் அனன்யா அகர்வால் பாகிஸ்தானின் பாணியிலேயே பதிலடி கொடுத்தார். இவ்விவகாரம் தொடர்பாக அனன்யா அகர்வால் பேசியதாவது யுனெஸ்கோ அமைப்பை அரசியல் ரீதியாக பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு முதலில் என் […]
கலிஃபோர்னியா மாகாணத்தின் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சவுகஸ் (Saugus) மேல்நிலைப்பள்ளியில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. நேற்று பிறந்தநாளைக் கொண்டாடிய 16 வயது மாணவன், திடீரென்று தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அருகிலிருந்த மாணவர்களை நோக்கிச் சுடத்தொடங்கினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒரு 16 வயது மாணவியும், ஒரு 14 வயது மாணவனும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் […]
முதலில் மிஸ் இந்தியா, அப்புறம் மிஸ் வேர்ல்டு. தற்போது மிகப் பெரிய வரலாற்று படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் உலக அழகி மனுஷி சில்லார். பயமறியா மன்னனாகத் திகழ்ந்த பிருத்விராஜ் செளகான் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் நகரை தலைநகராக கொண்டு ஹரியானா, டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் சில பகுதிகளை ஆண்ட […]
சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் வெங்காய மூட்டைகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடியது திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மைசூரிலிருந்து வெங்காய மூட்டைகள் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று உடுமலைப்பேட்டை செல்வதற்காக இன்று காலை 5 மணியளவில் […]
மாநிலத்திற்கே சோறிட்ட டெல்டா மக்கள் இரண்டு துண்டு ரொட்டிகளுக்காக வாகனத்தின் பின்னால் ஓடிவந்த காட்சியெல்லாம் வரலாற்றில் அப்பியிருக்கும் அழிக்க முடியாத சோகம். கடந்த வருடம் இதே தேதி இந்நேரம் அந்த புயல் கரையை கடந்துவிட்டது. சோறுடைத்த சோழநாடு என்று பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் கஜா என்னும் அரக்க புயல் தனது அசுரக் கரங்களால் அலசிப் போட்டுவிட்டது. வயல்வெளிகள், தென்னந் தோப்புகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. கால்நடைகள் கொத்துக் கொத்தாக சரிந்து விழ, வீட்டு ரேஷன் […]
மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமான இருக்கையின் அடியிலிருந்து ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்திற்கு மஸ்கட்டிலிருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்து வந்தனர். அப்போது விமானத்தில் ஒருவரின் இருக்கைக்கு அடியில் கருப்பு டேப்பால் சுற்றப்பட்ட பார்சல் இருந்ததைக் கண்டு விமான நிலைய சுங்கத்துறைஅலுவலர்களுக்கு […]
யூரோ கால்பந்து தொடர் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி மாண்டிநீக்ரோ அணியை 7-0 என வீழ்த்தி, தனது 1000ஆவது போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் UEFA யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து – மாண்டிநீக்ரோ அணிகள் மோதின. இது இங்கிலாந்து கால்பந்து அணியின் […]
கேரளாவில் உள்ள பள்ளிகளில் தண்ணீரை குடிக்க பெல் அடிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவனின் வாக்கு. அதன்படி பார்த்தால் உலகு மட்டுமின்றி உடலும்தான். நம் உடலின் இயக்கங்களுக்கு தண்ணீர் அத்தியாவசியமானது. தண்ணீரின் தேவை மனித உடலுக்கு அவசியம் என்பதை உணர்ந்த கேரள அரசு அதற்காக ஒரு திட்டத்தையே வகுத்துள்ளது.அத்திட்டத்தின்படி, கேரளாவில் பள்ளி மாணவ-மாணவிகளை தண்ணீர் குடிக்க வைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பாடவேளைகளில் நேரம் ஒதுக்கி தண்ணீர் பருக வைக்கிறார்கள் ஆசிரியர்கள். பள்ளிக்கு […]
ஒரு ஜனநாயக நாட்டில் அரசியலமைப்பு என்பது அந்நாட்டின் புனித நூலாகக் கருதப்படுகிறது என்று சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். கேரள மாநிலம் கோழிக்கூடில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறுகையில், அயோத்தி தீர்ப்பை, சபரிமலை தீர்ப்போடு இணைத்துப் பார்க்கும்பொழுது பக்தர்களின் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருப்பதாகத் தெரிகிறது. நீதிமன்றம் அரசியலமைப்பு மீதான நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் […]
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இப்போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும், மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் சிலம்பம், டேக்வாண்டோ, […]