Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

எஃப்பிஐயிடம் டார்ச்சரை அனுபவிக்கும் ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட்!

பிரான்ஸ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுதிய நடிகை,கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தவர் என்று பெயர் பெற்ற அமெரிக்க நடிகை ஜீன் செபர்க் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்பட்டது. அவரது அரசியல் ஈடுபாட்டால் எஃப்பிஐயின் உளவு வளையத்துக்குள் சிக்கி பல்வேறு டார்ச்சர்களை அனுபவித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தில் செபர்க் என்ற படத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட். இந்தப் படம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலிஸ்: எஃப்பிஐ-ஆல் உளவு வளையத்துக்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாரும் கவலைப்படாதீங்க… சொன்னபடி ‘ஹீரோ’ கண்டிப்பா வரும்..!!

ஹீரோ படம் திட்டமிட்டப்படி டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு உறுதி தெரிவித்துள்ளனர். இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ளது ‘ஹீரோ’ திரைப்படம். இப்படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட 24 ஃபிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. சிவகார்த்திகேயன் – ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், ‘இரும்புத்திரை’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (15.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ …!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராத விரயங்களை சந்திக்கும் நாளாக இருக்கும். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களைத் தேடி வரக்கூடும். இடமாற்றங்கள்  போன்றவை நடக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் இன்று எல்லா பிரச்சனைகளும் சரியாகும். செல்வ செழிப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். அடுத்தவர் கொடுத்த வேலையை எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கவனம் கொள்ளுங்கள். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாத நண்பரும் உறவினரும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாள்”… கவனம் இருக்கட்டும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிகாலையிலேயே விரயங்கள் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வளர்ச்சிக்கு ஒரு சில குறுக்கீடுகள் இருக்கும். அது மட்டுமில்லாமல் மருத்துவ செலவுகள் கொஞ்சம் ஏற்படும். பஞ்சாயத்துக்கள் முடிவடைந்து சிக்கல்கள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனைப் பெறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவு இருக்கும். பயணங்களில் அலைச்சல் கொடுப்பதாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “தடைகள் விலகி செல்லும் நாள்”… சரியான நேரத்திற்கு தூங்குவது நல்லது..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று தடைகள் விலகி செல்லும் நாளாக இருக்கும். தன வரவு திருப்திகரமாகவே இருக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். இன்று கனவுகளால் தொல்லை கொஞ்சம் ஏற்பட கூடும். சரியான நேரத்திற்கு தூங்க செல்வது நல்லது. அது மட்டுமில்லாமல் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாகவே […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “இன்று விருப்பங்கள் நிறைவேறும்”…வசீகரமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். விஐபிக்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் இருமடங்காகும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இன்று மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதுபோல தொழிலில் தேங்கிய சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். உங்களின் கோரிக்கை மேலிடத்தால் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் இராசிக்கு… “அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிட்டும்”… நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிட்டும். உத்தியோக முன்னேற்றம் பற்றிய சிந்தனை தலை தூக்கும். விண்ணப்பித்த புதிய வேலை கிடைக்கும். நீண்ட நாளைய எண்ணங்கள் இன்று நிறைவேறும். இன்று தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. சமூக பிரச்சினைகளை கையாளுபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். நண்பர்களால் சின்ன […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “எல்லா பிரச்சனைகளும் சரியாகும்”… செல்வ செழிப்பு ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராத விரயங்களை சந்திக்கும் நாளாக இருக்கும். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களைத் தேடி வரக்கூடும். இடமாற்றங்கள்  போன்றவை நடக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் இன்று எல்லா பிரச்சனைகளும் சரியாகும். செல்வ செழிப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். அடுத்தவர் கொடுத்த வேலையை எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கவனம் கொள்ளுங்கள். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாத நண்பரும் உறவினரும் […]

Categories
தேசிய செய்திகள்

“உச்ச நீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன்”… ராஜ்நாத் சிங்

“ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கடந்த 2018 (டிச 14-ல்) விசாரித்து எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக முன்னாள் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“ராகுல் காந்திக்கு எச்சரிக்கை தேவை”… உச்ச நீதிமன்றம் அறிவுரை..!!

மோடியை விமர்சித்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தியை  எச்சரித்து வழக்கை முடித்து வைத்துள்ளது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது. தற்போது இந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ரபேல் வழக்கு : சீராய்வு மனு தள்ளுபடி… பாஜகவினர் மகிழ்ச்சி..!!

ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்று  தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை  உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை வழக்கு : 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை..!!

சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி அரசுக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “தாயின் உடல்நிலையில் கவனம்”… மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரிடம் நீங்கள் முன்னர் கேட்ட உதவி இப்போது கிடைக்கும். மனதில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.. நல்ல முன்னேற்றத்தை பெரும். பண வரவும் நன்மையை கொடுக்கும். சுற்றுலாக்கள் சென்று வருவதற்கான திட்டங்களையும்  தீட்டுவீர்கள். இன்று எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் -கொள்ளுங்கள். அவ்வப்போது மனதில் மட்டும் சின்னதாக குழப்பம் இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் இராசிக்கு… “இன்று காரிய வெற்றி ஏற்படும்”… விட்டுக்கொடுத்து வாழ்வது சிறப்பு..!!

கும்பம் ராசி அன்பர்களே..!!இன்று தொடர்பில்லாத பணி ஒன்று குறுக்கிட்டு சிரமத்தை கொடுக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். செயல்களில் முன் யோசனையுடன் ஈடுபடுதல் நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க அதிக உழைப்பு தேவைப்படும். உறவினர் வகையில் கூடுதல் பண செலவு ஏற்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று காரிய வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதியும் இருக்கும். விட்டுக்கொடுத்து  வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை நாம் பெற முடியும்.. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூமி வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “சமூகத்தில் அந்தஸ்து உயரும்”… கவனத்தை சிதறவிடாமல் செய்யுங்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து உருவாகும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். கூடுதல் அளவில் பணம் வரவு கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சமரசத் தீர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிரியால் இருந்த தொல்லை குறையும்.. இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டுச் செய்யுங்கள். கவனத்தை சிதறவிடாமல் செய்யுங்கள். பயணங்கள் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “நல்லவரையும் தவறாகக் கருதும் எண்ணம் ஏற்படும்”… தாய் தந்தையின் உடல்நலத்தில் எச்சரிக்கை..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நிகழ்வு மாறுபட்ட தன்மையில் இருக்கும். உங்களிடம் பழகும் நல்ல வரையும் தவறாகக் கருதும் எண்ணம் ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணம் வரவு குறைந்த அளவில்தான் இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் நலம் சீராக இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு டென்ஷனை கொடுக்கக்கூடியதாக இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தாய் தந்தையின் உடல்நலத்தில் எச்சரிக்கை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு…”குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்”… உழைப்புக்கேற்ற பணம் கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகள் தாமதமாவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனை நம்பிக்கை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. இன்று உத்தியோகத்தில் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஆயுதங்களை கையாளுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடர்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். நீண்ட நாளாகவே நடந்து கொண்டிருக்கும் வழக்குகளில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “மனதில் உற்சாகம் அதிகரிக்கும்”… அடுத்தவர் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புனர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறுகள் விலகிச்செல்லும். எதிர்காலத் தேவைக்கு பணம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் வளரும். இன்று எல்லா நன்மைகளுமே உங்களுக்கு கிடைக்கும். வீண் அலைச்சலும் குறையும். அடுத்தவரின் உதவியை இன்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சினையை கண்டு பயப்படாமல் கையாளுவீர்கள். கோபமான பேச்சு டென்சன் போன்றவை இன்று குறையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறக்கூடும். ஒரே நேரத்தில் பல […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “மனதில் துணிச்சல் அதிகரிக்கும்”… லாபம் கூடும்.!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் உருவான திட்டம் செயல்வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சகோதரர் வழியில் ஒற்றுமை இருக்கும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். சில நேரங்களில் சோர்வுடன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “வரவை விட செலவு கொஞ்சம் கூடும்”… விமர்சனங்களை தாண்டி முன்னேறிச் செல்வீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! நிகழ்வுகளைப் பார்த்து மனதில் அதிருப்தி கொள்வீர்கள். நிலுவை பணி உங்களை விரைவாக செயல்பட வைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிகமாகவே பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் மனம் கொஞ்சம் இலகுவாக இருக்கும். இன்று பிள்ளைகளை கல்வி பற்றிய கவலை இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “யதார்த்த பேச்சு மனதை சங்கடப்படுத்தலாம்”… போக்குவரத்தில் கவனம் வேண்டும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! உங்களின் யதார்த்த பேச்சு சிலர் மனதை சங்கட படுத்தலாம் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு அவசியமாகும். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவை கொடுக்கலாம். அளவான பணவரவு இன்று கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் வேண்டும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஏற்படும். இன்று குடும்பத்தில் அமைதி நிலவும் அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத விதமாக அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும்”… மற்றவர்கள் பொறாமைப்பட கூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் அணுகுமுறையில் மாற்றம் இன்று நிகழும். நல்ல பலன்களை இன்று அள்ளி செல்வீர்கள். விலகிச் சென்ற உறவினர் விரும்பி சொந்தம் பாராட்ட கூடும். தொழில் வியாபாரம் செழித்து புதிய பரிமாணம் உருவாகும். நிலுவைப்பணம் வசூலாகும். விருந்து விழாவில் பங்கேற்பார்கள். இன்று எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணியை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சங்கடங்கள் தீரும். கலைத்துறையினர் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “உங்களின் புகழ் கௌரவம் உயரும்”… புதிய பொறுப்புகள் கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக பேசுபவரிடமும் நல் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று கோபம் படபடப்பு கொஞ்சம் குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு கொஞ்சம் உண்டாகக் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு சரியாகும். வாகனங்கள் மூலம் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “எதிர்பார்த்த விஷயங்கள் பூர்த்தியாகும்”… அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள்”..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்துமே பூர்த்தியாகும் நாளாக இருக்கும். நண்பர்கள் மத்தியில் நீங்கள் மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுவீர்கள். சொன்ன சொல்லையும் நிறைவேற்றுவீர்கள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். இன்று தேவையற்ற சிந்தனை மட்டும் மனதில் உருவாகக்கூடும். சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுங்கள். உடன்பிறந்தவர்களினால் உதவிகள் இன்று கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (14.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ …!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்துமே பூர்த்தியாகும் நாளாக இருக்கும். நண்பர்கள் மத்தியில் நீங்கள் மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுவீர்கள். சொன்ன சொல்லையும் நிறைவேற்றுவீர்கள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். இன்று தேவையற்ற சிந்தனை மட்டும் மனதில் உருவாகக்கூடும். சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுங்கள். உடன்பிறந்தவர்களினால் உதவிகள் இன்று கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெளியானது ‘தபாங்-3’யின் ரொமான்ஸ் பாடல்.!!

நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘தபாங்-3’ திரைப்படத்தின் பாடலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் சல்மான் கானின் நடிப்பில் ஆக்ஷன் பாணியில் ரிலீசுக்காக காத்திருக்கும் திரைப்படம் ‘தபாங்-3’. இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் சல்மான் கான் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தில் உள்ள அவாரா என்னும் காதல் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகிள்ளது. படத்தில் சல்மானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்திருக்கின்றார். எனினும் இக்காதல் பாடலுக்கு சல்மானுடன் மற்றொரு நடிகையான சாயி மஞ்ச்ரேகர் தான் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் இராசிக்கு… “பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள்”… இரவு நேரப் பயணம் வேண்டாம்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று கௌரவக் குறைவு ஏற்படாமல் இருக்க சிறப்பாக செயல்படுவது நல்லது. பேசும்பொழுது நிதானத்தையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை வேண்டும். துன்பம் வந்தபோதிலும் சிரிக்கக் கற்றுக் கொண்டவர்கள் நீங்கள். ஆகையால் எந்த விஷயத்தையுமே யோசித்து செய்யுங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகக் கூடும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனப் போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் ஏற்படலாம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “பெண்களின் விருப்பங்கள் நிறைவேறும்”… மனதில் தைரியம் பிறக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அரசு ஆதரவு முக்கியஸ்தர்களின் உதவியால் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரக்கூடும். அதன் காரணமாக வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். பெண்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று திறமையாக செயல்பட்டு  காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும் மாணவர்கள் கல்வியில் சிரமப்பட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மனதில் தைரியம் பிறக்கும். இன்று பெண்களுக்கு திருமண பேச்சுவார்த்தை கைகூடும் அரசால் அனுகூலம் உண்டாகும். உங்களை எதிர்த்தவர் இன்று அடங்கி செல்லக்கூடும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “பேசும்போது நிதானமாகப் பேசுங்கள்”… உங்களுடைய தனித்திறமை மேம்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் முன் கோபத்தால் உறவுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்படக் கூடும். அதனால் பேசும்போது மட்டும் கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேன்மையும் உண்டாகும். இன்று மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் பாராட்டுகளை பெறுவார்கள். உங்களுடைய தனித்திறமை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “எதையும் யோசித்து செய்தால் நன்மை”… மன கஷ்டம் சரியாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று மனைவியால் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பேரும் புகழும் அடைய கூடும்.  பெரியோர்களின் ஆலோசனைப் படி நடந்தால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். இ ன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மையை கொடுக்கும். இன்று மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களையும் படியுங்கள். மன கஷ்டம் பண கஷ்டம் அனைத்துமே இன்று சரியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (13.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ …!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று மனைவியால் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பேரும் புகழும் அடைய கூடும்.  பெரியோர்களின் ஆலோசனைப் படி நடந்தால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். இ ன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மையை கொடுக்கும். இன்று மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களையும் படியுங்கள். மன கஷ்டம் பண கஷ்டம் அனைத்துமே இன்று சரியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்”… காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாக பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் நேரிடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவது வெற்றியை கொடுக்கும். சக மாணவரிடம் பொறுமையாக நடந்துகொள்வது அவசியம். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும்”… நட்பால் நன்மை உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் அனைத்துமே எளிதில் நிறைவேறும். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். நட்பால் நன்மை உண்டாகும். சகோதரர் வழியில் ஒற்றுமை பலப்படும். இன்று பஞ்சாயத்துக்கள் அனைத்துமே நல்ல முடிவை கொடுக்கும். நூதனப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுத்த முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவை நிகழும். சக ஊழியர்களிடம் நிதானமாகப் பேசுங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “மன தைரியம் கூடும்”… சமாளித்து முன்னேறுவீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று முன் கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. பண  வரவு சிறப்பாக இருக்கும்.  மன தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது மட்டும் அவசியம் பார்த்துக்கொள்ளுங்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் உங்களுக்குக் கிடைக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “இன்று ஆச்சரியமான சம்பவங்கள் நடக்கும்”… கொடுக்கல் வாங்கலில் கவனம்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாளாக இருக்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். இன்று வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். கவனத்துடன் பாடங்களை படியுங்கள். எதிரில் இருப்பவர்களை எடை போடும் சாமர்த்தியம் என்று உண்டாகும். பெண்கள் பெரியோர்களின் ஆசியைப் பெற்றால் எந்த காரியத்தையும் சிறப்பாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு…”மதிப்பும் மரியாதையும் உயரும்”… முன்கோபத்தை குறையுங்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பெற்றோர் வழி ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மதிப்பும் மரியாதையும் உயரும். பணத்தேவைகள் எளிதில் இன்று பூர்த்தியாகும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று முன்கோபத்தை மட்டும் தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள். நிதானத்தை கடைபிடியுங்கள் அது போதும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடத்தை படிப்பது கூடுதல் மதிப்பெண் எடுக்க உதவும்.  எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். உழைத்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்காதீங்க”… கவனமாக இருந்து கொள்ளுங்கள்.!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தை கொடுக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மறதியால் விட்டுப்போன காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். இன்று அடுத்தவரை மட்டும் நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். அப்படி இறங்கினால் கவனமாக செயல்படுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக இன்று அலைய வேண்டியிருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள். தடைகளை தாண்டித்தான் இன்று நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள். உத்தியோகத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “மன குழப்பம் வேண்டாம்”… யோசித்து செய்யுங்கள்..!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று நண்பர்கள் உங்களுக்கு நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். உத்தியோக முயற்சி வெற்றியை கொடுக்கும். எடுக்கும் முயற்சிகளில் மன குழப்பம் வேண்டாம். பொறுமையாக யோசித்து செய்யுங்கள் அது போதும். வாங்கல் கொடுக்கல் களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உருவாகும். சமாளித்து முன்னேறும் திறமையும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற கடுமையாக உழைப்பீர்கள். போட்டிகள் சாதகமான பலனை கொடுக்கும். பண வரவு இருக்கும். உறவினரால் அதிக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்”… புதிய பாதை புலப்படும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாகவே இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட தடை தாமதங்கள் இன்று அகலும். மன ஆறுதல் தரும் விஷயத்தில் ஒரு பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் நன்மை உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். பணவரவு தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலைகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள்”… பார்த்து பேசுவது நல்லது..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று பொறுமையோடு செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தடைகளும், தன விரயமும் கொஞ்சம் ஏற்படலாம். உடன் இருப்பவரிடம் கவனமாகவே நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஆகையால் குடும்பத்தாரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று குடும்ப விஷயமாக அலைய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் கொஞ்சம் குறையும். எந்த ஒரு விஷயத்தையும் பார்த்து பேசுவது நல்லது. தாய் தந்தையரின் உடல் நலத்தில் கவனமாக இருங்கள். எதிலும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “பொருளாதார நிலை இன்று உயரும்”… சாதிக்க முயற்சிப்பீர்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வர தொலைபேசி வழித் தகவல் உறுதுணையாக அமையும். முக்கிய புள்ளியின் அறிமுகத்தால் பொருளாதார நிலை இன்று உயரும். இன்று ஆழ்ந்த யோசனையும்  அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் இருக்கட்டும். எதிர்பாலினத்தவரிடம் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்யத் தோன்றும். அரசாங்க வேலைகளும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “தள்ளிப் போன காரியம் முடியும்”… வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று தள்ளிப் போன காரியம் தானாகவே முடிவடையும் நாளாக இருக்கும். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை காண்பீர்கள். புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகளிடம் பேசும்பொழுது எச்சரிக்கையாக இருங்கள். உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. அது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு எந்த விதமான […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “மனக் குழப்பங்கள் தீரும்”… பயம் கொஞ்சம் இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தாராளமாக செலவிட்டு மகிழும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு உங்களை தொந்தரவு செய்யக் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களின்போது பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று மனக் குழப்பங்கள் தீரும். எதிலும் பயம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் கொஞ்சம் இருக்கும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். இன்று உடல்நிலையில் கவனம் இருக்கட்டும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (12.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ …!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தாராளமாக செலவிட்டு மகிழும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு உங்களை தொந்தரவு செய்யக் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களின்போது பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று மனக் குழப்பங்கள் தீரும். எதிலும் பயம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் கொஞ்சம் இருக்கும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். இன்று உடல்நிலையில் கவனம் இருக்கட்டும். […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்..!!

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது.  சென்னை பள்ளிக்கரணையில் சமீபத்தில் பேனர் விழுந்து லாரி மோதிய  விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து இவ்வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக விசாரித்து வருகின்றது. இவ்வழக்கில்  அதிமுக பிரமுகர் ஜெயகோபால் உறவினர் மேகநாதன் போலீசில் சரணடைந்தார். பின்னர் தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை தீவிர தேடுதலுக்கு பின்  போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதின்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கு : வெறுப்பு பரப்புரையை முன்னெடுத்த 77 பேர் கைது..!!

சமூக வலைதளங்கள் வாயிலாக மதநல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட 77 பேரை காவலர்கள் கைது செய்தனர். அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இது மக்களின் உணர்வு ரீதியான விவகாரம் என்பதால், உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த இரு தினங்களில், சமூக வலைதளங்களில் வெறுப்பு பரப்புரையை முன்னெடுத்த 77 பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகையாக களமிறங்க முதல் அடி எடுத்த வைத்த வாரிசு நடிகை.!!

தனது மகன் காளிதாஸை திரையுலகில் களமிறக்கியுள்ள நடிகர் ஜெயராம், அடுத்து தனது மகளை களமிறக்க தயாராகியுள்ளார். அவரது மகள் மாளவிகா தற்போது மாடலிங்கில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். கொச்சி: மலையாள வாரிசு நடிகர்களின் பட்டியலில் புதிதாக திரையுலகில் களமிறங்க தயாராகி வருகிறார் நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் ஜெயராம். நன்கு தமிழ் பேசும் இவர் ஏராளமான தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். மலையாள நடிகை பார்வதியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 64 சூட்டிங் இடையே தாஜ்மகால் பயணம்… மனைவியிடம் நோஸ்கட் வாங்கிய சாந்தனு..!!

தளபதி விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு முதல் முறையாக அவருடன் இணைந்து தளபதி64 படத்தில் நடிக்கிறார். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் சாந்தனு, தனது காதல் மனைவி கீர்த்தியுடன் தாஜ்மஹாலுக்கு குட்டி விசிட் அடித்துள்ளார். மனைவி கீர்த்தியுடன் தாஜ்மஹால் சென்றுள்ள நடிகர் சாந்தனு, க்யூட் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. இளம் வயதிலேயே தந்தையின் இயக்கத்தில் ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தில் நடித்த இவர், தற்போது ஹீரோவாக பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி ஆட்டத்த மட்டும் பாருங்க… கிளாப் தட்ட தொடங்கிய ‘தலைவி’..!!

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’ படப்பிடிப்பு கங்கனா ரனாவத் நடிப்பில் இனிதே தொடங்கியுள்ளது. ‘தலைவி’ படத்தின் ஷுட்டிங் தொடங்கியுள்ளதாக கிளப் போர்டுடன் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். ஏ.எல். விஜய் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி கதாநாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சாயிலேஷ் ஆர் சிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நெற்றிக்கண்’ நயன்தாராவின் அடுத்த அவதாரம் ‘மூக்குத்தி அம்மன்’!

நயன்தாரா நடிக்க உள்ள அடுத்த படமான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா தற்போது ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் ‘மூக்குத்தி அம்மன்’ என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.   நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாகப் பேசி நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் பிரபு […]

Categories

Tech |