“கைதி” திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் நரேன் பேசியுள்ளார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, யு டர்ன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகர் நரேன். இவர் தற்போது கார்த்தி-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் திரைக்கு வரவிருக்கும் கைதி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நரேன் கூறுகையில், ”நான் நடித்த படங்கள் பலவும் வெற்றி தோல்வியை சரிசமமாக பெற்றுள்ளன. […]
Author: MM SELVAM
தெற்காசியாவில் அதிக பசி, வறுமையால் வாடும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய பசி குறியீட்டுப் பட்டியலில் (Global Hunger Index) வறுமை அடிப்படையில் இந்தியா 102-ஆவது இடம் வகிக்கிறது. உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்ற நிலையில், தெற்காசிய நாடுகளில் அதிக பசி, வறுமையால் வாடுவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. வறுமை நிலையில், பாகிஸ்தான், நேபால், இலங்கை போன்ற அண்டை நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. […]
அசோக் நகர் அருகே கஞ்சா போதையில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். சென்னை அசோக் நகர் அம்பேத்கர் குடிசைப் பகுதியில் வசித்து வருபவர் கைலாசம். ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி பெயர் லலிதா(35). கைலாசம் நேற்றிரவு ஆட்டோ ஓட்டச் சென்றபின், லலிதா தனது மகளுடன் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்துள்ளார். தனியாக இருந்த லலிதாவின் வீட்டிற்குள் நள்ளிரவு ஒரு மணியளவில் கஞ்சா போதையில் ஒரு இளைஞர் வந்துள்ளார். அவரைக் […]
கேஜிஎஃப் 2 (KGF 2) திரைப்படம் எப்படி இருக்கும் என அதன் கதாநாயகன் யஷ் தெரிவித்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் கேஜிஎஃப் (kgf). தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இத்திரைப்படம் பாக்ஸ்-ஆபிஸில் சக்கைபோடு போட்டது. இந்தப் படத்தில் நடித்ததற்காக யஷ் ‘தாதா சாகேப் பால்கே விருது’ பெற்றார். சினிமா ரசிகர்கள் இதன் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 75 வயது ஆட்டோ ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த உஸ்மான் (75) என்பவர் தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று வழக்கம்போல் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தபோது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். […]
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர், சுந்தர் நகரில் தான் வசித்து வந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியான சுந்தர் நகரில் வேதாரண்யத்தைச் சேர்ந்த முரளி என்ற இளைஞர் அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். சிறுவாச்சூர் பகுதியிலுள்ள எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவர், தனது குடும்பத்திலுள்ள பிரச்னைகளை தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது. […]
தனக்கு நடைபெறவுள்ள குழந்தைத் திருமணத்தில் இருந்து காப்பாற்றக்கோரி, 15 வயது சிறுமி ஒருவர் முதலமைச்சர் அசோக் கெலாட்டை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். குழந்தைத் திருமணத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டும், பல்வேறு இடங்களில் அவை அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து, அவர்களது கனவை பல பெற்றோர்கள் அழித்து வருகின்றனர். அதற்கு மீண்டும் உதாரணமாகியுள்ளது, ஜெய்ப்பூரில் நிகழ்ந்த ஓர் சம்பவம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள டோங் மாவட்டத்தில் […]
நடிகர் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதித்ய வர்மா’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது ‘ஆதித்ய வர்மா’. இந்தப் படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இயக்கியுள்ளார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இவருடன் பணிடா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘E4 என்டெர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள, இப்படத்திற்கு […]
விஜய்-அட்லி கூட்டணியில் திரைக்கு வரவிருக்கும் பிகில் திரைப்படம் வெற்றி அடையுமா என்பது குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்திருக்கிறார். நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி திரைக்குவருகிறது. […]
பூ வியாபாரிகள் குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால், பிகில் படத்தை புறக்கணிக்கப்போவதாக பூ வியாபாரிகள் அறிவித்துள்ளனர். பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்ப்ர 19 – ஆம் தேதி சென்னையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், பூ வியாபாரம் செய்பவரை வெடி வியாபாரம் செய்ய வைத்தால் அவர்கள் அதில் தண்ணீர் தெளிப்பார்கள் என்றும் எந்த தொழிலை யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அந்த செயலை அவரிடம் தான் ஒப்படைக்க […]
தங்கம் விலை கிராமுக்கு ரூ 10 மற்றும் பவுனுக்கு ரூ 80 குறைந்துள்ளதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாய்யும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் […]
சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்சர்களை அடித்த நியூசிலாந்து வீரர் கோலின் முன்ரோவின் உலகச் சாதனையை அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரெய்ன் சமன்செய்துள்ளார். டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கனவே தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக இந்தத் தொடரில் விளையாட தகுதிப் பெற்றன. இந்த நிலையில், மீதமிருக்கும் ஆறு அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது […]
ரோஹித் சர்மா தன்னைத் தானே பழிவாங்கிக் கொண்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் தான் தலை சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் என்பதை இந்திய வீரர் ரோஹித் சர்மா நிரூபித்திக் காட்டியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அவர் 212 ரன்கள் அடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தார். குறிப்பாக, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த நான்காவது வீரர் என்ற […]
300 எலிகளுடன் ஒரே வேனில் பல மாதங்களாகத் தங்கியிருந்த பெண்ணுக்குப் பயத்தைக் காட்டிய எலிகள். சான் டியாகோ பகுதியில் வசித்து வருபவர் கர்லா. இவர் தனக்குச் சொந்தமான வேனில் 300-க்கும் மேற்பட்ட எலிகளை வளர்த்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக். 8-ஆம் தேதி சான் டியாகோ ஹ்யுமேன் சங்கத்திற்கு (San Diego Humane Society) கர்லாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் கர்லா தன்னிடமுள்ள எலிகளை அடக்கமுடியவில்லை.. என்னைக் காப்பாற்றுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]
அதிக தெய்வபக்தி கொண்ட மீனராசி அன்பர்களே..!! இன்று ஓரளவு மகிழ்ச்சி குறையும் நாளாகவே இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக நீங்கள் மனம் குழம்ப கூடும். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. நாவில் கவனம் செலுத்தினால் நாணய பாதிப்பில் இருந்து தப்பிக்க இயலும். இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர் மூலம் நன்மை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டிச் செல்லும் பொழுது கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். தொழில் வியாபாரம் […]
அனைவரையும் குதூகலப்படுத்தும் கும்பராசி அன்பர்களே..!! இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாளாக இருக்கும். சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். நேற்றைய சேமிப்பு இன்று செலவுக்கு கைகொடுக்கும். இன்று அலுவலகத்தில் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு கொஞ்சம் உண்டாகலாம் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். சொத்து விவகாரங்களில் கவனம் இருக்கட்டும். எதிர்பாராத செலவு இருக்கும். நீங்கள் […]
தைரியத்தோடு போராடும் குணம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!! இன்று ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாளாக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரவழி பிறக்கும். தொலைபேசி வழித் தகவல் தொலை தூர பயணத்திற்கு உறுதுணை புரியும். இன்று எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்வீர்கள். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். வீட்டை விட்டு வெளியே தங்கவும் […]
தக்க சமயத்தில் அனைவருக்கும் உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறக்கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இன்று தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் உண்டாகும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் […]
நேர்மையான எண்ணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி அகம் மகிழும் நாளாக இருக்கும். இன்று இடமாற்றம், ஊர்மாற்றம் அல்லது நாடு மாற்றம் போன்றவை ஏற்படக் கூடிய சூழல் இருக்கும். உறவினர்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் சற்று நிதானமாக தான் நடக்கும். எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவுகள் கூடும். சரக்குகளை வாங்கும் போது கவனித்து வாங்குவது பாதுகாப்பாக வைப்பது நல்லது. இன்று […]
மற்றவர்களுக்கு தோள் கொடுத்து உதவக் கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். இடம், பூமி வாங்கி சேர்க்கும் எண்ணம் உருவாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். இன்று எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் மட்டும் இருக்கும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும் போது கவனமாக பழகுங்கள். தொழில் வியாபாரம் நிதானமாக தான் நடக்கும். கடன் […]
எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!! இன்று சகோதர வழியில் சகாயம் கிட்டும் நாளாக இருக்கும். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நட்பால் நன்மை கிட்டும். இன்று அடுத்தவர்களின் பிரச்சினையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை […]
சிந்தனையின் சொற்பமாக விளங்கும் சிம்மராசி அன்பர்களே…!! இன்று இனிமையான நாளாக இருக்கும். நெருங்கிய உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களும் விரிவடையும். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். தேவையான பொருட்களை மட்டும் தயவு செய்து வாங்குங்கள். அதேபோல பொருட்களையும் கவனமாக பாதுகாத்து கொள்வது அவசியம். தனிமையாக […]
காதலில் வயப்படக்கூடிய கடக ராசி அன்பர்களே..!! இன்று மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடர்வீர்கள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சின்ன சின்ன வாக்கு வாதத்தை மட்டும் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மையை கொடுக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும். வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும். அடுத்தவருக்கு உதவி செய்யும்போது […]
அனைவரையும் அன்பால் அரவணைத்து கொள்ளக்கூடிய மிதுன ராசி அன்பர்களே..!! இன்று புது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்க்க முயற்சி மேற்கொள்வீர்கள். இன்று தொழில் சிறப்பாக நடைபெறும். தொழிலில் இரட்டிப்பு லாபம் ஏற்படும். சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மட்டும் கொஞ்சம் தாமதம் ஏற்படும். ஆர்டர்கள் தொடர்பான காரியங்கள் தாமதத்தை கொடுக்கும். […]
மனதில் துணிவும் தைரியமும் கொண்ட ரிஷபராசி அன்பர்களே…!! இன்று உத்தியோக மாற்றம் உறுதியாகும் நாளாக இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். கல்யாண கனவுகள் நினைவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். ஆபரண சேர்க்கையும் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் ஏற்படும். கவனமாக பேசுவது நல்லது. இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் கவனமாக இருங்கள். அக்கம் பக்கத்தில் […]
அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க கூடிய மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தூரதேச பயணங்களால் ஏற்பட்ட தொல்லை விலகிச்செல்லும். வெளிவட்டார பழக்கவழக்கங்கள் விரிவடையும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுருங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு இன்று அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க கூடிய மேஷ ராசி அன்பர்களே…!! […]
விக்கிரவாண்டியில் பாமக – தேமுதிக கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி தொகுதிக்காக 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். […]
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. இவர் இந்தாண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது முதுகில் காயமடைந்தார். அதன்பின் காயம் காரணமாக அவர் பாகிஸ்தான் அணி பங்கேற்ற எந்தவொரு தொடரிலும் இடம்பெறாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியுடனான டி20 தொடரில் […]
அசுரன் படம் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு மகேஷ் பாபு தனது பாரட்டுகளை சமூக வலைதளம் மூலமாகத் தெரிவித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளியான படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் […]
சூர்யா மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணைந்து பணிபுரியவுள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார். ஹரி – சூர்யா கூட்டணியில் 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிங்கம்’. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார் ஹரி. இதுவரையில் 3 பாகங்கள் வெளியாகியுள்ளன, மூன்றாம் பாகத்தின் முடிவில் சிங்கத்தின் வேட்டை தொடரும் என படம் முடிக்கப்பட்டது. இந்த 3 பாகங்களுமே வணிக ரிதீயாக வெற்றிபெற்ற திரைப்படங்கள் ஆகும். தற்போது இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சூர்யாவின் சகோதரரும் […]
கேட்டலோனிய மக்கள் தங்கள் கைகளில் கிடைக்கும் குப்பைகளைக் காவல் துறையினர் அமைத்து வைத்திருந்த தடுப்புகளுக்கு வெளியே வீசி, அரசாங்கத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலோனியா மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் கேட்டலான்களின் இந்தக் கோரிக்கைக்கு ஸ்பெயின் அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அம்மாகாண அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 90 சதவிகித கேட்டலோன் […]
தெலுங்கானாவில் ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 மாத குழந்தை ஒன்று உயிரிழந்ததோடு மேலும் ஐந்து குழந்தைகள் காயமடைந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்.பி நகர் பகுதியிலுள்ள ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று (அக். 20) மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தினால், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 5மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது.மேலும் 5 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்துவிட்டு குழந்தைகளை மீட்டனர். […]
உள்நாட்டு டெஸ்ட் போட்டி சராசரியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை பின்னுக்குத் தள்ளி அவரது 71 ஆண்டுகால சாதனையை இந்தியாவின் ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதமடித்து அசத்தினார். ரோஹித் 249 பந்துகளை எதிர்கொண்டு தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு […]
கிறிஸ் கெய்ல் மற்றும் லசித் மலிங்கா ஆகியோர் இங்கிலாந்தின் ‘100 பந்துகள்’ என்ற புதிய போட்டிக்கான, எந்த அணிகளாலும் எடுக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது. இங்கிலாந்து நாட்டில் அடுத்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்படவுள்ள ‘100 பந்துகள்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் முதல் வீரராக அணியில் தேர்வு செய்யப்பட்டார். அதே போல் டி20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னர்களான வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் மற்றும் இலங்கை […]
பாஜகவின் தமிழக தலைவராக ஹெச். ராஜா நியமிக்கப்பட வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், “உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கின்றோம். 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை நாங்கள்தான் செய்தோம் என கூறும் […]
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கத்தியை கையில் வைத்துக்கொண்டு மாணவனைக் கொல்வதற்காக துரத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(19). இவர் நந்தனம் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீதரன் கல்லூரியை முடித்து விட்டு நேற்று வழக்கம் போல், சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ஷாகுல் ஹமீது (20) என்பவர் அவரை கத்தியால் குத்த துரத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன், […]
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வெளிநாடுகளில் நம் மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையெனப் பேசினார். கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டன. அப்போது கனிமொழி பேசுகையில், மாணவர்கள், இளைஞர்கள் தங்களது படிப்பிற்கு எந்த நிறுவனம் வேலை தரும் என்பதைப் புரிந்துகொண்டு நேர்முகத் தேர்விற்குச் செல்லவேண்டும், பல நேரங்களில் என்ன வாய்ப்பு இருக்கிறது என்று தெரியமால் தவற விட்டுவிடுகிறோம் என்று […]
சர்வதேச விமான நிலைத்திற்குக் கடத்தி வரப்பட்ட, ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்குத் துபாயிலிருந்து கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.அப்போது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நபில் (24), சென்னையைச் சேர்ந்த சையத் அப்துல் கரீம்(35) ஆகியோரை சுங்கத்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் தனியறைக்கு […]
தங்கம் விலை கிராமுக்கு ரூ 04 மற்றும் பவுனுக்கு ரூ 32 குறைந்துள்ளதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 04 ரூபாயும், சவரனுக்கு 32 ரூபாய்யும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் […]
’96’ படத்தில் நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது நான் தான் என பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் ‘அசுரன்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ‘கயட்டம்’, ‘ப்ரதி கூவன்கோழி’, ‘மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம்’ போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், தமிழ் படங்களில் நடிக்க, தான் முன்பே திட்டமிட்டிருந்ததாகவும், எந்த திரைப்படங்களும் சரியாக […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வயது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சர்ஃபராஸ் அகமதுவின் மனைவி கேள்வியெழுப்பியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து சர்ஃபராஸ் அகமதுவை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கியது. அவருக்குப் பதிலாக டெஸ்ட் அணிக்கு அசார் அலியும், டி20 அணிக்கு பாபர் அசாமும் கேப்டனாக செயல்படுவார்கள் என்று அதிரடியாக அறிவித்தது.சமீபத்தில் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடியது. இதில் […]
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெய்துவருகின்றது. ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம்.இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என […]
நாமக்கல்லில் பியூட்டி பார்லரில் வேலை பார்த்துவந்த பெண் ஒருவர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவரது மனைவி வனிதா (எ) சோபனா. இவர், திருச்செங்கோட்டில் உள்ள சுபானா பியூட்டி பார்லரில் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்துவருகிறார். 29 வயதான இவருக்கு தேவா, சச்சின் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை சோபனா வேலைக்குச் சென்றுள்ளார். […]
உலகிலேயே மிக நீண்ட விமான பயண சேவையை ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனம் சோதனை செய்துள்ளது. விமானச் சேவையைப் பயன்படுத்தும் பலரும் இடைநிறுத்தம் இல்லாத பயணத்தையே விரும்புவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இதனால் சக்திவாய்ந்த சிறிய விமானங்களை கொண்டு நீண்ட தூர விமானச் சேவையை வழங்க பல்வேறு நிறுவனங்களும் முன்வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனம் அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து இடைநிறுத்தம் இல்லாமல் சிட்னி வரை தனது சேவையைத் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கான சோதனை கடந்த வாரம் வெற்றிகரமாக […]
ஜி7 மாநாடு தனக்கு சொந்தமான விடுதியில் நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு ஜூன் 10 – 12ஆம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடக்கவுள்ளது. புகழ்பெற்ற இந்த மாநாடு நடத்தப்படும் இடங்களைத் தேர்வுசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த மாநாடு அமெரிக்க ட்ரம்புக்கு சொந்தமான ‘ட்ரம்ப் தேசிய டோரல் மியாமி’ விடுதியில் நடைபெறும் என்று கடந்த வியாழக்கிழமை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. […]
தெய்வ அருளை பரிபூரணமாக கிரகித்துக்கொள்ளும் மீனராசி அன்பர்களே..!! உங்களுக்கு உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். இன்று சக தொழில் சார்ந்த எவரிடமும் சச்சரவு பேசக்கூடாது. அதேபோல தொழிலில் உள்ள ரகசியத்தையும் பாதுகாக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் விலைக்கு வாங்க வேண்டாம். இன்று எதையும் சாதிக்கும் திறமை அதிகமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுப்பதாக […]
கடுமையான செயல்களையும் எளிதாக செய்யக்கூடிய கும்பராசி அன்பர்களே..!! சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனை சொல்லக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்கால நலன் கருதி விலகி இருப்பது நல்லது. தொழிலில் குறையை சரி செய்வதால் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். இன்று தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே மன வருத்தம் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். பிள்ளைகள் நலனில் […]
கஷ்டங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனதில் வைத்துப் பூட்டிக் கொள்ளும் மகர ராசி அன்பர்களே..!! இன்று பல நாள் தாமதமான பணி ஒன்று நிறை வேறும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். தொழில் வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிக்கும். நிலுவை பணமும் வந்து சேரும். விலகிய உறவினர்கள் சொந்தம் பாராட்டக் கூடும். இன்று வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்படும். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தினருடன் பழகும் போது மட்டும் […]
தனது கண் பார்வையால் அனைவரையும் கவரக்கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! பலநாள் தாமதமான பணி ஒன்று இன்று எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனையில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். பணப் பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். மாமன், மைத்துனருக்கு உதவிகள் செய்வீர்கள். இன்று நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் காரியத்தடை தாமதம் ஏற்படக்கூடும். உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படும். ஆகையால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். வீண்பயம் அவ்வப்போது வந்து செல்லும். ஏற்கனவே நீங்கள் செய்த காரியங்களுக்கான […]