Categories
தேசிய செய்திகள்

“பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல”…. ராகுல் சூப்பர் டுவிட்..!!

பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  கடந்த 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டதையொட்டி  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில்,  நாட்டின்   ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி மொழியால் மட்டுமே நாட்டையும் , நாட்டு மக்களையும் ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத மாநிலங்களில்  கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  கண்டனம் தெரிவித்து வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

“எங்களுக்கு கன்னடம் தான் முதன்மை மொழி”… கர்நாடக முதல்வர் எடியூரப்பா.!!

கர்நாடகத்தைப் பொருத்தவரை, கன்னடம் முதன்மை மொழியாகும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.   கடந்த 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டதையொட்டி  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில்,  நாட்டின்   ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி மொழியால் மட்டுமே நாட்டையும் , நாட்டு மக்களையும் ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத மாநிலங்களில்  கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  கண்டனம் தெரிவித்து வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

அவர் மொழி மாறிவிட்டார்…. பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு பதிலடி கொடுத்த கமல்..!!

”நன்றி மறந்தவன் தமிழன்” என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின்   ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற  கருத்துக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,  ”நன்றி மறந்தவன் தமிழன், கொண்டாடத் தெரியாதவன் தமிழன், பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் தான் என்று […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“ஓமனில் கோர கார் விபத்து”… 8 மாத குழந்தையுடன் இந்திய தம்பதி மரணம்… உயிருக்கு போராடும் மற்றொரு குழந்தை..!!

ஓமனில் நடந்த கார் விபத்தில்  ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர், மனைவி மற்றும் அவரது 8 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது.   ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான கவுசல்லா அஸ்மத்துல்லா கான் என்பவர் துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற 29 வயது மனைவி இருக்கிறார். இந்த ஜோடிக்கு 3  வயதில் ஹனியா என்ற மகளும், 8 மாதமான ஹம்சா கான்  என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் காரில் ஓமன் […]

Categories
மாநில செய்திகள்

“நன்றி மறந்தவன் தமிழன்”… கொண்டாடத் தெரியாதவன் தமிழன்…. பொன்.ராதாகிருஷ்ணன்.!!

”நன்றி மறந்தவன் தமிழன், கொண்டாடத் தெரியாதவன் தமிழன் என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   நேற்று  முன்தினம்  இந்தி தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் இந்தியாவிற்கு   ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தி உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்” என்று கூறியிருந்தார். இதையடுத்து அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கு போட்டு தற்கொலை..!!

ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திரபிரதேச மாநிலத்தின்  முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் ராவ். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சிவபிரசாத் கடந்த 2016 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது சட்டப்பேரவை சபாநாயகராக இருந்துள்ளார். இந்நிலையில்   ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் சிவபிரசாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்துள்ளதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். தற்கொலை குறித்த காரணம் தெரியவில்லை.  முன்னதாக இவர் மீது சட்ட பேரவையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார்?… அவர் இங்கே இருக்கிறார்… காஷ்மீர் நிர்வாகம் பதில்..!!

ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்று வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்  கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க  முயன்றபோது அது என்னால் முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் […]

Categories
மாநில செய்திகள்

சட்ட விரோதமாக பேனர் வைக்க மாட்டோம்… திமுக பிரமாண பத்திரம் தாக்கல்.!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில்  சட்டவிரோதமாக பேனர் வைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் 23 வயதான சுபஸ்ரீ சாலையின் நடுவே வைக்கப்பட்ட பேனர் அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து கட் அவுட்,  பேனர் வைக்க வேண்டாம் என தமிழக அரசியல் கட்சிகள் அறிவுறுத்தியுள்ளன. இந்த நிலையில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“சவுதியில் கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல்”…. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல், டீசல்..!!

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இந்தியாவியில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.  சவுதி அரேபியாவில் இருந்து தான் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இங்கிருந்து ஒவ்வொரு நாளும் உலகின் பிற நாடுகளுக்கு 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உலகின் மொத்த எண்ணெய் வள நாடுகளில் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அளவு சவூதி அரபியாவில் தான் நடைபெறுகிறது.  பல நாடுகள் கச்சா எண்ணெயை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் ஒரு போலீஸ்”… பல பெண்களிடம் பாலியல் தொல்லை…. 6 திருமணம் செய்தவர் கைது..!!

சென்னையில் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரை புகாரின்படி போலீசார் கைது செய்தனர்.    சென்னை எழும்பூரில் உள்ள  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரு பெண் கடந்த 30-ஆம் தேதி காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின் காவல் துறையினர் பல இடங்களில் தேடி இறுதியில் திருப்பூரில் பெண்ணை மீட்டனர். இந்நிலையில் பெண்ணை கடத்தியதாக கூறப்படும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி  என்பவர் கடத்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடா என்ன ஒரு லுக்…. காந்த பார்வையால் இழுக்கும் நடிகை அனுபமா புகைப்படம்..!!

நடிகை அனுபமா கண்ணால் கிறங்கடிக்கும் அழகான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டுள்ளார்.  கேரளாவை சேர்ந்த  நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான ‘பிரேமம்’  திரைப்படத்தின் மூலம்  சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பரவலாக புகழ்பெற்றார். அதன்பின் ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அதன்பிறகு இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.   தற்போது இவர் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக கண்ணன் இயக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் படத்தில் அதர்வாவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல்..!!

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரி மோதி உயிரிழந்த குடும்பத்தினருக்கு கமல் ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னையில்  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  கடந்த 12ம் தேதி  பள்ளிக்கரணை வழியாக சாலையில் ஸ்கூட்டரில்  சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த அதிமுக பேனர் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை […]

Categories
மாநில செய்திகள்

“மோடி, அமித்ஷாவின் கருத்து மக்கள் மனதில் தேள் கொட்டியது போல் உள்ளது”… சீறிய ஸ்டாலின் .!!

மோடி, அமித்ஷாவின் கருத்து இந்தி பேசாத மக்கள் மனதில் தேள் கொட்டியது போல் உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திமுகவின் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசிவருகிறார். அப்போது, அவர்  பேசியதாவது, கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும். பேனர் வைப்பது விளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்பை ஏற்படுத்தும்  வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன. திமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி. இனிமேலும் யாரும் பேனர் வைக்கக் கூடாது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கோதாவரியில் படகு கவிழ்ந்ததில் மிகுந்த வேதனை…. சோகத்தில் பிரதமர் மோடி..!!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஒரு படகு கவிழ்ந்ததில் மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில்  கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க 61 சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். 61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 28 பேர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர். இதையடுத்து தகவலறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

கோதாவரி படகு விபத்தில் 13 பேர் பலி…. “குடும்பத்திற்கு ரூ.10,00,000 லட்சம்”… முதல்வர் ஜெகன் மோகன் அறிவிப்பு..!!

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கோதாவரி படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ .10 லட்சம் நிதி உதவியை அறிவித்தார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில்  கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க 61 சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். 61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 28 பேர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் சோகம்… “கோதாவரி ஆற்றில் மூழ்கி 13 பேர் பலி”… மீட்பு பணிகள் தீவிரம்.!!

 ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் பிற்பகல் 61 பயணிகளுடன் சென்ற  சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில்  13 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் உள்ளவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க அவர்கள் சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். படகில் 61 பேர் இருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். இந்நிலையில்  61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு […]

Categories
உலக செய்திகள்

“நரகத்தில் இறக்க தயாராகுங்கள்”… பாம்பு, முதலைகளை வைத்து மோடியை மிரட்டிய பாக் பாடகி..!!

பிரதமர்  மோடியை பாம்பு மற்றும் முதலைகளை வைத்து மிரட்டிய வீடியோவை தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றிய பாகிஸ்தான் பாப் நட்சத்திரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி  ரபி பிர்சாடா (Rabi Pirzada) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை மிரட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். , முதலை, நான்கு மலைப்பாம்புகள் மற்றும் பாம்புகள் இந்திய பிரதமருக்கு “சிறப்பு பரிசுகள்” என்று கூறி, அவருக்கு விருந்து அளிப்பதாக அவர் கூறினார். அதில் அவற்றை […]

Categories
மாநில செய்திகள்

“வேண்டாம் என்று சொல்லவில்லை”… இந்தி திணித்தால் யாரும் ஏற்க மாட்டார்கள்… புதுச்சேரி முதல்வர்..!!

எல்லா மாநிலங்களிலும் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள் என்று   புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் இந்தி தினம் நேற்று  கொண்டாடப்பட்டது.  இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் வாழ்த்து மடலாக  ஒன்றை பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும்  ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பிளக்ஸ் பேனர் வைத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!

மதுரையில் அனுமதியின்றி சட்ட விரோதமாக பிளக்ஸ் பேனர் வைத்ததாக  5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   சென்னையில்  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  கடந்த 12ம் தேதி  பள்ளிக்கரணை வழியாக சாலையில் ஸ்கூட்டரில்  சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த அதிமுக பேனர் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

 “5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு” அரசாணையை திரும்பப்பெறுக… முக ஸ்டாலின் கண்டனம்..!!

 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும்  8ஆம்  வகுப்புக்கும்  நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன்  பொது தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி இயக்குனர்களுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் முக […]

Categories
மாநில செய்திகள்

“சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு”… அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்ப்பு..!!

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.  சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் கடந்த 12ம் தேதி  கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு  பணி முடிந்து   பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ […]

Categories
மாநில செய்திகள்

“அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா”… இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை..!!

அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவில் அவரது சிலைக்கு முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்  மரியாதை செலுத்தினர். சென்னையில் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அமைச்சர்கள் அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகளும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் அதிமுக கட்சிக் கொடிகள் மற்றும் பேனர், கட் அவுட்  எதுவும் […]

Categories
தேசிய செய்திகள்

“தெலங்கானா முதல்வர் வீட்டு நாய் மரணம்”…. இவர்கள் தான் காரணம்… மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு..!!

தெலங்கானா முதல்வர் வீட்டு நாய் மரணமடைந்ததையடுத்து சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அங்குள்ள அரசு பங்களா பிரகதி பவனில்  வசித்து வருகிறார். இந்த பவனில் 11  நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் ஹஸ்கி வகையை சேர்ந்த 11 மாதமான அந்த நாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனுடைய உடல் கடுமையாக கொதித்தது.  அந்த நாய் அப்போதும் சைவம் மட்டுமே சாப்பிட்டு வந்துள்ள நிலையில் அதனால் பால் […]

Categories
மாநில செய்திகள்

“காப்பான் வெளியாகும் நாளில்…. “200 ஹெல்மெட்”…. மாஸ் காட்டும் சூர்யா ரசிகர்கள்..!!

காப்பான் திரைப்படம் வெளியாகும்போது பேனருக்கு பதில் 200ஹெல்மெட் வழங்கப்படும் என்று சூர்யா ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.  நெல்லை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது ட்விட்டரில்   ஒரு பதிவிட்டிருந்தார். அதில், புதிய திரைப்படம் வெளியாகும் போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைப்பதிற்கு பதிலாக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான “ஹெல்மட்” வழங்கினால் அவர்களே உடனடியாக உண்மையான “காப்பான்” ஆக முடியும்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நெல்லை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் கோரிக்கையை ஏற்ற நடிகர் சூர்யா […]

Categories
பல்சுவை

“அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல்”… கவலையில் வாகன ஓட்டிகள்..!!

பெட்ரோல், டீசல் விலை நான்காவது  நாளாக ஏற்றம் கண்டுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
மாநில செய்திகள்

பேனர் வேண்டாம்…. “30 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டேன்”… கமல்ஹாசன்.!!

30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைப்பது மற்றும் பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்றபோது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக […]

Categories
மாநில செய்திகள்

“சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு இரங்கல்”…. அதிவேகமாக இயக்க மாட்டோம்… தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் உறுதிமொழி.!!

சுபஸ்ரீ மரணமடைந்த நிலையில் லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம் என்று தண்ணீர் லாரி உரிமையாளர்  சங்கம் உறுதிமொழி எடுத்துள்ளது.   சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்தவர்  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் பி.டெக் படித்துள்ளார். கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து துரைப்பாக்கம் – பல்லாவரம்  ரேடியல் சாலையில்  பள்ளிக்கரணை அருகே  சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பள்ளிக்கு உதவுங்கள்”… நேர்மையாக இருந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்… நடிகர் சூர்யா.!!

பேனர் வைப்பதற்கு பதிலாக பள்ளிக்கு உதவுங்கள் என்றும், நேர்மையாக இருந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.  சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (23)  பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“யாரும் பேனர் வைக்க வேண்டாம்”… ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்..!

நடிகர் சூர்யா ரசிகர்களிடம் யாரும் பேனர் வைக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  பள்ளிக்கரணை அருகே  சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலை தடுமாறி சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சுபஸ்ரீ மரணம்…. “யாரும் பேனர் வைக்காதிங்கப்பா”… தளபதி அட்வைஸ்.!!

ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  பள்ளிக்கரணை அருகே  சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலை தடுமாறி சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுக திமுக, பாமக […]

Categories
மாநில செய்திகள்

“இந்தி திணிப்பு மக்களிடம் வெறுப்பையே விதைக்கும்”…. அமித்ஷாவின் கருத்து ஏற்புடையதல்ல… டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

இந்தியைத் திணிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மக்களிடம் வெறுப்பையே விதைக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  பாஜகவின்  மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்  அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இந்தியாவில் இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.   அதில்,  இந்தியா […]

Categories
மாநில செய்திகள்

“சூரியனால் முடியவில்லை”… இந்தியால் எப்படி  முடியும்?… வைரமுத்து கேள்வி.!!

சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை. இந்தியால் எப்படி  முடியும்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.   பாஜகவின்  மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்  அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இந்தியாவில் இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“சுபஸ்ரீ மரணம்”…. பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி..!!

 சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்தவர்  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து   பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி […]

Categories
மாநில செய்திகள்

“பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம்”… புகார் தெரிவிக்க போன் நம்பர்…. மாநகராட்சி உத்தரவு..!!

விதிமீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள் இயக்கப்படும் என்றும், அத்துடன் புகார் எண்களையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  பள்ளிக்கரணை அருகே  சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை […]

Categories
மாநில செய்திகள்

“சர்வாதிகார முறையில் கருத்து தெரிவிக்கிறார்கள்”…. அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்த திருமாவளவன்..!!

 சர்வாதிகார முறையில் கருத்து தெரிவிக்கிறார்கள் என்று திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.   பாஜகவின்  மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்  அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது . இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் […]

Categories
தேசிய செய்திகள்

“வாய் கொடுத்து மாட்டிய அமித்ஷா”…. இந்திக்கு வந்த சோகம்.!!

 அமித்ஷாவின் கருத்துக்கு இந்தி தினத்தில் இந்திக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.  இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது . இந்தி தினத்தையொட்டி ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும்  ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம்.   மேலும் இது உலகில் இந்தியாவின் அடையாளமாக […]

Categories
மாநில செய்திகள்

“எப்படியாவது இந்தியை திணித்துவிட முடியாதா”…. மத்திய அரசு முயற்சி…. முக ஸ்டாலின் கண்டனம்..!!

எப்பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட முடியாதா என மத்திய அரசு முயற்சி செய்கிறது என முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது . இந்தி தினத்தையொட்டி ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும்  ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தி மொழியால் தான் இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும்”… சர்ச்சையில் சிக்கிய அமித்ஷா..!!

இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது .இந்தி தினத்தையொட்டி ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும்  ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு எனது இரங்கல்”… பேனர்,போஸ்டர் வைப்பது  சினிமாவுக்கும் பொருந்தும்… நடிகர் விவேக்..!!

நடிகர் விவேக்  சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்து, பேனர்,போஸ்டர் வைப்பது  சினிமாவுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.  சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  பள்ளிக்கரணை அருகே  சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுக திமுக, […]

Categories
பல்சுவை

“தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை”… வாகன ஓட்டிகள் கவலை.!!

பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது  நாளாக ஏற்றம் கண்டுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 14…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 14 கிரிகோரியன் ஆண்டு : 257_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 258_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 108 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 81 – டைட்டசு இறந்ததை அடுத்து அவரது சகோதரன் தொமீசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார். 629 – பேரரசர் எராக்கிளியசு பாரசீகப் பேரரசை வென்ற பின்னர் கான்ஸ்டண்டினோபிலை அடைந்தார். 786 – அல்-காதி இறந்ததை அடுத்து அவரது சகோதரர் அருண் அல்-ரசீது அப்பாசியக் கலீபாவாக நியமிக்கப்பட்டார். 1752 – கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை”… வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை..!!

 பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை என வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்தவர்  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23).  இவர் பி.டெக் படித்துள்ளார். கந்தன்சாவடியில் உள்ள  தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சுபஸ்ரீ  பணி முடித்து விட்டு பள்ளிக்கரணை அருகே  சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார்.அப்போது பின்னால் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு”…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும்  8ஆம்  வகுப்புக்கும்  நடத்தப்படும் என அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கொண்டு  மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன்  பொது தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி இயக்குனர்களுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“சில நொடியில் பலியான சுபஸ்ரீ”… பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது.!!

சென்னையில்  சுபஸ்ரீ பலியான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்தவர்  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் பி.டெக் படித்துள்ளார். கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து துரைப்பாக்கம் – பல்லாவரம்  ரேடியல் சாலையில்  பள்ளிக்கரணை அருகே  சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். […]

Categories
மாநில செய்திகள்

“சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5,00,000 இடைக்கால நிவாரணம்”… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில்  சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த  போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

“சுபஸ்ரீக்கு எனது இரங்கல்”… பதாகைகள் வைக்கவேண்டாம்… டிடிவி தினகரன் வேண்டுகோள்..!!

இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்து கழக நிர்வாகிகளுக்கு பதாகைகள் வைக்கவேண்டாம் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில்  சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த  போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். சுபஸ்ரீ பலியானதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைக்க கூடாது”…. அதிமுக தலைமை வேண்டுகோள்..!!

கட்சி நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்க கூடாது  என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.   சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சுபஸ்ரீ (23) சென்று கொண்டிருந்த  போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக பலியானார். இதையடுத்து முக ஸ்டாலின்  நிகழ்ச்சியோ,  கூட்டமா […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் வேண்டும்?… தகுதி இல்லை என்று நினைக்கிறார்களா?…. உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர்  பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் திருமணத்திற்கு  வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழ, நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பேனர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப் […]

Categories
மாநில செய்திகள்

“இனி பேனர் கட் அவுட் வைக்க கூடாது”…. அப்படி வச்சிங்கன்னா நா வரமாட்டேன்… எச்சரிக்கும் ஸ்டாலின்..!

திமுக நிகழ்ச்சிக்காக கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.   சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர்  ஒரு பொறியியல் பட்டதாரி.  கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது ” ஆட்சியர் வீரராகவராவ் அதிரடி.!!

அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது செய்யப்படுவர் என்று ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது செய்யப்படுவர் என்று அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதிபெறாத பேனர்களை அகற்றவும், விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும்  உத்தரவிட்டுள்ளார் . முன்னதாக  சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்ற ஒரு பொறியியல் பட்டதாரி கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பணி முடிந்து  […]

Categories

Tech |