Categories
மாநில செய்திகள்

திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியா சென்றார்..!!

அரசு முறை பயணமாக  தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.  தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு முறை பயணமாக வெளிநாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தற்போது இவர் இந்தோனேசியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்று  அந்த நாடுகளின் வன உயிரியல் பூங்கா மற்றும் சரணாலயங்கள் ஆகிவற்றை பார்வையிடடுகிறார். அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் காட்டுத்தீ தடுப்பு முறைகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு தமிழகத்தில் அந்த செயல்முறைகளை […]

Categories
உலக செய்திகள்

“கையில் குழந்தையுடன் மனைவி”…. ஈவு இரக்கமின்றி அடித்து துன்புறுத்தும் கணவன்… வைரலாகும் காட்சிகள்..!!

வியட்நாமில்  கையில் குழந்தையுடன் இருக்கும் மனைவியை கணவன் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது.   வியட்நாமில் வூ தி தூ லி (Vu Thi Thu Ly) எனும் 27 வயது பெண், பிரபல வானொலியில் செய்தி வாசிப்பாளராகப் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வூஷு ங்குயென் ஸ்வான் (Nguyen Xuan Vinh)  என்ற கணவரும் ஒரு மகளும் இருக்கின்றனர். தற்காப்புக் கலை பயிற்றுனராக இருக்கும் கணவர் மனைவி வூ தி தூ லியை தொடர்ந்து  அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர் விவகாரத்து பெற்றார். […]

Categories
தேசிய செய்திகள்

“ஃபேஸ்புக்கால் விபரீதம் ” 10 -ஆம் வகுப்பு மாணவி கொலை… இளைஞர் கைது..!!

தெலுங்கானாவில் பேஸ் புக் நண்பரான  10 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் ஹர்ஷினி மாணவி பேஸ்புக் மூலம் 27 வயதான நவீன் ரெட்டி என்பவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதையடுத்து ஒருநாள் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி இருவரும் கடந்த 27-ஆம் தேதியன்று சங்கரய்ய பள்ளி குடியிருப்புக்கு அருகே இருக்கும் […]

Categories
மற்றவை விளையாட்டு

எனது அடுத்த இலக்கு இதுதான்…. தங்க பதக்கம் வென்ற இளவேனில் பேட்டி..!!

என்னுடைய  அடுத்த கட்ட இலக்கு சீனாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராவது தான் என்று இளவேனில் தெரிவித்துள்ளார்.  பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  20 வயதான இளவேனில் வளரிவன் சீனியர் உலக கோப்பையில் அடியெடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே 251.7 புள்ளிகள் பெற்று  தங்க பதக்கத்தை  வென்று  இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, […]

Categories
தேசிய செய்திகள்

“மாணவர்கள் டாய்லெட்டை சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை” மீண்டும் சர்ச்சையை கிளப்பும் கலெக்டர்..!!

மத்தியபிரதேசத்தில்  மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது ,மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.   மத்திய பிரதேச மாநிலத்தின் கந்துவா மாவட்டத்தில் உள்ள சின்ஹாரா  கிராமத்தில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்யும் இந்த வீடியோவ பார்த்த பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த […]

Categories
மாநில செய்திகள்

“மென்மேலும் பல பதக்கங்களை இளவேனில் வளரிவன் வெல்ல வேண்டும்” முக ஸ்டாலின் இதயப்பூர்வமான வாழ்த்துகள்..!!

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த  இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று  தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதையடுத்து  தங்கம் வென்ற  வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க […]

Categories
மாநில செய்திகள்

“தங்கம் வென்று நம் தேசத்திற்கு சகோதரி பெருமை சேர்த்துள்ளார்” – தமிழிசை வாழ்த்து ..!!

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த  இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று  தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் தங்கம் வென்ற இளவேனில் வளரிவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டரில் […]

Categories
மற்றவை விளையாட்டு

இந்தியாவுக்கு பெருமை…. தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை..!!

தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.  பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த  இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று  தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்ற உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  […]

Categories
உலக செய்திகள்

“மெக்சிகோ பெட்ரோல் குண்டு தீ விபத்து” பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு..!!

மெக்சிகோவில் இரவு விடுதிக்குள் நடந்த பெட்ரோல் குண்டு தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.  மெக்ஸிகோவின் வெராக்ரூஸ் மாகாணத்தில் உள்ள  வளைகுடா கடற்கரை நகரமான கோட்ஸாகோல்கோஸில் (Coatzacoalcos) ஒரு இரவு விடுதியில் அந்நாட்டு நேரப்படி கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை  அன்று இரவு திடீரென ஒரு கும்பல் விடுதிக்குள் நுழைந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த  தீ விபத்தில்  23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீக்காயங்களுடன்  13 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் இலங்கை அணியின் மிரட்டல் ஸ்பின்னர்..!!

இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் (வயது 34)  மூன்று வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக  நேற்றிரவு  அறிவித்தார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி எதிரணி பேட்ஸ்மேன்களை தனது ஸ்பின்னர் ஆல் மிரள வைத்தவர். அதற்குச் சான்றாக 2008 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

“மெக்சிகோவில் அதிர்ச்சி” இரவு விடுதியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்… 23 பேர் உடல் கருகி பலி..!!

மெக்சிகோவில் இரவு விடுதிக்குள் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மெக்ஸிகோவின் வளைகுடா கடற்கரை நகரமான கோட்ஸாகோல்கோஸில் ஒரு இரவு விடுதி வழக்கம் போல செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்நாட்டு நேரப்படி கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை  அன்று இரவு திடீரென ஒரு கும்பல் விடுதிக்குள் நுழைந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது.  பெட்ரோல் குண்டு வெடித்து தீ பிடித்ததில் 15 ஆண்கள், 8 பெண்கள்  சேர்த்து மொத்தம் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். […]

Categories
உலக செய்திகள்

கடுமையான கோபம்…. 3 முறை காரை புரட்டிய காண்டாமிருகம்… அதிர்ந்த பராமரிப்பாளர்..!!

ஜெர்மனியில் சஃபாரி பூங்காவில்  விலங்கு பராமரிப்பாளர் வந்த காரின் மீது காண்டாமிருகம் ஓன்று  கோபத்துடன் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது  ஜெர்மனிய மாநிலமான லோயர் சாக்சனியில் (Lower Saxony ) உள்ள நகராட்சியான ஹோடன்ஹேகனில் உள்ள செரெங்கேட்டி (Serengeti ) சஃபாரி பூங்காவில் விலங்கு பராமரிப்பாளர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்  வந்த காரின் மீது கோபத்துடன் 30 வயதான குசினி (kusini) என்ற காண்டாமிருக காளை, தனது கொம்புகளை வைத்து மூன்று முறை புரட்டி போட்டது. மிருகத்தனமான தாக்குதலில் வாகனம் கடுமையாக சேதமடைந்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“கன்னத்தில் ‘கிஸ்’ கொடுத்த தொண்டர்” சிரித்த ராகுல்… வைரலாகும் வீடியோ..!!

ராகுல் காந்தி தனது தொகுதியான வய நாட்டிற்க்கு சுற்று பயணம் மேற்கொண்ட போது ஒரு தொண்டர் அவரது கன்னத்தில் முத்தமிட்டார்.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது சொந்த பாராளுமன்ற தொகுதியான கேரளாவில் உள்ள வயநாட்டிற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வயநாடு பகுதியில் காரில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். ராகுல் காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்தார். கார் மெதுவாக சென்றபோது  தொண்டர்களாக  வந்து வந்து ராகுலிடம் கை கொடுத்து விட்டு  சென்றனர். அதில் […]

Categories
உலக செய்திகள்

“சவப்பெட்டியில் 300 கிலோ கஞ்சா” கார் ஓட்டுநர் கைது..!!

கொலம்பியாவில் சவப்பெட்டியில் வைத்து 300 கிலோ கஞ்சா கடத்திய கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.  கொலம்பிய நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிக அளவில்  விளைவிக்கப்படுகிறது. அதே சமயம் இங்கு சட்டத்திற்கு விரோதமாகவும் சிலர் கஞ்சாவினை பயிரிட்டு அமெரிக்கா  உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். அதன்படி சமீபத்தில் போலீசார் பாம்லோனா – குக்கூட்டா (ucuta) சாலையில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக ஒரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். இதற்கு […]

Categories
உலக செய்திகள்

“ஆசையாக கொஞ்ச முயன்ற போது விபரீதம்” காதை கடித்த ராட்வீலர் நாய்…. வேதனை தெரிவிக்கும் பெண்..!!

இங்கிலாந்தில் ஆசையாக கொஞ்சும் போது ராட்வீலர் (Rottweiler) நாய் தனது காதை கடித்து துண்டாக்கியதாக  வேதனையுடன் அப்பெண் தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்தின் சவுத்வேல்ஸைச் சேர்ந்த ஸ்டெஃப் ஜான் (Steff John) என்ற  28 வயதுடைய  இளம்பெண் ஒருவர், சோமர்செட்டில் உள்ள காரவன் பார்க்கில் வாக்கிங் சென்ற ராட்வீலர் (Rottweiler) என்ற நாயை ஆசையுடன் கொஞ்சுவதற்கு உரிமையாளரிடம் அனுமதி கேட்ட்டார். அதன்படி உரிமையாளரும் அனுமதி கொடுக்க, ஸ்டெஃப் ஜானும் ராட்வீலர் நாயைத் தொட்டவுடனேயே அவ்வளவுதான் அடுத்த வினாடி, தன் மீது பாய்ந்து காதைக் கடித்துக் குதறியதாக […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 2 பேரை கடத்தி கொலை செய்த தீவிரவாதிகள்..!!

புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் வசித்து வந்த இருவரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்தனர்.  ஜம்மு- காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஹதீர் கோலி மற்றும் மன்சூர் அகமது கோலி ஆகியோர் டிரால் (Tral) பகுதியில் நாடோடியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 20- ஆம் தேதி கடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் லாச்சி டாப் பெஹாக் காட்டில் (Lachi Top Behak forest) இருவரையும்  போலீசார் சடலமாக மீட்டனர். பின்னர் இவர்களது […]

Categories
உலக செய்திகள்

“227 குழந்தைகளின் சடலம்” உலகிலேயே இங்கு தான் அதிக நரபலி..!!

பெரு நாட்டின் தலைநகரான லிமாவை ஒட்டியுள்ள பகுதியில் நரபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகரான லிமாவை ஒட்டியிருக்கும்  ஹூவான்சாகோ பகுதியில் கடந்த ஒரு ஆண்டுகளாக தொல்லியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வில் அன்றைய காலம் சிமு நாகரீகத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக அனைவரும் நம்பப்படும் 227 குழந்தைகளின் உடல்கள் எலும்பு கூடுகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நரபலி  உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டது  என தலைமை தொல்லியலாளர் கேஸ்டிலோ தெரிவித்துள்ளார். கண்டறிந்த உடல்களை ஆராய்ந்து […]

Categories
உலக செய்திகள்

மரபணு மாற்றம் “வெள்ளை நிறமிப் பல்லி” விஞ்ஞானிகள் சாதனை..!!

உலகிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட “வெள்ளை நிறமிப் பல்லியை (White pigment lizard)  உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.  ஜார்ஜியா நாட்டின்  பல்கலைக்கழகத்தைச் நேர்ந்த மரபணுவியல் துறை விஞ்ஞானிகள் CRISPR என்று அழைக்கப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கரீபியன் தீவுகளில் அதிகமாக காணப்படும் குறிப்பிட்ட வகை பல்லியின் முட்டையின் மேல் படிந்திருக்கும் சவ்வுகளைத் தனியாக பிரித்தனர். பின்னர் அதிலுள்ள டிஎன்ஏ (DNA) மூலமாக  புதிய உயிரினத்தை உருவாக்க சோதனைகளை நடத்தி வந்தனர். இந்தச் சோதனைகளின் விளைவாக “அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமி” கொண்ட புதிய […]

Categories
உலக செய்திகள்

இந்திய விமானம் வான்வழியில் பறக்க தடை “மோடி தொடங்க… நாங்கள் முடிக்க” பாகிஸ்தான் அதிரடி..!!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியாக முற்றிலும் பறக்க தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.   கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370- ஐ மத்திய அரசு  நீக்கியது. இதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த பிரச்சனையை ஐநா சபைக்கு கொண்டு செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டது. பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவு அளித்த நிலையில் மற்ற நாடுகள் கைவிட்டன. இந்நிலையில் இந்தியா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசியில் கிரைண்டிங் தொழிற்சாலையில் தீ விபத்து..!!

சிவகாசியில் பட்டாசு மூலப்பொருட்களை அரைக்கும் கிரைண்டிங் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த விஜயகண்ணன் என்பவர் சொந்தமாக கெமிக்கல் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இத்தொழிற்சாலையில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் அரைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது பணி முடிந்து வீடு சென்றவுடன் வெடி உப்பில் திடீர் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்டு  கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து தகவல் கொடுக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

காதல் விவகாரம் : காதலன் ஆணவக்கொலை “10 பேருக்கு இரட்டை ஆயுள்” நீதிமன்றம் அதிரடி..!!

காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது . கேரள மாநிலம் கோட்டயத்தில் பட்டினத்தைச் சேர்ந்த ஜோசப் கெவின் என்பவர்  கல்லூரியில் படிக்கும்போது நீனு  என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நீனு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தினர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இந்த ஜோடி கடந்த ஆண்டு மே மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ள காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை… மனைவிக்கு ஆயுள் தண்டனை..!!

கள்ளகாதலால்  கணவனை கொன்ற மனைவிக்கும், கள்ள காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து  சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.   சென்னையில் உள்ள நெற்குன்றம் பாடிகுப்பம் வண்டி கோவில் பகுதியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் என்பவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி இருக்கிறார். இவரது மனைவி ஜெயபாரதிக்கும் பாடிக்குப்பம்  பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதற்கு இடையூறாக   கணவர்  கார்த்திக் இருந்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து மெரினா கடற்கரைக்கு ஜெய பாரதி அழைத்து வந்தார். அங்கே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 பெண்கொலை… 4 ஆயுள் தண்டனை… மகளிர் நீதிமன்றம் அதிரடி..!!

சென்னையில் பெண்ணையும்  3 பெண் குழந்தைகளையும் கொலை செய்த வாலிபருக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    கடந்த 2016- ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டை முத்து தெருவை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் தனது கணவரை பிரிந்து தனது 3 பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சின்னராஜ் பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து சின்னராஜ் உடனான தொடர்பை உடனே துண்டித்தார் பாண்டியம்மாள். இதனால் […]

Categories
உலக செய்திகள்

பால்கனியில் “தலை கீழாக யோகா” செய்த மாணவி… 80 அடி கீழே விழுந்த சோகம்..!!

மெக்ஸிகனை சேர்ந்த  கல்லூரி மாணவி பால் கனியில் யோகா செய்யும் போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.  மெக்ஸிகன் கல்லூரியில் பயின்று வரும் மாணவி அலெக்ஸா டெர்ரஷாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றின் 6- வது மாடியில் வசித்து வருகிறார். தினமும்   தனது வீட்டின் பால்கனியில் இருந்து யோகா பயிற்சி மேற்கொண்டு வருவார். அதன்படி தன்னுடைய பால்கனியின்  வெளிப்புற கம்பியில் தலைகீழாக நின்றபடி யோகா பயிற்சி செய்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி  சுமார் 80 அடி கீழே சென்று தரையில் […]

Categories
தேசிய செய்திகள்

“புது ஆடை வாங்கி வராத மனைவி” முத்தலாக் கூறிய கணவன்..!!

உத்தர பிரதேசத்தில்  புது ஆடை வாங்கி கொண்டு போகாததால் மனைவியிடம் சிறையில் இருக்கும் கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார்.  உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா  மாவட்டத்தில் வசித்து வரும் பெண் ஒருவர், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது கணவனை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் தனக்கு பக்ரீத் பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி வரும்படி கூறியுள்ளார். ஆனால் இவர் புது ஆடை வாங்கி கொண்டு செல்லவில்லை. இதனை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு அவர் முத்தலாக் கூறி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நேர்கொண்ட பார்வை’ டிக்கெட் தகராறு” குடிபோதையில் நண்பனை கொலை செய்த நண்பர்கள்.!!

திருச்சியில் ‘நேர்கொண்ட பார்வை’ டிக்கெட்  தகராரை குடிபோதையில் நண்பர்களுக்குள் பேசும்போது 3 பேர் சேர்ந்து ஒருவரை அடித்து கொன்றனர். திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும்  “காக்கா” என்று அழைக்கப்படும் கார்த்திக் இருவரும் சேர்ந்து கடந்த  7-ந்தேதி ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தை பார்க்க தியேட்டர் சென்றுள்ளனர். அங்கே டிக்கெட் வாங்கும் போது இவர்கள் இருவருக்கும் பொன்மலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருவரும் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் வெட்டி விட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாகவே  வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு  வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும்” ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சமீபத்தில்  தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 5  புதிய மாவட்டங்களை புதிதாக தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகு மயிலாடுதுறை பகுதி  மக்களும் தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று  கடந்த ஒரு மாதத்திற்கும்  மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி  வருகின்றனர்.பல ஆண்டுகளாகவே மயிலாடுதுறை கோட்ட மக்கள் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரையில் […]

Categories
தேசிய செய்திகள்

“வேன் மீது சரக்கு லாரி கவிழ்ந்து கோர விபத்து” 16 பேர் உடல் நசுங்கி பலி… 5 பேர் காயம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓன்று சரக்கு ஏற்றிக்கொண்டு  வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் மீது  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த 3 குழந்தைகள் ஒரு பெண் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி […]

Categories
உலக செய்திகள்

“இரண்டே அடியில்” பெரிய கண்ணாடியை கல்லால் உடைத்த குரங்கு… ஆச்சர்யத்தில் மக்கள்..!!

சீனாவில்  வன உயிர் பூங்காவில் ஒரு குரங்கு கூறிய கல்லால் கண்ணாடியை உடைத்து விட்டு ஓடிய காட்சி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.  சீனாவின் ஹெனான் மாகாணத்தில்  இருக்கும் ஸெங்க்சவ் (Zhengzhou) வன உயிர் பூங்காவில் கடந்த 20-ம் தேதி கொலம்பியாவைச் சேர்ந்த கபுச்சின் குரங்குகளைப்  ஒருவர் பார்வையிட்டார். அப்போது ஒரு குரங்கு மட்டும் கல்லை கொண்டு  மற்றொரு கல்லை மோதச் செய்து கூரான கல் ஆயுதத்தைத் தயாரித்து கொண்டிருந்தது. பின் அதனைப் படம் பிடிக்க முயன்றபோது, அந்தக் குரங்கு ஓடிச் சென்று கண்ணாடி கூண்டு அருகில் நின்று கூரான […]

Categories
உலக செய்திகள்

பற்றி எரியும் நுரையீரல் “35,00,00,000 ரூபாயை தூக்கி கொடுத்த” பிரபல ஹாலிவுட் நடிகர்..!!

 அமேசான் காடுகளை பாதுகாப்பதற்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 35,00,00,000 ரூபாயை நிதியுதவியாக  வழங்கி உள்ளார். கடந்த சில நாட்களாகவே அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது உலகத்தின் நுரையீரல் என்றுஅழைக்கப்படும் அமேசான்  காட்டு தீ குறித்து தான். உலகத்துக்கே 20 சதவீத ஆக்சிஜன் இந்த அமேசான் காடுகளால் மட்டுமே கிடைக்கின்றது. இந்த அமேசான் காடு பிரேசில், கொலம்பியா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா       உள்ளிட்ட நாடுகளில் பரவி கிடக்கிறது. ஆனால் பிரேசிலில் தான் 60 % காடுகள் உள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் மாயம்…!!

தெலுங்கனா கம்மம் மாவட்டத்தை  சேர்ந்த பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் படித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.   தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாஜக தலைவராக இருக்கும் உதய் பிரதீப் என்பவரின் 23 வயதான மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, இங்கிலாந்தின் இயந்திர கற்றல்  மற்றும்  செயற்கை நுண்ணறிவியலில்  எம்.எஸ் பயின்று வருகிறார். இவர் இங்கிலாந்திற்கு படிக்க  சென்றதில் இருந்து தினமும் பெற்றோருடன் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பேசவே இல்லை. இதையடுத்து சந்தேகமடைந்த உதய் பிரதீப், மகன் மாயமானது தொடர்பாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருப்போரூரில் “ராக்கெட் லாஞ்சர்” வெடித்து இருவர் பலி… இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை..!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் அருகே மானமதி பகுதியில்  உள்ள கங்கையம்மன் கோயில் குளம் அருகே  நேற்று முன்தினம் இளைஞர்கள் சிலர் சுத்தம் செய்யும்  போது கோயிலின் மேல் தளத்தில் பை ஒன்றை கண்ட இளைஞர்கள் அதனை அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்த முயற்சிக்க, அதில் இருந்த மர்மப்பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் காயமடைந்த 5 பேரும்  செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி இறுதி சடங்கு… பா.ஜ.க எம்.பி உட்பட 11 பேர் செல்போன் திருட்டு..!!

அருண் ஜெட்லி இறுதி சடங்கு நிகழ்ச்சியில்  பா.ஜ.க எம்.பி பாபுல் சுப்ரியோ மற்றும் திஜாரவாலா உட்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளது.  பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம்  தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பாஜக மத்திய […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை…. இன்றைய விலை நிலவரம்..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால்  வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 27…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 27 கிரிகோரியன் ஆண்டு : 239_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 240_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 126 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 410 – விசிகோத்துகளின் உரோமை மீதான மூன்று நாள் முற்றுகை முடிவுற்றது. 1172 – இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றி தனது வாரிசுகளாக என்றி (இளம் மன்னர்), பிரான்சின் மார்கரெட் ஆகியோருக்கு முடி சூடினார், ஆனாலும் அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கவில்லை. 1593 – பிரான்சு மன்னர் நான்காம் என்றியைப் படுகொலை செய்ய பியேர் பாரியர் என்பவன் எடுத்த முயற்சி வெற்றி […]

Categories
உலக செய்திகள்

“200 டன் எடையுள்ள படகு” இடது கை நடு விரலால் இழுத்த பலசாலி..!!

ஜார்ஜியாவை சேர்ந்த ஜியார்ஜி என்பவர் 200 டன் எடை கொண்ட படகை தனது இடது கை நடு விரலால் இழுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.    ஜார்ஜிய வலிமைமிக்க வீரரும் பளுதூக்குபவருமான ஜார்ஜியாவை சேர்ந்த ஜியார்ஜி ரோஸ்டோமாஷ்விலி என்பவர் பட்டுமி (BATUMI) நகரில் கரைக்கு 5 மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த டமாரா 2 என்ற 200 டன் எடை கொண்ட  படகினை தனது இடது கை நடுத்தர விரலால் இழுத்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். அவர் தரையில் இரும்பு ஏணியை வைத்து அதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தனியாக வசித்து வந்த மூதாட்டி” வீட்டின் மேற்கூரை இடிந்து உயிரிழந்த சோகம்..!!

சென்னை ஆவடியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.  சென்னை ஆவடி அடுத்துள்ள சேக்காடு அண்ணா நகரில் வசித்து வந்த  62 வயதான ராஜேஸ்வரி என்ற மூதாட்டி தனது கணவர் சுப்பிரமணி இறந்த பின்பு வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது மகன் முருகன் என்பவர் அருகிலுள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் இன்று மதியம் வீட்டில் இருந்த மூதாட்டி மீது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து […]

Categories
தேசிய செய்திகள்

2017-ஆம் ஆண்டு சாலை விபத்தில் எந்த மாநிலத்தில் அதிக பேர் மரணம்..?

2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.  சாலை விபத்துகளை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றன. ஆனாலும் சாலை விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பல்வேறு சமயங்களில் நிகழும் சாலை விபத்துக்களில் அதிக பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஒரு நாளுக்கு 405 பேர் சாலை விபத்தில் மரணம் அடைகின்றனர். கடந்த 2017- ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஒட்டு மொத்தமாக 4,64,000 சாலை விபத்து […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த உண்மையான சாம்பியனுக்கு சல்யூட்…. சிந்துவுக்கு டெல்லி முதல்வர் வாழ்த்து..!!

 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பி.வி சிந்து மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று டெல்லி முதல்வர் பாராட்டியுள்ளார்.  உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று […]

Categories
தேசிய செய்திகள்

“பி.வி சிந்துவின் வெற்றி உலக அரங்கில் ஒரு அடையாளத்தை உருவாக்க உதவும்” பாரதி மகளுக்கு உ.பி முதல்வர் வாழ்த்து..!!

 பி.வி சிந்துவின் வெற்றி உலக அரங்கில் ஒரு அடையாளத்தை உருவாக்க உதவும் என்று புகழ்ந்து உ.பி முதல்வர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்  உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று […]

Categories
தேசிய செய்திகள்

தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் சிந்து – ஆந்திர முதல்வர் வாழ்த்து..!!

தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் சிந்து என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று […]

Categories
கிரிக்கெட் பேட்மிண்டன் விளையாட்டு

“தங்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்” பிவி சிந்துவுக்கு ரவி சாஸ்திரி மனமார்ந்த வாழ்த்து..!!

தங்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய பி.வி சிந் துவுக்கு என்று ரவி சாஸ்திரி மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து […]

Categories
கிரிக்கெட் பேட்மிண்டன் விளையாட்டு

“உடற்பயிற்சி மற்றும் மன வலிமையால் வென்றுள்ளீர்கள்” பி.வி சிந்துவுக்கு வி.வி.எஸ் லக்ஷ்மன் வாழ்த்து..!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மன் தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.   இதையடுத்து தங்கம் […]

Categories
கிரிக்கெட் பேட்மிண்டன் விளையாட்டு

தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் வாழ்த்து..!!

உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து தங்கம் வென்ற வீராங்கனை பி.வி […]

Categories
கிரிக்கெட் பேட்மிண்டன் விளையாட்டு

மீண்டும் இந்தியாவை பெருமைபடுத்தியுள்ளீர்கள்… பி.வி சிந்துவுக்கு சச்சின் வாழ்த்து..!!

நீங்கள் மீண்டும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று பி.வி சிந்துவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதில்  இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து வீராங்கனை பி.வி […]

Categories
மாநில செய்திகள்

2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர்…. அதிமுகவினர் வெளிநடப்பு..!!

புதுச்சேரி மாநில அரசின் 2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும்  அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  புதுச்சேரி மாநில அரசின் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் சட்ட பேரவையில் தொடங்கி, கவர்னர் கிரண்பேடி உரையாற்றி வருகிறார். வருகின்ற  28-ந் தேதி முதல்வர் நாராயணசாமி ரூ. 8,425 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று சொல்லப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழு ஒன்றிணைந்து முடிவு செய்ய உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“கடின உழைப்பும், ஆர்வமும் வெற்றியை தரும்” பிவி சிந்துவுக்கு பி.டி உஷா வாழ்த்துக்கள்..!!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு முன்னாள் தடகள வீராங்கனை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதால் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த பெண்…. தனி அறைக்கு அழைத்த ஊழியர்கள்…. பின் நேர்ந்த துயரம்..!!

உத்திரபிரதேசத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்கள் கைது செய்ப்பட்டனர்.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில்  உள்ள அரசு டிபி மருத்துவமனைக்கு கடந்த 23ஆம் தேதி இரவு 17 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணை வார்டு பாய் சிவானந்தன் உங்களுக்கு ஊசி போட வேண்டும் என்று கூறி கீழே உள்ள அறைக்கு வாருங்கள் என்று தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்பெண் தனது அம்மாவையும் அழைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு […]

Categories
பல்சுவை

இன்றும் பெட்ரோல், டீசல் உயர்வு…. வாகன ஓட்டிகள் கவலை..!!

இன்றும்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை  உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories

Tech |