Categories
பல்சுவை வானிலை

அடுத்த 3 நாட்களில் “தமிழகம், கர்நாடகா, கேரளாவில்” மிக கனமழை…. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

அடுத்த 3 நாட்களில் தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது   சமீபகாலமாக தமிழகம், புதுச்சேரி கேரளா மற்றும் கர்நாடகாவில்  கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரியில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல கர்நாடகாவிலும் தொடர்ந்து பல மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை வெள்ளத்தால் கர்நாடகாவில் இதுவரை 09  பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்… குழந்தை பிறந்ததும் மாட்டிக்கொண்ட கணவர்..!!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்த கணவர் கைது செய்யப்பட்டார்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மாணிக்கம்பாளையம் பகுதியில் குமார் மற்றும்  சாரதி இருவரும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில்  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். இந்த சூழ்நிலையில்  குமார் யாருக்கும் தெரியாமல் லதா என்ற வேறொரு பெண்ணை  கடந்த 3 ஆண்டுக்கு முன்பு  2-ஆவதாக திருமணம் செய்து தனியாக […]

Categories
பல்சுவை

“பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைவு” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் “சுழன்றடிக்கும் அசுர வேக காற்று”அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

மெக்சிகோவின் ஸகாடகஸ் மாநிலத்தில் வானத்திற்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து சுழற்காற்று வீசியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  மெக்சிகோவின் ஸகாடகஸ் (Zacatecas) மாநிலத்தில் இருக்கும் ஃப்ரஸ்னிலோ (Fresnillo) என்ற இடத்தில் கடந்த சில தினங்களாகவே காற்று மிக பயங்கர வேகத்தில் வீசி வந்தது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென புழுதிப் புயலும், சுழற்காற்றும் சுழன்று அதிவேகமாக வீசத் தொடங்கியது. அப்போது சுழற்காற்றின் அசுர வேகத்தில் தூசு மண்டலம் ஒன்றிணைந்து வானத்திற்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து மணிக்கு 112 கி.மீ   […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் மனைவியிடம்… செல்போனில் பேசி “23,00,000 ரூபாய்” மோசடி..!!

பஞ்சாப் முதல்வர் மனைவியிடம் செல்போனில் பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுக்கொண்டு 23,00,000 ரூபாயை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.  பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியும், பாட்டியாலா மக்களவை எம்.பியானவர் பிரனீத் கவுர். பாராளுமன்ற  கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் பிரனீத் கவுருக்கு சில தினங்களுக்கு முன்னர் செல்பேசியில் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் மேலாளர் பேசுகிறேன் என்று கூறி, சம்பளத்தை டெப்பாசிட் செய்வதற்காக உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள்

“காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து” பணியாளர்கள் 4 பேர் பரிதாப பலி..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே   காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பஞ்சாலை பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.   ஈரோடு – திருப்பூர் எல்லையில் ஆலத்தூர் மேடு பகுதியில் இருக்கும்  பஞ்சாலையின் உதவி மேலாளராக ஜெய்கணேசும்,  மேற்பார்வையாளர்களாக கோவிந்தராஜ், தங்கபாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நள்ளிரவு பணிமுடிந்த பின் 1:30 மணியளவில்  புஞ்சைபுளியம்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கோவிந்தராஜ் ஒட்டி சென்றபோது சத்தியமங்கலம் பொன் மேடு என்ற இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

“புனித ஹஜ் பயணம்” உலகம் முழுவதும் “18,00,000 பேர்” மெக்காவில் குவிந்தனர்..!!

உலகம் முழுவதும் இருந்து 18,00,000- த்துக்கும் அதிகமானோர் மெக்காவில் குவிந்துள்ளனர்.  சவூதி அரேபியாவின்  மெக்காவில் உள்ள காபா என்ற இடத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகைக்காக ஆண்டு தோறும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்கு  உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள்  லட்சக்கணக்கானோர் சவுதிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இதுபற்றி சவுதியின் கடவுச்சீட்டு இயக்குநரகத்தின் ஜெனரல் சுலைமான் பின் அப்துல் அஜிஸ் எஹியா (General Suleiman bin Abdul Azizi Al-Yehya) கூறும்போது, நடப்பாண்டு […]

Categories
உலக செய்திகள்

“பல அடி உயரத்தில் பதறவைக்கும் சாகசம்” துள்ளி குதித்து ஓடும் இளைஞர்…. வைரல் வீடியோ..!!

ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் மிக உயரமான கட்டடத்தின் உச்சியில்  சிமென்ட் கட்டைகளில் சர்வ சாதாரணமாக துள்ளிக் குதித்து ஓடும் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகில் வாழும் பலர் நாம் ஏதாவது ஒரு சாதனைகள் செய்ய வேண்டும் என்ற  எண்ணத்துடன் ஏதாவது சாகச வீடியோவை  வெளியிட்டு அசத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் உயிரை பணயம் வைக்கும் விதமாக சர்வ சாதாரணமாக சாதனைகளை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில்,ரஷ்யாவின் காடரின்பர்க்  (Yekaterinburg) என்ற பகுதியில் வசித்து வரும் ஷெர்ஙஸ்டையாசென்கோ (Sherstyachenko) என்ற […]

Categories
மாநில செய்திகள்

“ஒவ்வொருவரும் வீட்டில் மழை நீரை சேமிக்க வேண்டும்” வேலுமணியை தொடர்ந்து வீடியோ மூலம் முதல்வர் வேண்டுகோள்..!!

அமைச்சர் வேலுமணியை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியும் மழைநீர் சேகரிப்பு குறித்து வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி வேலுமணி மழை நீரை ஒவ்வொரு குடும்பத்தினரும் சேமிக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இறைவன் கொடுத்த கொடை மழை அந்த மழை நீரை சேமிப்பது மிக மிக அவசியம். 200 சதுர அடி கொண்ட வீட்டில் முறையாக மழைநீரை சேமித்தோம் என்றால் ஒரு குடும்பம் ஒரு வருடத்திற்கு தேவையான மழை […]

Categories
பல்சுவை வானிலை

“தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  சமீப காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக  நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரியின் 4 தாலுகாகளில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய அளவில் அலறவிடும் அஜித் ரசிகர்கள்…. ட்ரெண்டாகும் “நேர்கொண்ட பார்வை”..!!

அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “நேர்கொண்ட பார்வை” இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது  அஜித்நடிப்பில் உருவாகியுள்ள “நேர்கொண்ட பார்வை” திரைப்படமானது இன்று (ஆகஸ்ட் 08) வெளியாகியுள்ளது. போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஓன்று படத்தை இயக்கிய ஹெச். வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளனர் இவருடன் வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ரீமேக் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அனைவராலும் மதிக்கப்பட்டவர் சுஷ்மா சுவராஜ்” பிரபல பாலிவுட் நடிகர் புகழாரம்..!!

சுஷ்மா சுவராஜ் அனைவராலும் ஒருமனதாக போற்றப்பட்டு மதிக்கப்பட்டவர் என்று பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  பாஜகவை சேர்ந்த  முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் (67 வயது) மாரடைப்பு காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சர்கள்   மாநில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள்   உட்பட  […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“சுஷ்மா சுவராஜ் மறைவு” கேப்டன் விராட் கோலி உருக்கமான பதிவு..!!

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவை சேர்ந்த 67 வயதான முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று மாரடைப்பு காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நாட்டை விட்டு பிரிந்தது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சர்கள்   மாநில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபல நடிகை காஜல்..!!

பிரபல தமிழ் நடிகை காஜல் அகர்வால் முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) கடந்த ஆண்டு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

சுஷ்மா சுவராஜ் உடலுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி உள்ளிட்டோர் அஞ்சலி..!!  

மறைந்த முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி,  வெங்கையா நாயுடு, எல்.கே அத்வானி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்     பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) கடந்த ஆண்டு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டியவர் சுஷ்மா சுவராஜ்” ஸ்டாலின் புகழாரம்..!!

ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் சுஷ்மா சுவராஜ் என்று ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்  முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது)  பாஜகவை சேர்ந்தவர்.  7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். இவர் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

“சுஷ்மா சுவராஜ் மறைவை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்” ராகுல் காந்தி..!!

சுஷ்மா சுவராஜ் மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்   பாஜகவை சேர்ந்த 67 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு  எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு  தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

“சுஷ்மாவின் மரணம் நாட்டிற்கு பேரிழப்பு” வெங்கையா நாயுடு இரங்கல்..!!

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சுஷ்மாவின்   மரணம் நாட்டிற்கு பேரிழப்பு என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். 67 வயதுடைய இவர் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு மாரடைப்பின் காரணமாக  உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். […]

Categories
மாநில செய்திகள்

“மக்களால் அதிகம் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி” சுஷ்மாவை புகழ்ந்த ஓபிஎஸ்..!!

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி  என்று புகழாரம் சூட்டியுள்ளார்.  முன்னாள் மத்திய அமைச்சராகவும், டெல்லியின் முன்னாள் முதல்வராகவும்  இருந்த  சுஷ்மா சுவராஜ் (வயது 67).  இவர் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரை நாடு இழந்துவிட்டது” குடியரசு தலைவர் இரங்கல்.!!

மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரை நாடு இழந்துவிட்டது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  சுஷ்மா சுவராஜிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.   முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த  சுஷ்மா சுவராஜ் (வயது 67)  கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.  இவரது உடல்நிலை மாரடைப்பின் காரணமாக மோசமானதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால்  சிகிச்சை பலனின்றி காலமானார்.  7 முறை மத்திய அமைச்சராக […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திய அரசியலில் புகழ்பெற்ற ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது” பிரதமர் வேதனை..!!

பிரதமர் மோடி முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  முன்னாள் மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் (வயது 67)  கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.  இவரது உடல்நிலை சமீப காலமாக மிகவும் மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில்  மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால்  சிகிச்சை பலனின்றி காலமானார். சுஷ்மா சுவராஜ் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் காலமானார்..!!

முன்னாள் மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் உடல் நலக்குறைவால் காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜ். 67 வயதுடைய இவரின் உடல் நிலை சமீப காலமாக மிகவும் மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில்  மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால்  சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுஷ்மா […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா..!!

கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்  சமீபத்தில் கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்து தோல்வியடைந்ததையடுத்து பெரும்பான்மையுடன் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில்  மேகதாது அணை சம்பந்தம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின் எடியூரப்பா […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை அதிரடி உயர்வு” பவுனுக்கு 216 அதிகரிப்பு… வாடிக்கையாளர்கள் கவலை.!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ 216 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள்  குறைவதில்லை. இன்றைய  காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : […]

Categories
தேசிய செய்திகள்

“பப்ஜி, டிக் டாக் ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்” கோவா முதல்வர் சுற்றறிக்கை.!!

பப்ஜி, டிக் டாக் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்த் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  இன்றைய சமூகத்தில் பொழுது போக்க்காக  ஆன்லைன் விளையாட்டுகளும், சமூக வலைத்தளங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக தற்போது டிக் டாக்கிலும்,  பப்ஜி விளையாட்டுகளிலும் மூழ்கி கிடக்கின்றனர். இதில் பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கு பல நாடுகள் யோசித்து வருகின்றன. இந்தியாவில் குஜராத் அரசு ஏற்கனவே  இதற்கு தடை விதித்துள்ளது. மேலும் ஈரான், […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்டில்  பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 7 குழந்தைகள் பலி..?

உத்தரகாண்ட்டில்  பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 குழந்தைகள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள  தெஹ்ரி கார்வால் பகுதியில் கங்சாலி என்ற இடத்தில் பள்ளி பேருந்து ஓன்று 18 பள்ளி குழந்தைகளுடன் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது  பள்ளி பேருந்து எதிர்பாராத விதமாக அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணித்த 18 குழந்தைகளில் 7 பேர் பலியாகியிருக்கலாம்  என அஞ்சப்படுகிறது. இதனை தொடர்ந்து மாநில பேரிடர் பொறுப்பு படையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

“அம்மா எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துவிட்டார்” தமன்னா பேட்டி..!!

என்  அம்மா எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் என்று தமன்னா பேட்டியளித்துள்ளார்.  அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் கிட்டத்தட்ட  12 வருடங்களாக சினிமாவில் நடிதுக்கொண்டு கொண்டு வருகிறார். தற்போது   29 வயதாகும் தமன்னா தன்னுடைய  சினிமா வாழ்க்கை, திருமணம் குறித்து ருசிகர பேட்டி ஓன்று அளித்துள்ளார். “அவர் அளித்த பேட்டியில், “நான் வருடத்திற்கு 4 முதல் 5 படங்களில் நடித்து வந்தேன். இப்போது […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து” 6 பேர் பலி… 11 பேர் படுகாயம்..!!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.  டெல்லியில் உள்ள ஜாகீர் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி நீண்ட நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த பயங்கர தீவிபத்தில் 6 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். தீக்காயங்களுடன் படுகாயமடைந்தவர்களை தீயணைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை” நிர்மலா சீதாராமன்..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  கடந்த ஒரு வாரமாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் என்ன நடக்கப்போகிறது என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து  மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு  கடுமையான எதிர்ப்பும் ஆதரவும் […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்தநாளன்று 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் 19 வயது இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதை சேர்ந்த இளம் பெண் (19 வயது) ஒருவர் தன்னுடைய தோழி அழைத்ததாக  கூறி கடந்த  கடந்த மாதம் 7-ஆம் தேதி மும்பை சென்றிருந்தார். அங்கு செம்பூரில் தனது தோழியுடன் தங்கியிருந்த அவர் அன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பின்னர் கொண்டாட்டத்திற்கு பின் அங்கிருந்து சொந்த ஊரான அவுரங்காபாத் திரும்பினார். அப்போது  […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கமிடாத 3 முஸ்லீம் வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல்..!!

குஜராத் மாநிலம் கோத்ராவில்  ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிடாத 3 முஸ்லீம் வாலிபர்களை  6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர்.   குஜராத் மாநிலம் கோத்ராவை சேர்ந்த மெக்கானிக் கடை நடத்திவரும் சித்திக் பகத் என்பவர் போலீசில் 3 பேரை ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட கூறி தாக்கியதாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது மகன் சமீர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடன் சல்மான் கீதெலி  சோஹைல் பகத் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு மோட்டார் […]

Categories
தேசிய செய்திகள்

“தயார் நிலையில் ராணுவம்” பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி  சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க  திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது ராணுவத்தினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த கடுமையான  துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

“டாப் ஸ்பீடு 141 கி.மீட்டர்” ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் அசத்தல் கார்..!!

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமாக முழுவதும் ரிமோட்டில் இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருவது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.  நெதர்லாந்தை சேர்ந்த பிஜோர்ன் ஹர்ம்ஸ் அர்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். கணினி மென்பொறியாளரான இவர்  ரிமோட் கண்ட்ரோல் மூலம்  இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருகிறார். குழந்தைகள் விளையாடும் கார் போல் ரிமோட் மற்றும் ஜாய் ஸ்டிக் போன்றவற்றின் மூலம் இந்த புதிய காரை இயக்கிக் காட்டி அசத்துகிறார். மேலும் அடுத்த கட்டமாக இந்த காரை குரல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்று முதல் டி20 போட்டி : இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதல்… ரசலுக்கு இடமில்லை..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.   இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 டி20 3 ஒருநாள் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.  முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல்  டி20 அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. உலகக்கோப்பைக்கு பின் விராட் கோலி தலைமையில் இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் “உபா சட்ட திருத்த மசோதா” மாநிலங்களவையில் நிறைவேறியது..!!

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் உபா சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.  மத்திய அரசு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனையை வலுப்படுத்த  சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர  முடிவு செய்தது. இதனையடுத்து இந்த உபா சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை  தெரிவித்தனர். ஆனால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையில் உபா சட்டத் திருத்த […]

Categories
உலக செய்திகள்

“இனி ஆண்களிடம் அனுமதி பெற தேவையில்லை” பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம்செய்யலாம்… சவூதி அரசு அதிரடி…!!

சவூதி அரேபியாவில் ஆண்களிடம்  அனுமதி பெறாமலேயே பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் வசித்து வரும் எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் தங்கள் கணவர், தந்தை அல்லது பாதுகாவலராக இருக்கும்  ஆணிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்ற விதிமுறை நீண்ட காலமாக இருந்து வந்தது. சவூதியின்  இந்த விதிமுறைகள்  ஆணாதிக்கத்தின் உச்சம் என சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் தற்போது  சவூதி அரேபிய அரசு அந்த விதியை நீக்கியுள்ளது.அதன்படி 21 வயதைக் கடந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சமாதானம் பேச அழைத்து” மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்..!!

திருப்பூரில் சேர்ந்து வாழ்வதற்கு சமாதானம் பேச தாய் வீட்டிற்கு அழைத்து சென்று கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள டி.எம்.எஸ் நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் பிரியா ஆகிய இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த ஜோடிக்கு  ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன்  காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில்  மனைவி பிரியாவுடன் சேர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தேர்வில் விராட் கோலி கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்” கபில் தேவ்..!!

பயிற்சியாளர் தேர்வில் விராட்கோலி உட்பட ஒவொருவரது கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக  இருக்கும் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்  ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட, அதன்படி  விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்த பதவிக்கு […]

Categories
மாநில செய்திகள்

“ஊழியர்களுக்கு ஜூலை மாத ஊதியம் 5-ஆம் தேதி வழங்கப்படும்” பி.எஸ்.என்.எல் தலைவர்..!!

ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வரும் 5-ஆம் தேதி வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் தலைவர் தெரிவித்துள்ளார்.  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் ஊதியம் வழங்கப் படுவது வழக்கம். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் 2 வாரங்களுக்கு மேல் கடந்து தாமதமாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதத்திற்கும்  தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பி.எஸ்.என்.எல் தலைவர் பி.கே புர்வார் இது குறித்து பேசியதாவது, “வரும் 5-ஆம் தேதி ஊழியர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி… குவிந்தது 2,000 விண்ணப்பங்கள்..!!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி,  பேட்டிங் பயிற்சியாளராக  சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்  ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி  விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் இந்திய […]

Categories
உலக செய்திகள்

“கொல்லப்பட்டார் பின்லேடன் மகன் ஹம்சா” அமெரிக்கா அதிரடி தகவல்..!!

ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஒசாமா பின்லேடனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் பின்லேடன் பிரபல பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் தலைவனாவான். பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டு அட்டூழியம் செய்து வந்துள்ளான். இதையடுத்து அமெரிக்க கடற்படை கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோடாபாத்தில் வைத்து அவரை சுட்டுக் கொன்றது. இதையடுத்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு முடிந்துவிட்டது என்று நினைக்க அவரது மகன் ஹம்சா பின் […]

Categories
மாநில செய்திகள்

காலி கவர்களை கொடுத்து “10 பைசா பெற்று கொள்ளலாம்” ஆவின் நிர்வாகம்.!!

ஆவின் நிர்வாகம் காலியான பால் உள்ளிட்ட கவர்களை முகவர்களிடம் கொடுத்து கவருக்கு 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது  மத்திய அரசு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் நெகிழி பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு விலக்களித்துள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எண்ணத்தில் ஆவின் நிர்வாகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆவின் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் அதிசயம் “7 வயது சிறுவன் வாயில் 526 பற்கள்” மருத்துவர்கள் சாதனை..!!

சென்னையில் சிறுவன் வாயில் இருந்து 526 பற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.   சென்னையை சேர்ந்த பிரபு தாஸ் என்பவரின் மகன்  3 வயதாக இருக்கும் போது வாயின் வலது பக்கத்தில் வீக்கமாக  இருந்துள்ளது. இதனால் சிறுவன் அடிக்கடி வலியால் துடித்து வந்துள்ளான். அதன் பிறகு 7  வயதான போது இந்த சிறுவனுக்கு வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால்  மருத்துவமனைக்கு பெற்றோர்கள்  அழைத்துச் சென்றனர். பின்னர் அங்குதான் ஸ்கேன் எடுத்து பார்த்ததில்  மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அப்படி என்ன அதிர்ச்சியென்றால் சிறுவனின் வாயில் வலது பகுதியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு “டாம் மூடி” போட்டி..!!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்  பதவிக்கு டாம் மூடி விண்ணப்பம் செய்துள்ளார்.  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி,  பேட்டிங் பயிற்சியாளராக  சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்  ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து,  விண்ணப்பங்கள் பெறுவது நேற்றுடன் முடிவடைந்தது. இந்த பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

“இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் நான் கேன்சல் செய்கிறேன்” உணவுக்கு மதம் எதுவும் கிடையாது – சொமாட்டோ பதிலடி..!!

இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால்  உணவை நான் கேன்சல் செய்கிறேன் என்று ஒருவர் கூறியதற்கு சொமாட்டோ உணவுக்கு மதம் எதுவும்  கிடையாது என்று தெரிவித்துள்ளது  மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமாட்டோவில்  உணவு ஆர்டர் செய்திருந்தார். ஆனால் ஆர்டர் செய்த உணவை வழங்கும் போது அதனை கேன்சல் செய்துவிட்டார். ஏன் வேண்டாம் என்ற காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியதாவது, இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை நான் கேன்சல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நாடகத்தில் மூழ்கிய தாய்” 7-வயது மகளை சீரழித்த காமக்கொடூரன்..!!

திருச்சியில் நாடகம் பார்க்கும் ஆசையில் ஒரு பெண் வீட்டு வாசலில் மகளை தூங்க வைத்த பின் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் இருக்கும்  கிராமத்தில் கணவனை இழந்த ஒரு பெண் தனது 7 -வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இக்கிராமத்தில் மழை பொழிய வேண்டும் என்று வேண்டி அர்ச்சுனன் தபசு என்ற நாடகம் கடந்த 3 நாட்களாகவே  நடைபெற்று வருகிறது இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக தாய் மற்றும் மகள் இருவரும் சென்றுள்ளனர். நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

அந்தந்த மாநில மொழிகளில் தபால் துறை தேர்வு செப். 15-ல் நடைபெறும்..!!

கடந்த 14-ம் தேதி ரத்து செய்யப்பட்ட  தபால் துறை தேர்வு  வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  மத்திய அரசு கடந்த 13-ம் தேதி இந்தியா முழுவதும் இனி வரும்  தபால் துறை தேர்வுகளுக்கான கேள்வித்தாள்  ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தான் இருக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் தமிழகம் உட்பட பல  மாநிலங்களில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் 14-ஆம் தேதி நாடு முழுவதும் தபால் துறையில் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. […]

Categories
உலக செய்திகள்

“காதலி கத்தியால் குத்தி கொலை” சூட்கேஸில் அடைத்து காதலன் வெறிச்செயல்…!!

ரஷ்யாவில் முன்னாள் காதலன் காதலியை கத்தியால் குத்தி கொன்று சூட்கேசில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  ரஷ்யாவைச் சேர்ந்த எகெடெரினா கரக்லொனாவா என்ற 24 வயது பெண்  இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றவராக விளங்குகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். காரணம் எகெடெரினா  90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் சில நாட்களாக எகெடெரினாவை காணவில்லை என்று பல இடங்களில் தேடிய பின், அவரது பெற்றோர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  இதையடுத்து போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார்..!! 

தமிழகத்தில் நுழைந்து கொலை செய்து  கொள்ளையடித்த பவாரியா கும்பலை ஒழித்த டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார்.  ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி பிறந்தார். இவரது முழுப்பெயர் சங்காராம் ஜாங்கிட். நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜாங்கிட் முதுகலை பொருளாதாரம் படித்தார். பின்னர் அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.  அதன்பின் இவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 1985 ஆம் ஆண்டில் ஐ.பி.எஸ் பதவி பெற்றார். […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காசாளர் பழனிசாமி மரணம் “கொலை தான்” மருத்துவ அறிக்கை தாக்கல்..!!

தொழிலதிபர் மார்ட்டின் சொந்தமான தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வரும் பழனிசாமி மரணம் கொலை தான் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது  கோவையில் பழனிசாமி என்பவர் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து  வந்தார்.  தொழிலதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் பழனிசாமியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரிடம் நேரில் சந்தித்து விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே  கடந்த […]

Categories

Tech |