திருச்சியில் காதலை ஏற்க மறுத்ததால் சட்டக்கல்லுரி மாணவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சில இளைஞர்கள் காதலுக்காக எதையும் செய்ய துணிந்து விடுகிறார்கள். அதே நேரத்தில் காதலை ஏற்காமல் போனால் கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர்.அந்த வகையில் திருச்சியில் தவச்செல்வன் என்ற இளைஞர் ஒருவர் சட்டக் கல்லூரி மாணவியிடம் தனது காதலை கூறியுள்ளார். அதற்கு அம்மாணவி சம்மதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் […]
Author: MM SELVAM
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 அதிருப்த்தி எம்எல்ஏக்கள் திடீரென்று தங்களது பதவியை ராஜினாமா செய்தது, ஆளும் குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயார் என குமாரசாமி தெரிவித்தார். அதன்படி, […]
மும்பையின் பந்த்ரா பகுதியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்தில் தீ விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு வருகின்றனர். மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையின் பந்த்ரா பகுதியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் (MTNL )கட்டடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் பதறிப்போயினர். அவர்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து 14 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைத்து வருகின்றனர். கட்டிடத்தின் மேல் உச்சியில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் அவர்களை […]
மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் முதல் கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். […]
சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் டாக்டரிடம் 30 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்துள்ள ஆலந்தூர் வடக்கு ராஜா தெருவை சேர்ந்த பெண் டாக்டர் (வயது 28). திருமணமான இவர் எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்து கோரிய வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பெண் டாக்டருக்கும், பட்டாபிராம் பகுதியை […]
மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக்கொள்ளப்பட்டார் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது தடுக்க முயன்ற கணவர் மதனையும் வெட்டினர். இதில் […]
என்னால் முடிந்த அளவு சிறப்பான பங்களிப்பை நான் செய்வேன் என்று ஆப்கான் புதிய கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டி20 தொடருக்கு மட்டும் கேப்டனாக இருந்த ரசித்தான் இப்பொழுது மூன்று வகையான டி20 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி ரஷித் கான் கூறும்போது கேப்டன் பதவிக்கு என் பெயரை அறிவித்ததும் நான் வியப்படையவில்லை. ஏற்கனவே துணை கேப்டனாக இருக்கிறேன் […]
இனிபெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிப்பது என உறுதி கொள்வோமாக என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பருவமழை பொய்த்ததால் சமீபத்தில் தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் மக்கள் தெருத்தெருவாக காலிகுடங்களுடன் அலைந்தனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டும் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. இதனால் தமிழக அரசு ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதாலேயே ரிஷப் பண்டை தேர்வு செய்தோம் என்று இந்திய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அம்பத்தி ராயுடு இந்திய அணியில் இடம்பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டால் ஆத்திரமடைந்த ராயுடு டுவிட்டரில் கிண்டலாக பதில் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். பின்னர் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் ராயுடு . […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வான டி.ராஜாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்து, தனக்கு பதிலாக டி. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் டி. ராஜா அகில இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் […]
பாஜக, ஆர்.எஸ்.எஸ் சேர்ந்து “இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து. ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்து, தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்தார். இதையடுத்து டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக து.ராஜா அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் விஷ்வம், அக்கட்சியின் மூத்த தலைவர் […]
இம்ரான்கானை வரவேற்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் யாருமே வரவில்லை என்று பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் அதிபர் அதிபர் டொனால்டு டிரம்பை நாளை சந்தித்துப் பேசுவதற்கு இம்ரான்கான் 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். இம்ரான் கான் தனிப்பட்ட விமானத்தில் செல்லாமல் சிக்கன நடவடிக்கையாக பயணிகள் விமானத்தில் சென்று டல்லாஸ் விமான நிலையத்தில் இறங்கினார். ஆனால் இம்ரான்கானை வரவேற்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் யாருமே வரவில்லை. பாக். வெளியுறவு அமைச்சர் குரேஷி, மற்றும் அமெரிக்காவுக்கான பாக். […]
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தீவிர கனமழையால் காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்காவில் இதுவரை 141 வன விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அசாம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தீவிர மழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அம்மாநிலத்தில் இருக்கும் காசிரங்கா வனவிலங்கு பூங்காவில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் வன விலங்குகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 141 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது. காசிரங்கா பகுதியில் காணப்படும் அரியவகை காண்டாமிருகம் பெரிதும் […]
லசித் மலிங்கா இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்கிறார் 35 வயதான ‘யார்க்கர் மன்னன்’ என்றழைக்கப்படும் லசித் மலிங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆவார். இவர் உலக கோப்பை தொடர் முடிவுடன் தனது ஓய்வு அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் மலிங்கா ஓய்வை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் லசித் […]
மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததால் தாக்கப்பட்ட முகமது பைசான் சிகிச்சைக்கு பின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான். கடந்த 11-ம் தேதி இரவு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு, அதனை புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை கண்ட அப்பகுதியை சேர்ந்த கும்பல் ஓன்று ஆத்திரமடைந்து பைசானின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பைசான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக தினேஷ்குமார், கணேஷ் […]
3 முறை முதல்வராக தன்னலமின்றி ஷீலா தீட்சித் பணியாற்றியுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக பதவி வகித்தவர் 81- வயதான ஷீலா தீட்சித் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் காங்கிரஸ் கட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். டிசம்பர் 2013-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஷீலா தீட்சித் ஆம் ஆத்மி […]
பரபரப்பாக நடந்த “இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல” என்று இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி இதுவரையில் யாரும் பார்த்திராத அளவிற்கு பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரிலும் முடியாமல் இரண்டு அணிகள் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் ‘டை’ ஆனது. ஐசிசி விதிகளின் படி அதிக பவுண்டரிகள் அடித்த அடிப்படையில் […]
நடிகர் மோகன் லால் வீட்டில் யானை தந்தங்களை வைத்து கொள்ள கேரள அரசு சட்ட படியே உரிமம் வழங்கியிருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கொச்சியில் உள்ள நடிகர் மோகன் லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் 4 யானைத்தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோகன்லால் மீது சட்ட விரோதமாக யானைத்தந்தங்கள் வைத்ததாக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மோகன் […]
அமெரிக்காவில், இரு துணை மின்நிலையங்களில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் உடனடியாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தின் மாடிசான் நகரில் இரண்டு துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த இரு துணை மின் நிலையங்களிலும் நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென பயங்கரமாக தீப்பற்றி எறிந்தது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சமடைந்தனர். உடனே பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்காத வகையில், முன்னெச்சரிக்கையாக அந்த பகுதிகளில் மின் விநியோகத்தை மின் ஊழியர்கள் நிறுத்தினர். இதையடுத்து தீயணைப்பு […]
ஓசூரில் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த மனைவி சாந்தியை கொலை செய்து விட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பியில் இளையராஜா மற்றும் சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இளையராஜா சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் 20 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இதையடுத்து தம்பதியினர் இருவரும் ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் ஒரு அழகு நிலையத்தில் […]
அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராக து.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து அவர் தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் நேற்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி பேசப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் விஷ்வம், அக்கட்சியின் மூத்த […]
விமானம் கடத்தப்பட்டது விட்டது என்று தவறாக தகவல் அனுப்பியதால் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் அதிர்ந்து போயினர். டெல்லியில் இருந்து காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு கடந்த 8-ம் தேதி ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு சென்றது. அப்போது வழியில் என்ஜினில் சிறிய பழுது ஏற்பட்ட நிலையில் தகவலை தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்க முயன்றார். விமானி தகவல் அனுப்ப 7700 என்ற சமிஞ்சை கோடை அழுத்தாமல் தவறுதலாக 7500 என்ற கோடினை அழுத்தினார். இந்த கோடானது விமானம் கடத்தப்பட்டு விட்டது என்பதை […]
இனி மெதுவாக பந்து வீசினால் கேப்டனுக்கு மட்டுமில்லாமல் மொத்த வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காமல் இருந்தால் கேப்டன்களுக்கு ஓரிரு ஆண்டுகள் தடை விதிக்க்கப்படும் என்ற முறை இதுவரையில் இருந்து வந்தது. அதாவது மெதுவாக பந்துவீசிய பிரச்சினையில் சிக்கினால் அணியின் கேப்டனுக்கு அபராதம் மட்டுமின்றி தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்படும். ஒரு ஆண்டுக்கு 2 முறை இந்தப் பிரச்சினையில் சிக்கினால் தகுதி இழப்பு புள்ளிகளின் எண்ணிக்கை உயரும். அதனடிப்படையில் கேப்டன்களுக்கு […]
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நான் சரியாக விளையாடவில்லை என்று இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் டிஎன் பி எல் கிரிக்கெட் தொடரின் நான்காவது நடைபெற்று வருகிறது நேற்று நத்தத்தில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இதில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியை சிறப்பிக்க இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் வருகை தந்திருந்தார். அப்போது பேசிய அவர், இதுபோன்ற […]
கங்குலியும், விரேந்தர் சேவாக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக முடியாத சூழல் உருவாகியுள்ளது சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் தொடக்க முதலில் நன்றாக விளையாடிய இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர் கொண்ட இந்திய அணி எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவி உலக கோப்பையை கைவிட்டது. இது மட்டுமில்லாமல் இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன அதன் ஒரு பகுதியாக இந்திய அணி […]
தோனி இப்போதைக்கு ஓய்வு பெறுவது சாத்தியமில்லை என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்து கூறியுள்ளார். சமீபத்தில் பிரபலமாகிக் கொண்டு இருப்பவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன் . இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேறும் அணிகள் மற்றும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதும் என்று சொன்னது போலவே நடந்தது. ஆனால் உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர […]
பரபரப்பாக நடந்த உலக கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டிருந்த போது ஜிம்மி நீஷமின் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டன் உயிரிழந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி இதுவரையில் யாரும் பார்த்திராத அளவிற்கு பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரிலும் முடியாமல் இரண்டு அணிகள் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் ‘டை’ ஆனது. ஐசிசி விதிகளின் […]
தென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது முதல்நிலை நகராட்சியாக தென்காசி உள்ளது. இதன் அருகில் குற்றாலம் இருப்பதால் ஆண்டுதோறும் அதிக சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை […]
ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயல்படுவதாக குமாரசாமி காரசாரமாக தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் அளித்தனர். ஆனால் சபாநாயகர் ரமேஷ் குமார் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆளுகின்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. இதையடுத்து பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும் படி உத்தரவிடக்கோரி 15 எம் […]
சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி ராஜகோபால் உயர்நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜராகினார். அப்போதே அவரின் உடல் நிலை மோசமாக இருந்தததால் தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ராஜகோபால் கொண்டு வரப்பட்டார். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் அப்போது அவரின் உடல் […]
தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 18 பேர் தனியார் வேன் ஒன்றில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். வேன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரு வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 6 […]
சுகந்தலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல்வேறு பனை மற்றும் தென்னை மரங்கள் எரிந்து நாசமாகின. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியில் சுகந்தலை என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. வறண்ட குளத்தின் காய்ந்து கிடந்த அமலைச்செடிகளில் 2 மணியளவில் மர்மநபர் யாரோ தீ வைத்ததாக சொல்லப்படுகின்றது.காற்றின் வேகம் அதிகரித்த காரணத்தால் தீ மளமள வென பரவியது. சுற்றியுள்ள தென்னை , பனை மரங்களில் பரவிய தீ ஊரின் நடுவே இருக்கும் […]
என்.எல்.சி ஊழியராக வேலைபார்த்து வரும் கணவரை மனைவியே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்.எல்.சி ஊழியராக வேலைபார்த்து வருபவர் நெய்வேலியை சேர்ந்த பழனிவேல். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் பழனிவேல் காரில் கடத்தி சென்று அடித்து கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரின் சடலம் கை கால் கட்டப்பட்ட நிலையில் விழுப்புரம், சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து நெய்வேலி டவுன்சிப் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி அஞ்சலை 4 பேருடன் சேர்ந்து தனது கணவனை கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
ஐசிசி கோப்பையை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 241 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. பின்னர் முதல் முறையாக உலக கோப்பையில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. அத்துடன் முடியாமல் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 […]
மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக தபால் துறை தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த 14-ம் தேதி இந்தியா முழுவதும் தபால்துறை தேர்வுகள் நடந்தது. இதில் முதல் தாளில் இருந்த கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றருந்தன. இதையடுத்து தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இதற்கு கடும் […]
சென்னை நந்தனம் அருகே மாநகர பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். ஆந்திராவை சேர்ந்த சுதா, நாகலெட்சுமி, பவானி ஆகிய மூவரும் சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்து, எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று காலை 9 மணி அளவில் ஒரே பைக்கில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கிழக்கு தாம்பரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது இவர்கள் பேருந்தை […]
தமிழகத்தில் மற்றும் புதுவையில் 3 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்ப சலனத்தின் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசாகவும், மிதமாகவும் மழை பெய்யும். மேலும் பேசுகையில், மேற்கு […]
இந்திய விமானங்கள் தங்கள் வான்வழியாக செல்வதற்கு பாகிஸ்தான் பாதையை திறந்து விட்டுள்ளது இந்திய விமானங்கள் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறந்து செல்வதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பிரதமர் மோடி கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டிற்கு செல்லும் போது அவ்வழியை பயன்படுத்த முடியாமல் பிரதமரின் விமானம் வேறு வழியாக சென்றது. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கர்தார்பூர் குருத்வராவுக்கு […]
உலக கோப்பையை வென்றதும் பிரதமர் தெரசா மேயை சந்தித்து இங்கிலாந்து அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. பின்னர் முதல் முறையாக உலக கோப்பையில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் […]
வரலாற்றில் இன்று ஜூலை 16…!!
இன்றைய தினம் : 2019 ஜூலை 16 கிரிகோரியன் ஆண்டு : 197_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 198_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 168 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 622 – முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும். 997 – கிரேக்கத்தில் இசுப்பெர்ச்சியோசு ஆற்றில் இடம்பெற்ற சமரில் பேரரசர் சாமுவேல் தலைமையிலான பல்கேரியப் படையினரை பைசாந்தியஇராணுவத்தினர் தோற்கடித்தனர். 1054 – திருத்தந்தையின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும்சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது. […]
குழந்தைகளே, விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள் என்று ஜிம்மி நீசம் உருக்கத்துடன் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியும் அனைத்து விக்கெட்டையும் இழந்து 21 ரன்கள் எடுத்தது. இதனால் […]
உலககோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்த பின் மைதானத்தில் மார்ட்டின் கப்தில் கண்ணீர் விட்டு அழுதார். நேற்று நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி போராட்டத்தை சந்தித்தது. […]
இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 104 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று 22 கேரட் 1 […]
கோப்பைக்கான மொத்த பெருமைகளும் ஸ்டோக்ஸ், பட்லர் இருவரையுமே சேரும் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி போராட்டத்தை சந்தித்தது. […]
கடைசி கட்டத்தில் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பந்து பவுண்டரி சென்றது தான் ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றி விட்டது என்று வில்லியம்சன் தெரிவித்துள்ளார் நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் இலக்கை […]
உலக கோப்பை இறுதி போட்டியில் பரபரப்பான சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி கோப்பையை வென்றது. உலக கோப்பை இறுதி போட்டியில் நேற்று இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. கோப்பையை எந்த அணி வெல்லும் என்று எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் […]
இன்றைய பெட்ரோல் விலை அதிகரித்தும் டீசல் விலையில் மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
வரலாற்றில் இன்று ஜூலை 15…!!
இன்றைய தினம் : 2019 ஜூலை 15 கிரிகோரியன் ஆண்டு : 196_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 197_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 169 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 70 – உரோமைப் பேரரசர் டைட்டசும் அவரது இராணுவமும் எருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர். 1099 – முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக்கைப்பற்றினர். 1149 – திருக்கல்லறைத் தேவாலயம் எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது. 1240 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி தலைமையிலான நோவ்கோரத் படைகள் சுவீடன் படைகளை “நேவா” என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர். 1381 – இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் என்ற […]
இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோலசும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். மார்ட்டின் கப்தில் 19 ரன்களில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் […]