Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் மீது நடத்திய மற்றொரு தாக்குதல்” இந்திய அணிக்கு அமித்ஷா புகழாரம்..!!

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகிஸ்தான் மீது நடத்தியுள்ள மற்றொரு  தாக்குதல் இது என்று ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.   உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியா போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 336 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை உயர்வு” பவுனுக்கு 08 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் கவலை..!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ 08 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 17..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 17 கிரிகோரியன் ஆண்டு : 168_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 169_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 197 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 653 – திருத்தந்தை முதலாம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுடன் கான்ஸ்டண்டினோபில் கொண்டு செல்லப்பட்டார். 1244 – பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. 1397 – டென்மார்க், சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் டென்மார்க்கின் முதலாம் மார்கரெட்டின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. 1579 – சர் பிரான்சிஸ் டிரேக் நோவா அல்பியனில் (இன்றைய கலிபோர்னியா) தரையிறங்கி அதனை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார். 1596 – இடச்சு நாடுகாண் பயணி வில்லியம் பாரென்ட்சு ஆர்க்டிக் தீவுக்கூட்டமான ஸ்பிட்சுபெர்கனைக் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி தலைமையில்” அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம்…!!

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது  டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல் மற்றும் அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் ஆகியோர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஜூலை  26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் மசோதா உள்ளிட்ட பல்வேறு  மசோதாக்களை நிறைவேற்ற […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல்…. பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு..!!

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது  பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட  குழந்தைகள் அனைத்தும் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர். இதன் காரணமாக முசாபர்பூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு வரையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக உரிமைகளை “டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி” விளாசிய ஸ்டாலின்…!!

முதல்வர் பழனிசாமி தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டார் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கொதித்தெழுந்துள்ளார்.   டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி தமிழகத்தின் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடியிடம் மனு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.   இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை – முதல்வர் பழனிசாமி..!!

முதல்வர் பழனிசாமி, சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்   டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் […]

Categories
மாநில செய்திகள்

“கோதாவரி – காவிரி நதிநீர்” இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற கோரிக்கை – முதல்வர் பழனிசாமி..!!

டெல்லியில்முதல்வர் பழனிசாமி, கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் திட்டங்கள் மற்றும் மேகதாது அணை […]

Categories
தேசிய செய்திகள்

 2022-ல் “விவசாயிகளின் வருமானம்” இரட்டிப்பாகும் – பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில், 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். இதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா […]

Categories
தேசிய செய்திகள்

2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடையும் – பிரதமர் மோடி..!!

நிதி ஆயோக் கூட்டத்தில், 2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.  பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மேகதாது அணை கட்ட அனுமதியளிக்க கூடாது” முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்..!!

தமிழக முதல்வர் பழனிசாமி கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதியளிக்க கூடாது என்று ஜலசக்தித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்  நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிச்சாமி காலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்திடம் அனுமதி வாங்க அவசியமில்லை” ஜலசக்தித்துறை அமைச்சரிடம் குமாரசாமி மனு..!!

கர்நாடக முதல்வர் குமாரசாமி மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி ஜலசக்தித்துறை அமைச்சரிடம்  கோரிக்கை வைத்துள்ளார்  நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமியும் டெல்லி வந்துள்ளார். இந்நிலையில் டெல்லி சென்றுள்ள  முதல்வர் குமாரசாமி  ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி..!!

டெல்லியில் முதல்வர் பழனிசாமி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் பழனிசாமி..!!

டெல்லியில் தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு சுட்டுக்கொலை..!!

சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்  சென்னையில் பிரபல ரவுடி வல்லரசும் அவனது கூட்டாளிகளும் எம்.எம் கார்டன் பகுதியில் அரிவாளுடன் அட்டகாசம் செய்வதாக காவல்துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற வியாசர்பாடி காவல்நிலைய போலீசார் பவுன்ராஜ், ரமேஷ் ஆகியோர் வல்லரசை பிடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவலர் பவுன்ராஜை வல்லரசு அரிவாளால் வெட்டினார். உடனே படுகாயமடைந்த காவலரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மாதவரம் […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை கிடு கிடு உயர்வு” பவுனுக்கு 128 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் கவலை..!!

தங்கம் ஒரே நாளில் பவுனுக்கு ரூபாய் 128 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் நிலையத்தில் “இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு” இளைஞன் தற்கொலை முயற்சி..!!

சென்னை ரயில் நிலையத்தில் இளைஞன் ஒருவன் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்    சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரும், அதே ஊரை சேர்ந்த தேன் மொழி என்ற இளம்பெண்ணும் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அப்பெண்ணை வெட்டினான். கழுத்தில் காயம் பட்ட அப்பெண் கீழே விழுந்தார். இளம்பெண்ணை வெட்டிய பிறகு அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் […]

Categories
உலக செய்திகள்

கலிபோர்னியாவில் மதுபான பிரியர்களை கவரும் ‘ராட் பார்’…!!

கலிபோர்னியா மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘ராட் பார்’ என்ற மதுபான விடுதி அங்கு வருபவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சான் பிரான்சிஸ்கோவின் டன்ஜியன் என்ற பகுதி சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும்  இடமாக உள்ளது. இங்கு புதிதாக ‘ராட் பார்’ என்ற மதுபான விடுதி ஓன்று திறக்கப்பட்டுள்ளது.இந்த விடுதிக்கு வருபவர்களுக்கு எலி வால் போன்ற பீட்ரூட் வேர் ஊறிய மதுபானம் கொடுக்கப்படுகிறது. பின்னர் அங்குள்ள அனைவருமே இருட்டறையில் பராமரித்து வளர்க்கப்பட்டு வரும்  எலிகளை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய நிறுவனத்தின் மீது சச்சின் வழக்கு..!!

கிரிக்கெட் வீரர் சச்சின் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் மீது ராயல்டி வழங்க கோரி வழக்கு தொடுத்துள்ளார்.  கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்பார்டன் சர்வதேச விளையாட்டு நிறுவனத்திடம் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளார். அந்த ஒப்பந்தம் என்னவென்றால் அந்த நிறுவனத்தின் பொருள்களை விளம்பரம் செய்வதற்கு ஆண்டிற்கு ஆண்டிற்கு ஒருமில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வழங்க வேண்டும் என்பதுதான். அதன் படி, சச்சின் படம், லோகோ போன்றவற்றை அந்நிறுவனம் தன்னுடைய விளம்பரத்திற்காக பயன்படுத்தும். ஆனால் ஒப்பந்தத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழ் மொழியில் பேசலாம்” எதிர்ப்புக்கு பின் முடிவை மாற்றிய தெற்கு ரயில்வே..!!

இரயில் நிலைய அதிகாரிகள் தங்களுக்கு புரியும் மொழியில் பேசலாம் என்று தெற்கு ரயில்வே புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது  சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது தெரியவந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம் “மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்” வைரமுத்து கண்டனம்..!!

தமிழ் பேசக்கூடாது என்று கூறியதற்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ் வேண்டாம்” இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும்- தெற்கு ரயில்வே அதிரடி..!!

ரயில் நிலைய அதிகாரிகள் தமிழில் பேச வேண்டாம் என்றும், இந்தி அல்லது ஆங்கில மொழியினை பயன்படுத்த வேண்டும் என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது  சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக […]

Categories
மாநில செய்திகள்

“திமுக முன்னாள் MP சிவ சுப்பிரமணியன் மரணம்” அதிர்ச்சியில் திமுகவினர்..!!

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் சிவ சுப்பிரமணியன். இவர்  1989-ம் ஆண்டு ஆண்டி மடம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் 1998- 2004-ல் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தற்போது திமுவில் சட்ட திருத்தக் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த அரியலூர் திமுக மாநிலங்களவை […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை உயர்வு” பவுனுக்கு 08 அதிகரிப்பு… வாடிக்கையாளர்கள் கவலை..!!

இன்று தங்கம் பவுனுக்கு ரூபாய் 08 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (14 […]

Categories
மாநில செய்திகள்

டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி..!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டதில் கலந்து கொள்ள இன்று டெல்லி செல்கிறார் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அந்த பயணத்தை முடித்த பின் இந்தியா திரும்பிய பிறகு  நாளை (சனிக்கிழமை) நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் […]

Categories
பல்சுவை வானிலை

“சென்னையில் 2 நாட்கள் மழை பெய்யும்” வானிலை ஆய்வு மையம்..!!

சென்னையில் வெப்ப சலனம் காரணமாக 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெயிலின் தாக்கத்தினாலும், மழை இல்லாததாலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் இல்லாமல் சென்னை மக்கள் தெரு தெருவாக அலைகின்றனர். இதனால் மக்கள் மழை எப்போது பெய்யும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் சென்னையில் 2 நாட்கள் வெப்பச்சலனம் காரணமாக மழை […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி “பாலியல் வன்கொடுமை” குற்றவாளிக்கு மரண தண்டனை…!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது  ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டம் ரேவாலி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் அடித்து கொலை செய்தார். இது குறித்து பெஹ்ரார் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ராஜ்குமாரை கைது செய்தனர். இவர் மீது பிரிவு 302 -ன் கீழ் (கொலை) , 363 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு வார்த்தை..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில்  இரு நாட்டு உறவுகள் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்  பிரதமர் மோடி விமானம் மூலம் புறப்பட்டு சென்று பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற மாநாட்டுக்கிடையே பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது   இரு நாட்டு தலைவர்களும் சிரித்த முகத்துடன்  கை குலுக்கி கொண்டனர். இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்தும், பல்வேறு முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

“ஏ.என்- 32 விமான விபத்து” 13 பேரின் சடலங்களும், கருப்பு பெட்டியும் மீட்பு..!!

இந்திய விமான படையின் ஏ.என்- 32 விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேரின் சடலங்களும், கருப்பு பெட்டியும் மீட்கப்பட்டன  இந்திய விமான படையின் விமானம் ஏ. என்- 32 ஜூன் 3-ம் தேதி அசாம் மாநிலத்தின் ஜோர்கட்டிலிருந்து மதியம் 12.25 மணியளவில் அருணாச்சல பிரதேசதின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டு சென்றது. இதில் 13 பேர் பயணம் செய்தனர்.  இதையடுத்து விமானம் 1 மணியளவில் கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்தது. அதை தொடர்ந்து விமானத்தை தேடுவதற்கு இந்திய விமான படை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு…. சீன அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில்  இரு நாட்டு உறவுகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி இன்று  விமானம் மூலம் புறப்பட்டு சென்று பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற மாநாட்டுக்கிடையே பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். சந்திப்பில்  இரு நாட்டு தலைவர்களும் சிரித்த முகத்துடன்  கை குலுக்கி கொண்டனர். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

கிர்கிஸ்தானுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டார் மோடி..!!

பிரதமர் மோடி கிர்கிஸ்தானுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்  கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு 13 மற்றும் 14 இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். முன்னதாக இந்திய விமானங்கள் எல்லை  பாகிஸ்தானின்  பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறப்பதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பிரதமர் மோடி பாகிஸ்தான் வான் பரப்பு வழியாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து  பிரதமர் அவ்வழியாக செல்வதற்கு இந்தியா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாக்காளர்களுக்கு நன்றி “அரவக்குறிச்சி சென்ற ஸ்டாலின்” புதுமண தம்பதிக்கு ஆசிர்வாதம்..!!

 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அரவக்குறிச்சி சென்ற போது அங்கு புதுமண தம்பதிக்கு ஆசிர்வாதம்  வழங்கினார். சமீபத்தில் நடந்து முடிந்த  மக்களவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 38 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் சட்ட பேரவை  இடைத்தேர்தலிலும் திமுக 13 தொகுதிகளை கைப்பற்றியது. திமுக கைப்பற்றிய தொகுதிகளில் கட்சியில் தன்னை இணைத்து கொண்ட செந்தில் பாலாஜி போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியும் ஒன்றாகும். இந்த நிலையில், வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்க்கு தி.மு.க. […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை உயர்வு” பவுனுக்கு 08 அதிகரிப்பு… வாடிக்கையாளர்கள் கவலை..!!

இன்று தங்கம் பவுனுக்கு ரூபாய் 08 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
பல்சுவை

குறைந்து வரும் பெட்ரோல், டீசல்…. மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!

தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 13..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 13 கிரிகோரியன் ஆண்டு : 164_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 165_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 201 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 313 – உரோமைப் பேரரசில் அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கும் கட்டளையை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் பிறப்பித்தார். 1381 – இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது. 1514 – 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் போர்க் கப்பல் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது. 1525 – கத்தோலிக்க திருச்சபையின் கட்டளையை மீறி மார்ட்டின் லூதர் கத்தரீனா வொன் போரா என்பவரைத் திருமணம் புரிந்தார். 1625 – இங்கிலாந்தின் முதலாம் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

தல அஜித்தின் “நேர் கொண்ட பார்வை” படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.  நடிகர் அஜித்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது நடிப்பினால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளார். ரசிகர்களால் செல்லமாக தல என்று இவர் அழைக்கப்படுகிறார். இவரது படம் மற்றும் ட்ரெய்லர் ஏதாவது ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் படம் குறித்த எதையாவது ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். இது ரசிகர்களின் வாடிக்கையான செயல். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள “நேர் கொண்ட பார்வை ட்ரெய்லர்” […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்தது..!!

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்ததால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது  ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமில்லாமல் துபாய், இலங்கை, தாய்லாந்து உட்பட வெளி நாடுகளுக்கும் விமானத்தை இயக்கி வருகிறது. இந்நிலையில் இன்று எஸ் ஜி 58 என்ற விமானம் துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 189 பயணிகள் பயணித்தனர். விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையம் அருகே வந்த போது […]

Categories
அரசியல்

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களை சந்திக்க தடை..!!

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு கருத்தையும்  ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது    அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் தோல்வி, உட் கட்சியின் பிரச்சனை, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முழுமையாக ஒதுக்கிவிட்டார்கள்” அதிமுகவில் இணைந்த ராதாரவி பேட்டி..!!

திமுகவில் என்னை முழுமையாக ஒதுக்கிவிட்டார்கள் என்று எண்ணியதால் நான் கட்சியிலிருந்து விலகிவிட்டேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்  கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து […]

Categories
அரசியல்

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம்..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த அக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்  5 தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்த  இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சியின் பிரச்சனை, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும், பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றரை மணி […]

Categories
அரசியல்

“அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நிறைவு” உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள நடவடிக்கை..!!

சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள  தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம்  நிறைவு பெற்றுள்ளது. அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற, இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வி, உட்க்கட்சி பிரச்சனை, கட்சியின் ஒற்றை தலைமை மற்றும் பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று   முன்னதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஒன்றரை மணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திமுகவில் இருந்து நீக்கம்” அதிமுகவில் இணைந்த ராதாரவி..!!

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்  கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ராதாரவி திமுக அடிப்படை […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை உயர்வு” பவுனுக்கு 08 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் கவலை..!!

தங்கம் பவுனுக்கு ரூபாய் 08 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (12 […]

Categories
அரசியல்

எடப்பாடியாரே! அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள்.! பரபரப்பை கிளப்பிய போஸ்டர்..!!

 அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்  அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சி பிரச்சனை, கட்சியின்  தலைமை, பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று […]

Categories
அரசியல்

அதிமுக நிர்வாகிகள் கூட்டம்…. “உடல்நலம்” காரணமாக குன்னம் எம்.எல்.ஏ பங்கேற்கவில்லை…!!

சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் உடல் நலம் காரணமாக பங்கேற்கவில்லை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சி பிரச்சனை கட்சியின்  தலைமை, பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

கடும் வறட்சி… நாளுக்கு நாள் அதிகரிக்கும் காய்கறிகள் விலை… கோயம்பேட்டில் 25 முதல் 40% வரை அதிகரிப்பு..!!

வறட்சியால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை 25 முதல் 40% வரை அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் கொடூர தாக்கத்தினால் ஏரிகள், குளங்கள், மற்றும் ஆறுகளில் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. சில கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த வறட்சியால் விவசாயிகள் பெரிதும் கவலைப்படுகின்றனர். முக்கியமாக காய்கறிகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் இந்த வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி காரணமாக காய்கறிகளின் விளைச்சல் மிக குறைந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கிரேஸி மோகன் மறைந்தது பெரும் இழப்பு” நடிகர் சித்தார்த் இரங்கல்..!!

நடிகர் சித்தார்த் கிரேஸி மோகனுக்கு ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்  பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகனுக்கு  நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பால் அவதிப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணிக்கு கிரேஸி மோகன் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த கிரேஸி மோகனுக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் சித்தார்த் கிரேஸி மோகனுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில், “கிரேஸி மோகன்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS AUS போட்டியை காண ஓவல் மைதானம் வந்த விஜய் மல்லையா..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியை காண விஜய் மல்லையா ஓவல் மைதானத்துக்கு வந்துள்ளார்.  உலகக்கோப்பை போட்டியில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி 57 ரன்களும், மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 109 பந்துகளில் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் 3 வயது சிறுமி “பாலியல் வன்கொடுமை” செய்து கொலை – உடற்கூறு ஆய்வு அறிக்கை..!!

உத்திர பிரதேசத்தில் சிறுமி கொலை தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கையில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது   உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் வசித்து வரும் பன்வாரிலால் சர்மா என்பவரின் டுவிங்கிள் சர்மா என்ற 2 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குழந்தையின் பெற்றோர்  10,000 ரூபாய் பணத்தை கடனாக வாங்கியதால் கடன் கொடுத்தவர்கள் கொடூரமாக கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியை […]

Categories
அரசியல்

“இபிஎஸ்,ஓபிஎஸ் தலைமை” சிறப்பாக செயல்படும் அதிமுக – திண்டுக்கல் சீனிவாசன்..!!

கட்சியும், ஆட்சியும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.  நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பின்னடைவை சந்தித்து வந்தது. இதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும், இரட்டை தலைமையால் முடிவுகள் எடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும்  அதிமுக எம்எல்ஏக்கள் பேசத் தொடங்கினர். மேலும் அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார். […]

Categories

Tech |