Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி கிர்கிஸ்தான் பயணம்” பாகிஸ்தானிடம் அனுமதி கேட்கும் இந்தியா..!!

பிரதமர் மோடியின் விமானத்தை தங்கள் வான்பரப்பில் பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது  இந்திய விமானங்கள் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானின்  பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறப்பதற்க்கு பாகிஸ்தான் தடை விதித்தது. அந்த தடையை சமீபத்தில் தான் வரும் 15-ம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் 13ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க கிர்கிஸ்தானுக்கு விமானம் மூலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வார்னர் அடித்த அடியில் இந்திய வம்சாவளிக்கு காயம்..!!

பயிற்சியின் போது வார்னர் அடித்த பந்து இந்திய வம்சாவளியை தாக்கியதால் அவர் படுகாயமடைந்தார்  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14 வது லீக் ஆட்டத்தில்  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வார்னர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு இங்கிலாந்தை சேர்ந்த மித வேகப்பந்து வீச்சாளர் ஜெய் கிஷான் பந்து வீசினார். அப்போது வார்னர் அடித்த […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் மூளை காய்ச்சலால் 14 குழந்தைகள் பலி…!!

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் 14 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் 38 குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட 38 குழந்தைகளும் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி 14 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மற்ற குழந்தைகள் தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலியான பெரும்பாலான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜேசன் ராய் அதிரடி பேட்டிங்… வங்கதேசத்துக்கு 387 ரன்கள் இலக்கு..!!

இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 386 ரன்கள் குவித்துள்ளது  12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 12-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து   –  வங்காள தேசம் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில்  பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வீட்டுக்குத்தான் போக வேண்டும்” அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!!

சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.  ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். இதையடுத்து அவர் சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து  ஏற்பட்ட குழப்பத்தால்  இரு அணிகளாக செயல்பட்டு வந்த  இ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரும் ஓன்று சேர்ந்து டி.டி.வி  தினகரனை அ.தி.மு.கவிலிருந்து விலக்கினர். அதிமுகவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட டி.டி.வி  தினகரன் தனியாக அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் சிறையில் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் புழுதி புயல், மின்னல் தாக்குதலில் 19 பேர் பலி… 48 பேர் காயம்..!!

உத்தரபிரதேசத்தில் பயங்கர புழுதி சூறாவளி மற்றும்  மின்னல் தாக்கியதில் 19  பேர் பலியாகியுள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலத்தில் பல  இடங்களில் நேற்று மாலை திடீரென புழுதியுடன் சூறாவளி காற்று பயங்கர வேகமாக வீசியது. அப்போது அதனுடன் சேர்ந்து இடி–மின்னலும் தாக்கியது. இந்த கோர  சூறாவளி தாக்குதலில் மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதோடு மட்டுமில்லாமல் பல வீடுகள், கடைகள், கட்டிட சுவர்களும் இடிந்து விழுந்தன. இதில் இடிந்து விழுந்த சுவரில் மாட்டிக் கொண்டும், மின்னல் தாக்கியும் 19 பேர் இறந்துள்ளனர். மேலும் 48 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ 10,000 த்தை திருப்பி கொடுக்காத பெற்றோர்” 2 வயது சிறுமி கொடூர கொலை…. நாடு முழுவதும் அதிர்ச்சி…!!

அலிகாரில் 10,000 ரூபாய் பணத்தை பெற்றோர் திருப்பி தராததால் 2 வயது சிறுமி டுவிங்கிள் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில்வசித்து வரும் பன்வாரிலால் சர்மா என்பவருக்கு டுவிங்கிள் சர்மா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை கடந்த மே மாதம் 31-ம் தேதி திடீரென காணாமல் போனது. உடனே குழந்தை மாயமானதை பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தையின் முகம் யாரென்று அடையாளம் தெரியாத அளவிற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னணி வீரர்கள் சொதப்பல்…. கோல்டர் – நிலே அதிரடி…. ஆஸ்திரேலியா 288 ரன்கள் ரன்கள் குவிப்பு..!!

ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில்அனைத்து  விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்துள்ளது.   12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா   –  வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். டேவிட் வார்னர் 3 ரன்கள் எடுத்த […]

Categories
மாநில செய்திகள்

“அச்சத்தை ஏற்படுத்தும் நிபா” முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

தமிழகத்தில் நிபா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலுக்கு  17 பேர் பலியாகினர். அவர்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்தார். தற்போது நிபா வைரஸ்  மீண்டும் கொச்சியில் பரவி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  திருச்சி விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் நிபா வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

“24 மணிநேரமும் கடைகளை திறக்கலாம்” தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில்,  தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கலாம். அதே நேரத்தில் பணியாளர் ஒருவரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலையில் ஈடுபடுத்த வேண்டும். பெண் பணியாளர்கள் இரவு 8 […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை அதிரடி உயர்வு” பவுனுக்கு 312 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் கவலை…!!

தங்கம் பவுனுக்கு ரூ 312 அதிகரித்ததால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (06/06/2019) […]

Categories
தேசிய செய்திகள்

“நெருங்கும் சட்டமன்ற தேர்தல்” மெட்ரோ ரயில், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லி அரசு மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடந்து முடிந்த பாராளுமன்ற  தேர்தலில்  டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வென்றது. இதனால் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அதிர்ச்சியில் உள்ளது. இதனை சரியாக பயன்படுத்தி டெல்லி மாநிலத்தையும் கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் அடுத்தமுறையும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு செயல்படுத்த வியூகங்களை செயல்படுத்த உள்ளதாக டெல்லி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோலியும், தோனியும் மிரட்டுவார்கள்” – ஜே.பி டுமினி..!!

விராத் கோலியும், எம்.எஸ் தோனியும் மிரட்டலாக  ஆடுவார்கள்  என்று தென் ஆப்பிரிக்க வீரர் ஜே.பி டுமினி தெரிவித்துள்ளார்.  12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. இரண்டாவது போட்டியில் நேற்று வங்கதேச அணியிடம்  தோல்வியை சந்தித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 3-ஆவது போட்டியில் நாளை மறுநாள் (5-ம் தேதி) நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணியை எதிர் கொள்வது பற்றி ஜே.பி டுமினியிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

 “அழகிய தீர்வு” இந்தி கட்டாயமல்ல – வரவேற்ற ஏ.ஆர். ரஹ்மான்..!!

இந்தி கட்டாயமல்ல என்ற திருத்தப்பட்ட புதிய வரைவு கொள்கைக்கு “அழகிய தீர்வு” என்று ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசின் புதியவரைவு கல்வி கொள்கையின் படி மும்மொழி கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை பயிற்று விக்க வேண்டும். அதேபோல இந்தி மொழி பேசும் பிற மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர ஏதேனும் மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்மிரிதி இரானி, ரவி சங்கர் பிரசாத் மத்திய அமைச்சராக பொறுப்பேற்பு..!!

மத்திய அமைச்சர்களாக ஸ்மிரிதி இரானி, ரவி சங்கர் பிரசாத், வி. கே சிங் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.  மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு அவர்களுக்கான இலாக்கா ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்தந்த துறைகளை சேர்ந்தவர்கள் பதவியேற்று வருகின்றனர். காங்கிரஸ் கோட்டை என  அனைவராலும் கூறப்படும் அமேதி தொகுதியில் போட்டியிட்டு  பாஜகவின் ஸ்மிரிதி […]

Categories
தேசிய செய்திகள்

சைக்கிளில் சென்று சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ஹர்ஷ்வர்தன்..!!

ஹர்ஷ்வர்தன் டெல்லியில் உள்ள அமைச்சகத்திற்கு சைக்கிளில் சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து கடந்த 30-ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. பிரதமர் மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

“3-வது மொழியை தேர்வு செய்து படிக்கலாம்” இந்தி மொழி கட்டாயமில்லை..!!

கடும் எதிர்ப்புக்கு பிறகு இந்தி மொழி  பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு புதிய கல்வி வரைவு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்றது. இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய கல்வி வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை பயிற்று விக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை காட்டினர். […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த மொழியாக இருந்தாலும் விருப்ப பாடமாக இருக்க வேண்டும்” சித்தராமையா ட்விட்..!!

தாய்மொழி அல்லாத எந்த மொழியாக இருந்தாலும் அது விருப்ப பாடமாக இருக்கவேண்டும்  என்று கர்நாடக முன்னாள் முதல்வர்  சித்தராமையா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்றவுடன் கஸ்தூரி ரங்கன் குழு தேசிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தது. இதையடுத்து மாநில கல்விகளில் தாய்மொழி மற்றும் ஆங்கில மொழியை பயிற்று விக்கும் வகையிலுள்ள இரு மொழி கொள்கைக்குப் பதிலாக ஹிந்தியை […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மீனவர்கள் 20 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பு..!!

கன்னியாகுமரியை சேர்ந்த 20  மீனவர்கள் ஆழ்கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . கன்னியாகுமரி சின்னத்துறை என்ற கிராமத்தை  சேர்ந்த 20  மீனவர்கள் கடந்த 18-ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கு கடலுக்குள் சென்றுள்ளனர். மீனவர்கள் லட்சத்தீவு அருகேயுள்ள  தித்திரா தீவுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 படகுகள் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து படகு நடுக்கடலில் பழுதானதால் உணவு மற்றும் குடிநீரின்றி மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர். மீனவர்கள் 20 பேர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆழ்கடலில் சிக்கி தத்தளித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஷகிப், ரஹிம் அரைசதம் விளாசல்….தென் ஆப்பிரிக்காவுக்கு 331 ரன்கள் இலக்கு..!!

வங்காள தேசம் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது   12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா  –  வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து வங்காள தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இஃக்பாலும், சவுமியா சர்க்காரும் களமிறங்கினர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

காவலர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார் அமித்ஷா…!!

உள்துறை அமைச்சர் அமித்ஷா காவலர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். மக்களவை  தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு  இலாக்கா  ஒதுக்கப்பட்டது. இதன்படி அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அமித்ஷா, நேற்று  முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் பயணமாக சியாச்சின் செல்லும் ராஜ்நாத் சிங்..!!

ராஜ்நாத் சிங் முதல் பயணமாக நாளை சியாச்சின் பனிமலை பகுதிக்கு செல்கிறார்   மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு  இலாக்கா ஒதுக்கப்பட்டது. இதில் ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து  ராஜ்நாத்சிங் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் சேர்ந்து பாதுகாப்பு துணை இணை அமைச்சராக  ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் இருந்து விலகல்” இது தான் காரணமா..?

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு வருபவர். இவர் அவ்வப்போது பாஜக பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படத்தக்கூடியவர். சமீபத்தில் கூட பிரதமர் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.  நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தி காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை” ராணுவ வீரர் ஒருவர் பலி…!!

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜார்க்கண்டின் தும்கா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த ராணுவ வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்த நிலையில், அங்கிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான  துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சண்டையில்  ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும்  4 வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சண்டையில் காயமடைந்துள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

குறைந்த ரன்னில் சுருண்ட இலங்கை…. விக்கெட் இழக்காமல் வென்ற நியூசிலாந்து..!!

நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது  12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3 வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து –  இலங்கை அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ்  மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக திரிமன்னேவும், கருணரத்னேவும் களமிறங்கினர். ஜேம்ஸ் ஹென்றி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் முதல் பந்தை திரிமன்னே பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ராஜ்நாத்சிங்..!!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்   மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் , 09 பேர்  தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாகவும், 24 பேர் ராஜாங்க அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இதையடுத்து நேற்று அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு நேற்று இலாக்கா ஒதுக்கப்பட்டு, அந்தந்த துறைகளின் அமைச்சர்களாக பொறுப்பேற்று வருகின்றனர். இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித்ஷா…!!

அமித்ஷா உள்துறை அமைச்சராக இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மக்களவை  தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன்  கேபினட் அமைச்சர்களாக  24 பேரும்,   தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாக 09 பேரும்,  ராஜாங்க அமைச்சர்களாக 24 பேரும் பதவி ஏற்றனர். இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கும்,  அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்தி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு..!!

டெல்லியில் நடந்த கூட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மக்களவை தேர்தலில் 52 தொகுதியில் மட்டும் வென்று காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முன்வந்தார். ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி இதனை நிராகரித்து, ராகுலுக்கு கட்சியின் கட்டமைப்பை முழுவதுமாக மாற்றியமைக்க அதிகாரம் அளித்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“மோடி கோயில் சென்றால் நாங்கள் மசூதி செல்வோம்” – அசாதுதின் ஓவைசி..!!

மோடி கோயில் சென்றால் நாங்கள் மசூதி செல்வோம் என்று அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். மக்களவை தொகுதியில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.இந்நிலையில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் தொடர்ச்சியாக  4-வது முறை வெற்றி பெற்றுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது “ மோடியால்  கோவிலுக்குள்  சென்று வணங்க  முடியும் என்றால், நாமும் நம்முடைய மசூதிகளுக்கு செல்லலாம். மோடி  குகைக்குள் அமர்ந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத்சிங் மரியாதை..!!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார். மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வென்றதையடுத்து நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 24 கேபினட் மந்திரிகள் மற்றும் 33 ராஜாங்க மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். பிரதமர் உள்பட 54 அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதற்கு முன் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு தற்போது பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேர்மையான போலீஸ் அதிகாரியாக மிரட்டும் தன்ஷிகா..!!

நடிகை தன்ஷிகா “யோகி டா” படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நடிகை தன்ஷிகா ரஜினிகாந்த் நடித்த `கபாலி’ படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், தன்ஷிகா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தன்ஷிகா நேர்மையாக இருப்பதால் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார்? என்பதே படத்தின் கதை. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மனோபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா-3’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

`”வல்லவனுக்கும் வல்லவன்” 4 வேடத்தில் அசத்தும் பிரபல நடிகர்..!!

பாபிசிம்ஹா “வல்லவனுக்கும் வல்லவன்”என்ற படத்தில் 4 வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜிகணேசன் ‘நவராத்திரி’ என்ற படத்தில் 9 வேடங்களிலும், உலக நாயகன் கமல்ஹாசன் `தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களிலும்  நடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்களைப் போலவே  பிரபல நடிகர்கள் 2 , 3 வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் பாபிசிம்ஹா,”வல்லவனுக்கும் வல்லவன்” என்ற படத்தில் 4 வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருடன்  ஷிவதா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்தராஜ், சங்கிலிமுருகன், அப்புக்குட்டி ஆகியோர்  நடித்துள்ளனர்.  விஜய் தேசிங் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் […]

Categories
தேசிய செய்திகள்

“S -400 ஏவுகணை வாங்கும் இந்தியா” எச்சரிக்கும் அமெரிக்கா..!!

ரஷ்யாவிடம் இருந்து S -400 ஏவுகணையை  இந்தியா வாங்குவதால்  அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய விமான படை  ரஷ்யாவிடமிருந்து, 400 கி.மீட்டர் தூரத்தில்  வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழியில் மறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட  எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க உள்ளது. சீனா மற்றும்   பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிநவீன S -400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாகவே  பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் மிரட்டல் பந்து வீச்சு…. சுருண்டு வீழ்ந்த பாகிஸ்தான்..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது   12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்  –  பாகிஸ்தான்  அணிகள் மோதியது. இப்போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்  கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணியில் இமாம் உல்-ஹக்கும், ஃபகர் சமானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின்  3வது ஓவரில் ஷெல்டன் […]

Categories
தேசிய செய்திகள்

“சோபியானில் துப்பாக்கி சண்டை” 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில்  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு- காஷ்மீரின் சோபியான் பகுதியிலுள்ள சாய்னாபோரா என்ற இடத்தில்  பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் சென்று அங்கு அதிரடி சோதனையை மேற்கொண்டனர். பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தீடிரென தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்புக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் மாலை நடைபெறும்…!!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது  மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் பாரதிய ஜனதா  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  353 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று  தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து மோடிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் சேர்த்து 24 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து..!!

டெல்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  353 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று  தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதாவை  எதிர்த்த கட்சிகள் அனைத்தும் மோசமான தோல்வியை சந்தித்தன. இதையடுத்து மக்களவை தேர்தலில் அடைந்த படுதோல்வி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக  டெல்லியில் இன்று எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்திற்கு  பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து…!!

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். போட்டியின் முதல் ஓவரில் இம்ரான் தாஹிர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்ச்சர் அபார பந்து வீச்சு…. தென் ஆப்பிரிக்க அணி 33 ஓவரில் 173/6…!!

தென் ஆப்பிரிக்க அணி 33 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 173 ரன்களுடன் விளையாடி வருகிறது  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ் அதிரடி….. 4 வீரர்கள் அரைசதம்…. தென் ஆப்பிரிக்காவுக்கு 312 ரன்கள் இலக்கு…!!

இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். போட்டியின் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் அடித்து மிரட்டிய ரூட், ராய் அவுட்…. இங்கிலாந்து அணி 25 ஓவரில் 135/3…!!

இங்கிலாந்து அணி 25 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 135 ரன்களுடன் விளையாடி வருகிறது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேர்ஸ்டோ ஏமாற்றம்…. ராய், ரூட் அசத்தல் பேட்டிங்… இங்கிலாந்து 12 ஓவரில் 72/1…!!

இங்கிலாந்து அணி 12 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 72 ரன்களுடன் விளையாடி வருகிறது 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில்  தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் களமிறங்கினர். […]

Categories
தேசிய செய்திகள்

“முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி” ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ராகுல்..!!

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதற்கு ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்   மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிக்கும்  தேர்தல் நடைபெற்றது. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியடைந்தது. சட்ட மன்ற தேர்தலில் வென்றதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெலுங்கானா ஆளுனர் நரசிம்மன்  பதவி பிரமாணம் செய்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்பு…!!

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு  ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்   மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி  வருகின்ற 30_ஆம்  தேதி பிற்பகல் 12.30 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் அதிரடி குறைவு… மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
லைப் ஸ்டைல்

உடலுறவில் ஆண்கள் “எடுத்தோம் கவுத்தோமுன்னு செய்யாதீங்க” இப்படி பொறுமையா செய்யுங்க..!!

இதனை ஒருவர்  அவர்களின் துணையை திருப்தி படுத்துவதற்காக அவர்கள்  சொன்ன வழிமுறை நான் சொல்கிறேன். வாழ்க்கையில் செக்ஸ் என்பது மிகவும் முக்கியம். ஆணுக்கு பெண் தேவை, பெண்ணுக்கு ஆண் தேவை. அப்படி இல்லையென்றால் வாழ்க்கை இனிக்காது. ஆண்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் பெண்களின் மனதை புரிந்து கொள்ள வேண்டும். அவசர அவசரமாக எதுவுமே செய்ய வேண்டாம். கைகளால்  பிடித்து  படபடவென்று  புடவையை கலையாமல் உங்களுடைய வாயால்  பிடித்து பொறுமையாக எடுத்து அவிழ்த்து, முத்தமிட வேண்டும்.  உங்களுடைய கழுத்து  அவருடைய கழுத்தில் ஒன்று சேர்த்து   அவர்களுக்கு அழுத்தமான முத்தத்தை […]

Categories
லைப் ஸ்டைல்

“உங்களுக்கு காம எண்ணம்” இதை செய்யுங்க விடுபடுங்க..!!

ஆண்கள்  காம எண்ணத்தில் இருந்து படிப்படியாக விடுபட இந்த விஷயங்களை குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால்  உறுதியாக காம எண்ணங்கள் குறைந்து நல்ல எண்ணங்கள் தோன்றும். உடம்பு என்பது பஞ்சபூதங்களால் கலந்த ஒரு கூடு மாதிரி. அதாவது வெறும் சதை அப்படி என்று நாம் தெளிவாக உணர வேண்டும். அப்படி உணர்ந்தால்  நமக்கு யார் மீதும் காம எண்ணம் வராது. பெண்களுக்கு வெறும் சதை மட்டுமே உள்ளது என்பதை உணர வேண்டும். அதாவது அந்த சதையானது அளவு பெரிதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவியிலிருந்து விலக வேண்டாம்” முக ஸ்டாலின் வேண்டுகோள்..!!

ராகுல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. ஆனால் காங்கிரஸ் 52 இடங்கள் மட்டுமே வென்று மோசமான தோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்தார். இதற்க்கு காங்கிரஸ் செயற்குழு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த்தும்  ராகுல் காந்தி பதவி விலக கூடாது என்று கூறினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ராகுல் பதவி விலகக்கூடாது” ரஜினி கூறியது மகிழ்ச்சி- கே.எஸ். அழகிரி..!!

ராகுல் காந்தி பதவி விலகக்கூடாது என்று ரஜினி கூறியது மகிழ்ச்சியளிப்பதாக  கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக  வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. ஆனால் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் பதவி விலகுவதாக அறிவித்தார்.  இந்நிலையில் இது குறித்து போயஸ் கார்டனில் உள்ள  இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  ரஜினி காந்த், காங்கிரஸ் பழமையான கட்சி. அந்த கட்சியில் மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்களை கையாள்வது இளையவரான ராகுல் காந்திக்கு கடினம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தேர்தலில் கணிசமான வாக்குகள்” கமலுக்கு ரஜினி வாழ்த்து..!!

தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற கமல் ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் கைப்பற்றியது. இந்த தேர்தலில் பிரபல நடிகர் கமல்ஹாசனால் புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி களம் கண்டது. இந்த கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் அமமுக மற்றும் நாம் […]

Categories

Tech |