Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவி விலகாமல் நின்று நிரூபிக்க வேண்டும்” ராகுல் குறித்து ரஜினி கருத்து..!!

ராகுல் பதவி விலகாமல் நின்று நிரூபித்து காட்ட  வேண்டும் என்று  ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே  கைப்பற்றியது. இந்த படு தோல்வியால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகி வருகின்றனர். அதே போல காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் பதவி விலகுவதாக முன் வந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மோடியின் தலைமைக்கு கிடைத்தது” வெற்றி குறித்து ரஜினி கருத்து..!!

மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக வெற்றி குறித்து ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.   நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசியல் பரபரப்பு” சசிகலாவுடன் ஆலோசனை நடத்தும் டிடிவி…!!

டிடிவி தினகரன்  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதிகளிலும்  வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் பிடித்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக  போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும்  படு தோல்வி அடைந்தது. பெரும்பாலான இடங்களில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியை விடவும்  குறைவான வாக்குகளையே பெற்றது. அமமுகவின் இந்த தோல்வியால் மாநிலம் முழுவதும் உள்ள அமமுக தொண்டர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் “Wait And See” ஸ்டாலின் பேட்டி…!!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்    திமுக கூட்டணி 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களின் பதவி ஏற்பு   திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  தி.மு.க வேட்பாளர்கள் 13 பேரும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர். இதனால் தமிழக சட்ட மன்றத்தில் 88 ஆக இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக MLA_க்கள் பதவி ஏற்பு” சட்டசபையில் 101ஆக உயர்வு…!!

இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 பேர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றனர்  மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முக ஸ்டாலின் தலைமையிலான  திமுக கூட்டணி 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக  எம்.எல்.ஏக்கள் 28ம் தேதி பதவி ஏற்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில்  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியுள்ளது……!!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.   கர்நாடகா மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும், காவிரியில் இருந்து 177.25 டி.எம்.சி., அளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்ணீர் பங்கீட்டு அளவை  உறுதிப்படுத்துவதற்கு மற்றும்  தண்ணீரின் அளவு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு இரு மாநில பிரதிநிதிகளுடன்  ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்நிலையில்  மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே டெல்லியில் மசூத் ஹூசைன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது. இதில்  தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கர்நாடக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காவிரி ஆணையத்தில் தமிழகம் கோரிக்கை….!! 

டெல்லியில் நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு காவிரி நீர் தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளது.  கர்நாடகா மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும், காவிரியில் இருந்து 177.25 டி.எம்.சி., அளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்ணீர் பங்கீட்டு அளவை  உறுதிப்படுத்துவதற்கு மற்றும்  தண்ணீரின் அளவு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு இரு மாநில பிரதிநிதிகளுடன்  ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்நிலையில்  மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே டெல்லியில் மசூத் ஹூசைன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது. […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 28..!!

இன்றைய தினம் : 2019 மே 28 கிரிகோரியன் ஆண்டு : 148_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 149_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 217 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1503 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது. 1533 – கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-ஆன் பொலின் திருமணத்தை உறுதி செய்தார். 1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 எசுப்பானியக் கப்பல்கள், பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன. 1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து, போல்ட்டன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினி, கமலுக்கு அழைப்பு” பாஜக ஊடுருவ முயற்சி – வைகோ குற்றசாட்டு…!!

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு  ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்தது, தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ முயற்சி என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து  வரும் மே -30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்கிறார். இவ்விழாவில் உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதே போல நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
தேசிய செய்திகள்

பெயரை கேட்ட போதை ஆசாமி… சுடப்பட்ட முஸ்லிம் வாலிபர்…!!

பீகாரில் பெயரை கேட்ட குடிபோதை ஆசாமி  முஸ்லிம் என தெரிந்ததும் வாலிபரை  துப்பாக்கியால் சுட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பெகுசராய் மாவட்டம் கும்பி கிராமத்தில் 30 வயதான முகமது காசிம் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் தள்ளுவண்டியில் சலவை தூள் வைத்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த நிலையில், விற்பனை செய்து கொண்டிருந்த அவரை குடிபோதையில் வந்த ஆசாமி ஒருவர்  வழிமறித்துள்ளார். அதன் பின்  உனது பெயரென்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் பெயரை சொன்னதும், முஸ்லிமாகிய நீ இங்கு என்ன […]

Categories
தேசிய செய்திகள்

“உலகின் தலை சிறந்த மாநிலம் மேற்கு வங்காளம்” மம்தா பானர்ஜி..!

மேற்கு வங்காளம்  ஒருநாள் உலகின் தலை சிறந்த மாநிலமாக  உருவாகும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைமையிலான இடது சாரி அரசை வீழ்த்தி   திரிணாமுல் காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தது.  பின்னர் மீண்டும் 2016-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இந்நிலையில் மேற்கு வங்காள முதல்வர்  மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில்  இன்று செய்தி ஓன்று வெளியிட்டார்.  அந்த செய்தியில், கடந்த 2016ம் ஆண்டு இதே நாளில், […]

Categories
தேசிய செய்திகள்

“மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு” கலந்து கொள்வாரா கமல்..?

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில்  நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில் மோடியே  மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். […]

Categories
தேசிய செய்திகள்

மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்துக்கு அழைப்பு…!!

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. கடந்தமுறை போலவே கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில்  நரேந்திரமோடியே  மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராகுலின் பேச்சு, ஆளுமை வாக்காளர்களை கவரவில்லை” சிவசேனா விமர்சனம்…!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை  வாக்காளர்களை கவரவில்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  மோசமான படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கடந்த   2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியை விட மிக மோசமான தோல்வியை இம்முறை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு காரணம், ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை வாக்காளர்களைக் கவரவில்லை என்பதே ஆகும் என […]

Categories
தேசிய செய்திகள்

“3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்க கூடாது” பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு..!!

குடும்பத்தில் 3-ஆவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை இல்லை என சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.  மக்கள் தொகையை கட்டுப்படுத்த 3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை கிடையாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்  “ குடும்பத்தில் 2  குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது. 3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை  இல்லை என சட்டத்தை கொண்டுவர வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம்..!!

தெலுங்கானா முதல்வர்  சந்திரசேகர ராவ் அவரது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஐதராபாத் பேகும்பேட்டை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம்  புறப்பட்டு நேற்று மாலை ரேணிகுண்டா வந்தடைந்தனர். பின்னர்  அவர்கள் அங்கிருந்து காரில் திருமலைக்கு வந்தனர். திருமலைக்கு வந்தவுடன்  முதல்வர் சந்திரசேகர ராவை, திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தேர்தலில் காங்கிரஸ் தோல்வி” 10 நாட்களுக்குள் நடவடிக்கை…!!

தேர்தல் தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது அடுத்த 10 நாள்களுக்குள்  நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே  கைப்பற்றியது. இதையடுத்து இந்த படுதோல்விக்கான காரணங்கள் குறித்து  விவாதிப்பதற்காக கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் செயற்குழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தலில் வென்ற 13 தி.மு.க M.L.A க்கள் 28 -ஆம் தேதி பதவியேற்பு…!!

இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 பேர் வரும் 28 -ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர். மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முக ஸ்டாலின் தலைமையிலான  திமுக 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 தொகுதிகளில்  வெற்றி பெற்றது. மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 39 தொகுதிகளில் திமுக 38 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக 1 தொகுதி மட்டுமே வென்றது. இதையடுத்து  ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி 30 -ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பதவி ஏற்கிறார்..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை வரும் 30 -ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பதவியேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில்  நரேந்திரமோடியே  மீண்டும் பிரதமராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கோதாவரி – கிருஷ்ணா நதி இணைப்பே முதல் பணி” நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் நன்றி..!!

கோதாவரி – கிருஷ்ணா நதி இணைப்பே முதல் பணி என்று  கூறிய நிதின் கட்கரிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான்   எனது முதல் கடமை என்று பதிவிட்டிருந்தார். இதற்க்கு ஏராளமானோர் நிதின் கட்கரிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பாக  தமிழக பாஜகவின் ட்விட்டரில், இது தான் பாஜக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி…!!

டெல்லியில் பிரதமர் மோடியை YSR காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.   நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டியை ஆட்சி அமைக்க […]

Categories
தேசிய செய்திகள்

“எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு” தூங்கிய இளைஞருக்கு காயம்..!!

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான்  இடையே எல்லை பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா பிரிவிலுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்த தாக்குதலுக்கு  பதிலடியாக இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இடையே  போகர்னி என்ற கிராமத்தில் வீட்டில் தூங்கி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஸ்மிரிதி ரானிக்கு ஆதரவு” பஞ்சாயத்து தலைவர் சுட்டுக் கொலை..!!

ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில்  பாரதிய ஜனதாவின் ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார்.  முன்னாள் மத்திய அமைச்சரான  இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் பிரசாரத்தில் உத்திரப்பிரதேசத்திலுள்ள  பரவுலியா என்ற கிராமம் பிரபலமடைந்தது.  இக்கிராமத்தில் குடியிருப்பவர்களிடம் காலணிகளை கொடுக்க செய்து ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் ஸ்மிரிதி இரானி என்று காங்கிரஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணி உலகக்கோப்பையுடன் திரும்ப வேண்டும்” பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திரமோடி இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்று தாயகம் திரும்புவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 349 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 302 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து  பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும்  வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும்  தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறி இருந்தார். இந்நிலையில் விராட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பிக்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை..!!

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நடத்தப்பட்டு நேற்று முன்தினம் வாக்கு எண்ணப்பட்டது . இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில்  திமுக கூட்டணி 38 இடங்களில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதில் திமுக போட்டியிட்ட 23  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக எம்.பிக்களான கனிமொழி, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி ராஜினாமா…. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் சந்திப்பு..!!

பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி வழங்கினார். பாராளுமன்ற  தேர்தலில் பாரதிய ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக  தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க  272 இடங்கள் தேவை. ஆனால் பாஜக தனியாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடமாக 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் திமுக மட்டும்   23 இடங்களில் வெற்றி பெற்று  3-வது இடத்தை பிடித்துள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று நேற்று வாக்கு  எண்ணப்பட்டது. இதில் பாஜக ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  349 தொகுதிகளை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் பாரதீய ஜனதா மட்டும் தனியாக 302 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிக்கு கனட பிரதமர் ஜஸ்டின் வாழ்த்து..!!

மக்களவை தேர்தலில் மாபெரும்  வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு கனட பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு  நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாரதிய ஜனதா  கட்சி இந்திய அளவில் 350 தொகுதிகளில்  வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகியாகி விட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பங்களாதேஷ் […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை திடீர் அதிரடி உயர்வு” பவுனுக்கு 168 அதிகரிப்பு…. கவலையில் வடிக்கையாளர்கள்..!!

தற்போது தங்கம் பவுனுக்கு ரூபாய் 168 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை   அடைந்துள்ளனர்.   தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் படு தோல்வி…. தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய ராஜ் பப்பர்…!!

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்த காரணத்தால் ராஜ் பப்பர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக  அறிவித்துள்ளார்..  மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக 350 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. உத்தர பிரதேச மாநிலத்தில்  காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. மொத்தம்முள்ள 80 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 64 இடத்தை வென்றது. சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் ஆகிய கூட்டணி […]

Categories
பல்சுவை

அதிரடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல்… கவலையில் வாகன ஓட்டிகள்..!!

தொடர்ந்து  பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை கிடு கிடு உயர்வு” பவுனுக்கு 08 அதிகரிப்பு… வாடிக்கையாளர்கள் கவலை..!!

தற்போது தங்கம் பவுனுக்கு ரூபாய் 08 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை   அடைந்துள்ளனர்.   தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 24..!!

இன்றைய தினம் : 2019 மே 24 கிரிகோரியன் ஆண்டு : 144_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 145_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 221 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : 1218 – ஐந்தாவது சிலுவைப் வீரர்கள் இசுரேலின் ஏக்கர் நகரில் இருந்து எகிப்து நோக்கிப் புறப்பட்டனர். 1276 – மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார். 1487 – இங்கிலாந்தின் மன்னர் ஏழாம் என்றியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முகமாக, 10-வயது லாம்பர்ட் சிம்னெல் டப்ளின் நகரில் ஆறாம் எட்வர்டு என்ர பெயரில் முடிசூடினான். 1607 – 100 ஆங்கிலேயக் குடியேறிகள் ஜேம்சுடவுனில் குடியேறினர். இதுவே ஆங்கிலேயர்களின் முதலாவது அமெரிக்கக் குடியேற்றம் ஆகும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

மக்களவை தேர்தலில் திமுக தலைவர் வெற்றி பெற்றதற்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.  மக்களவை தொகுதியில் இந்திய அளவில் பாஜக 349 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜகவிற்கு வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ட்விட்டர் பக்கத்தில் காவலாளி என்ற பெயரை நீக்கிய மோடி..!!

பிரதமர் மோடி ட்விட்டரில் தன் பெயருடன் சேர்த்திருந்த காவலாளி என்ற பெயரை நீக்கியுள்ளார்.  பிரதமர் மோடி தேர்தல் தொடங்கியதும் நான் காவல் காரன் என்று ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து ட்விட்டரில் சவ்க்கிதார் (காவலாளி) மோடி என மாற்றினார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதை தொடர்ந்து பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மோடியை போலவே தங்கள் பெயருடன் அந்த பெயரை சேர்த்தனர். தற்போது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. பாஜக 351 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 “ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து நிற்போம்” டி.டி.வி தினகரன்..!!

 அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன், ஜெயலலிதா கற்று தந்த துணிவோடு ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து நிற்போம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.   நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று  வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது.  தமிழகத்தை  பொறுத்தவரையில் மக்களவை தொகுதியில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1 தொகுதிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஜனநாயக முறைப்படி ஆட்சியை நடத்துவார் என நம்புகிறோம்” முக ஸ்டாலின்..!!

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து  பிரதமர் மோடிக்கு முக ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.     நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் 92 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதனால்  மோடியே மீண்டும் பிரதமராவார் என்பது உறுதியாகி விட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

” மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்போம்” முக ஸ்டாலின் ட்விட்..!!

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம் என்று தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தல் நடைபெற்று  இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்திய அளவில்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக 38 மக்களவை தொகுதிகளில் மகத்தான  வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

 பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில்  பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு பதிவு எண்ணப்பட்டு வருகின்றது. காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்தது . பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவின் வெற்றி உறுதி” மோடிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய தமிழக முதல்வர்..!!

மக்களவை தேர்தலில் பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மீண்டும் மோடியே பிரதமர்” பல்வேறு நாட்டு அதிபர்கள் வாழ்த்து…!!

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்” பிரதமர் மோடி ட்விட்..!!

பிரதமர் மோடி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : திமுக 14 தொகுதி முன்னிலை…. அதிமுக 08 தொகுதி முன்னிலை..!!

சட்ட பேரவை இடைத்தேர்தலில் திமுக 14 மற்றும் அதிமுக 08 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது  மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக 542 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது. இதோடு  சேர்த்து 22 சட்ட பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல்   நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி  18 தொகுதிகளுக்கும், மீதமுள்ள   4 தொகுதிகளுக்கு மே- 19 ம் தேதி நடத்தப்பட்டது. இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : திமுக 11 தொகுதி, அதிமுக 11 தொகுதி சமநிலை…!!

சட்ட பேரவை இடைத்தேர்தலில் திமுக 11 மற்றும் அதிமுக 11 தொகுதிகளிலும் சம நிலையில் முன்னிலை வகிக்கிறது  மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதோடு  சேர்த்து கடந்த ஏப்ரல் 18-ம் தேதி   சட்ட பேரவை இடைத்தேர்தலுக்கான 18 தொகுதிகளுக்கு தேர்தல்  நடைபெற்றது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே- 19 ம் தேதி நடத்தப்பட்டது. இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களவை தொகுதி : திமுக 37 தொகுதி முன்னிலை…. அதிமுக 2 தொகுதி முன்னிலை..!!

மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது  மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. அதன்பின் பெரிய அளவில் வன்முறை எதுவுமின்றி தேர்தல் அமைதியான முறையில்  நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.   இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவை தொகுதியில் திமுக  தமிழகம் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 23..!!

இன்றைய தினம் : 2019 மே 23 கிரிகோரியன் ஆண்டு : 143_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 144_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 222 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : 1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டார். 1498 – திருத்தந்தையைக் குறை கூறியதற்காக புளோரன்சு மன்னர் கிரலாமோ சவொனரோலா மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். 1533 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-கேத்தரீன் திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது. 1788 – தென் கரொலைனா அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 8-வது மாநிலமாக இணைந்தது. 1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..!!

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது  மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் பெரிய அளவில் வன்முறை எதுவுமின்றி தேர்தல் அமைதியான முறையில்  நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  வாக்கு பதிவு எண்ணிக்கை நாளை (மே 23-ம் தேதி) நடைபெறுகிறது.  நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் சட்டம் மற்றும் ஒழுங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பாராளுமன்ற தேர்தல், 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகியுள்ள  ஓட்டுக்கள் நாளை மே 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.இதனால் அனைவரது மத்தியிலும் மிகுந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கருத்துக்கணிப்பில் பாஜக ஆட்சி…. தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்…. பிரியங்கா காந்தி வேண்டுகோள்..!!

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கருத்துக்கணிப்பால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் நடந்து முடிந்த பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரும்பான்மையாக  பிரதமர் மோடியே  மீண்டும் ஆட்சியமைப்பார் என்று அறிவிப்பு வெளியானது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை காட்டிலும் அதிகமாக, 300 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் சில கணிப்புகள் தெரிவித்தன. இதனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராஜீவ் காந்தி 28–வது நினைவு தினம்” சோனியா, ராகுல் அஞ்சலி..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து வேறு வழியின்றி ராஜீவ் காந்தி காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தினார். இவரது ஆட்சி காலத்தில் இந்தியா தொழில்நுட்பத்தில் நல்ல வளர்ச்சி கண்டது. பின்னர் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த போது ஸ்ரீ பெரம்பத்தூரில் வைத்து திட்டமிடப்பட்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி படு கொலை […]

Categories

Tech |