கரூரில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், சாலை மறியல் செய்தது உள்ளிட்ட பிரிவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் உட்பட 10 பேர் மீது தான்தோன்றி மலை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடந்தது..
Author: MM SELVAM
சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேரம் நிர்ணயிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதில், வெளிநாடுகளைப் போல சென்னையில் குப்பை லாரிகளை இரவில் இயக்க உத்தரவிட வேண்டும். பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள், பொதுமக்கள், […]
தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், மதுரை உலகத் தமிழ் சங்கம் தமிழ் சங்கத்திற்கு தேவையான புதிய அடிப்படை வசதி, தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள் அதிகளவில் வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த […]
‘வாரிசு’ படத்தின் 3ஆவது சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.500க்கு ஒரு வருடத்தில் 12 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வு பிரச்னை தீவிரமானது என்றும், அரசின் நலத்திட்டங்களின் பலன்களை யாரும் இழந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். The issue of price rise is serious. We will give 12 gas cylinders in […]
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண புலம்பெயர் தமிழர் நல வாரியம் – தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தொண்டு செய்வாய் – துறை தோறும் துறை தோறும் துடித்தெழுந்தே” என்ற வாசகத்தை நெஞ்சில் நிலை நிறுத்தி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களது தலைமையிலான தமிழக அரசு நாள்தோறும் பல்வேறு நலத்திட்டங்களை […]
ரஞ்சித் தொடரில் மிக சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாக தனது வேலையை ஆரம்பித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.. இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத நட்சத்திர வீரராக உருவெடுத்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். இந்த 2022 ஆம் ஆண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக ஆடி வரும் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை சூர்யகுமார் […]
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ரூபாய் 200 கோடி ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் அவரது சொந்த கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்து சேர்த்த்துள்ளதாக புகார்அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராம மக்கள் ஆவணங்களுடன் கையெழுத்திட்டு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. முறையாக விசாரணை […]
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு தொகுப்பு வழங்கப்படும். அதேபோல இந்த வருடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை வழங்குது குறித்து முதல்வர் முக. ஸ்டாலின் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கூட்டுறவு, உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூபாய் 1000 வழங்க […]
தெலுங்கு படமான ‘உப்பெனா’ என்ற படத்தை தமிழில் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியதாக தகவல் வெளியானது. தனது கதையை திருடி உப்பெனா படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டதாக தேனியை சேர்ந்த உதவி இயக்குனர் எஸ் யூ டல்ஹவுசி பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் “உப்பெனா” என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என விஜய் சேதுபதி தரப்பு சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தது. விஜய் சேதுபதி விளக்கத்தை ஏற்று […]
வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஒரு நாள் தொடரை 1:2 என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது இந்திய அணி.. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் […]
இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது அர்ஜென்டினா அணி. அரபு நாடான கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது 22 வது உலக கோப்பை கால்பந்து திருவிழா. இந்த கால்பந்து தொடரில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்றுகள் மற்றும் நாக் அவுட் முடிவில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவும் இறுதி போட்டிக்கு சென்றது. இந்நிலையில் உலக கோப்பையை யார் வெல்லப் […]
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 3:1 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலிய மகளிர் அணி.. ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலியா அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில் 4ஆவது டி20 போட்டி மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. […]
எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படத்தின் ‘காசேதான் கடவுளடா’ என்ற 2ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “துணிவு”. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று உள்ளது. இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு […]
முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா அணி. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க பேட்டர்கள் ஆஸ்திரேலிய […]
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 58 […]
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெறுவதற்கு 241 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும் ரவிச்சந்திரன் […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி திருக்கோயிலின் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த திருவிழா ராப்பத்து, பகல் பத்து என மொத்தம் 20 நாட்கள் நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வான வைகுண்ட சொர்க்கவாசல் திறப்பு, பரமபத வாசல் திறப்பு ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை திறக்கப்படும். இந்நிலையில் இதற்காக திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசி விழாவை […]
தமிழகத்தில் வரும் 20 மற்றும் 21ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரக்கூடிய 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]
தமிழகத்தில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என மீண்டும் பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் 23ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து கல்வியாண்டின் தொடக்கத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பை உறுதி செய்துள்ளது பள்ளிக் கல்வித்துறை. ஜனவரி 2ஆம் தேதி அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கும் என […]
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.. ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யவும், தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் தொடரப்பட்ட வழக்குகள் என்பது உச்ச நீதிமன்றத்தில் […]
பிக் பாஸ் டி20 கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர் அணி 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்களுக்கு சுருண்ட அணி என்ற மோசமான சாதனையை சிட்னி பெற்றது. இந்தியாவில் ஐபிஎல் போலவே ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் […]
ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.. உயிர்நீர் இயக்கம், அம்ருத் 2.0 திட்டம், மூலதன மானிய நிதியில் ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.4,194. 66 கோடியில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 3 புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த டிசம்பர் 16ஆம் தேதி நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிர்வாக ஒப்புதலை தொடர்ந்து திட்டங்களை […]
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (17.12.2022) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாட வேலையை பின்பற்றி முழு வேலை நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேபோல மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 2ஆம் தேதி விடுமுறை […]
சென்னை மாவட்டங்களில் சனிக்கிழமையான நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டங்களில் சனிக்கிழமையான நாளை (17.12.2022) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9ஆம் தேதி விட்ட விடுமுறையை ஈடு செய்ய வெள்ளி கிழமை அட்டவணைப்படி நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வெள்ளிக் கிழமை பாடவேளையை பின்பற்றி இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் திட்டங்கள், சலுகைகளைப் பெற அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை மக்கள் தர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் பலன்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என தமிழக நிதித்துறை சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் தர வேண்டும். ஆதார் ஒதுக்கப்படும் வரை ஆதார் இல்லாதவர்களுக்கும் அரசின் பலன்கள் வழங்கப்படும் என தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் […]
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் ஒருநாள் தரவரிசையில் அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளார் இந்திய வீரர் இஷான் கிஷன்.. இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. […]
வங்கதேசத்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை 1: 2 என்ற கணக்கில் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இருக்கும் ஜாஹுர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நேற்று காலை 9 மணி அளவில் தொடங்கி […]
பிளாக்கேப்ஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் விலகியநிலையில், டிம் சவுத்தி தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். வில்லியம்சன் விலகிய நிலையில் டிம் சவுத்தி டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வில்லியம்சன் ஒருநாள் மற்றும் டி20ஐ கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை தொடர்ந்து வழிநடத்துவார்.. அதேபோல சர்வதேச அளவில் 3 கிரிக்கெட் வடிவங்களிலும் விளையாடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 346 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 22 […]
பிரபல ரவுடி ராக்கெட் ராஜா நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.. பனங்காட்டு படை கட்சி தலைவராக இருக்க கூடிய ராக்கெட் ராஜா நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவரை கடந்த ஜூலை மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் நாங்குநேரி நீதிமன்றத்தில் அந்த வழக்கு சம்பந்தமாக போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே […]
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்து விற்பனையாகிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 320 குறைந்து ரூபாய் 40,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 40 குறைந்து ரூபாய் 5,060 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 72.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 680 அதிகரித்திருந்த நிலையில், […]
நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகினார். டெஸ்ட் போட்டிகளுக்கு நியூசிலாந்து அணியின் கேப்டனாக 6 ஆண்டுகள் இருந்தார் கேன் வில்லியம்சன். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணி கேப்டனாக கேன் வில்லியம்சன் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம்சன் விலகிய நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் சவுத்தி நியமிக்கப்பட்டுள்ளார். Kane Williamson will step down as captain of the BLACKCAPS Test side, […]
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]
தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம். தமிழக முழுவதும் இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை […]
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் அவரது தம்பி உட்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர். தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டில் இருந்து 2001ஆம் ஆண்டுவரை திமுக ஆட்சி காலத்தில், அப்போது தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பெரியசாமி தனது குடும்பத்தினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக 2.31 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் 2003 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் […]
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 85 அதிகரித்து ரூபாய் 5,100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 680 உயர்ந்து ரூபாய் 40,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒருகிராம் வெள்ளி ரூ 74க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் உயிரிழந்தனர். நேபாளத்தின் கவ்ரேபாலன்சோக் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். “மத விழாவிற்கு வந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மாலை 6.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) விபத்துக்குள்ளானது. 20 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். Nepal | At least 13 dead in a road accident in Kavrepalanchok district of central Nepal "The bus […]
மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை விஜய் தூக்கி சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.. பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.. இந்த ஆலோசனையில் செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை விஜய் வழங்கினார். மேலும் ஆலோசனைக்கு முன்னதாக 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பனையூர் […]
சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாரிசு, துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதால் சச்சரவுகளை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று காலை ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட ங்களிலிருந்து ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர்.. மேலும் அந்தந்த மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் […]
தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்புமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய பணி நியமனங்களில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம சித்தார்த்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். […]
2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று […]
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார்.. கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரின் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருவரும் குற்றம் செய்ததற்கான எந்த வித முகாந்திரமும் இல்லை என […]
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார். அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கில் எந்தவிதமான முகாமிரமும் இல்லை என விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டோபர் உத்தரவிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இருந்து […]
உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நாளை காலை சரியாக 9:30 மணியளவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான அறிவிப்பாணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் […]
ஐபிஎல் தொடரில் நான் நன்றாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் மன வலிமையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் மாரத்தான் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமானது கிடையாது. அனைவருமே மாரத்தான் ஓடலாம், அனைத்து விளையாட்டுக்குமே ரன்னிங் என்பது தேவைப்படுகிறது என்றார். மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் நன்றாக […]
அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த 60 நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. வேளாண் துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட், புரோபெனோபாஸ் + சைபர் மெத்ரின் உள்ளிட்டவை பூச்சிக்கொல்லி மருந்துகளாக செயல்பட்டு வருகின்றன. இது ஆங்காங்கே ஊரகப்பகுதியில் நிறைய பேர் வாங்கி பூச்சிக்கொல்லி மருந்துகளை தற்கொலைக்கு பயன்படுத்ததாக தகவல்களின் அடிப்படையில் 60 நாட்களுக்கு […]
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 3 நாட்களில் வலுவிழக்கும் என தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து தங்களது நாட்டுக்கு விளையாட அழைப்பு விடுத்த நிலையில், சஞ்சு சாம்சன் அதனை மறுத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன், சிறப்பான கேப்டனாக தனது அணியை கடந்த 2022 ஐபிஎல்லில் இறுதி போட்டி வரை அழைத்து சென்றுள்ளார். மிகவும் திறமையான விக்கெட் கீப்பர் பேட்டரான சாம்சன் அண்டர் 19 காலத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவராவார்.. 2015 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை வெறும் 16 டி20 போட்டி […]