Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற BMW கார்… மின்னல் வேகத்தில் வந்த மின்சார ரயில்… அப்பளமாக நொறுக்கிய பயங்கர வீடியோ!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதிய  திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையினரால் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், மின்சார ரயில் வருவதன் காரணமாக ரயில்வே கேட் போடப்பட்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் கருப்பு நிற BMW கார் ஒன்று, மெதுவாக வந்து இடதுபுறமாக திரும்பி தண்டவாளத்தை  கடக்க முயன்றது. அப்போது, மின்னல் வேகத்தில் அவ்வழியாக வந்த மின்சார ரயில் […]

Categories
உலக செய்திகள்

உறைபனியில் தலை கீழாக புதைந்து கிடந்த பெண்… சரியான நேரத்தில் காப்பாற்றிய வீரர்கள்… வீடியோ இதோ!

பிரான்ஸ் நாட்டில் 2 அடி ஆழத்துக்கு உறைபனியில் தலை கீழாக புதைந்து மாட்டிக் கொண்ட இளம் வயது பெண் ஒருவரை பனிச்சறுக்கு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.  பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் இங்கிலாந்து வீரரான வில் ஃபீல்ட் (Will Field),  என்பவர் பனிச்சறுக்கு பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் 2 கால்கள் மட்டும் அசைந்து கொண்டிருப்பதை  பார்த்து உடனே அருகில் சென்றார்.  அங்கு உறைபனியில் பெண் ஒருவர் தலைகீழாக சிக்கி கொண்டிருப்பதை கண்டார். ஆம், அவரது தலை […]

Categories
உலக செய்திகள்

பிறந்த 5ஆவது நாளில் கொரோனா… ஒரே மாதத்தில் பச்சிளம் குழந்தையை குணப்படுத்திய சீன மருத்துவர்கள்!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட உலகின் மிக குறைந்த வயது நோயாளியான 35 நாள் குழந்தை ஓன்று பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. உலகையே கொரோனா வைரஸ் மிரட்டி வருகின்றது. 81 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரசால் இதுவரையில் மொத்தம் 3,200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்பை விட தற்போது சீனாவில் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. சீன மருத்துவர்களின் அயராது பணியால் பலரும் […]

Categories
உலக செய்திகள்

எரிமலையின் குறுக்கே கட்டப்பட்ட கயிறு… சீற்றத்தின் நடுவே கடந்து சென்று சாதனை படைத்த நபர்!

நிகரகுவாவில் எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் (tightrope) மீது நடந்து சென்று, அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை நிகழ்த்தியுள்ளார். மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் (NICARAGUA) மசாயா என்ற ((MASAYA)) பகுதியில் இருக்கிறது அந்த எரிமலை. சீற்றத்துடன் காணப்படும் அந்த எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது அமெரிக்க வீரர் நிக் வாலன்டா (Nik Wallenda ) என்பவர் ஆக்சிஜன் முகமூடி உள்ளிட்ட உபகரணங்களை அணிந்தபடியே நடந்து சென்றார். இந்த சாகசத்தின்போது அவர் தனக்கு […]

Categories
உலக செய்திகள் வைரல்

பயந்து போன தாய்… துணிச்சலாக விரட்டிய எருமை கன்று… பின் வாங்கும் பெரிய யானை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பெரிய யானையை ஒரு எருமை கன்று பயமில்லாமல் விரட்டியடிக்கும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆம், இணையதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு மிகப்பெரிய யானையை பார்த்து தாய் எருமை பயந்து போய் பின்னால் நிற்கிறது. ஆனால் எருமையின் கன்று பயமில்லாமல் துணிச்சலாக செயல்பட்டு அதை விரட்டிக்கொண்டே செல்ல யானையும் […]

Categories
உலக செய்திகள்

மிரட்டி வரும் கொரோனா… விமான நிறுவனங்களுக்கு 11,300 கோடி டாலர்கள் இழப்பு..!!

 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நடப்பாண்டில் விமான போக்குவரத்து துறை நிறுவனங்களுக்கு 11,300 கோடி டாலர்கள் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : மாலை நிலவரம்… தங்கம் விலை கிடு கிடு உயர்வு..!!

சென்னையில் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 784 உயர்ந்து ரூ 33,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 98 உயர்ந்து ரூ 4,220 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 70 […]

Categories
தேசிய செய்திகள்

அதிகாலை நடந்த பயங்கரம்… நேருக்கு நேர் மோதிய கார்… தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் உடல் நசுங்கி பலி!

கர்நாடகாவில் சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பும் போது இரண்டு கார் நேருக்கு நேர் மோதியதில் கிருஷ்ணகிரியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் சீக்கனப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர், கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவில் (dharmasthala) உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் காரில் இன்று அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகாவின் தும்கூர் […]

Categories
உலக செய்திகள்

மெய் சிலிர்க்கும் சாகசம்… 2,300 அடி உயரம்… நாயுடன் சேர்ந்து குதித்த நபர்… வைரலாகும் வீடியோ!

ஸ்விட்சர்லாந்தில் நாயுடன் சேர்த்து தன்னைக் கட்டிக் கொண்டு 2 ஆயிரம் அடி உயரத்தில் குதித்து ஒருவர் சாதனை  நிகழ்த்தியுள்ளார். ஸ்விட்சர்லாந்து நாட்டின் லாட்டர்புரூனன் என்ற இடத்தைச் சேர்ந்தவர் புரூனோ (Bruno). இவர் 5 வயது நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் தனது செல்லப்பிராணி நாயுடன் இணைந்து சாகசம் செய்து  சாதிக்க நினைத்தார் புரூனோ. இதையடுத்து அவர் அதற்கு தயாரானார். ஆம், அதே பகுதியில் உள்ள 2, 300 அடி உயர பாறையில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

ரூ 50,00,00,000 செலவு… 14 ஆண்டுகால சீரமைப்புக்கு பின் திறக்கப்பட்ட எகிப்து மன்னரின் பிரமீடு..!!

எகிப்தில், 14 ஆண்டுகால மறு சீரமைப்பு பணிகளுக்கு பிறகு மன்னர் ஜோசரின் பிரமிடு திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கும் இந்த பிரமிடு சக்காரா (Saqqara) பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இந்த பிரமிட்டை மறு சீரமைப்பு செய்து வந்தனர். தற்போது 14 ஆண்டுகால மறுசீரமைப்பு பணிகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில், பிரமிடு திறக்கப்பட்டது. இந்த பிரமிடு பணிக்காக சுமார் 50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது முழுவதும் கான்கிரீட் கட்டமைப்பில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : புதிய உச்சத்தில் தங்கம் விலை…. சவரனுக்கு ரூ 872 உயர்வு!

சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 872 உயர்ந்து ரூ 33,848 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 109 உயர்ந்து ரூ 4,231 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையில் ரூ 1 […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து… 15 பேர் பரிதாப பலி… 32 பேர் படுகாயம்!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி (Karachi) நகரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் 5 மாடி கட்டிடம் ஓன்று நேற்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டனானது. இந்த விபத்தில் 15 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 10 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள் மாற்று 2 ஆண்கள் ஆவர். மேலும் 32 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியாக… வைக்கோலில் குதித்து விளையாடும் குட்டி கொரில்லா… அலேக்காக தூக்கிச் சென்ற தாய்… வைரல் வீடியோ!

ஒரு குட்டி கொரில்லா குரங்கு வைக்கோல் குவியலில் குதித்து ஜாலியாக விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகு தன்னுடைய  ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில், குட்டி கொரில்லா ஒன்று சிறிய சுவர் மீதி ஏறி நின்று கொண்டு வைக்கோல் குவியலில் மீது மீண்டும் மீண்டும் குதித்து ஜாலியாக விளையாடுகிறது. தொடர்ந்து அப்படி செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த அதன் தாய் கொரில்லா குறும்புக்கார குட்டியை […]

Categories
தேசிய செய்திகள்

பலமுறை உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய காதலன்… குடும்பத்தோடு கர்ப்பிணி பெண்ணை அடித்து உதைத்த கொடூரம்!

புதுச்சேரியில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உறவுப்பெண்ணை கர்ப்பமாகிய இளைஞனை போலீசார் கைது செய்தனர்.  புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகருக்கு அருகே உள்ள இரண்டாவது குறுக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் முருகானந்தம். இவருக்கு  20 வயதில் ஆனந்தி என்ற ஒரு மகள் இருக்கிறார். ஆனந்தி நர்சிங் படிப்பை படித்து முடித்துவிட்டு, வேலை ஏதும் கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் மஞ்சினி நகர் பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான கோபி […]

Categories
உலக செய்திகள்

அழுத குழந்தை… தலையில் அடித்த நபர்… பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இங்கிலாந்தில் அழுத குழந்தையின் தலையில் நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லூட்டன் நகரில் (Luton) 19 மாதக் குழந்தை ஒன்று  தள்ளுவண்டியில் தனது தாயுடன் பஸ்ஸில் பயணம் செய்தபோது அழுதுள்ளது. அப்போது அந்த பஸ்ஸில் பயணம் செய்த நபர் ஒருவர் குழந்தையின் தலையில் தாக்கியுள்ளார். இந்தச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 அளவில் லூட்டனின் 29வது எண் கொண்ட  பஸ்சில் நடந்துள்ளது. அந்த நபர் குழந்தையை தாக்கிய  சி.சி. டிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரப் பிடி… மருந்து வாங்க பொருளாதார தடையை நீக்குங்க… அமெரிக்காவிடம் கேட்கும் ஈரான்..!!

ஈரானுக்கு தேவையான மருந்து வாங்குவதற்கு பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி (Hassan Rouhani) கோரியுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 81 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரசால் மொத்தம் 3225 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 95, 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வேகமாக பரவி வரும் நாடுகளுள் ஓன்று ஈரான். இந்நாட்டில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 92ஆக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு… இலவச விளம்பரம்… பேஸ்புக்கின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை உலக சுகாதார அமைப்புக்கு இலவசமாக வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்றது. 70க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் கொரோனா வைரசால் 3,285 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 95, 332 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை சவரனுக்கு ரூ 48 குறைவு..!!

சென்னையில் தங்கத்தின் விலை குறைந்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இன்று மாலை  நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 48 குறைந்து ரூ 32, 976 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6 குறைந்து ரூ 4, 122 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையில் 30 காசுகள் குறைந்து ரூ 49. 70 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

இரயில் நிலையங்களில்… குப்பை வீசிய பயணிகளுக்கு “ரூ 4,00,00,000” அபராதம்..!!

தெற்கு இரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் இருக்கும்  ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசியதற்காக பயணிகளுக்கு ரூ 4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து இரயில் நிலையங்களில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ரயில் நிலைய வளாகத்தில்  குப்பைகளை கண்ட இடங்களில் வீசும் பயணிக்கு அதிகபட்சமாக ரூ .500 வரை அபராதம் விதிக்கப்பட்டு, ரயில்வே நிர்வாக சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில், அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20 ஆம் தேதி தூக்கு தண்டனை!

நிர்பயா குற்றவாளிகள் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கும் வரும் மார்ச் 20 ஆம் தேதி அதிகாலை 5: 30 மணிக்கு தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 3முறை தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் 4 ஆவது முறையாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… பல நாடுகளில் மூடப்பட்ட பள்ளிகள்… முடங்கிய 30,00,00,000 கோடி மாணவர்கள்!

கொரானா வைரஸ் எதிரொலியாக பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 30 கோடி மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொடிய கொரோனா உலகையே கதி கலங்க செய்துள்ளது. இந்தியா, அமெரிக்கா உட்பட 80 நாடுகளில் பரவி கொரோனா மிரட்டி வருகின்றது. இதுவரையில் கொரோனா தாக்குதலுக்கு 3,285 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 95, 332 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து நாடுகளுமே மேலும் பரவாமல் இருக்க பல […]

Categories
உலக செய்திகள்

டேய் வாடா… போட்டு பாத்துருவோம்… விஷப்பாம்பிடம் தைரியமாக வம்பிழுக்கும் அணில்… வைரல் வீடியோ!

தென்னாப்பிரிக்காவில் ஆபத்தான விஷப் பாம்புடன் அணில் தைரியமாக வம்புக்கு இழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கலாகடி உயிரியல் பூங்காவில் மஞ்சள் நிறத்தில் விஷ தன்மை கொண்ட நாகம் ஒன்று சுற்றி வந்தது. அப்போது மரத்தின் மேல் இருந்த ஒரு அணில் பாம்பை பார்த்ததும் வேகமாக கீழே இறங்கி வந்து அதனுடன் தைரியமாக சண்டையிடத் தொடங்கியது. தனது வாலை ஆயுதமாகப் பயன்படுத்திய அந்த அணில், பாம்பின் கவனத்தைத் லாவகமாக  திசை திருப்பி அதைத் தாக்க முயல்கிறது. அதேநேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா இது… வாக்காளராக மாறிய ‘நாய்’… ID யை பார்த்து அதிர்ந்த முதியவர்..!

மேற்கு வங்க மாநிலத்தில் நாய் படத்துடன் வயதான நபருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டம் ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் சுனில் கர்மாகர் (Sunil Karmakar) . 64 வயதான இவர், தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையில் (voter id) திருத்தம் செய்வதற்கு விண்ணப்பித்திருந்தார். அதன்படி அவருக்கு ஒரு அடையாள அட்டை  வழங்கப்பட்டது. ஆனால் அந்த புதிய அட்டையை பார்த்து அதிர்ந்து போனார் சுனில். ஆம், அவருடைய புகைபடத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்… கடந்த 5 ஆண்டுகளில் செலவு எவ்வளவு தெரியுமா?

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ .446 கோடிக்கு மேல் செலவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை  இணையமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். அவர் அளித்த பதிலில், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ 446. 52 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆண்டு வாரியாக பயண செலவு : 2015-16-ம் ஆண்டு – 121 கோடியே 85 லட்சம், 2016-17-ம் ஆண்டு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை சற்று உயர்வு!

சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். சென்னையில் இன்று காலை  நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 64 உயர்ந்து ரூ 33, 088 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ 4, 136 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையில் 10 காசுகள் குறைந்து ரூ 49. 90 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Categories
தேசிய செய்திகள்

நண்பா எழுந்துருடா… உனக்கு ஒன்னும் இல்ல… உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய குரங்கு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

ஆந்திரப் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் உயிருக்குப் போராடி கொண்டிருந்த குரங்கை மற்றொரு குரங்கு தனது உயிரைப் பணயம் வைத்து மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நந்திகாமா (Nandigama) என்ற இடத்தில் ஏராளமான அனுமன் மந்திகள் (குரங்குகள்) உள்ளன. அப்பகுதியில் சுற்றித்திரிந்து விளையாடுவதை இந்த குரங்குகள் வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் இதில் ஒரு குரங்கு உயரமான மின்கம்பத்தைக் கடந்து செல்லும் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயக்கமடைந்து, தலைகீழாக தொங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதனைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக டான்ஸ் ஆடிய தளபதி… பார்த்து பார்த்து ரசித்த அமெரிக்கப் பெண்..!!

விஜயின் ‘வெறித்தனம்’ பாடலை பார்த்து ரசித்து விட்டு தனது கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அமெரிக்க பெண். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது படங்கள் வெளியானால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் நடிப்பில் ‘பிகில்’ படம் வெளியானது. இந்த படம் பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் என அனைத்தும் […]

Categories
உலக செய்திகள்

ஒன்ராறியோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை மொத்தம் 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்  தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இதனிடையே ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள்

போலந்தில் நுழைந்த கொரோனா… முதலாவதாக ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிப்பு!

போலந்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்  தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் மேற்கு போலந்தில் ஒரு நபர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம்… இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக  அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவி உலகையே மிரட்டி வருகின்றது. பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் 34 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 29 பேர் கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து தகவல் […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய எரிமலை… 6 கிமீ உயரத்திற்கு பறந்த சாம்பல்…!!

இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மெராபி மவுண்ட் (Mount Merapi) எரிமலை வெடித்து சிதறியதில் அடர்த்தியான சாம்பல் ஆறு கிலோமீட்டர் உயரத்திற்கு சென்றது. இந்தோனேசியாவில் உயிர்ப்புடன் உள்ள நூற்றுக்கணக்கான எரிமலைகளில் ஒன்றான 2,930 மீட்டர் உயரமுள்ள மவுண்ட் மெராபி எரிமலை அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது.கடந்த செவ்வாய்க்கிழமை எரிமலை வெடித்து சிதறியதில் அடர்த்தியான சாம்பல் 6 கிமீ உயரம் சென்றது. எரிமலை வெடித்ததால், அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் கரும்புகை சூழ்ந்ததுடன், வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது. எரிமலை வெடிப்பின் போது […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் கொரோனா வைரசால் 92 பேர் மரணம்… 2,922 பேர் பாதிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் ஈரானில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்    சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்துள்ள நாடுகள் தென் கொரியா, இத்தாலி, ஈரான். இதில் ஈரான் நாட்டின் சுப்ரீம் லீடர்  அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகரையே, கொரானா காவு வாங்கி விட்டது. மேலும் பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா… பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை!

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவின் கேரளாவில் 3 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது வரை இதோடு சேர்த்து இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் […]

Categories
உலக செய்திகள்

கைதியை கைது செய்த கொரோனா… ஈரானில் 54,000 சிறைக்கைதிகள் விடுதலை.!

கொரோனாவின் அச்சுறுத்தலால் ஈரானில் 54,000 சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், 3200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில் ஈரான் நாட்டின் சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நீதித் துறை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

உயிருக்கு ஆபத்தாகும் ‘டிக் டாக்’ சேலஞ்ச்கள்… தற்போது ட்ரெண்டிங்கில் #SaltChallenge..!!

சமூக ஊடகங்களில் அடிக்கடி ஏதாவது சவால்கள் வைரலாகி வருகின்றது. அந்த வகையில், சால்ட் சேலஞ்ச் (Salt Challenge) சவால் இப்போது டிக் டாக்கில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் டிக் டாக் செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்கள் ஒவொருவரும் தங்களின் வீடியோ அதிக லைக்குகளை பெற வேண்டும் எனவும், அதிகபேர் பின் தொடர வேண்டும் எனவும் வித்தியாம் வித்தியாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்திலும் டிக் டாக் பயன்படுத்தாத நபரே கிடையாது என்று தான் சொல்ல […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனு ஒத்திவைப்பு!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனுவை நாளை ஒத்தி வைத்தது டெல்லி நீதிமன்றம். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், பவன் குமார் குப்தா, அக்சய் தாகூர், […]

Categories
உலக செய்திகள்

சுழன்று சுழன்று அடித்த சூறாவளி… 25 பேர் மரணம்… பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு!

அமெரிக்காவின் டென்னசி பகுதியில் ஏற்பட்ட சூறாவளியால் 25 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஸ்வில்லி (Nashville) உள்ளிட்ட இடங்களை நேற்று பயங்கர சூறாவளி அடுத்தடுத்து சுழன்று கொண்டு கடுமையாக தாக்கின. அப்போது சுழன்றடித்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், ஏராளமான வீடுகள் கடுமையான சேதமடைந்ததுடன், கட்டிடங்களின் கூரைகள் பிய்த்து வீசப்பட்டன. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 25 […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் மனு!

டெல்லி நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி  திகார் சிறை நிர்வாகம் மனு அளித்துள்ளது.  டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், பவன் குமார் குப்தா, அக்சய் தாகூர், முகேஷ் சிங், வினய் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை கிடு கிடு உயர்வு..!!

சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 824 உயர்ந்து ரூ 33, 024 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 103 உயர்ந்து ரூ 4, 128 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையில் ரூ 1.50 உயர்ந்து ரூ 50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.   […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை சமாளிக்க…. ஏழை நாடுகளுக்கு ரூ 86,400 கோடி ஒதுக்கிய உலக வங்கி..!!

கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள ஏழை நாடுகளுக்கு சுமார் 86, 400 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், 3200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கொரோனா பரவியுள்ள பெரும்பாலான நாடுகள் ஏழ்மை நிலையில் உள்ளவை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதிய நிதியின்றி தவிக்கின்றன. இந்த நிலையில் நிதியின்றி தவிக்கும் நாடுகளுக்கு கை கொடுக்கும் வகையில் உலகவங்கி 86,400 கோடி ரூபாய் தொகையை […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : வாய்ப்புகள் முடிந்து விட்டது… பவன் குப்தா கருணை மனுவும் நிராகரிப்பு… 4 பேருக்கு எப்போது தூக்கு?

  நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா கருணை மனுவையும்  குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதால் நால்வருக்கும் தூக்கு தண்டனை எப்போது என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

இனி போட்டோஸ் எடுக்க முடியாது… சாய்ந்து நின்ற 11 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்ப்பு!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 11 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும்  டல்லாஸ் நகரின் 11 மாடிகளை கொண்ட உயரமான கட்டடம் திடீரென சாய்ந்தவாறு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து அந்த கட்டடம் கடந்த 17 ஆம் தேதி (திங்கள் கிழமை) வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் சரிந்து விழுந்து மண் குவியலாக காட்சியளிக்கிறது. முன்னதாக சரிந்து நின்ற அந்த கட்டடத்தை […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்தில் ஊதா நிற துணியால் மூடப்பட்ட பெண் சிலைகள்… காரணம் என்ன தெரியுமா?

மெக்ஸிகோவில் உள்ள ஒரு தேவாலயத்தில், அனைத்து பெண் சிலைகளும் ஊதா நிற துணியால் மூடப்பட்டுள்ளன. மெக்சிகோ நாட்டில் ஒரு நாளைக்கு 10 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் உள்ளன.ஆகையால் இதனை கண்டிக்கும் வகையில் வருகின்ற 9-ஆம் தேதி அந்நாட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், தேவாலயங்களில் இருக்கும் பெண்சிலைகள் அனைத்துமே ஊதா நிற துணியைக் கொண்டு மூடப்படுவது இயல்பான நடைமுறை […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் இடைவிடாமல் பெய்யும் கனமழை… 12 பேர் உயிரிழப்பு… 46 பேர் மாயம்!

பிரேசிலில் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மாயமான 46 பேரை தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சா பாலோ (Sao Paulo) நகரில் இடைவிடாது கொட்டி தீர்த்து வரும் கனமழையால் அப்பகுதி கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. இந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கு – குற்றவாளிகள் மனு தள்ளுபடி

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் உடல்நலம் குறித்து விசாரணை செய்ய உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் உடல்நிலை, மனநிலை  பற்றி  தேசிய மனித உரிமை ஆணையம் ஆய்வு செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தற்போது விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதலில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக மனுதாரருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Categories
உலக செய்திகள்

துருக்கிக்கு ஆயுதங்கள், வெடிகுண்டுகள் வழங்கத் தயாரான அமெரிக்கா… சிரியாவில் பதற்றம்!

துருக்கிக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதால் சிரியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது  சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுப்படைக்கு ஆதரவாக ரஷ்யாவும்,   ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கியும் செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக இருபிரிவினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த உள்நாட்டு போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஆம், சமீபத்தில் இட்லிப் பகுதியில் சிரியாவுக்கு சொந்தமான போர் விமானத்தை ஹவுதி  கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் துருக்கி படைகள் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடி கொடுப்பதற்கு சிரியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா எதிரொலி… ஐபிஎல் போட்டி ரத்தாகிறதா?… என்ன சொல்கிறார் கங்குலி!

கொரானா வைரஸ் காரணமாக ஐ.பிஎல் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார்  சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரானா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 3100க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கியுள்ளது.மேலும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் தற்போது பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2020 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி மகளிர் டி20 தரவரிசை : இந்திய அணியின் இளம்புயல் ஷஃபாலி வர்மா முதலிடம்!

ஐசிசி வெளியிட்ட மகளிர் டி20 தரவரிசையில் இந்திய அணியின் ஷஃபாலி வர்மா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. குரூப் A மற்றும் குரூப் B என்று லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் குரூப் A பிரிவில் இந்திய அணி இடம்பெற்று 4 லீக் போட்டிகளிலும் சிறப்பாக வெற்றி பெற்று முதல் அணியாக […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு அடுத்தபடியாக… தென் கொரியாவில் 4,800 பேர் பாதிப்பு.!

தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4,800ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.  தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4, 800ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 29ஆக உயர்ந்துள்ளது சீனாவுக்கு அடுத்த படியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள தென் கொரியாவில், கொரோனா வைரஸ் தொற்றினால் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அதிபர் மூன் ஜேயிங் உத்தரவிட்டுள்ளார். அதேபோல தென் கொரியாவில் […]

Categories
உலக செய்திகள்

ஒருபுறம் கொரோனா… மறுபுறம் லாசா வைரஸ்… நைஜீரியாவில் 2 மாதத்தில் 100 க்கும் மேற்பட்டோர் மரணம்!

கொரோனா வைரஸ் ஒருபுறம் உலகையே அச்சுறுத்தி உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மறுபுறம் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லாசா வைரஸ்  நூற்றுக்கும் அதிகமான உயிர்களை காவுவாங்கி வருகிறது நைஜீரியாவில் கடந்த 2 மாதத்தில் மட்டும் லாசா வைரஸ் (Lassa fever) தாக்கத்தினால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியா சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் முகமது அபுபக்கர் கூறுகையில், ‘லாசா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரத்தை நாங்கள் (அரசு) தொடங்கியுள்ளோம். மக்கள், […]

Categories

Tech |